நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 2 2018

0

நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 2 2018

தேசிய செய்திகள்

மகாராஷ்டிரம்

என்எஸ் விராட் [INS Viraat] ஒரு மிதக்கும் அருங்காட்சியகமாக மாற்றத்திட்டம் 

  • மகாராஷ்டிர அமைச்சரவை, ஐ.என்.எஸ்.விராட் என்ற கப்பல் ஒரு மிதக்கும் அருங்காட்சியகமாக மாற்ற அனுமதி அளித்தது. இது மார்ச் 2017 ல் கப்பற்படையிலிருந்து நீக்கப்பட்டது.
  • 852 கோடி ரூபாய் செலவில் பொது-தனியார் கூட்டுறவு (PPP) மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

புது தில்லி

மைக்ரோ, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஆதரவு திட்டம்

  • பிரதம மந்திரி நரேந்திர மோடி புதுதில்லியில் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) ஆதரவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
  • எம்எஸ்எம்இ ஆதரவுத் திட்டம் நாடு முழுவதும் 100 நாட்களுக்கு 100 மாவட்டங்ளில் இயக்கப்படும்.

நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதவியேற்பு

  • நீதிபதிகளான ஹேமந்த் குப்தா, ஆர். சுபாஷ் ரெட்டி, எம்.ஆர். ஷா மற்றும் அஜய் ரஸ்தோகி ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றனர். இதன் மூலம் மொத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 28 ஆக உயர்வு

சர்வதேச செய்திகள்

வெளிநாட்டு தொழிலாளர்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் ஜப்பான் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

  • ஜப்பான் அமைச்சரவை நீண்ட கால தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ள நாட்டில் நிறைய நீல காலர் வெளிநாட்டு தொழிலாளர்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் வரைவு மசோதாவிற்கு ஒப்புதல்.

உலகப் போர்களில் சண்டையிட்ட இந்திய வீரர்களுக்கு புதிய நிதியுதவியை அளிக்க UK திட்டம்

  • பிரிட்டனுக்காக இரண்டு உலகப் போர்களின்போது போராடிய இந்திய வீரர்களுக்கு ஆதரவு வழங்குவதற்கான திட்டங்களை UK அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது.

அறிவியல் செய்திகள்

சீனா புதிய உயர் சுற்றுப்பாதை செயற்கைக்கோளை அறிமுகப்படுத்தியது

  • சீனா வெற்றிகரமாக உள்நாட்டிலேயே தயாரான பெய்டௌ [BeiDou] உலகளாவிய செயற்கைக்கோள் நேவிகேஷன் அமைப்பான உயர் சுற்றுப்பாதை செயற்கைக்கோளை அறிமுகப்படுத்தியது. பூமியின் மேலே 36,000 கி.மீ., உயரத்தில் நிலை நிறுத்தப்பட்ட முதல் பெய்டௌ [BeiDou] -3 செயற்கைக்கோள் இதுவேயாகும்.
  • இது அமெரிக்க ஜி.பி.எஸ் அமைப்பு, ரஷ்யாவின் GLONASS மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கலீலியோ ஆகியவற்றிற்குபின் வரும் நான்காவது உலகளாவிய செயற்கைக்கோள் நேவிகேஷன் அமைப்பு ஆகும்.

வணிகம் & பொருளாதாரம்

ஜி.எஸ்.டி. சேகரிப்பு ரூ .1 லட்சம் கோடியைக் கடந்தது

  • கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்டது முதல், சரக்குகள் மற்றும் சேவை வரி வசூல், இரண்டாவது முறையாக ஒரு லட்சம் கோடியை கடந்தது. 2018 அக்டோபரில் சேகரிக்கப்பட்ட மொத்த ஜி.எஸ்.டி. வருவாய் 1 லட்சம் 710 கோடி ரூபாய் ஆகும்.

மாநாடுகள்

கடற்படை தளபதிகளின் மாநாடு

  • இந்த ஆண்டின் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கடற்படை தளபதிகள் மாநாட்டின் இரண்டாவது பதிப்பு புது டெல்லியில் முடிவடைந்தது.

ரோம் திரைப்பட விழா

  • ரோம் திரைப்பட விழாவின் வீடியோசிட்டே 2018ல் இந்திய அரங்கு தொடங்கப்பட்டுள்ளது. விர்சுவல் ரியாலிட்டி, வீடியோ கேமிங், அனிமேஷன், திரைப்பட உருவாக்குதல் ஆகியவற்றை மையமாக கொண்ட நிகழ்ச்சிதான் இந்த வீடியோசிட்டே.

திட்டங்கள்

அடல் ஓய்வூதிய திட்டம்

  • ஒரு கோடி 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் அடல் ஓய்வூதிய யோஜனாவில் இணைந்துள்ளனர்.
  • உத்தரபிரதேசம், பீகார், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்கள் அடல் ஓய்வூதியத் திட்டத்தில் முதன்மையான பங்களிப்பாளர்களாகும்.
  • 18 முதல் 40 வயது வரை உள்ள அனைத்து இந்திய குடிமக்களுக்கும் இந்த திட்டம் கிடைக்கிறது. இதன் கீழ், சந்தாதாரர்கள் 60 வயது முதல் ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 1000 ரூபாய் 5000 ரூபாய் ஓய்வூதியம் பெறமுடியும்.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!