நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 01 2019

0

நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 01 2019

முக்கியமான நாட்கள்

மார்ச் 01 – ஜீரோ பாகுபாடு தினம்

  • ஜீரோ பாகுபாடு தினம் மார்ச் 1ம் தேதி அனுசரிக்கப்படுகிறது மற்றும் இதன் நோக்கம் உலகெங்கிலும் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் பாகுபாடு பிரச்சினையை தீர்ப்பது ஆகும். ஐ.நா.வின் அனைத்து உறுப்பு நாடுகளிலும் சட்டத்திற்கு முன் சமத்துவத்தை அடைய வேண்டும் என்பதே இந்த தினத்தின் விருப்பமாகும்.

தீம்‘Act to change laws that Discriminate’.

தேசிய செய்திகள்

புது தில்லி

விபத்துகளால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை 81% குறைந்துள்ளது

  • கடந்த ஐந்து ஆண்டுகளில் விபத்துகளால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை 81 சதவீதம் குறைந்துவிட்டதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரயில்வேயின் முக்கிய முன்னுரிமை பயணிகளின் பாதுகாப்பு என்றது.

சிமி இயக்கம் மீது அரசு தடை விதித்தது

  • அரசாங்கம் இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தின் (சிமி) மீதான தடையை நீட்டித்தது, இது ஐந்து ஆண்டுகளாக நாட்டில் தொடர்ச்சியான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. சிமியை சட்டவிரோத அமைப்பில் இணைப்பதாக உள்துறை அமைச்சகம் கூறியது.

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை பிரதமர் திறந்து வைக்க உள்ளார்

  • பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு கன்னியாகுமரியில் மூன்று ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஐந்து தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். அவர் ஒரு சாலை பாதுகாப்பு பூங்கா மற்றும் போக்குவரத்து அருங்காட்சியகத்தை திறந்து வைப்பார்.

தெலுங்கானா

உள்துறை அமைச்சர் தேசிய விசாரணை நிறுவன அலுவலகத்தை திறந்து வைத்தார்

  • ஹைதராபாத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தேசிய விசாரணை நிறுவன [என்ஐஏ] அலுவலகத்தை திறந்துவைத்தார். ஹைதராபாத்திலிருந்து குவஹாத்தி அலுவலகத்தையும் அவர் திறந்து வைத்தார்.

வணிகம் & பொருளாதாரம்

இந்திய பொருளாதாரம் 2019-20 ல் 7.3% ஆக உயரும் எனக் கணிப்பு

  • அமெரிக்க அடிப்படை மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் கணக்கெடுப்பின்படி 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில், இந்தியா3 சதவீத வளர்ச்சியை அடையும் எனக் கணித்துள்ளது.

பிப்ரவரியில் ஜி.எஸ்.டி. வசூல்ரூ.97,247 கோடி

  • பிப்ரவரி மாதம் ஜி.எஸ்.டி. வசூல் 97 ஆயிரத்து 247 கோடி ரூபாயாக இருந்தது. இதற்கு முந்தைய மாதத்தில் வசூல் ரூ .1 லட்சம் கோடிக்கு மேல் இருந்தது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

விசாகப்பட்டினத்தில் ரயில்வே மண்டலம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்

  • ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ரயில்வே மண்டலத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தெற்கு மத்திய இரயில்வே மற்றும் கிழக்கு கடற்கரை இரயில்வேயை மறுசீரமைத்து ஒடிசாவில் உள்ள ராயகடாவை தலைமையிடைமாக மாற்றவும் அங்கீகரிக்கப்பட்டது.

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையை உலகளாவிய மருத்துவ பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்

  • புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனையை, உலகளாவிய மருத்துவ பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான மாஸ்டர் பிளானை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 1299 கோடி ரூபாய் செலவில் ஹரியானாவில் உள்ள மானேதியில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஜமாத் இஸ்லாமி J & K-வை 5 ஆண்டுகளுக்கு அரசு தடை செய்தது

  • ஜம்மு மற்றும் காஷ்மீறில் உள்ள ஜமாத் இ இஸ்லாமி அமைப்பை ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய அரசு பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் தடை விதித்துள்ளது. இது பயங்கரவாத அமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதால், மாநிலத்தில் பிரிவினைவாத இயக்கத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு இந்த எடுக்கப்பட்டுள்ளது.

காணாமற்போன போன குழந்தைகள் தொடர்பாக அமெரிக்காவுடன் ஒப்பந்தம்

  • காணாமற் போன, மற்றும் சுரண்டளுக்கு ஆளான குழந்தைகள் பற்றிய தகவல் மற்றும் துப்பு அறிக்கையை அணுக இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
  • இந்தியாவின் தேசிய குற்றப்பதிவு பணியகத்திற்கும், காணாமற் போன மற்றும் சுரண்டளுக்கு ஆளான குழந்தைகளின் தேசிய மையம், NCMEC, அமெரிக்காவிற்கு இடையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • NCMEC, USA உடன் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட டிப்லைன் அறிக்கைகளை பெற இது வழிவகுக்கும்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல்

  • மத்திய அமைச்சரவை (ஜம்மு மற்றும் காஷ்மீர்) சட்டதிருத்தம் ஆணை, 2019 – ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

விளையாட்டு செய்திகள்

துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்

  • துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், மார்ட்டன் ஃபுக்சோவிக்ஸ்க்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் வென்றார். இதன் மூலம் 100வது பட்டம் வெல்லப்போகும் வாய்ப்பை பெற்றார்.

சர்வதேச கடற்கரை கைப்பந்து (volleyball) போட்டி

  • விசாகப்பட்டினம் அதன் முதல் சர்வதேச கடற்கரை கைப்பந்து (volleyball) போட்டியை நடத்தியது. FIFB கடற்கரை கைப்பந்து போட்டி நடத்தும் உலக நாடுகள் பட்டியலில் இந்தியா 50 வது நாடு ஆனது. பங்கேற்கும் நாடுகள் – ரஷ்யா, போலந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரியா, செக் குடியரசு, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகியவை அடங்கும்.

மக்ரான் கோப்பை

  • ஈரான், சபாஹாரில் நடைபெற்ற மக்ரான் கோப்பையில் தேசிய சாம்பியன் தீபக் சிங் (49 கிலோ) தங்கப் பதக்கத்தை வென்றார். பி. லலிதா பிரசாத் (52 கிலோ), மணிஷ் கௌஷிக் (60 கிலோ), துரியோதன் சிங் நேகி (69 கிலோ), சஞ்சித் (91 கிலோ) மற்றும் சதீஷ் குமார் (91 கிலோ) வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

PDF Download

ஜனவரி 2019 மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!