நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 28,29 2018

0

நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 28,29 2018

தேசிய செய்திகள்

குஜராத்

தனிப்பட்ட ரோபேக்ஸ் ஃபெர்ரி சேவை தொடங்கப்பட்டது

  • குஜராத்தில், கோகா மற்றும் தஹெஜிற்கு இடையில் ஒரு தனிப்பட்ட ரோ-பேக்ஸ் ஃபெர்ரி சேவையை முதலமைச்சர் விஜய் ரூபனி தொடங்கி வைத்தார்.

சூரத்தில் முதல் மெகா உணவு பூங்கா

  • குஜராத்தின் முதல் மெகா உணவு பூங்காவை மத்திய அமைச்சர் ஸ்ரீ ஹர்சிம்ரத் பதல் திறந்து வைத்தார்; மெஹ்சானாவில் 2 வது பூங்கா திறக்கப்படும் என்று அறிவிப்பு.

புது தில்லி

இந்த பருவத்தின் மிக மோசமான காற்றின் தரத்தை தில்லி பதிவு செய்கிறது

  • இந்த பருவத்தில் டெல்லியின் மிக மோசமான காற்று தரம் பதிவாகியுள்ளது. இதனால் புகை மண்டலமாக தலைநகரம் காட்சி அளிக்கிறது. மிக மோசமான காற்றின் தரத்தால் மக்கள் துயரத்திற்கு உள்ளாகினர்.
  • தேசிய தலைநகரத்தின் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடானது 381 ஆக பதிவாகியிருந்தது, இது மிக மோசமான காற்றுத்தரமாகும், இந்த பருவத்தின் அதிகபட்ச அளவு இதுவாகும்.கடுமையான மாசு அளவுக்கு சற்று கீழே உள்ளது.

மேற்கு வங்காளம்

உள்நாட்டு நீர்வழிகளில் முதல் கொள்கலன் இயக்கம்

  • இந்தியாவின் உள்நாட்டு நீர்வழி ஆணையம் (IWAI), கொல்கத்தாவிலிருந்து வாரணாசிக்கு முதல் கொள்கலன் இயக்கமாக(தேசிய நீர்வழி-1) உணவு மற்றும் பான நிறுவனமான ​​பெப்சிகோவிற்கு (இந்தியா) சொந்தமான கொள்கலன் சரக்குகளைக் கொண்டு செல்லும்.
  • சுதந்திரத்திற்குப் பிறகு இது நாட்டின் உள்நாட்டு நீர்வழிகளில் கொண்டு செல்லும் முதல் கொள்கலன் இயக்கமாகும்.

சர்வதேச செய்திகள்

கத்தார் நாட்டில் வெளிநாட்டு தொழிலாளர்கள் இப்போது முதலாளிகளிடமிருந்து முன் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேற முடியும்

  • நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட கத்தாரின் சர்ச்சைக்குரிய வெளிநாட்டு தொழிலாளர்கள் வெளியேறும் விசா அமைப்பு சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்தது.
  • புதிய சட்டத்தின் கீழ், மிக மூத்த பதவியில் உள்ளவர்களைத் தவிர, ஒரு நிறுவனத்தின் தொழிலாளர் தொகுப்பில் 5 சதவிகிதத்தினர் முதலாளிகளிடம் இருந்து முன் அனுமதி இல்லாமல் நாட்டை விட்டு வெளியேற முடியும்.

அறிவியல் செய்திகள்

உமிழ்வு சோதனை வசதி

  • CSIR-NEERIல் ஒரு உமிழ்வு சோதனை வசதி நிறுவப்பட்டுள்ளதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் கூறினார், இதன் மூலம் வழக்கமான மற்றும் பசுமை பட்டாசுகளின் உமிழ்வு மற்றும் ஒலியை கண்காணிக்க விரிவான பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.

