நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 24 2019

0

நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 24 2019

முக்கியமான நாட்கள்

ஏப்ரல் 24 – உலக ஆய்வக விலங்குகள் தினம் 2019

 • உலக அளவில் ஆய்வுக்கூடங்களில் விலங்குகளை ஆய்விற்காகப் பயன்படுத்துகின்றனர். விலங்குகள் மீது உயிரி மருத்துவ ஆராய்ச்சி செய்கின்றனர். இதனால் ஆய்வக விலங்குகள் சித்திரவதைக்குள்ளாவதை தடுக்க 1979ஆம் ஆண்டில், ஏப்ரல் 24 ம் நாளை உலக ஆய்வக விலங்குகள் தினமாக அறிவித்தனர்.

தேசிய செய்திகள்

உலகின் 50 சிறந்த தலைவர்களின் பட்டியலில் 45 வது இடத்தில் உள்ளார் அருணாச்சலம் முருகானந்தம்

 • கோவையைச் சேர்ந்த சமூக தொழில் முனைவோர் அருணாச்சலம் முருகானந்தம் பார்ச்சூன் இதழ்[Fortune Magazine] வழங்கும் உலகின் 50 சிறந்த தலைவர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். சமீபத்தில் வெளியிடப்பட்ட பட்டியலில் 45 வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச செய்திகள்

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் உலகின் மிகப்பெரிய உட்புற நீர்வீழ்ச்சி

 • சுற்றுலாவிற்கு வரும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் உலகின் மிகப்பெரிய உட்புற நீர்வீழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது.

அறிவியல் செய்திகள்

செவ்வாய் கிரகத்திற்கான யு...யின் ஹோப் ப்ரோப் திட்டம் 85% முடிவடைந்தது

 • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விண்வெளி நிறுவனம் மற்றும் முகம்மது பின் ரஷித் விண்வெளி மையம் (MBRSC) ஹோப் ப்ரோப் திட்டத்தின் 85% முடிந்துவிட்டதாக அறிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படும் யுஏஇ-யின் முதல் செயற்கைகோள் இதுவாகும். ஜூலை 2020 ல் ஹோப் ப்ரோப் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

வணிகம் & பொருளாதாரம்

2019ம் நிதி ஆண்டில் தோல் ஏற்றுமதி 8% அதிகரித்துள்ளது

 • 2018-19 ஆம் ஆண்டில் இந்தியாவில் தோல், தோல் பொருட்கள் மற்றும் காலணி ஏற்றுமதி 8% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. நடப்பு நிதியாண்டில் 9 சதவீதத்திலிருந்து 10 சதவீத வளர்ச்சியை அடைவதற்கு இலக்கை நிர்ணயித்துள்ளது.

இன்ஃபோசிஸ் ஹவாய் கிளவுட் பார்ட்னர் நெட்வொர்க்கில் சேரத் திட்டம்

 • டிஜிட்டல் கிளவுடிற்கு விரைவாக வாடிக்கையாளர்களை மாற்றம் செய்வதற்கு உதவியாக ஒரு மூலோபாய ஒத்துழைப்பில் ஹவாய் கிளவுட் மற்றும் இன்போசிஸ் நிறுவனம் நுழைந்துள்ளனர். ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இன்போசிஸ், ஹவாய் கிளவுட் பார்ட்னர் நெட்வொர்க் (HCPN) இல் இணைய உள்ளது, மேலும் இரு நிறுவனங்களும் இணைந்து புதிய கிளவுட் தீர்வுகளை மேம்படுத்த உதவும்.

ஆர்.பி.. ஸ்வாப் ஏலத்தில் அறிவிக்கப்பட்ட தொகைக்கு மேல் 3 மடங்கு ஏலம் விடப்பட்டுள்ளது

 • இரண்டாவது டாலர் ரூபாய் வாங்கி / விற்கும் ஏலத்தில், இந்திய ரிசர்வ் வங்கி, 5 பில்லியன் $ அறிவிக்கப்பட்ட தொகையுடன் ஒப்பிடுகையில்65 பில்லியன் $ மதிப்புள்ள 255 ஏலங்களை பெற்றுள்ளது.

மாநாடுகள்

வேளாண் விரிவாக்கத்திற்கான தேசிய மாநாடு

 • புது தில்லியில் விவசாய மேம்பாட்டுக்கான தேசிய மாநாட்டில் இந்திய வானிலை ஆய்வுத் துறை துணை இயக்குநர் ஜெனரல், எஸ்.டி. அட்ரி, ஆய்வுத்துறை மூலமாக வானிலை தொடர்பான ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்கியதால் நாடு முழுவதும் விவசாய உற்பத்தி அதிகரித்து அதிக விளைச்சலைக் கொடுத்துள்ளதாகக் கூறினார்.
 • இந்த மாநாட்டில் மிக முன்னேறிய தொழில்நுட்பங்கள் மற்றும் விவசாயத்தில் சமீபத்திய அறிவியல் ஆராய்ச்சிகள் பற்றிய விவாதங்கள் இருந்தன.

நியமனங்கள்

நசிம் சைதி ஜெட் ஏர்வேஸ் குழுவில் இருந்து விலகினார்

 • முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நசிம் சைதி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவை விட்டு விலகியுள்ளார். இவர் முன்னாள் உள்நாட்டு விமானத்துறை செயலாளர் ஆவார். சைதி கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஜெட் ஏர்வேஸ் குழுவின் non-executive and non-independent director இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு செய்திகள்

பாதுகாப்புக் கணக்குகளின் புதிய பொது கட்டுப்பாட்டாளர்

 • ஸ்ரீ ராஜேந்திர குமார் நாயக் 52வது பாதுகாப்புக் கணக்குகளின் புதிய பொது கட்டுப்பாட்டாளராக பொறுப்பேற்றார். இதற்கு முன்பு பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்புக் கணக்குகளின் கூடுதல் பொது கட்டுப்பாட்டாளராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு செய்திகள்

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2019

 • கத்தாரின் டோஹாவில் நடைபெறும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 7 பிரிவுகளை உள்ளடக்கிய ஹெப்டத் லானில் பங்கேற்ற இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். 4x400m கலப்பு ரிலே அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

PDF Download

ஏப்ரல் 24 நடப்பு நிகழ்வுகள்  வீடியோ – கிளிக் செய்யவும்

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!