நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 10, 2019

0

நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 10, 2019

தேசிய நிகழ்வுகள்:

முதல் கட்ட பொதுத் தேர்தல் 2019 ஏப்ரல் 11 அன்று தொடங்கவுள்ளது

  • 2019 பொது தேர்தலில் முதல் கட்டமாக 91 மக்களவைத் தொகுதிகளில் 14 கோடியே 20 லட்சத்து 54 ஆயிரம் வாக்காளர்கள் ஏப்ரல் 11 அன்று வாக்களிக்க உள்ளனர் லோக் சபா சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையில் இந்த தேர்தல் மூன்றாவது இடத்தில் உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திற்கு தேர்தல் முடியும் வரை தடை

  • தேர்தல் ஆணையம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தை திரையிட தடை விதித்துள்ளது. நடிகர் விவேக் ஓபராய் பிரதமர் திரு நரேந்திர மோடி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேசம்:

திருப்பதி ரயில் நிலையம் பசுமை முன்முயற்சிக்கான தங்க மதிப்பீட்டை பெற்றுள்ளது

  • இந்திய பசுமை கட்டிடம் கவுன்சில் (ஐ.ஜி.சி.சி) பயணிகளின் வசதிகள் அடிப்படையில் பசுமை முன்முயற்சிக்கான தங்க மதிப்பீட்டை திருப்பதி ரயில் நிலையத்திற்கு வழங்கியுள்ளது. இந்திய இரயில்வே சுற்றுச்சூழல் இயக்குனரகத்துடன் இணைந்து, ஐ.ஜி.சி.சி-சிஐஐ (IGBC-CII), பசுமை ரயில் நிலைய மதிப்பீட்டு முறையை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விருதுகள்:

2020 கோல்டன் குளோப் விருதுகளுக்கான அட்டவணையை HFPA அறிவித்துள்ளது

  • ஹாலிவுட் வெளிநாட்டு பிரஸ் அசோசியேஷன் 2020 ஆம் ஆண்டு கோல்டன் குளோப் விருதுகளுக்கான அட்டவணையை அறிவித்துள்ளது. 77வது வருடாந்த கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா ஜனவரி 5, 2020 இல் நடைபெறவுள்ளது.

புதுமையான முயற்சிகளை மேற்கொண்ட தனியார் நிறுவன தரவரிசையில் VIT முதலிடம்

  • மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் (MHRD) கண்டுபிடிப்பு சாதனைகள் நிறுவனங்களின் அடல் தரவரிசைப் பட்டியலில் (ARIIA 2019) தனியார் நிறுவனங்கள் மத்தியில் வெல்லூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (வி.ஐ.டி) முதலிடத்தை பெற்றுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்:

YouTube இன் மிகப்பெரிய மற்றும் மிக வேகமாக வளர்ந்து வரும் சந்தையாக இந்தியா மாறியுள்ளது.

  • இந்தியா இணைய பாதுகாப்பு மற்றும் தரவு வளர்ச்சியில் கணிசமான வளர்ச்சி அடைந்துள்ளதுடன், YouTube இன் மிகப்பெரிய மற்றும் மிக வேகமாக வளர்ந்து வரும் சந்தையாக மாறிவருகிறது, அதன் தரவு மூலம் 265 மில்லியன் இந்தியர்கள் ஒவ்வொரு மாதமும் வீடியோ பகிர்வு வலைத்தளத்தைப் பார்க்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

வணிகம் & பொருளாதார நிகழ்வுகள்:

சர்வதேச நாணய நிதியம் பூகோள வளர்ச்சி விகிதத்தை 3.3% குறைத்துள்ளது

  • சர்வதேச நாணய நிதியம் (IMF) 2019 ல் பூகோள வளர்ச்சி விகிதத்தை அதன் முந்தைய விகிதமான 3.5% இருந்து 3.3% ஆக குறைத்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் சர்வதேச நாணய நிதியம் அதன் உலகளாவிய பூகோள வளர்ச்சி கண்ணோட்டத்தை குறைத்துக்கொண்டது கொண்டது இது மூன்றாவது முறையாகும்.

உஷா மார்ட்டின் எஃகு வணிகத்தை டாடா வாங்கியுள்ளது

  • டாட்டா ஸ்டீலின் துணை நிறுவனமான டாட்டா sponge இரும்பு நிறுவனம் (TSIL), உஷா மார்ட்டின் லிமிடெட் நிறுவனத்தின் எஃகு வணிகத்தை  வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

 சர்வதேச நிகழ்வுகள்:

நெத்தன்யாகு இஸ்ரேல் தேர்தலில் 5ஆம் முறை வெற்றி பெற்றுள்ளார்

  • இஸ்ரேல் பிரதம மந்திரி பெஞ்சமின் நேதன்யாகு இஸ்ரேலின் தேசிய தேர்தலில் ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார், 2009 முதல் தொடர்ந்து நாட்டை வழிநடத்தி வருகிறார், இவரின் ஆட்சி காலம் 13 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

வட கொரியா மீதுள்ள பொருளாதார தடையை ஜப்பான் 2 ஆண்டுகளுக்கு  நீட்டித்துள்ளது

  • ஜப்பான் வட கொரியா மீதுள்ள வர்த்தகம் மற்றும் பிற தடைகளை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளது.
  • வட கொரியாவின் அணுஆயுத சோதனை மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை ஆகியவை ஜப்பான் நீடித்த பொருளாதார தடைக்கு காரணமாக அமைந்தது.

பாதுகாப்பு நிகழ்வுகள்:

1TS கப்பல்கள் சீஷெல்ஸ்  விக்டோரியா துறைமுகத்தை அடைந்தன

  • முதல் பயிற்சி பிரிவு கப்பல்களான (1TS) ஐஎன்எஸ் தரங்கினி, ஐஎன்எஸ் சுஜாதா, ஐஎன்எஸ் ஷர்துல் மற்றும் ஐசிஜிஎஸ் சாரதி செஷெல்ஸின் விக்டோரியா துறைமுகத்திற்குள் நுழைந்தது. முதல் பயிற்சி பிரிவு கப்பல்கள் தற்போது சம்பந்த் 05/18-19 என்றழைக்கப்படும் அதன் வெளிநாட்டுப் பணிக்கான கடைசி பயணநிலையில் உள்ளது.

PDF Download

ஏப்ரல் 10 நடப்பு நிகழ்வுகள்  வீடியோ – கிளிக் செய்யவும்

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!