நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 6,7 2019

0

நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 6,7 2019

தேசிய செய்திகள்

குஜராத்

சர்வதேச காத்தாடி திருவிழா

  • குஜராத்தில் ஒன்பது நாள் சர்வதேச காத்தாடி திருவிழா அஹமதாபாத்தின் சபர்மதி நதிக்கரையில் தொடங்கியது.

ஜம்மு மற்றும் காஷ்மீர்

இட ஒதுக்கீடு நன்மைகளைப் பெற வருமான உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது

  • சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் கல்வி ஆகியவற்றில் இட ஒதுக்கீடு நன்மைகளைப் பெற வருமான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. இது தற்போது5 லட்சத்திலிருந்து 8 லட்சத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

ராஜஸ்தான்

6 சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் நிதின் கட்காரி

  • ஜோத்பூர் எல்லையில் 6,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 6 சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி.

சர்வதேச செய்திகள்

மேற்கு ஆசியாவின் மிகப்பெரிய கதீட்ரல் எகிப்தில் திறக்கப்பட்டது

  • எகிப்தின் கெய்ரோவுக்கு கிழக்கே 45 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு ஆசியாவின் மிகப்பெரிய கதீட்ரல் திறக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அப்துல் பத்தா அல் சிசி புதிதாக கட்டப்பட்ட நேட்டிவிட்டி கதீட்ரல் மற்றும் ஒரு மசூதியை திறந்து வைத்தார்.

பெண்கள் விவாகரத்து தொடர்பான செய்திகளை குறுந்தகவல் மூலம் அறிய சவுதி அரேபியா திட்டம்

  • சவுதி அரேபியாவில் சவுதி பெண்கள் தங்கள் விவாகரத்தைப் பற்றி தெரியாமல் இருப்பதை தவிர்க்கும் விதமாக ஒரு புதிய கட்டுப்பாடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெண்களை விவாகரத்து செய்வதை உறுதிப்படுத்தும் தகவலை நீதிமன்றம் குறுந்தகவல் மூலம் உரிய பெண்களுக்கு அறிவிக்க வேண்டும்.

ஷேக் ஹசினா பிரதமராக பதவியேற்றார்

  • ஷேக் ஹசினா தொடர்ந்து மூன்றாவது முறையாக வங்கதேசத்தின் பிரதமராக பதவியேற்றார். இது ஹசினாவின் நான்காவது முறை பதவியேற்பு ஆகும்.

வணிகம் & பொருளாதாரம்

BHIM UPI பரிவர்த்தனைகள் ரூ 1 லட்சம் கோடியைத் தாண்டியது

  • BHIM-UPI பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு டிசம்பர் 2018ல் 1 லட்சம் கோடி ரூபாய் அளவைக் கடந்தது.

மாநாடுகள்

பெண்கள் அறிவியல் காங்கிரஸ்

  • ஜலந்தரில் உள்ள லவ்லி தொழில்முறை பல்கலைக்கழகத்தில் பெண்கள் அறிவியல் காங்கிரஸை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி திறந்து வைத்தார். பெண்கள் அறிவியல் காங்கிரஸ் 106 வது இந்திய அறிவியல் காங்கிரஸின் ஒரு பகுதியாகும். 2012ல் தொடங்கிய பெண்கள் அறிவியல் காங்கிரஸின் எட்டாவது அத்தியாயம் இதுவாகும்.
  • பெண்கள் அறிவியல் காங்கிரஸின் நோக்கம் பெண் அறிவியல் விஞ்ஞானிகளின் பணியை வெளிப்படுத்துவது ஆகும்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அடுத்த நான்கு ஆண்டுகளில் 40 செயற்கைக் கோள்களை உருவாக்குவதற்கு 10,900 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு

  • அடுத்த நான்கு ஆண்டுகளில் 40 செயற்கைக்கோள்களை உருவாக்குவதற்கு மத்திய அரசு 10,900 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் டாக்டர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.

விருதுகள்

ஜவுளி விருதுகள்

  • இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு, புது டெல்லியில் 17 நபர்களுக்கு ஜவுளித் துறையின் பல்வேறு பிரிவுகளில் தங்கள் பங்களிப்புக்காக விருது வழங்கினார். விழாவில் ஜி.ஐ. பதிவு செய்யப்பட்ட கைவினைப் பொருட்களின் நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது.

மொபைல் செயலிகள் & இணைய போர்ட்டல்

ரயில் கும்ப் சேவா மொபைல் செயலி

  • வட மத்திய ரயில்வே, [NCR] ஜனவரி 15 முதல் பிரயாக்ராஜ் நகரத்தில் துவங்கும் கும்ப மேளாவில் மக்களுக்கு உதவுவதற்காக ‘ரயில் கும்ப் சேவா மொபைல் செயலி’ ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

விளையாட்டு செய்திகள்

AFC ஆசிய கோப்பை

  • அபுதாபியில் நடைபெறும் AFC ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா தாய்லாந்தை 4-1 என்ற கணக்கில் தோற்கடித்தது.

இந்தியா Vs ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

  • இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் வீழ்த்தி தொடரை வென்றது. ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் தொடரை வென்ற முதல் இந்தியா மட்டும் ஆசியக் கேப்டன் எனும் சாதனை படைத்தார் விராட் கோஹ்லி.

சீனியர் தேசிய ஜூடோ சாம்பியன்ஷிப்

  • இமாச்சலப் பிரதேசம் 5 வது இந்திய ரிசர்வ் பட்டாலியன் பிரிவைச் சார்ந்த மகளிர் தலைமைக்காவலர் ராணி விசாகாப்பட்டினத்தில் நடைபெற்ற சீனியர் தேசிய மகளிர் ஜூடோ சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றார்.

பெண்கள் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்

  • தமிழ்நாட்டின் எஸ். கலைவணி மற்றும் தெலுங்கானாவின் நிக்கத் சரீன் ஆகியோர் பெண்கள் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தனர்.

ஏடிபி டூர் டென்னிஸ்

  • புனேயில் நடைபெற்ற டாடா ஓபன் மகாராஷ்டிராவில் இந்திய ஜோடி ரோஹன் போபண்ணா மற்றும் டிவிஜ் ஷரன் ஆகியோர் தமது முதல் ஏடிபி டூர் டென்னிஸ் பட்டத்தை வென்றனர்.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!