நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 3 2018

0

நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 3 2018

தேசிய செய்திகள்

ஆந்திரப் பிரதேசம்

கடற்கரை அரிப்பைத் தடுக்க செயற்கை திட்டுகள் அமைக்கத்திட்டம்

 • சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தேசிய கரையோர ஆராய்ச்சி மையம் (NCCR), உலக வங்கி நிதியுதவியுடன் ருசிகொண்டா மற்றும் கங்காவர துறைமுகங்களுக்கிடையில் கடற்கரை அரிப்பை ஆய்வு செய்தது.
 • ஒரு காலநிலை சீரான கடற்கரையை உருவாக்கவும், பெரிய சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஆதரவளிக்கும் உப்பங்கழி மாசுபாட்டை குறைப்பதற்காகவும் இந்திய வானிலை துறை (IMD) செயற்கை திட்டுகள் அமைக்கத்திட்டம்.

ஹிமாச்சலப்பிரதேசம்

மேற்கு காற்றுகள் மழை மற்றும் பனிப்பொழிவைக் கொண்டுவருகிறது

 • மேற்கு காற்றுகள் மத்திய தரைக்கடலில் உருவாகி இந்தியாவின் வடமேற்கு பகுதிக்கு மழை மற்றும் பனிப்பொழிவைக் கொண்டுவருகிறது. இதனால் இமாச்சல பிரதேசத்தில் மழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டது.

மணிப்பூர்

மணிப்பூர் அரசு போதைப் பொருள்கள் மீது போரை அறிவித்தது

 • மாநிலத்தில் கணிசமான எண்ணிக்கையிலான மக்களை பாதிக்கும் போதைப் பொருள்கள் மீது மணிப்பூர் அரசு போரை அறிவித்துள்ளது.

புது தில்லி

எம்எஸ்எம்இ[MSME]க்கு 59 நிமிடங்களில் ரூ. 1 கோடி கடன்

 • பிரதமர் நரேந்திர மோடி சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஒரு கோடி ரூபாய் கடன் தொகையை 59 நிமிடங்களில் பெற ஒரு கடன் போர்ட்டல் உட்பட பிற பிரதான நடவடிக்கைகளை அறிவித்தார்.

உத்தரகாண்ட்

கியான் கும்பமேளா (கிண்ணத் திருவிழா) தொடங்கியது

 • ஜனாதிபதி இராமநாத் கோவிந்த் ஹரித்வாரில் இரண்டு நாள் கியான் கும்பமேளா (கிண்ணத் திருவிழா)வை தொடங்கி வைத்தார்.

சர்வதேச செய்திகள்

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்

 • பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு புதிதாக நியமிக்கப்பட்ட பிரதம மந்திரி மஹிந்தர ராஜபக்ஷேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர்.

துருக்கியில் புது விமானநிலையம்

 • துருக்கி ஜனாதிபதி ரெசெப் தய்யிப் எர்டோகன் புதிய இஸ்தான்புல் விமான நிலையத்தை திறந்து வைத்தார். இது உலகின் பரபரப்பான விமான நிலையத்தில் ஒன்றாக அமையும்.

படகு எரிக்கும் திருவிழா

 • படகு எரிக்கும் திருவிழா ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கு ஒருமுறை தைவானில் நடக்கிறது. தைவானின் சிறந்த நாட்டுப்புற விழாக்களில் இதுவும் ஒன்றாகும்.

திட்டங்கள்

‘ஜீரோ ஹங்கர்'[பசியில்லா நிலை]

 • வறுமை, பசி ஆகியவற்றை ஒழிக்க முற்படும் முயற்சியில், 20 க்கும் மேற்பட்ட நாடுகள் விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி பற்றிய புதிய ‘ஜீரோ ஹங்கர்’ [பசியில்லா நிலை] அறிவிப்புக்கு உறுதியளித்திருக்கின்றன.
 • சீனாவின் சங்ஷாவில் நடைபெற்ற சர்வதேச வளர்ச்சி ஒத்துழைப்பு பற்றிய ஒரு மன்றத்தின் முடிவில் இந்த உறுதிப்பாடு எடுக்கப்பட்டது.

உலக கழிப்பறை தினப் போட்டி

 • குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கான ஸ்வச்ச பாரத் உலக கழிப்பறை தினப் போட்டியை அறிவித்தது. திறந்த வெளியில் மலம் கழிப்பது ஒழிக்கப்பட்ட [ODF] நிலையில் சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம், சுகாதார மக்கள் இயக்கத்தை மீண்டும் தீவிரப்படுத்துவதற்கு இந்தியாவின் அனைத்து மாவட்டங்களையும் ஊக்குவிப்பதே இந்த போட்டியின் நோக்கமாகும்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

எல்.பி.ஜி. தொடர்பான சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்கு எண்ணெய் விற்பனை நிறுவனங்கள், பொது சேவை மையங்கள் கையெழுத்து

 • எல்பிஜி தொடர்பான சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் மற்றும் பொது சேவை மையங்கள் கையெழுத்திட்டன.

நிறுவன அவசர சட்டதிருத்தம்

 • சிறந்த நிறுவன இணக்கத்துடன் வர்த்தகத்தை எளிதாக்க, நிறுவன அவசர சட்டதிருத்தம் – 2018ஐ மத்திய அரசு பிரகடனப்படுத்தியது.

பாதுகாப்பு செய்திகள்

ICGS வராஹா அறிமுகப்படுத்தப்பட்டது

 • இந்திய கடலோர காவல்படை சென்னையில் ICGS வராஹா என்று அழைக்கப்படும் ஒரு புதிய கடல் ரோந்து கப்பல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கப்பல் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு, கட்டப்பட்டது.

விளையாட்டு செய்திகள்

SAFF U-15 சாம்பியன்ஷிப்

 • காத்மாண்டுவில் நடைபெற்ற SAFF U-15 ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் நேபாளை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.
 • பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் தங்கப்பதக்கத்திற்கான போட்டியில் விளையாடும்.

ஏடிபி பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி

 • ஏடிபி பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் அரை இறுதிப் போட்டியில் ரோஜர் ஃபெடரருடன் நோவாக் ஜோகோவிக் மோதவுள்ளார்.

தனி நபர் வால்ட் போட்டி

 • கத்தாரில் நடைபெற்ற தனி நபர் வால்ட் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் 13 உலக சாம்பியன்ஷிப் தங்க பதக்கம் வென்ற முதல் ஜிம்னாஸ்ட் எனும் சாதனை படைத்தார் சூப்பர்ஸ்டார் சிமோன் பைல்ஸ்.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here