நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 4, 2019

0

நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 4 2019

முக்கியமான நாட்கள்

ஜனவரி 4 – உலக பிரெயிலி தினம்

  • ப்ரெயிலி கண்டுபிடிப்பாளர் லூயிஸ் பிரெயிலியின் பிறந்த நாளன்று உலக பிரெயில் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 4 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினம் பார்வையற்றோர் மற்றும் பார்வை குறைபாடுடைய மக்கள் வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் உதவிய லூயி பிரெய்லியின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்கானதாகும்.

தேசிய செய்திகள்

அருணாச்சல பிரதேசம்

கிழக்கு சியாங் மாவட்டம் 100% மின்சாரம் பெற்றது

  • அருணாச்சல பிரதேசம், கிழக்கு சியாங் மாவட்டம் பிரதான் மந்திரி சஹஜ் பிஜிலி ஹர் கர் யோஜனா-சவுபாக்யா திட்டத்தின் கீழ் 100 சதவீத மின்சாரம் பெற்றுள்ளது.

மணிப்பூர்

மோரேயில் ஒருங்கிணைந்த சோதனை சாவடி

  • பிரதமர் நரேந்திர மோடி இம்பாலின் மோரேயில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை திறந்து வைத்தார். அவர் தோலாய்தபி தடுப்பு அணை திட்டம், சாவோம்பங்கில் FCI உணவு சேமிப்பு கிடங்கு மற்றும் நீர் வழங்கல் மற்றும் சுற்றுலா தொடர்பான திட்டங்கள் ஆகியவற்றைத் துவக்கி வைத்தார்.

புது தில்லி

இந்திய பனோரமா திரைப்பட விழா

  • 10 நாள் இந்திய பனோரமா திரைப்பட விழா புது தில்லியின் சிரி கோட்டை ஆடிட்டோரியத்தில் துவங்கும். திருவிழாவில் முக்கியமான திரைப்படங்கள் திரையிடப்படும்.

சர்வதேச செய்திகள்

சீனா உலகிலேயே மிகப் பெரிய வெடிகுண்டை உருவாக்கியுள்ளது

  • சீனாவின் பாதுகாப்புத் துறை நிறுவனமான நார்த் இண்டஸ்ட்ரீஸ் க்ரூப் கார்ப்பரேஷன் லிமிடெட் (NORINCO) அமெரிக்கா உருவாக்கிய ’அனைத்து வெடிகுண்டுகளின் தாய்’ குண்டுக்கு போட்டியாக சீனா அணு  ஆயுதம் இல்லாத ராட்சத  குண்டு ஒன்றை தயாரித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் ஆப்கானியர் வருகையின் போது விசா பெறும் திட்டத்தை ரத்து செய்தது

  • ஆப்கானியர்கள் வருகையின் போது விசா பெறும் நீண்ட கால திட்டத்தை ரத்து செய்தது பாகிஸ்தான். 24 நாடுகளில் இருந்து சுற்றுலா மற்றும் முதலீடுகளை அதிகரிக்க ஆப்கானியர்கள் வருகையின் போது விசா பெறும் நீண்ட கால திட்டத்தை ரத்து செய்தது.

அறிவியல் செய்திகள்

மவுண்ட் வின்சன் ஏறிய உலகின் முதல் பெண் மாற்றுத்திறனாளி எனும் சாதனை படைத்தார்

  • பிரதமர் நரேந்திர மோடி அன்டார்க்டிக்காவின் உயர்ந்த மலையான வின்சன்னை ஏறிய,அருனிமா சின்ஹாவை பாராட்டினார். வின்சன் மலையை ஏறிய உலகின் முதல் பெண் மாற்றுத்திறனாளி எனும் சாதனை படைத்தார்.

சூறாவளி புயல் பாபூக்

  • சூறாவளிப் புயல் “பாபூக்” அந்தமான் கடல் வழியாக சென்றது.

