நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 27 2019

0

நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 27 2019

தேசிய செய்திகள்

அசாம்

அரச ஊழியர்களின் பெற்றோரைப் பாதுகாப்பதற்காக PRANAM ஆணையம்

  • அசாம் முதலமைச்சர் சர்பானந்த சோனோவால் பெற்றோரை பொறுப்பாக பார்த்துக்கொள்ளுதல் மற்றும் நெறிமுறைகள் (PRANAM) கமிஷன் மூலம் மாநில அரசு ஊழியர்களின் பெற்றோரைப் பாதுகாப்பதற்காக ஒரு குழுவொன்றை அமைத்தார்.
  • இந்தத் திட்டம்கமிஷன் மூலம் அசாம் அரசு ஊழியர்கள் தங்கள் வயதான பெற்றோர் மற்றும் உடன்பிறந்த திருமணமாகாத மாற்றுத்திறனாளிகளை புறக்கணிக்க இயலாது, அசாம் அரசு ஊழியர்கள் இவர்களை புறக்கணிக்காமல் இருப்பதை உறுதி செய்யும்.

மத்தியப் பிரதேசம்

எரிசக்தி அமைச்சர்கள் தேசிய மாநாடு

  • மத்தியப் பிரதேசம், மத்திய மண்டல பவர் விநியோக நிறுவனம், போபால் மற்றும் மேற்கு மண்டல பவர் விநியோக நிறுவனம், இந்தோர் ஆகியவைக்கு எரிசக்தி அமைச்சர்கள் தேசிய மாநாட்டில் பிரதான் மந்திரி சஹஜ் பிஜிலி ஹர் கர் யோஜனாவின் கீழ் சவுபாக்கிய விருது வழங்கப்பட்டது. இந்த விருதுடன் 100 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும்.
  • பிரதான்மந்திரி சஹஜ் பிஜ்லி ஹர் கர் யோஜனா- சவுபாக்கியா திட்டத்தின் கீழ் மத்திய மண்டல பவர் விநியோக நிறுவனம், போபால் 7 லட்சத்து 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்புகள் அளித்த நாட்டின் முதல் மின் விநியோக நிறுவனம் ஆகும். 4 லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்புகள் அளித்தது மேற்கு மண்டல மின் விநியோக நிறுவனம், இந்தோர்.

புது தில்லி

சுத்தமான கங்கை திட்டத்திற்கு ஐஓசியின் 34 கோடி ரூபாய்

  • பெட்ரோலியம் அமைச்சர் தர்மேந்திர பிரதான் சுத்தமான கங்கை திட்டத்திற்காக இந்தியன் ஆயின் நிறுவனத்தின் 34 கோடி ரூபாயை வழங்கினார். அடுத்த 13 மாதங்களில் கங்கையை முழுமையாக சுத்தம் செய்வதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

விமான பயணிகள் உரிமைகளை குறிப்பிடும் பயணிகள் சாசனத்தை அரசு வெளியிடுகிறது

  • சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பிரபு புது தில்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் விமான பயணிகள் உரிமைகளை குறிப்பிடும் பயணிகள் சாசனத்தை வெளியிட்டார். ஒரு உள்நாட்டு விமானம் ஆறு மணிநேரங்களுக்கு மேலாக தாமதமாக இருக்கும் எனக் கூறினால், அந்த விமான நிறுவனம் அதே நேரத்தில் பயணிக்கான மாற்று விமான வசதியை வழங்கும் அல்லது டிக்கெட்டின் முழு விலையை பயணிகளிடம் திருப்பிச் செலுத்தும்.

தேசிய மின்ஆளுமை விருதுகள் 2019

  • பிரதம மந்திரி அலுவலகத்தின் மாநில அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் புது தில்லியில் 2019 தேசிய மின்-ஆளுமைக்கான விருதுகளை வழங்கினார். மின்-ஆளுமைத் திட்டங்களை செயல்படுத்துவதில் சிறந்து விளங்குவதற்காக ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கப்படுகிறது.

அறிவியல் செய்திகள்

சிக்னல்சிப்[SIGNALCHIP]

  • 4G / LTE மற்றும் 5G NR மாடல்களுக்கான இந்தியாவின் உள்நாட்டிலேயே தயாரான முதல் செமிகண்டக்டர் சிப்ஸ் பெங்களூரைச் சார்ந்த அரைக்கடத்திகள்[செமிகண்டக்டர்] நிறுவனம் சிக்னல்சிப்[SIGNALCHIP] புது தில்லியில் வெளியிட்டது.

சர்வதேச செய்திகள்

பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக அர்த்தமுள்ள நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்தது

  • பாகிஸ்தானில் பயங்கரவாதக் குழுக்களை இலக்கு வைத்து இந்தியா தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியது இதனைத் தொடர்ந்து அமெரிக்கா பாகிஸ்தானில் பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக அர்த்தமுள்ள நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்தது 

மாநாடுகள்

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் வட கொரிய தலைவரின் இரண்டாவது உச்சிமாநாடு

  • வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உனுடன் தனது இரண்டாவது உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக வியட்நாமின் தலைநகரான ஹனோயில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தரை இறங்கினார். எட்டு மாதங்களுக்கு பின்னர் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சிங்கப்பூரில் இந்த வரலாற்று உச்சிமாநாட்டு நடைபெற்றது.

