நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 10 2018

0

நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 10 2018

முக்கியமான நாட்கள்

நவம்பர் 10 – சர்வதேச கணக்கியல் தினம்

  • நவம்பர் 10 அன்று சர்வதேச கணக்கியல் தினம் கொண்டாடப்படுகிறது. 1494 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி இரட்டை நுழைவு புத்தகத்தைப் பற்றி முதல் புத்தகத்தை வெளியிட்ட, இத்தாலிய கணிதவியலாளர் லூகா பாசியோலிக்கு மரியாதை செலுத்தும் விதமாக, சர்வதேச கணக்கியல் தினம் நவம்பர் 10 அன்று கொண்டாடப்படுகிறது.

நவம்பர் 10 – அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான உலக அறிவியல் தினம்

  • அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான உலக அறிவியல் தினம் 10 நவம்பர் அன்று கொண்டாடப்படுகிறது. இது சமுதாயத்தில் விஞ்ஞானத்தின் முக்கிய பங்கை எடுத்துக்காட்டுகிறது மற்றும் வளர்ந்துவரும் விஞ்ஞான விவாதங்களில் பொதுமக்கள் ஈடுபட வேண்டும் என்பதையும் காட்டுகிறது. இது நம் அன்றாட வாழ்வில் விஞ்ஞானத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
  • 2018 தீம்: “Science, a Human Right”

தேசிய செய்திகள்

புது தில்லி

டெல்லியின் காற்றுத் தரம்மிக மோசமானநிலைக்கு தள்ளப்பட்டது

  • டெல்லியின் காற்றுத் தரம் ‘மிக மோசமான’ நிலைக்கு தள்ளப்பட்டது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுப்படி,ஒட்டுமொத்த காற்று தரத்தின் குறியீடு (AQI) 394 ஆக பதிவாகியுள்ளது. இது ‘மிக மோசமான’ காற்றுத் தரப் பிரிவில் வரும்.

தமிழ்நாடு

தமிழ்நாடு 41% கடற்கரையை இழந்தது

  • கடந்த இரண்டு தசாப்தங்களில், தமிழ்நாட்டின் கடற்கரையில் 41% இழப்பு கடல் அரிப்பால் ஏற்பட்டுள்ளது. துறைமுக வளர்ச்சி, ஆற்றில் அணை கட்டுதலால் கடலோரப்பகுதிக்கு வண்டல் மண் வருவதை தடுக்கிறது
  • கடல் மட்ட உயர்வு மற்றும் புயல்கள் போன்ற இயற்கையான காரணங்கள் தவிரத்து மேலை குறிப்பிட்டுள்ளவையே கடற்கரை இழப்பிற்கு சில காரணங்கள் ஆகும்.

மேற்கு வங்கம்

24 வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா

  • 24 வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா (KIFF) நேதாஜி உள்ளரங்க ஸ்டேடியத்தில் தொடங்கியது. இது நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய திரைப்பட விழாவாக கருதப்படுகிறது, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிலிருந்து சர்வதேச விருதினை வென்ற திரைப்படங்களை திரையிடுகின்றனர்.

சர்வதேச செய்திகள்

இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டது

  • ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை ஒரு அரசிதழ் அறிவிப்பு மூலம் கலைத்துவிட்டு ஜனவரி 5 ஆம் தேதி தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார்.

சீனா மியான்மரில் பல பில்லியன் டாலர் மூலோபாய துறைமுக ஒப்பந்தத்தை கைப்பற்றுகிறது

  • மியான்மரில் உள்ள வங்காள விரிகுடா கடற்கரையோரத்தில் உள்ள ஒரு முக்கிய நகரில் ஒரு துறைமுகத்தை உருவாக்க சீனா பல பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் சீனா தனது மூன்றாவது துறைமுகம் அமைப்பது குறிப்பிடத்தக்கது.

சவுதி தலைமையிலான கூட்டணி விமானத்திற்கு எரிபொருள் நிரப்புவதை அமெரிக்கா நிறுத்தியது

  • ஏமனில் நடக்கும் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி விமானத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்கு அமெரிக்கா தடைவிதித்தது, இது சவுதி அரேபியா படைக்கு ஏற்பட்ட பின்னடைவாகும். 

அறிவியல் செய்திகள்

வியாழனின் ட்ரோஜன் விண்கற்களைப் பார்வையிடுவதற்காக NASA ஆய்வு செய்யத்திட்டம்

  • நாசாவின் ரால்ப் – ப்ளூட்டோ வரை பயணம் மேற்கொண்ட ஒரு விண்வெளிக் கருவி – சூரிய மண்டலத்தின் ஆரம்ப நாட்களில் இருந்து எஞ்சியிருக்கும் வியாழனின் ட்ரோஜன் விண்கற்களை ஆராய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில், ரால்ப், லூசி மிஷனுடன் இணைந்து வியாழனின் ட்ரோஜன் விண்கற்களுக்கு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.

வணிகம் & பொருளாதாரம்

டிஜிட்டல் முறையில் செலுத்தும் பணப்பரிவர்த்தனைகள் 2018 ஆகஸ்டில் 244 கோடியாக உயந்தது

  • கடந்த இரண்டு ஆண்டுகளில், டிஜிட்டல் முறையில் செலுத்தும் பணப்பரிவர்த்தனைகள் 2018 ஆகஸ்டில் 244 கோடியாக உயந்தது.
  • புதிய கட்டணம் முறைகளான, BHIM-UPI, AePS மற்றும் NETC ஆகியவை டிஜிட்டல் கட்டண முறையை ஊக்குவிப்பதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்தது.

மாநாடுகள்

உலகளாவிய கூலிங் இன்னோவேஷன் உச்சி மாநாடு

  • 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதி புது தில்லியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தொடங்கி வைக்கிறார்.
  • இந்த உச்சிமாநாடு முதன்முறையாக தீர்வுகளை மையமாகக் கொண்ட நிகழ்வு ஆகும், இது அதிகரித்துவரும் அறை குளிரூட்டிகளால் ஏற்படும் பிரச்னையை சமாளிக்க உலகெங்கிலும் உள்ள தலைவர்களுடன் சேர்ந்து கூட்டிணைந்த வழிமுறைகளையும் பாதையையும் கண்டறிய உதவும்.

நியமனங்கள்

  • பித்யுத் சக்ரவர்த்திவிஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்

விளையாட்டு செய்திகள்

ஆசிய ஏர்கண் சாம்பியன்ஷிப்

  • குவைத்தில் நடைபெற்ற 11வது ஆசிய ஏர்கண் சாம்பியன்ஷிப் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி ஜூனியர் பிரிவில் இந்திய ஜோடி மனு பேகர் மற்றும் சௌரப் சவுதரி ஆகியோர் உலக சாதனை படைத்து தங்கம் வென்றனர்.

உலக மல்யுத்தம் தரவரிசை- இந்திய வீரர் பஜ்ரங் புனியா முதல் இடம் பிடித்து சாதனை

  • இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா. காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றார். உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • இதன்மூலம் ஒருங்கிணைந்த உலக மல்யுத்தம் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

ஹர்மன்பிரீத் கவுர் சதம் விளாசி சாதனை

  • பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் தொடங்கியது. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சதம் விளாசி சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.
  • அத்துடன் 20 ஓவர் உலக கோப்பையில் சதம் கண்ட 3-வது வீராங்கனை என்ற சிறப்பையும் ஹர்மன்பிரீத் கவுர் பெற்றார்.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!