நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 17 2019

0

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 17 2019

தேசிய செய்திகள்

அசாம்

நுமலிகார் சுத்திகரிப்பு நிலைய திறன் விரிவாக்க திட்டத்தை CCEA அங்கீகரிக்கிறது

  • பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு நுமலிகார் சுத்திகரிப்பு நிலைய திறனை 3 MMTPA வருடத்திற்கு மில்லியன் மெட்ரிக் டன்னிலிருந்து (MMTPA) 9 MMTPA க்கு விரிவாக்க முடிவு செய்துள்ளது. இதன்மூலம் அசாமில் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

குஜராத்

சர்தார் வல்லபாய் பட்டேல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை திறப்பு

  • பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை திறந்து வைத்தார்.
  • 9-வது துடிப்பான குஜராத் உச்சிமாநாடு காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திர் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் தொடங்குகிறது.

ஹிமாச்சல பிரதேசம்

உனா மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட பரந்த பாதை ரயில் பாதை திறந்து வைக்கப்பட்டது

  • ​​இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள அம்ப் அன்டோரா மற்றும் டவுலத்பூர் சாவ் ஆகிய இடங்களுக்கு இடையே புதிதாக கட்டப்பட்ட பரந்த பாதை ரயில் பாதையை ரயில்வே துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா திறந்து வைத்தார்.

தெலுங்கானா

தெலுங்கானா சட்டசபையின் முதல் அமர்வு தொடங்கியது

  • தெலுங்கானா சட்டசபையின் முதல் அமர்வு இன்று தொடங்கியது. இடைக்கால சபாநாயகர் முக்தாஸ் அஹ்மத் கான் இந்தியாவின் அரசியலமைப்பின் கீழ் உறுப்பினர்களுக்கு உறுதிமொழி ஏற்பு மற்றும் சட்டமன்ற விதிகளை எடுத்துக்கூறுவார்.

சர்வதேச செய்திகள்

பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரேசா மே நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்

  • ஐரோப்பிய ஒன்றியத்துடன்(EU) ப்ரக்ஸிட் ஒப்பந்தத்தில் பாராளுமன்ற தோல்வியை சந்தித்த பின்னர், பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரேசா மே நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.

டிரம்ப் முக்கிய நிர்வாக பதவிக்கு 3 இந்திய அமெரிக்கர்களை முன்மொழிந்துள்ளார்

  • அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையின் செனட்டிற்கு அனுப்பிய சீனியர் பரிந்துரைகளின் சமீபத்திய பட்டியலின் அடிப்படையில் முக்கிய நிர்வாக பதவிக்கு 3 இந்திய அமெரிக்கர்களை முன்மொழிந்துள்ளார்.
  • ரிட்டா பரன்வால், உதவி செயலாளர் பதவிக்கு(அணுசக்தி ஆற்றல்), ஆதித்யா பம்சாய் பதவிக்கு தனியுரிமை மற்றும் சிவில்லிபெர்டிஸ் ஓவர்சைட் போர்டு மற்றும் பிமல் படேல் ஆகியோர் கருவூல உதவி செயலராக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

அறிவியல் செய்திகள்

7 சிகரங்கள், 7 எரிமலை உச்சிக்கு ஏறி உலகின் இளைய மலையேறுபவர் என சாதனை படைத்தார்

  • அண்டார்டிக்காவின் உயர்ந்த சிகரமான மவுண்ட் சிட்லியை மலையேறும் சத்தியாருப் சித்தாந்தா கைப்பற்றினார். இந்த சாதனையுடன், அவர் அனைத்து கண்டங்களிலும் உள்ள ஏழு சிகரங்கள், எரிமலை உச்சிக்கும் ஏறிய முதல் இந்திய மற்றும் மலையேறுபவர் என சாதனை படைத்தார்.

இந்த ஆண்டின் முதல் ஏவுகணை அனுப்ப இஸ்ரோ திட்டம்

  • தேசிய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ அடுத்த வாரம் இந்த ஆண்டின் முதல் ஏவுகைணையை விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளது. பிஎஸ்எல்வி சி-44 சத்தீஷ் தவான் ஸ்பேஸ் சென்டர், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து, கலாம்சாட் என்ற மாணவர் செயற்கைக்கோள் மற்றும் மைக்ரோசாட்-ஆர் எனப்படும் இமேஜிங் செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்படவுள்ளது. 

வணிகம் & பொருளாதாரம்

ஜனவரி 31 ஆம் தேதி பாராளுமன்றத்தின் பட்ஜெட் அமர்வு

  • இந்த மாதம் 31 ஆம் தேதி பாராளுமன்றத்தின் பட்ஜெட் அமர்வு தொடங்க உள்ளது. பிப்ரவரி 1 ம் தேதி இடைக்கால பட்ஜெட் வழங்கப்படும். இந்த அமர்வு அடுத்த மாதம் 13 ஆம் தேதி முடிவடையும். 

மாநாடுகள்

இந்தியா ரப்பர் கண்காட்சியின் 10 வது பதிப்பு – 2019

  • இந்தியாவின் ரப்பர் கண்காட்சியின் 10 வது பதிப்பு -2019-ஐ வர்த்தக மற்றும் தொழில்துறைக்கான மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு மும்பையில் திறந்து வைத்தார். இந்தியாவின் ரப்பர் கண்காட்சி ஆசியாவின் மிகப்பெரிய ரப்பர் கண்காட்சி ஆகும். 

திட்டங்கள்

சம்ருதி காரிடார்[SamruddhiCorridor]’

  • நாக்பூர்-மும்பை ‘சம்ருதி காரிடார்’ எக்ஸ்பிரஸ்வே திட்டத்திற்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்பு நிதி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
  • அதிகபட்சமாக 8,500 கோடி ரூபாய்களை கடனாக வழங்க ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, பாங்க் ஆப் மஹராஷ்டிரா மற்றும் இந்தியாவின் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்.ஐ.சி) ஆகியவையும் கடன் வழங்க ஒப்புதல்.

விரைவான ஐடிஆர் செயலாக்கத்திற்கான தாக்கல் திட்டம்

  • ஒருங்கிணைந்த இ- தாக்கல் மற்றும் மையப்படுத்தப்பட்ட செயலாக்க மையம்0 திட்டத்திற்காக 4200 கோடி ரூபாய் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகள்

  • விரைவில் நாடு முழுவதும் 460 க்கும் அதிகமான ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

விருதுகள்

  • காந்தி அமைதி பரிசு 2018 – யோஹெ சசாகவா [இந்தியா மற்றும் உலகம் முழுவதும் தொழுநோய் நீக்குதல் தொடர்பான பங்களிப்பு அளித்தமைக்காக உலக சுகாதார அமைப்பின் நல்லெண்ண தூதர்].

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!