ரஷ்யா, இந்தியா மற்றும் சீனாவின் வெளியுறவு அமைச்சர்களின் 16 வது கூட்டம் (RIC)

  • ரஷ்யா, இந்தியா மற்றும் சீனாவின் (RIC) வெளியுறவு அமைச்சர்களின் 16 வது கூட்டத்தின் ஒரு கூட்டு அறிக்கையில், மூன்று நாடுகளும் பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்படையாக கண்டிப்பதாக அறிவித்தன.

உயர் நிலை பாதுகாப்பு கூட்டம்

  • உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் புது டெல்லியில் உயர் பாதுகாப்புக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

நியமனங்கள்

  • நைஜீரியா ஜனாதிபதிமுகமது புஹாரி

திட்டங்கள்

‘ISL அகராதியின் 2 வது பதிப்பு’

  • சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பிற்கான மத்திய அமைச்சர் ஸ்ரீ தாவரச்சந்த் கெலாட், காது கேளாதோருக்கான “இந்திய சைகை மொழி (ஐ.எஸ்.எல்) அகராதியின் 2வது பதிப்பை” வெளியிட்டார்.
  • ISL அகராதியில் கல்வி, சட்டம், மருத்துவம், தொழில்நுட்பம் மற்றும் தினசரி வார்த்தைகள் வகைகளின் கீழ் 6000 சொற்கள் உள்ளன.

ஸ்ரேயாஸ்[SHREYAS]

  • மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், தொழிற்துறை தொழிற்பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்காக தொழிற்பயிற்சி மற்றும் திறன்களை உயர் கல்வி இளைஞர்களிடம் வளர்ப்பதற்காக (SHREYAS) திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

பாதுகாப்பு செய்திகள்

‘Sampriti 2019’

  • இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே கூட்டு ராணுவ பயிற்சி ‘Sampriti 2019’ 8வது பதிப்பு வங்கதேசத்தின் தங்காலில் நடத்தப்படுகிறது. இது இரு நாடுகளிலும் மாறி மாறி நடத்தப்படும் இராணுவப்பயிற்சி ஆகும்.

2700 கோடி ரூபாய் மதிப்புள்ள பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க ஒப்புதல்

  • 2700 கோடி ரூபாய் மதிப்புள்ள பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்கு பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
  • கடற்படைக்கு மூன்று கேடட் பயிற்சி கப்பல்கள் கையகப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும், அடிப்படை கடல் பயிற்சி அளிக்க பெண்கள் அதிகாரி உட்பட அனைவருக்கும் உதவும்.

விருதுகள்

தேசிய இளையோர் நாடாளுமன்ற விழா 2019

  • புதுதில்லி விஞ்ஞான்பவனில் நடைபெற்ற தேசிய இளையோர் நாடாளுமன்ற விழா விருதுகள் 2019-ன் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர்  திரு நரேந்திர மோடி பங்கேற்றார். தேசிய இளையோர் நாடாளுமன்ற விழா 2019க்கான விருதுகளையும், சான்றிழ்களையும் வெற்றி பெற்றவர்களுக்கு அவர் வழங்கினார்.

மொபைல் செயலிகள் & இணைய போர்ட்டல்

காலியிடங்களைப் பார்வையிட மற்றும் முன்பதிவு செய்வதற்கான ஆன்லைன் தளம்

  • ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் புது தில்லியில் பயணிகள் பட்டியல் தயாரித்தபின்னர் காலியிடங்களைப் பார்வையிட மற்றும் முன்பதிவு செய்வதற்கான ஆன்லைன் தளத்தை அறிமுகப்படுத்தினார். அட்டவணை தயாரிப்பின் பின்னர், இரயில்வே பயணிகளுக்கு ஆன்லைனில் கிடைக்கும் காலியிடங்களைப் பற்றிய முழுமையான தகவலை இப்போது பெறலாம்.

விளையாட்டு செய்திகள்

சனத் ஜெயசூரியா கிரிக்கெட்டில் இருந்து தடை செய்யப்பட்டார்

  • முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் சனத் ஜெயசூரியா கிரிக்கெட்டில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளார். ஆவணங்கள் அல்லது பிற தொடர்புடைய தகவல்களை மறைத்தல், அழித்தல், விசாரணையைத் தடைசெய்தல் அல்லது தாமதப்படுத்துதல், எதிர்ப்பு ஊழல் ஒத்துழைப்புடன் (ACU) விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தல் என பல பிரிவுகளில் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

PDF Download

ஜனவரி 2019 மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!