SWAS, SAFAL மற்றும் STAR

  • CSIR விஞ்ஞானிகள் குறைவாக சுற்றுச்சூழலை பாதிக்கும் பட்டாசுக்களை உருவாக்கியுள்ளனர், அவை சுற்றுப்புற சூழலுக்கு நட்பாக மட்டுமல்லாமல், வழக்கமான பட்டாசுக்களைவிட 15-20% மலிவானவை ஆகும்.
  • பாதுகாப்பான நீர் வெளியீட்டாளர் (SWAS), பாதுகாப்பான குறைந்த அலுமினியம் (SAFAL) மற்றும் பாதுகாப்பான தெர்மாய்ட் பட்டாசு (STAR) என்று இந்த பட்டாசுகள் பெயரிடப்பட்டுள்ளன.

மாநாடுகள்

சைபர்ஸ்பேசில் புதுமை பற்றிய மாநாடு, சைபர் செக்யூரிட்டி சவால்கள் & கண்டுபிடிப்புகள்

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு, DRDO புது தில்லியில் “CCTNS – நல்ல நடைமுறைகள் மற்றும் வெற்றி கதைகள்” மீது ஒரு நாள் மாநாடு ஏற்பாடு செய்தது.

நியமனங்கள்

  • ஜெயிர் பொல்சொனாரோ பிரேசில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி
  • மைக்கேல் டி ஹிக்கின்ஸ்இரண்டாம் முறையாக ஐரிஷ் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • நீதிபதி ஏ.எஸ். போபண்ணாகவுஹாத்தி உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி

திட்டங்கள்

AMRUT திட்டம்

  • அசாம் அரசு, பிரம்மபுத்திரா ஆற்றை முக்கிய மூலமாக வைத்து மாநிலத்தின் நகர்ப்புற வீடுகளுக்கு குடிநீர் வசதிகளை AMRUT திட்டத்தின் கீழ் வழங்க திட்டமிட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியா, ஜப்பான் ஆறு ஒப்பந்தங்களில் கையெழுத்து

  • டோக்கியோவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஷின்சோ அபே தலைமையிலான 13 வது ஆண்டு இருதரப்பு உச்சி மாநாட்டிற்குப் பின்னர் இந்தியா மற்றும் ஜப்பான் ஆறு ஒப்பந்தங்களில் கையெழுத்து மற்றும் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு திட்டங்களில் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டன.

விளையாட்டு செய்திகள்

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி

  • ஓமனில் நடைபெறவிருந்த இறுதிப்போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருவருக்கும் கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது.

இரட்டையர் பிரிவில் இந்தியாவின் புதிய நம்பர் 1 டென்னிஸ் வீரர்

  • சமீபத்திய ஏடிபி டென்னிஸ் தரவரிசையில் ரோகன் போபண்ணாவை பின்னுக்குத் தள்ளி 38வது இடத்துக்கு முன்னேறி திவிஜ் சரண் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் புதிய நம்பர் 1 டென்னிஸ் வீரர் ஆனார்.

வாலென்சியா போட்டி

  • கென்யாவின் தூர ஓட்டக்காரரான ஆபிரகாம் கிப்டம் வாலென்சியா போட்டியில் வென்றார், அரை மராத்தான் போட்டியில் 58 நிமிடம் 18 நொடியில் பந்தய தூரத்தை கடந்து உலக சாதனை படைத்தார்.

பானாசோனிக் ஓபன் இந்தியா கோல்ஃப்

  • இந்திய கோல்ப் வீரர் காலின் ஜோஷி பானாசோனிக் ஓபன் இந்தியா கோல்ஃப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

ITTF சேலஞ்சு பெல்ஜியம் ஓபன் டேபிள் டென்னிஸ்

  • ITTF சேலஞ்சு பெல்ஜியம் ஓபன் தொடரில் 21 வயதிற்குட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் அயிகா முகர்ஜி வெள்ளி பதக்கம் வென்றார்.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!