நடப்பு நிகழ்வுகள்  – அக்டோபர் 07,08 2018

0

நடப்பு நிகழ்வுகள்  – அக்டோபர் 07,08 2018

முக்கியமான நாட்கள்

அக்டோபர் 8 – இந்திய விமானப்படை 86 வது ஆண்டு நிறைவு விழா

  • இந்திய விமானப்படை (IAF) இந்திய ஆயுதப்படைகளின் விமானப் பிரிவு ஆகும். இது உலகின் விமானப்படைகளில் நான்காவது இடத்தில் உள்ளது. இது பிரிட்டிஷ் பேரரசின் ஒரு துணை விமானப் படையாக 8 அக்டோபர் 1932 அன்று அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது.

அக்டோபர் 8 – அந்தமான் மற்றும் நிக்கோபார் கமாண்டின் 18 வது நிறைவு தின கொண்டாட்டம்

  • நாட்டில் ஒரே கூட்டு முப்படை சேவை செயல்பாட்டு கமெண்ட்[Command], அந்தமான் மற்றும் நிக்கோபார் கமாண்ட், அதன் 18 வது நிறைவு தினத்தை கொண்டாடியது. இந்தியாவின் மூலோபாய நலன்களைப் பாதுகாப்பதற்காக 2001 ஆம் ஆண்டில் கூட்டுத் தந்திர சேவை செயல்திட்டம் மூலம் இந்த கமாண்ட் உருவாக்கப்பட்டது.

தேசிய செய்திகள்

கேரளம்

ரெட் பட்டன் பொது ரோபோடிக் ஸ்பெக்ட்ரம் (RBPRS), அறிவார்ந்த ரோபோ முனையம்

  • ரெட் பட்டன் பொது ரோபாட் ஸ்பெக்ட்ரம் (RBPRS), அறிவார்ந்த ரோபோ முனையம் பொதுமக்களுக்கு காவல்துறையை அணுகவும், குற்றங்களை கண்காணிக்கும் வகையில், கேரளம் செரத்தலில் இரு இடங்களில் நிறுவப்படும்.

நாகாலாந்து

நாகலாந்தின்காந்திநட்வர் தக்கர் இறந்தார்

  • கவுஹாத்தி தனியார் மருத்துவமனை ஒன்றில் நாகலாந்து காந்தி என்றழைக்கப்படும் நட்வர் தக்கர் இறந்துவிட்டார்.

தெலுங்கானா

சிமென்ஸின் சிறப்பு மையம்

  • சிமென்ஸின் சிறப்பு மையம் வாராங்கல் தேசிய தொழில்நுட்ப நிறுவன (NIT) வளாகத்தில் ரூ .10 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது.

சர்வதேச செய்திகள்

கூட்டு WHO-UNICEF பிரச்சாரம்

  • WHO-UNICEF பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஏமனில், காலராவிற்கு எதிராக 15 வயதிற்குட்பட்ட 164,000 குழந்தைகள் உட்பட 306,000க்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

வெப்பமண்டல புயல் மைக்கேல்

  • வெப்பமண்டல புயல் “மைக்கேல்” வடமேற்குக் கரையோரத்தில் உருவாகுவதற்கும், அமெரிக்க வளைகுடா கடற்கரைக்கு கடுமையான மழைப்பொழிவுகளையும், பலத்த மழையையும் கொண்டுவரக்கூடும் எனக்கணிப்பு.

அறிவியல் செய்திகள்

ஒரு விண்கலத்தால் செல்லக்கூடிய மிக தொலைதூரப் பயணத்திற்கு நாசா ப்ரோப் திட்டம்

  • நாசாவின் நியூ ஹரிஸன்ஸ் ப்ரோப், இந்த புத்தாண்டில் பூமியில் இருந்து 6.6 பில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள அல்டிமா துலே என்றழைக்கப்படும் குய்பர் பெல்ட் பொருளுக்கு அருகில் பறக்கவிருக்கிறது. ஒரு விண்கலம் விஜயம் செய்த மிக தொலைதூரப் பொருளுக்கான சாதனையை இந்த நிகழ்வு அமைக்கும்.

நீரை மாசுபடுத்துபவைகளை பிடிக்க சிறிய கோளங்கள் கண்டுபிடிப்பு

  • விஞ்ஞானிகள் பிஸ்ஃபெனால் ஏ (பிபிஏ)ஐ பிடித்து அழிக்கக்கூடிய சிறிய கோளங்களை உருவாக்கியிருக்கிறார்கள், இது பெரும்பாலும் நீரை மாசுபடுத்தும் பிளாஸ்டிக்குகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் ஒரு செயற்கை வேதியியல்.

மாநாடுகள்

இந்தியா திறன் போட்டி 208

  • 2018 ஆம் ஆண்டு இந்தியா திறன் போட்டி புது தில்லியில் நடைபெற்று முடிவடைந்தது.

