நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 25,26 2018

0

நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 25,26 2018

முக்கியமான நாட்கள்

நவம்பர் 25 – பெண்களுக்கு எதிரான வன்முறை அகற்றுவதற்கான சர்வதேச தினம்

  • ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை நவம்பர் 25 ம் தேதியை பெண்களுக்கு எதிரான வன்முறையை அகற்றுவதற்கான சர்வதேச தினமாக அறிவித்துள்ளது.
  • உலகெங்கிலும் உள்ள பெண்கள் கற்பழிப்பு, சமுதாய வன்முறை மற்றும் பிற வன்முறைகளுக்கு உட்பட்டுள்ளனர், அதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
  • 2018 தீம் – “Orange the World: #HearMeToo”

அரசியலமைப்பு தினக் கொண்டாட்டம்

  • இந்தியாவின் அரசியல் சாசனம் 1949 நவம்பர் 26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டதை குறிக்கும் விதமாக, உச்சநீதிமன்றம் சார்பில் புதுதில்லியில் நவம்பர் 26, 2018 நடைபெற்ற அரசியல் சட்ட தின விழாவை குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் தொடங்கிவைத்தார்.

தேசிய பேரிடர் முகாமைத்துவ ஆணையத்தின் (NDMA) 14 வது துவக்க தினம்

  • தேசிய பேரிடர் முகாமைத்துவ ஆணையத்தின் (NDMA) 14 வது துவக்க தினத்தை மத்திய மாநில உள்துறை அமைச்சர் ஸ்ரீ கிரண் ரிஜிஜு துவக்கி வைப்பார்.
  • 2018 தீம்“Early Warning for Disasters”. 

தேசிய செய்திகள்

புது தில்லி

‘HAUSLA-2018’

  • மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு (MWCD) அமைச்சகத்தின் ‘HAUSLA-2018’ சிறுவர் பராமரிப்பு நிறுவனங்களின் தேசிய குழந்தைகள் விழாவை (CCIs) செயலாளர் திரு ராகேஷ் ஸ்ரீவஸ்தவா, புது தில்லியில் திறந்துவைத்தார்.
  • 2018 தீம்“Child Safety”.

ஒடிசா

அரிய பழங்குடி மொழிகளுக்கு லெக்சிகன்

  • பழங்குடி மொழிகளை புழக்கத்தில் வைத்திருப்பதற்காக, ஒடிசா அரசு அத்தகைய 21 மொழிகளின் லெக்சிகனை அறிமுகப்படுத்தியது.
  • அனைத்து 21 பழங்குடி மொழிகளிலும் பன்மொழி கல்வி (MLE) மற்றும் முரண்பாடான பழங்குடி மொழிக் கற்றல் தொகுதிகள் ஆகியவற்றிற்கான இருமொழி பழங்குடி அகராதிகள் சிறப்பு வளர்ச்சி கவுன்சில் மூலம் உருவாக்கப்பட்டது.

சர்வதேச செய்திகள்

கர்த்தார்பூர் சாஹிப் நடைபாதையின் திறப்பு விழா

  • நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தானிலுள்ள கர்த்தார்பூரில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப்பிற்கு இந்தியப் பக்கத்திலிருந்து விசா இல்லாத நடைபாதை கட்ட துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அடிக்கல் நாட்ட உள்ளார்.
  • மத்திய அமைச்சரவை சமீபத்தில் நடைபாதை அமைக்க ஒரு முன்மொழிவை ஒப்புக் கொண்டது. 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குரு நானக்கின் 550வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புது தில்லியின் கோரிக்கையை பாகிஸ்தான் ஏற்றுக் கொண்டது.
  • இந்திய எல்லையிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் ரவி நதிக்கரையில் பாகிஸ்தான் பஞ்சாபின் நாரோவால் மாவட்டத்தின் கர்த்தார்பூரில் அமைந்துள்ளது இந்த இடம். 

