நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 21 2018

0

நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 21 2018

முக்கியமான நாட்கள்

நவம்பர் 21 – உலக தொலைக்காட்சி தினம்

  • முதல் உலக தொலைக்காட்சி மன்றம் 1996 இல் நடைபெற்றதன் நினைவாக 1996 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை நவம்பர் 21 ம் தேதியை உலக தொலைக்காட்சி தினமாக அறிவித்தது. 

நவம்பர் 21 – உலக மீன்பிடி தினம்

  • உலக மீன்பிடி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21 ஆம் தேதி உலகெங்கிலும் மீனவர்களின் சமூகங்கள் மீன்பிடி மற்றும் ஆரோக்கியமான கடல்சார் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் நிலையான பங்குகளை உறுதிப்படுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது.

தேசிய செய்திகள்

கோவா

IFFI யில் மகாத்மா காந்தியின் பலஊடக டிஜிட்டல் கண்காட்சி துவக்கம்

  • கோவாவின் பனாஜி நகரில் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் (IFFI) மகாத்மா காந்தியின் பல-ஊடக டிஜிட்டல் கண்காட்சியை தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் ராத்தோர் மாநில அமைச்சர் தொடங்கிவைத்தார்.

ஒடிசா

மாநில அவையில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு

  • சட்டசபை மற்றும் பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை ஒதுக்கீடு செய்வதற்கான ஒரு தீர்மானத்தை ஒடிசா சட்டசபை ஏகமனதாக நிறைவேற்றியது.

புது தில்லி

நிறுவனங்களின் கண்டுபிடிப்பு கவுன்சில் (IIC)’

  • மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ‘நிறுவனங்களின் கண்டுபிடிப்பு கவுன்சில் (ஐ.ஐ.சி.) திட்டத்தை புது டெல்லியில் துவக்கி வைத்தார்.
  • மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் AICTE யில் ஒரு “கண்டுபிடிப்பு செல்லை” நிறுசியுள்ளது, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் (கண்டுபிடிப்பு) புதுமை கலாச்சாரம் முறையாக வளர்க்கப்பட வேண்டி இதை செய்துள்ளது.

சர்வதேச செய்திகள்

.நா. இடம்பெயர்வு ஒப்பந்தம்

  • ஏற்கனவே அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளால் நிராகரிக்கப்பட்ட ஐ.நா. இடம்பெயர்வு ஒப்பந்தத்தை நிராகரிப்பதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு உதவியை நிறுத்தியது அமெரிக்கா

  • அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கும்66 பில்லியன் டாலர் பாதுகாப்பு உதவித்தொகையை இடைநீக்கம் செய்துள்ளது.
  • பாகிஸ்தான் பெரும்பாலும் அண்டை நாடுகளுக்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்தும் குழுக்களை ஊக்குவிப்பதாக வந்த குற்றச்சாட்டிற்கு எதிராக இதுவரை தீவிர நடவடிக்கை எடுக்காததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்ற அமெரிக்கா தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மாநாடுகள்

சவூதி அரேபியா மற்றும் யு... 500 மில்லியன் டாலர்களை போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமன் நாட்டிற்கு வழங்கியது

  • சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட், யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக இராணுவ கூட்டணியை அமைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் அங்கு பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு உதவ 500 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை சவூதி அரேபியா மற்றும் யு.ஏ.இ. அறிவித்தது.
  • சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் தலா 250 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி ஒதுக்கியுள்ளது. இந்தத்தொகை 10 மில்லியன் மக்களுக்கு உணவு தட்டுப்பாட்டை நீக்க இந்த உதவும்.

3வது இந்தியாசிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் உரையாடல்

  • 3வது இந்தியா-சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் உரையாடல் விசாகப்பட்டினத்தில் முடிவடைந்தது.
  • இந்தியாவில் சிங்கப்பூர் ஆயுதப்படைகளுக்கு பயிற்சிகள் மற்றும் கூட்டு பயிற்சிகள் நடத்துவதற்கான இருதரப்பு உடன்படிக்கையை புதுப்பித்தல் இந்த உரையாடலின் முக்கியத்துவமாகும்.
  • அடுத்த ஆண்டு சிங்கப்பூரில் 4 வது பாதுகாப்பு அமைச்சர் உரையாடல் நடைபெறும்.

சமூக வானொலி விழிப்புணர்வு ஓர்க்ஷாப் 

  • தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சமூக வானொலி விழிப்புணர்வு ஓர்க்ஷாப் கோவாவின் பனாஜியில் உள்ள சர்வதேச மையத்தில் திறக்கப்பட்டது.
  • இந்த ஓர்க்ஷாப்பை உண்மையான மாற்றத்திற்கான நவீன பயன்பாடுகள் (SMART) கோருபவர்களுடன் ஒன்றிணைந்து தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
  • இதுபோன்ற நிகழ்வின் 79 வது பதிப்பு இதுவாகும், கோவாவில் முதல் முறையாக நடைபெறுகிறது.

நியமனங்கள்

  • தென் கொரியாவின் கிம் ஜாங் யாங்இன்டர்போல் தலைவர் [2020 வரை]

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஆக்ராவில் ஒருங்கிணைந்த கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்திற்கு என்எம்சிஜி ஒப்புதல்

  • ரூ.1573.28 கோடி மதிப்பிலான 10 திட்டங்களுக்கு கங்கையைத் தூய்மைப்படுத்தும் தேசிய இயக்கத்தின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
  • தாஜ்மஹாலை பாதுகாக்கவும், உத்தரப்பிரதேசம், பீஹார், மேற்குவங்கம் மற்றும் ஹிமாச்சலப்பிரதேசம் ஆகியவற்றில் காற்று மாசுபடுவதைக் குறைக்க கழிவு நீர் அகற்றும் திட்டங்களுக்கு என்எம்சிஜி ஒப்புதல்.

விளையாட்டு செய்திகள்

அக்ரோபாட்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் உலக கோப்பை

  • ஆண்கள் [பிரின்ஸ் அரிஸ் மற்றும் ரெஜிலேஷ் சுரிபாபு] மற்றும் பெண்கள் [அயுஷி கோதேஸ்வர், ப்ரச்சி பர்க்ஹி மற்றும் ம்ருண்மயி வால்டே] குழுப்பிரிவில் இந்தியா இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றன.

இந்தியா Vs ஆஸ்திரேலியா டி-20 தொடர்

  • பிரிஸ்பேனில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் முதல் போட்டியில் இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!