நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 26, 2018

0

நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 26, 2018

முக்கியமான நாட்கள்

விஜிலென்ஸ் விழிப்புணர்வு வாரம்

  • சர்தார் வல்லபாய் பட்டேல் (அக்டோபர் 31) பிறந்த நாள் கொண்டாடும் வாரத்தில் விஜிலென்ஸ் விழிப்புணர்வு வாரமாக மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (சி.வி.சி) அனுசரிக்கிறது.
  • 29 அக்டோபர் – 3நவம்பர் வரை விஜிலன்ஸ் விழிப்புணர்வு வாரம் 2018 அனுசரிக்கப்படும்
  • இந்த ஆண்டிற்கான தீம் ‘Eradicate Corruption-Build a New India’

தேசிய செய்திகள்

அருணாச்சல பிரதேசம்

இரண்டு நாள் குழந்தைகள் திரைப்பட கொண்டாட்டம்

  • அருணாச்சலப் பிரதேசத்தில் நாகர்லகன் நகரில் இரண்டு நாள் குழந்தைகள் திரைப்பட விழா தொடங்கியது. சர்வதேச அளவில் பாராட்டு பெற்ற படமான கவுரு இரண்டு நாள் நிகழ்ச்சியில் திரையிடப்படும்.
  • அருணாச்சல பிரதேச தகவல் மற்றும் பன்னாட்டு உறவுத் துறையுடன் இணைந்து சிறுவர் திரைப்பட சங்கம், இந்தியா இந்த விழாவை ஏற்பாடு செய்திருக்கிறது.

உத்திரப்பிரதேசம்

பிரதமர் மோடி 2018 ஆம் ஆண்டு க்ரிஷி கும்பாவை தொடங்கி வைத்தார்

  • பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் 2018 ஆம் ஆண்டு க்ரிஷி கும்பாவை தொடங்கி வைத்தார். மோடியின் கனவுத்திட்டமான 2022 ஆம் ஆண்டில் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதற்கு நாட்டின் உணவு உற்பத்தியாளர்கள் விதைப்பது முதல் விற்பது வரை அரசு உதவ வேண்டும் என வலியுறுத்தினார்.

சர்வதேச செய்திகள்

ஜப்பானின் ஒகினாவாவில் வாக்கெடுப்பு நடத்த திட்டம்

  • ஜப்பானின் ஒகினாவாவில் அமெரிக்க இராணுவ தளத்தை மாற்றுவதற்கான திட்டத்திற்கு வாக்கெடுப்பு நடத்த திட்டம்.

செஸ்பூல்பார்வையாளர்களுக்கு மீண்டும் அனுமதி

  • பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ‘செஸ்பூல்’ என்று அழைக்கப்பட்ட சிறு போராகே தீவு பார்வையாளர்களுக்கு மீண்டும் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

அறிவியல் செய்திகள்

முதல் சோயுஸ் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது

  • ரஷ்யா முதன்முறையாக சோயுஸ் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

நோய்களைக் கண்டறிய செல்-அளவிலான ரோபோக்கள் கண்டுபிடிப்பு

  • MIT விஞ்ஞானிகள் ஒரு எண்ணெய் அல்லது எரிவாயு குழாய்க்குள் உள்ள நிலைமைகளை கண்காணிக்கவும் அல்லது இரத்த ஓட்டத்தில் மிதந்து சென்று நோயைக் கண்டறியவும் பயன்படுத்தக்கூடிய ஒரு செல் அளவிலான ரோபோக்கள் கண்டுபிடிப்பு.

வணிகம் & பொருளாதாரம்

இந்தியா மூன்றாவது பெரிய விமானச் சந்தையாக வாய்ப்பு

  • முன்னதாக கணித்துள்ளதை விட இந்தியா ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே மூன்றாவது பெரிய விமான போக்குவரத்து சந்தையாக மாறும் எனக்கணிப்பு.
  • சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பு IATA கூற்றுப்படி, தற்போதைய ஏழாவது இடத்தில் இருந்து 2024 க்குள் முதல் மூன்று பெரிய விமானச் சந்தை நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் எனக் கணிப்பு.

தரவரிசை & குறியீடு

பேட்மின்டன் உலகக் கூட்டமைப்பு தரவரிசை

1) சீன தைபேயின் தாய் ட்சூ யிங்

2) இந்தியாவின் பி.வி. சிந்து

மாநாடுகள்

இந்தியா மற்றும் மியான்மர் இடையே 22 வது தேசிய அளவிலான கூட்டம்

  • இந்தியா மற்றும் மியான்மர் இடையேயான 22 வது தேசிய அளவிலான கூட்டம் 25 முதல் 26 அக்டோபர் 2018 வரை நடந்தது. இரு நாடுகளும் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வழங்கவும், சர்வதேச எல்லைக்குள்ளாக மக்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் ஒப்புக்கொண்டது.

இந்திய பெண்கள் தேசிய கரிம விழா 2018 5வது பதிப்பு

  • மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் மேனகா காந்தி புது தில்லியில் இந்திய பெண்கள் தேசிய கரிம விழா 2018 5வது பதிப்பை திறந்துவைத்தார்.

திட்டங்கள்

பரம்பரகத் க்ரிஷி விகாஸ் யோஜனா (PKVY)

  • பரம்பரகத் க்ரிஷி விகாஸ் யோஜனா (PKVY) நாட்டில் கரிம வேளாண்மையை ஊக்குவிப்பதற்கான ஒரு நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • இந்தியா மற்றும் வங்கதேச வர்த்தக மற்றும் கப்பல் இயக்கங்களுக்கான உள்நாட்டு மற்றும் கடலோர நீர் இணைப்புகளை மேம்படுத்துவதற்கான பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஆணையம் இடையே கலந்துரையாடல்

  • டிஜிட்டல் தகவல்தொடர்பு மற்றும் பொருளாதாரத்தின் மீது ஒத்துழைப்பு குறித்து இந்தியா மற்றும் ஐரோப்பிய ஆணையம் இடையே விவாதிக்கப்பட்டது.

2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் BS-IV வாகனத்தின் விற்பனை மற்றும் பதிவு செய்தலுக்கு தடை

  • 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்தியாவில் பாரத் ஸ்டேஜ், BS-IV வாகனத்தின் விற்பனை மற்றும் பதிவு செய்தலுக்கு தடை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மோட்டார் வாகனங்களில் இருந்து வான் மாசுபாடுகளின் வெளியீட்டை ஒழுங்கமைக்க அரசாங்கத்தால் நிறுவப்பட்ட தரநிலைகள் BS உமிழ்வு விதி.
  • BS-IV விதிமுறைகளை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் BS-V விதிகளை தவிர்த்து, BS-VI விதிமுறைகளை 2020 ஆம் ஆண்டளவில் பின்பற்றும் என்று அறிவித்தது.

விருதுகள்

  • சிறந்த போட்டியாளர் மற்றும் சிறந்த சுரங்க கருவி விற்பனையாளர் விருது – பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (பிஇஎம்எல்), மினி ரத்னா பொதுத்துறை செயல்திட்டம், பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ்.

விளையாட்டு செய்திகள்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்

  • பூஜா தண்டா ஹங்கேரியிலுள்ள புடாபஸ்டில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் பெண்கள் ஃப்ரீ ஸ்டைல் ​​57 கிலோ எடைபிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி

  • ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி அரை இறுதிப்போட்டியில் இந்தியா ஜப்பான் அணியை மஸ்கட்டில் எதிர்கொள்கிறது.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group – கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!