27 ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் பிரெக்சிட் [Brexit] உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளனர்

  • ப்ரூஸ்சல்ஸில் நடைபெற்ற சிறப்பு உச்சிமாநாட்டில், பிரிட்டன் உடனான ஒரு வரலாற்று பிரெக்சிட் [Brexit] ஒப்பந்தத்தின் நிபந்தனைகளுக்கு, 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களின் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
  • பிரிட்டன் மார்ச் 29, 2019 இல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் என எதிர்பார்ப்பு. 

யுஎஸ் $ 5 மில்லியன் பரிசு அறிவிப்பு

  • மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் 10 வது ஆண்டு நினைவு தினத்தில், மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கான வெகுமதி (RFJ) திட்டத்தின் கீழ், 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு, திட்டமிடல் அல்லது வசதியளித்தல் போன்ற தொடர்புடைய நபரின் கைது அல்லது தண்டனைக்கு வழிவகுக்கும் தகவல்களுக்கு 5 மில்லியன் டாலர் பரிசை அமெரிக்கா அறிவித்தது.

தைவானியர்கள் கே திருமணத்தை நிராகரித்தனர்

  • ஆசியாவில் முதன்முதலாக ஒரே பாலின ஜோடிகளை குழந்தை பராமரிப்பு மற்றும் காப்பீட்டு நலன்கள் பகிர்ந்து கொள்ள அனுமதித்த தீவு ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தைவானில் வாக்கெடுப்பு மூலம் திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் மட்டுமே இருக்க வேண்டும் என வாக்களித்துள்ளனர். இது எல்ஜிபிடி [LGBT] ஜோடிகளுக்கு ஒரு பின்னடைவு ஆகும். 

வணிகம் & பொருளாதாரம்

EIB காற்று ஆற்றல் நிதி திட்டத்தை விரிவாக்கியது

  • ஐரோப்பிய முதலீட்டு வங்கி (EIB), தற்போது எஸ்.பி.ஐ. உடன் உள்ள கடன் திட்டங்களை விரிவாக்குவதன் மூலம் இந்தியாவின் காற்று ஆற்றல் திட்டங்களுக்கு அதன் ஆதரவை அதிகரிக்கும் என்று கூறியுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ADBக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையில் ஒப்பந்தம்

  • ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) மற்றும் இந்திய அரசும், பீகாரில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளை சாலை பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய அனைத்து வானிலை தரத்திற்கும், 230 கிலோமீட்டர் பரப்பளவை உயர்த்த மற்றும் மேம்படுத்த நிதியுதவிக்காக 200 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

மொபைல் செயலிகள் & இணைய போர்ட்டல்

பைசாஇணையப்பக்கம்

  • தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் (DAY-NULM) கீழ் பயனாளிகளுக்கு வங்கிக்கடன்கள் மீதான வட்டித்தொகை பற்றிய விவரங்களை மத்தியப்படுத்தப்பட்ட மின்னணு முறையில் தெரிந்துகொள்வதற்காக பைசா  எனப்படும் கடன் மற்றும் வட்டித் தொகையை எளிதாக அறிந்துகொள்ளும் இணையப்பக்கம் புதுதில்லியில் தொடங்கிவைக்கப்பட்டது.
  • இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் வங்கியான அலகாபாத் வங்கி இந்த இணையப்பக்கத்தை வடிவமைத்து உருவாக்கி உள்ளது.

ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளம் (IHIP)

  • ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளம் (IHIP) ஏழு மாநிலங்களில் உள்ள ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் (ஐ.எஸ்.எஸ்.பி.) பிரிவில் மத்திய சுகாதாரசெயலாளர் பிரீத்தி சுதனால் துவக்கி வைக்கப்பட்டது.
  • நோயுற்ற தன்மையை கண்டறிதல், நோயுற்ற தன்மை மற்றும் இறப்பு ஆகியவற்றைக் குறைப்பதற்கும், மக்களிடையே உள்ள நோய்களின் சுமையை குறைப்பதற்கும், ஆரோக்கியமான சுகாதார அமைப்புகள் மேம்படவும் இந்தத் தளம் உதவும்.

