நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 20 2019

0

நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 20 2019

தேசிய செய்திகள்

கோவா

முதல்வர் பிரமோத் சாவந்த் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்

  • 20 எம்.எல்.ஏக்கள் கோவா முதல்வர் பிரமோத் சவாந்த்-க்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்தனர். இதன்மூலம் 36 உறுப்பினர்களை கொண்ட கோவா சட்டப்பேரவையில் பாஜக அரசு பெரும்பான்மையை நிரூபித்துள்ளது.

தெலுங்கானா

சோளக்கருது உலர்த்தும் வசதி தொடங்கப்பட்டது

  • முக்கிய இந்திய பயிர்களின் தரம் வாய்ந்த கலப்பினங்களை உருவாக்கும் காவேரி விதைகள் தெலுங்கானாவின் கரீம்நகரில் உள்ள மொலங்கூரில் அதன் சோளக்கருது உலர்த்தும் வசதி தொடங்கப்பட்டதாக அறிவித்துள்ளது. இந்த ஆலை ஆசியாவின் மிகப்பெரியது மற்றும் முதன்மையான சோளக்கருது உலர்த்தும் ஆலை ஆகும்.

சர்வதேச செய்திகள்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜக்மீத் கனடா பாராளுமன்றத்தில் நுழைந்து வரலாற்றை உருவாக்கினார்

  • கனடா நாடாளுமன்றத்தில் பதவியேற்கும் முதல் வெள்ளை நிறத்தவரல்லாத எதிர்க்கட்சி தலைவர் எனும் சிறப்பை பெற்று, கனடா அரசியலில் வரலாற்று சாதனை படைத்துள்ளார் ஜக்மீத் சிங்.

30 ஆண்டுகள் பதவி வகித்த கஜகஸ்தான் ஜனாதிபதி பதவி விலகினார்

  • கஜகஸ்தான் உதயமானது முதல் 30 ஆண்டுகள் அதிபராக பதவிவகித்த நர்ஸுல்தான் நாஸர்பாயெவ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இடைக்கால அபதிராக காஸிம் ஜோமார்ட் டாகாயெவ் பதவியேற்றுள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்தார்.

கஜகஸ்தான் நாட்டின் தலைநகரான அஸ்தானாவுக்கு நர்ஸுல்தான் எனப் பெயர் சூட்டப்பட்டது

  • புதிய அதிபர் பதவியேற்றவுடன் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த நீண்டகாலம் ஆட்சி புரிந்த முன்னாள் அதிபரின் பெயரை கஜகஸ்தான் நாட்டின் தலைநகரான அஸ்தானாவுக்கு சூட்ட கஜகஸ்தான் பாராளுமன்றத்தில் வாக்களித்தது. அவரை கவுரவிக்கும் விதமாக அஸ்தானாவுக்கு நர்ஸுல்தான் எனப் பெயர் சூட்டப்பட்டது.

லண்டனில் நீரவ் மோடி கைது

  • பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.15 ஆயிரம் கோடி கடன் பெற்று இந்தியாவில் இருந்து சென்ற வைர வியாபாரி நீரவ் மோடி லண்டனில் கைது.

அறிவியல் செய்திகள்

செவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்ப நாசா திட்டம்

  • “செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பவுள்ள ஹெலிகாப்டர், ஒரு சிறிய, தன்னியக்க ரோட்டார்கிராப்ட் அமைப்புடன், நாசா ஏஜென்சியின் செவ்வாய் கிரகத்திற்கான 2020 ரோவர் திட்டத்துடன் பயணிக்கவுள்ளது, ஜூலை 2020 இல் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வணிகம் & பொருளாதாரம்

ஐரோப்பிய ஒன்றிய கட்டுப்பாட்டாளர்கள் கூகுளிற்கு 1.49 பில்லியன் யூரோவை அபராதமாக விதித்தது

  • ஐரோப்பிய ஒன்றியம் (EU) நம்பகத்தன்மை கட்டுப்பாட்டு அதிகாரிகள், ஆன்லைன் தேடல் விளம்பரதார போட்டியாளர்களை தடுத்ததற்காக கூகுள் நிறுவனத்திற்கு49 பில்லியன் யூரோவை அபராதமாக விதித்தனர், இது கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறுவனத்திற்கு விதிக்கப்படும் மூன்றாவது அபராதம் ஆகும்.

