நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 30 2018

0

நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 30 2018

தேசிய செய்திகள்

கோவா

எச்..வி பாதுகாப்பிற்கான சிறந்த மையம் டிசம்பர்,  2019க்குள் அமைக்க திட்டம்

  • கோவாவின் சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானே டிசம்பர் 2019 க்குள் மாநில அரசு எச்.ஐ.வி பாதுகாப்பிற்கான சிறப்பான ஒரு மையத்தை அமைப்பதாக தெரிவித்தார். 

மகாராஷ்டிரா

மராத்தாக்களுக்கான 16 சதவிகித இட ஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றியது

  • மகாராஷ்டிரா சட்டமன்றம் சமூக, கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவின்படி மராத்தாக்களுக்காக 16 சதவீத இட ஒதுக்கீட்டு மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றியது. 

சர்வதேச செய்திகள்

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் புதிய ஆயுத மசோதா தாக்கல் சீக்கியர்கள் கிர்பான் வைத்துக்கொள்ள அனுமதி

  • சீக்கியர்கள் தங்கள் பாதுகாப்புக்காக கிர்பான் என்ற குறுவாலை வைத்துக் கொள்ளவும், மதச் சடங்குகளில் நீண்ட வாள் பயன்படுத்துவதையும் அனுமதிக்க இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் புதிய ஆயுத மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. 

நியூசிலாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 145 திமிங்கலங்கள்

  • நியூசிலாந்தில் ஸ்டீவர்ட் தீவில் 145 ‘பைலட்’ இன திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கின. இப்பகுதியில் ஏற்கனவே பல திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கின. 

அறிவியல் செய்திகள்

காங்கோவின் எபோலா வெடிப்பு

  • உலக சுகாதார அமைப்பு, WHO காங்கோவின் கொடிய எபோலா வெடிப்பு இப்போது வரலாற்றில் இரண்டாவது மிகப் பெரியது எனக்கூறியுள்ளது, இது சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு ஆபிரிக்காவில் ஆயிரக்கணக்கானவர்களை கொன்ற பேரழிவிற்கு அடுத்த இடத்தைப்பிடித்துள்ளது. 

வணிகம் & பொருளாதாரம்

இந்தியா கிம்பர்லே செயல்முறைக்கு தலைமை தாங்கவுள்ளது

  • 2018 ஆம் ஆண்டு நவம்பர் 12 முதல் 16 ஆம் தேதி வரை ப்ரூசல்ஸ், பெல்ஜியத்தில் கிம்பர்லே செயல்முறை சான்றிதழ் திட்டம் (KPCS) செயல்முறை சான்றிதழ் திட்டம் (KPCS) நடைபெற்றது. 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் KPCS தலைமையை ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவுக்கு அளித்தது.

தரவரிசை & குறியீடு

அரசாங்கத்தில் உலகின் 100 எதிர்கால தலைவர்கள் பட்டியல்

  • அரசாங்க ஊழியர்களுக்கான ஐக்கிய நாடுகளின் உலகளாவிய கொள்கைத் தளம் அபொலிட்டிகள், ஆந்திர பிரதேச ஐ.டி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி நாரா லோகேஷ் என்பவரை உலகின் மிகச் செல்வாக்குள்ள இளைஞர்களில் ஒருவராக தேர்ந்தெடுத்துள்ளன.
  • முதல் 20 இடங்களில் இருக்கும் ஒரே இந்தியத் தலைவர் இவர் ஆவார்.

மாநாடுகள்

இரண்டாவது அம்பேத்கர் சர்வதேசக் கூட்டம்

  • அரசியல் கட்டமைப்பு நவம்பர் 30, 2018 அன்று நினைவுகூரும் வகையில், இந்திய குடியரசுத் தலைவர் திரு.ராம் நாத் கோவிந்த், புதுதில்லியில் இரண்டாவது அம்பேத்கர் சர்வதேச கூட்டத்தை துவக்கி வைத்தார்.
  • இந்தக் கூட்டத்தை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மற்றும் டாக்டர் அம்பேத்கர் வர்த்தக சபை ஏற்பாடு செய்தது.

புதிய இந்தியாவிற்கான சுகாதார அமைப்பு பற்றிய உரையாடல்

  • நிதி ஆயோக் புதிய இந்தியாவிற்கான சுகாதார அமைப்பு பற்றிய உரையாடலை நடத்துகிறது. ஆயுஷ்மன் பாராத்திற்கு திட்டமிடப்பட்ட பொது-தனியார் ஒத்துழைப்பு மாதிரி போன்ற கொள்கை முரண்பாடுகளில் வளர்ச்சி உரையாடல் புதுமையான மாற்றங்களைக் கவனிக்க வேண்டும்.

நியமனங்கள்

  • டாக்டர் அஜய் பூஷண் பாண்டே – வருவாய் செயலாளர்

திட்டங்கள்

ரைதாரா மணியல்லி ராஜ்ய சர்காரா

  • கர்நாடக அரசு விவசாயிகளுடன் இணையும் பொருட்டு, டிசம்பர் மாதம் முதல் ‘ரைதாரா மணியல்லி ராஜ்ய சர்காரா’ எனும் திட்டத்தை தொடங்க திட்டம்.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!