நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 26 2019

0

நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 26 2019

தேசிய செய்திகள்

புது தில்லி

பயோடெக்னாலஜி துறையின் தொடக்க தினம்

  • இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பயோடெக்னாலஜி துறை, புது தில்லியில் 33வது தொடக்க தினத்தை கொண்டாடியது. தீம் – “Celebrating Biotechnology: Building Indian as an Innovation Nation”.

டெல்லி அரசு 2019-20 ஆண்டுக்கு ரூ.60,000 கோடி வரவுசெலவு திட்டம் (பட்ஜெட்) தாக்கல்

  • தில்லி அரசு 2019-20 ஆண்டுக்கு 60,000 கோடி ரூபாய் வரவு-செலவு திட்டத்தை சட்டசபையில் தாக்கல் செய்தது. மொத்த வரவு செலவு திட்டத்தில் 26 சதவீதம் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய இளைஞர் பாராளுமன்ற விழாவின் தேசிய இறுதி நிலைபோட்டி

  • மத்திய இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கர்னல் ராஜ்யவர்தன் ரத்தோர் (ஓய்வு) புதுடில்லியிலுள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் தேசிய இளைஞர் பாராளுமன்ற விழாவின் தேசிய இறுதி நிலைபோட்டியை துவக்கி வைத்தார்.

வணிகம் & பொருளாதாரம்

நடப்பு நிதியாண்டில் 500 பில்லியன் டாலரை கடக்கவுள்ளது நாட்டின் சரக்கு மற்றும் சேவை ஏற்றுமதி

  • உலகளாவிய வர்த்தக சவால்களை எதிர்கொள்ளும் போதும் இந்திய நாட்டின் சரக்கு மற்றும் சேவை நடப்பு நிதியாண்டில் 500 பில்லியன் டாலர்களை கடக்க உள்ளது என்று புது தில்லியில் நடைபெற்ற 2019 – ரைசிங் இந்தியா உச்சி மாநாட்டில் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார். 

மாநாடுகள்

இந்தியாஇத்தாலி கூட்டு ஆணையத்தின் 20 வது அமர்வு

  • பொருளாதார ஒத்துழைப்புக்கான 20-வது இந்தியா-இத்தாலி கூட்டு ஆணையத்தின் (JCEC) கூட்டம் புதுதில்லியில் தொடங்கியது. இருதரப்பு வர்த்தக ஈடுபாட்டிற்காக JCEC எனும் நிறுவனம் இரு நாடுகளின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர்கள் மட்டத்தில் இந்த அமர்வை நடத்தியது.
  • இந்திய நாட்டின் சார்பாக இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, இரண்டு நாள் அமர்வுக்கு தலைமை தாங்கினார். கடந்த இந்திய-இத்தாலியின் 19 வது அமர்வு JCEC, ரோமில் 11 -12-மே 2017 அன்று நடைபெற்றது.

இளைஞர் திறன் மேம்பாடு கூட்டம்

  • ஒடிசா நாட்டின் திறன் தலைநகரமாக விரைவில் உருவாகும் சாத்தியம் உள்ளது என மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
  • புபனேஷ்வரில் இளைஞர் திறன் மேம்பாடு கூட்டத்தை துவக்கி வைக்கும் பொழுது ஒடிசாவின் இளைஞர்கள் அறிவு, திறமை, தைரியம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதாகவும், இந்த குணங்களைக் கொண்டு, எந்த சவால்களை சந்திக்கவும் ஒன்றாக உழைத்து புதிய ஒடிஷாவை உருவாக்கவும் முடியும் என்று கூறினார். 