வணிகம் & பொருளாதாரம்

ஜூலை 1 ம் தேதி புதிய பேக்கேஜிங் விதிமுறைகளுக்கு இணங்க உணவு வணிகங்களுக்கு FSSAI கோரிக்கை

  • இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் FSSAI, ஜூலை 1 ஆம் தேதி முதல் உணவுப் பொருட்களை மறுசுழற்சி செய்த பிளாஸ்டிக் மற்றும் செய்தித்தாள்களை உபயோகிப்பதற்கு தடை விதிக்கும் நடைமுறைக்கு இணங்க வேண்டி கோரிக்கை.
  • இந்த புதிய கட்டுப்பாடுகள் பேக்கேஜிங், சேமித்தல், பார்சல் அல்லது உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான பிளாஸ்டிக் பைகள் உட்பட மறுசுழற்சி செய்த பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பேக்கேஜிங் பொருளைத் தடாய் செய்கின்றது.

மாநாடுகள்

பகவத் கீதை தொடர்பான சுவரொட்டி கண்காட்சி

  • மகாத்மா காந்தியின் சிந்தனைகளுடன் பகவத் கீதையின் ஒத்துழைப்பைப் பற்றிய ஒரு சுவரொட்டி கண்காட்சி துபாய் மற்றும் விஞ்ஞான் விகாஸ் பேட்டர்ன் இன்ஸ்டிடியூட்டின் துணைத் தூதரகத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இந்த இரண்டு நாள் கண்காட்சியை கான்சுல் ஜெனரல் விபுல் திறந்துவைக்கிறார். காதி கிராமோதையா பவனில் உள்ள பல்வேறு காதி கைவினைப்பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்படும்.
  • மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பாராளுமன்றத்தில் RTE சட்டதிருத்தம் நிறைவேற்றப்பட்டது

  • ராஜ்யசபா ஒப்புதல் அளித்ததன் காரணமாக குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி (சட்டதிருத்த) உரிமை மசோதா, 2018-ஐ பாராளுமன்றம் நிறைவேற்றியது.
  • பள்ளிகளில் ‘வகுப்பு நிறுத்த கொள்கையை’ அகற்றுவதற்காக 2009 ஆம் ஆண்டுக்கான கல்வி உரிமைச் சட்டத்தை மேலும் திருத்திக்கொள்ள மசோதா நிறைவேற்றப்பட்டது.

பாராளுமன்றம் NCTE சட்டதிருத்தத்தை நிறைவேற்றியது

  • ராஜ்யசபா ஒப்புதல் அளித்ததன் காரணமாக ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (திருத்தம்) பில், 2018, பாராளுமன்றம் நிறைவேற்றியது.
  • மக்களவை ஏற்கனவே அதை நிறைவேற்றியது. கவுன்சில் ஒப்புதல் இல்லாமல் ஆசிரியர் கல்வி படிப்புகள் நடத்திய மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்களுக்கு அங்கீகாரத்தை வழங்க இந்த மசோதா வழிவகுக்கும்.

தேசிய தொழில் முனைவோர் விருதுகள் வழங்கி இளம் தொழில்முனைவோர் கவுரவிக்கப்படஉள்ளனர் 

  • புது தில்லியில் தேசிய தொழில் முனைவோர் விருதுகளின் மூன்றாவது பதிப்பை திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்முயற்சி அமைச்சகம் நடத்த உள்ளது. இளம் முதல்-தலைமுறை தொழில் முனைவோர் மற்றும் தொழில் முனைவோர் சுற்றுச்சூழலைக் கட்டமைப்பதில் மிகுந்த பங்களிப்பு செய்தவர்கள் போன்றவர்களை அங்கீகரித்து கௌரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது.

விளையாட்டு செய்திகள்

தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்

  • மகளிர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், லவ்லினா போர்கொஹைன் கால் இறுதிக்குள் நுழைந்தார்.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!