மாநாடுகள்

பேரழிவு நெகிழ்திறன் உள்கட்டமைப்பு – 2019 என்ற சர்வதேச ஒர்க்ஷாப் முடிவடைந்தது

  • பேரழிவு நெகிழ்திறன் உள்கட்டமைப்பு (IWDRI) மீதான இரண்டு நாள் சர்வதேச ஒர்க்ஷாப் வெற்றிகரமாக முடிவடைந்தது. பல்வேறு வளர்ச்சி மற்றும் பேரழிவு ஆபத்து சூழ்நிலைகள், பன்முக வளர்ச்சி வங்கிகள், ஐக்கிய நாடுகள், தனியார் துறை, கல்வி, கொள்கை சிந்தனை அமைப்புகள், இதர பங்குதாரர்கள் மற்றும் 33 நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் இந்த சர்வதேச ஒர்க்ஷாப்பில் பங்கேற்றனர்.

நியமனங்கள்

  • முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பினாக்கி சந்திர கோஸ் – இந்தியாவின் முதல் லோக்பால்
  • மும்பை சமூக தொழிலாளி கவுரி சாவந்த் – முதல் திருநங்கை தேர்தல் தூதர்

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

லோக்பால் மற்றும் லோகாயுக்தா சட்டம்

  • 2013 இல் இயற்றப்பட்ட லோக்பால் மற்றும் லோகாயுக்தா சட்டம், பொது ஊழியர்களின் சில பிரிவுகளுக்கு எதிரான ஊழல் வழக்குகளை ஆராய நாட்டின் மத்தியில் லோக்பால் மற்றும் மாநிலத்தில் லோகாயுக்தாவை நியமனம் செய்ய வழிவகுத்தது.

பாதுகாப்பு செய்திகள்

இடாய்சூறாவளியால் பாதிக்கப்பட்ட மொசாம்பிக் நாட்டிற்கு இந்திய கடற்படை உதவி

  • மொசாம்பிக் நாட்டின் அரசு பெறும் மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரணத்திற்கு (HADR) உதவியை நாடியதைத் தொடர்ந்து தெற்கு இந்திய பெருங்கடலில் இயங்கும் இந்திய கடற்படை (சுஜாதா, சாரதி மற்றும் சர்துல்) இன் முதல் பயிற்சிப் பிரிவின் கப்பல்கள் மொசாம்பிக்கின் பெய்ரா துறைமுகத்திற்கு சென்றன. 15 மார்ச் 2019 அன்று மொசாம்பிக் நாட்டை தாக்கிய சூறாவளி ‘இடாய்’ கடும் சேதாரத்தை உண்டாக்கியது குறிப்பிடத்தக்கது.

விருதுகள்

  • கணிதத்திற்கான ஏபெல் பரிசு – அமெரிக்காவின் கரென் உல்லென்பெக் [பகுதி வித்தியாச சமன்பாடுகளில் தனது பணிக்காக; இந்த விருதை வெல்லும் முதல் பெண்]

விளையாட்டு செய்திகள்

டோக்கியோ 2020 ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • 2020ம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒலிம்பிக் ஜோதி கோப்பையை டோக்கியோ ஒலிம்பிக் நிர்வாகிகள் நேற்று அறிமுகம் செய்து வைத்தனர். ஜப்பானில் பிரபலமான சக்குரா(செர்ரி பிளாசம்)வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

5 வது SAFF மகளிர் சாம்பியன்ஷிப்

  • இந்திய அணி வங்கதேசத்தை தோற்கடித்து 5வது தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

பிப்ரவரி 20 நடப்பு நிகழ்வுகள் video – கிளிக் செய்யவும்

PDF Download

பிப்ரவரி 2019 மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!