நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 11, 2019

0

நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 11, 2019

தேசிய நிகழ்வுகள்:

இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சியின் வருடாந்திர சராசரி 1.2% வீதத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது: ஐநா அறிக்கை

  • 2010 முதல் 2019 வரையிலான இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி 1.2 சதவிகிதம் என்ற சராசரி விகிதத்தில் 1.36 பில்லியனை எட்டியுள்ளது, சீனாவின் வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை விட இரு மடங்கு அதிகம், என ஐ.நா. மக்கள்தொகை நிதி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
  • இந்தியாவின் மக்கள் தொகை 2019 ஆம் ஆண்டில் 1.36 பில்லியனாக உள்ளது, 1994ல் இது 942.2 மில்லியனாகவும், 1969 ல் 541.5 மில்லியனாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளா:

உலக புனரமைப்பு மாநாட்டில் கேரளா வெள்ளம் குறித்த அறிக்கை இடம்பெறவுள்ளது

  • 2019 மே 13 மற்றும் 14, ஜெனீவாவில் நடைபெறும் நான்காவது உலக புனரமைப்பு மாநாட்டில் (WRC) 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அதனை சீர்படுத்த தொடங்கப்பட்ட மீளமைப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கை, இடம்பெறவுள்ளது.

விருதுகள்:

விஸ்டன் கிரிக்கெட்டர்ஸ் அல்மனாக் கௌரவத்தை கோலி, மந்தனா பெற்றுள்ளனர்

  • விஸ்டன் கிரிக்கெட்டர்ஸ் அல்மனாக் 2019ஆம் ஆண்டு பதிப்பின் “ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனை விருதுகளை” இந்தியாவின் கோலி, மந்தனா பெற்றுள்ளனர். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக கோலிக்கு உலகின் முன்னணி வீரர் விருது வழங்கப்பட்டுள்ளது.
  • இரண்டாவது முறையாக ஆப்கானிஸ்தான் ஸ்பின்னர் ரஷித் கான் டி 20 கிரிக்கெட்டின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்:

கறுப்பு துளையின் முதல் படம் வெளியீடு

  • அமெரிக்காவின் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் வானவியல் வல்லுநர்கள் கருப்பு துளை முதல் புகைப்படத்தை வெளியிட்டனர். கறுப்பு துளை என்பது பிரபஞ்சம் முழுவதும் சிதறி, பரவியிருக்கும் விண்மீன்களில் ஒன்றாகும் மற்றும் இது துல்லியமற்ற புவி ஈர்ப்பு கேடயங்கள் மூலம் மறைக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

வணிகம் & பொருளாதார நிகழ்வுகள்:

வாடிக்கையாளர்களுக்கு உரிமைகோரல் நிலையை அறிவிக்க காப்பீட்டாளர்களுக்கு IRDAI உத்தரவு

  • காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஐஐஐ) உரிமைகோரல் செயலாக்கத்தில் வாடிக்கையாளர்களின் நிலையை அறிவிக்க அனைத்து காப்பீட்டு நிறுவனங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜூலை 1 ம் தேதி முதல் இந்த வழிமுறைக்கள் அமல்படுத்தப்படும் எனவும் அறிவிப்பு.

ஆங்கர் நிறுவனத்தின் பெயர் மாற்றம்

  • 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஆங்கர் நிறுவனம், பேனசோனிக் லைஃப் Solutions இந்தியா பிரைவேட் லிமிடெட் (PLSIPL) என வழங்கப்பெறும் என்று அதன் (PLSIPL) நிர்வாக இயக்குனர் விவேக் சர்மா அறிவித்துள்ளார்.

ஒப்பந்தங்கள்:

SBI உடன் PAISALO, கூட்டுறவு கடன் ஒப்பந்தம்

  • PAISALO, டிஜிட்டல் லிமிடெட், விவசாயம், MSME பிரிவு மற்றும் சிறிய வியாபாரங்களை அதிகரிக்க ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் தனது முதல் கூட்டுறவு கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

 பாதுகாப்பு நிகழ்வுகள்:

கடற்படை முதலீட்டு விழா 2019

  • 2019 ம் ஆண்டிற்க்கான கடற்படை முதலீட்டு விழா மும்பையின் மேற்கு கடற்படையின் (WNC) ஹெலிகாப்டர் கப்பல் தளமான ஐஎன்எஸ் ஷிக்ராவில் நடைபெற்றது. விழாவில் கடற்படை டாக்யார்ட் (வைசாக்) மற்றும் ஐஎன்எஸ் துவார்கா ஆகியவையின் பசுமை சுற்றுச்சூழல் முயற்சிகளுக்காக ‘சிறந்த பசுமை நடைமுறைக்கான சிஎன்எஸ் டிராபி’ வழங்கப்பட்டது.

சர்வதேச நிகழ்வுகள்:

பகுதி தானியங்கி ஆயுதங்களை தடை செய்வதற்கு நியூசிலாந்து பாராளுமன்றம் வாக்களித்துள்ளது

  • கிறிஸ்ட்சர்ச் நகரில் நடந்த துப்பாக்கி சூடு நிகழ்வின் எதிரொலியாக நியூசிலாந்தின் பாராளுமன்றம், இராணுவ பாணி மற்றும் சட்டவிரோதமான ஆயுதங்களை தடை செய் முடிவு.

விளையாட்டு நிகழ்வுகள்:

மன்ப்ரீத் கவுரூக்கு நான்கு ஆண்டுகள் விளையாட தடை

  • தேசிய ஊக்க மருந்து ஏஜென்சி ஒழுங்குமுறை குழு, ஊக்கமருந்து பயன்படுத்தியதற்காக குண்டு எறிதலில் ஆசிய சாம்பியனான மன்பிரீத் கவுருக்கு நான்கு வருடம் விளையாட தடை விதித்துள்ளது.

PDF Download

ஏப்ரல் 11 நடப்பு நிகழ்வுகள்  வீடியோ – கிளிக் செய்யவும்

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!