பசு ஹாட் (ஜிபிஎம்எஸ் போக்குவரத்து)

  • விவசாயிகள் மற்றும் இத்துறை தொழில் முனைவோரை பால் மற்றும் அது சார்ந்த தொழிலில் ஈடுபடுத்தும் நோக்கில் மத்திய அரசு ஆன்லைன் இணைய தளத்தை தொடங்கியுள்ளது.
  • இ-பசு ஹாட் என்ற பெயரிலான இந்த இணைய தளத்தில் வேளாண் பொருள்களை வாங்க, விற்க முடியும்.
  • உயர் ரக கால்நடைகளின் சினை முட்டைகள் கிடைப்பது உள்ளிட்ட தகவலும் இந்த ஆன்லைன் இணையதளம் மூலம் பெறலாம்
  • UMANG (புதிய கால ஆளுமைக்கான ஐக்கியப்பட்ட மொபைல் செயலி) உடன் இது உருவாக்கப்பட்டு மற்றும் ஒருங்கிணைக்கப்பட்டது.
  • உள்நாட்டு இனங்களின் மரபணு தேர்வு மற்றும் 6000 பால் விலங்குகளை மரபணு ரீதியாக மதிப்பீடு செய்வதற்காக இண்டஸ்சிப்[INDUSCHIP] உருவாக்கப்பட்டது.

விளையாட்டு செய்திகள்

கோல்ப் உலகக்கோப்பை

  • மெல்போர்னில் நடைபெற்ற கோல்ப் உலகக் கோப்பையில் அனிர்பன் லாஹிரி மற்றும் ககன்ஜீத் புல்லர் ஆகியோர் 10-வது இடம் பிடித்தனர்.

2018 ஹாக்கி உலக கோப்பை

  • புவனேஸ்வரில் நடைபெறும் 2018 ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் விளையாட பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வந்து சேர்ந்தது.

சையத் மோடி சர்வதேச பேட்மின்டன்

  • சையத் மோடி சர்வதேச உலக டூர் சூப்பர் 300 போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சீனாவின் லு குவாங்சுவை சமீர் வர்மா தோற்கடித்து பட்டத்தைக் கைப்பற்றினார் .
  • இது அவருக்கு மூன்றாவது பட்டம் ஆகும், இதற்கு முன் சுவிஸ் ஓபன் மற்றும் ஹைதராபாத் ஓபன் போட்டிகளில் பட்டம் பெற்றுள்ளார்.
  • மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் சீன வீரர் ஹான் யுவிடம் சாய்னா நேவால் தோல்வி அடைந்தார். 

இந்தியா Vs ஆஸ்திரேலியா டி20

  • இந்தியா Vs ஆஸ்திரேலியா 3 வது டி20யில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என சமன் செய்தது. 

ஐசிசி மகளிர் உலக டி 20

  • இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா தனது நான்காவது மகளிர் உலக டுவென்டி 20 சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது.

கலை ஜிம்னாஸ்டிக்ஸ் உலக கோப்பை

  • ஜெர்மனியில் உள்ள காட்பஸ்ஸில் நடைபெற்ற கலை ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக் கோப்பையின் வால்ட் பிரிவு போட்டியில் இந்திய ஜிம்னாஸ்ட் தீபா கர்மாகர் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
  • பிரேசில் நாட்டின் ரெபேக்கா ஆண்ட்ரேட் தங்கம் வென்றார் , அமெரிக்காவின் ஜேட் கேரி வெள்ளி வென்றார். 

காமன்வெல்த் ஃபென்சிங் சாம்பியன்ஷிப்

  • கான்பெர்ராவில் நடைபெறும் சீனியர் காமன்வெல்த் ஃபென்சிங் சாம்பியன்ஷிப்பில் தங்க பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார் சி.ஏ.பவானி தேவி.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!