காந்தியின் மறுவருகை: ஷெல்லி ஜோதி கலை கண்காட்சி

  • ஜவுளித்துறை மத்திய அமைச்சர், திருமதி. ஸ்மிரிதி ஜுபின் இரானி புதுடில்லியிலுள்ள IGNCA இல் காந்தியின் மறுவருகை: ஷெல்லி ஜோதி கலை கண்காட்சியை திறந்து வைத்தார்.

நியமனங்கள்

  • பிரட் கவாநாக்அமெரிக்க உச்ச நீதி மன்றத்தின் 114 வது நீதிபதி

திட்டங்கள்

முதலமைச்சரின் சஷக்த் கிசான் திட்டம் மற்றும் கிருஷி சமுஹ் திட்டம்

  • அருணாச்சல பிரதேச அரசு முதலமைச்சரின் சஷக்த் கிசான் திட்டம் [வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் விவசாயி-இயந்திரமயமாக்கல் திட்டம்] மற்றும் முதலமைச்சரின் கிருஷி சமுஹ் திட்டம் [விவசாயிகளுக்கு கூட்டுறவு அணுகுமுறை மூலம் அதிகாரம்] ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது.

பாதுகாப்பு செய்திகள்

JIMEX 18

  • ஜப்பான் மற்றும் இந்தியா இடையேயான இருதரப்பு கடல்சார் பயிற்சி (JIMEX 18) விசாகப்பட்டினத்தில் துவங்குகிறது.

ஷங்க்நாத் [Shankhnaad]

  • வீர் மஹார் படையினரின் வீரத்தை வெளிப்படுத்தும் ஷங்க்நாத் என்ற இராணுவ இசையை, இராணுவ வீரர்களின் தலைவரான ஜெனரல் பிபின் ராவத் நாட்டிற்காக அர்ப்பணித்தார். இந்த இசையை பிரிகேடியர் விவேக் சோஹல் (ஓய்வு பெற்றவர்) எழுதி, டாக்டர் (திருமதி) தனுஜா நஃப்தே இசை அமைத்துள்ளார்.

விருதுகள்

  • பொருளாதார அறிவியலுக்கான 2018 நோபல் பரிசு – வில்லியம் டி. நோர்தாஸ் [அமெரிக்கா] & பால் எம். ரோமர் [அமெரிக்கா]

மொபைல் செயலிகள் & இணைய போர்ட்டல்

சிவிஜில்‘ [‘CVigil’]

  • அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் ஆகியோரால் தவறு செய்ததற்கான சான்றை பகிர்ந்து கொள்ள குடிமக்களுக்கான “சிவிஜில்” மொபைல் செயலியை விரைவில் ஐந்து மாநிலங்களில் தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு பயன்படுத்த திட்டம்.

விளையாட்டு செய்திகள்

U-19 ஆசியா கோப்பை கிரிக்கெட்

  • இறுதிப் போட்டியில் இலங்கையை தோற்கடித்து இந்திய U-19 ஆசிய கோப்பையை வென்றது.

IBSF உலக U-16 ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்

  • ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்த இறுதிப் போட்டியில், இந்தியாவின் கீர்த்தனா பாண்டியன் ஐபிஎஸ்எஃப் உலக U-16 ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்பில் பெண்கள் பட்டத்தை வென்றார்.

இந்தியாவின் பிரீமியர் சைக்ளோத்தான்

  • சாக்ஷம் பெடல் புது தில்லியில் நடைபெற்ற இந்தியாவின் பிரீமியர் சைக்ளோத்தான் 40 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான போட்டியில் டெபோரா ஹெரால்ட் தங்கப் பதக்கத்தை வென்றார். ஆண்கள் 50 கிலோ மீட்டர் பிரிவில் ஸ்ரீதர் சாவனுர் வென்றார்.

சீன ஓபன் டென்னிஸ்

  • பெய்ஜிங்கில் நடந்த சீன ஓபன் இறுதிப்போட்டியில் கரோலின் வோஸ்னியாக்கி தனது 30 வது WTA ஒற்றையர் பட்டத்தை வென்றார்.

இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுகள்

  • ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் துப்பாக்கி சுடும் வீரர் துஷர் மேனே வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
  • தங்ஜம் தபாபி தேவி வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் முதல் ஒலிம்பிக் அளவிலான ஜூடோ போட்டியில் பதக்கத்தைப் பெற்றார்.

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

  • ஆண்கள் பேட்மின்டன் அணி வெண்கலத்தை வென்றது.
  • ஆண்களுக்கான 49 கிலோ பவர் பளுதூக்கும் போட்டியில் பர்மன் பாசா ​​வெள்ளிப்பதக்கமும், பரம்ஜித் குமார் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
  • பெண்கள் 100 மீட்டர் பட்டர்ஃப்ளை பிரிவில்[நீச்சல்] தேவன்ஷி சதிஜா வெள்ளி வென்றார், ஆண்கள் 200 மீட்டர் தனி நபர் மெட்லே பிரிவில் சுயாஷ் ஜாதவ் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்

  • சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா தலைமையிலான 30 உறுப்பினர்கள் குழு ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட்டில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி சார்பாக களமிறங்குகின்றனர்.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group – கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!