ஏவியேசன் கான்க்ளேவ் 2019′

  • சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இந்தியாவின் விமானநிலைய அதிகாரசபை, AAICLAS மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவற்றோடு இணைந்து 2019 ஆம் ஆண்டு ‘ஏவியேசன் கான்க்ளேவ்’-ஐ புது தில்லியில் ஏற்பாடு செய்துள்ளது. தீம்“Flying for All”
  • 30க்கும் மேற்பட்ட தொழில்துறை தலைவர்கள், டிரோன்-சூழலியல் கொள்கை திட்டம், விமானம் மற்றும் சம்பந்தப்பட்ட உபகரணங்கள் உற்பத்திக்கான திட்டம், இந்தியாவில் பிராந்திய போக்குவரத்து விமானம் உட்பட, ரூபீ ரஃப்தார் திட்டம் – விமானத்திற்கான நிதியுதவியளித்தல் மற்றும் இந்தியாவில் இருந்து குத்தகைக்கு விட, தேசிய விமான சரக்குக் கொள்கை, மற்றும் அடுத்த தலைமுறை விமான மையமாக இந்திய விமானநிலையங்களை மாற்றுவதற்கான திட்டம் குறித்து விவாதம் மற்றும் கருத்துக்களை பகிர்ந்து கொள்வார்கள்.

வெப்ப அலை ஆபத்து குறைப்பு குறித்த தேசிய ஒர்க்ஷாப்

  • தேசிய பேரிடர் மீட்பு மேலாண்மை அமைப்பு (NDMA), 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 27-28 ம் தேதி அன்று வெப்ப அலை ஆபத்து குறைப்பு குறித்த இரண்டு நாள் தேசிய ஒர்க்ஷாப் ஒன்றை நடத்துகின்றது. மகாராஷ்டிரா அரசாங்கத்துடன் இணைந்து நாக்பூரில் இந்த ஒர்க்ஷாப் நடைபெறவிருக்கிறது. 

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியாவின் உள்நாட்டு நீர்வழி ஆணையம் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் ஒப்பந்தம்

  • இந்தியாவின் உள்நாட்டு நீர்வழி ஆணையம் (IWAI) மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL), எரிபொருட்களுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், மசகு எண்ணெய், எல்பிஜி, இயற்கை எரிவாயு மற்றும் வேறு தொடர்புடைய எரிபொருள் மற்றும் வாயு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 

பாதுகாப்பு செய்திகள்

இந்திய விமானப்படை தீவிரவாதிகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது

  • பாகிஸ்தானின் பாலகோட்டிலுள்ள ஜெய்ஷ்-இ-முகம்மது (JeM) அமைப்பின் மிகப்பெரிய பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானப்படை வான்வழித் தாக்குதல் நடத்தியது.

QRSAM ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது

  • ஒடிசா கடற்கரை ITR சண்டிபூரில் உள்நாட்டில் தயாரான அதிவேக (வான் பாதுகாப்பு ஏவுகணை) ஏவுகணையை (QRSAM), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) வெற்றிகரமாக சோதனை செய்தது. இரண்டு ஏவுகணைகள் வெவ்வேறு உயரத்திற்கும் நிலைகளுக்கும் சோதிக்கப்பட்டன. 

விருதுகள்

காந்தி அமைதி விருது

ஆண்டு விருது பெற்றவர்கள்
2015 விவேகானந்தா கேந்திரா, கன்னியாகுமரி
2016 ‘அட்சய பாத்திர பவுண்டேஷன்’ மற்றும் ‘சுலாப் இன்டர்நேஷனல்’ அமைப்பு
2017 ஏகல் அபியான் டிரஸ்ட்
2018 ஜப்பானை சேர்ந்த, ‘யோகி சசாகவா’ அமைப்பு

விளையாட்டு செய்திகள்

ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை

  • புதுடில்லியில் நடைபெற்ற நடப்பு ஐ.எஸ்.எஸ்.எப் உலகக் கோப்பை துப்பாக்கிச்சூடு போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் ஹங்கேரி வீரர் வெரோனிகா மேஜர் தங்கம் வென்றார்.

கேன்ஸ் சர்வதேச சதுரங்க ஓபன் டிராபி

  • சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சதுரங்கப்போட்டியில், இந்திய கிராண்ட்மாஸ்டர் அபிஜித் குப்தா கேன்ஸ் சர்வதேச சதுரங்க ஓபன் டிராபியை வென்றார்.

PDF Download

ஜனவரி 2019 மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!