நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 22 2019

0

நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 22 2019

முக்கியமான நாட்கள்

பிப்ரவரி 22 – உலக சிந்தனை தினம்

  • 2019ற்கான உலக சிந்தனை தினம் 1909 முதல் பிப்ரவரி 22ந் தேதி முன்னணி வகித்த பெண்கள் குழுவிற்கு அர்ப்பணிக்கப்படுவதற்காக அனுசரிக்கப்படுகிறது.
  • 146 நாடுகளில் உள்ள பெண் சாரணர்கள் மற்றும் பெண் வழிகாட்டிகள் உலக சிந்தனை தினத்தை கொண்டாடுகின்றன. 

தேசிய செய்திகள்

ஆந்திரப் பிரதேசம்

ஸ்வர்ண பாரத் டிரஸ்டடின் 18 வது ஆண்டுவிழா கொண்டாட்டம்

  • ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஸ்வர்ண பாரத் டிரஸ்ட் (எஸ்.பி.டி)-ன் 18 வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்வார்.
  • ஸ்வர்ண பாரத் டிரஸ்ட் கிராமப்புற வளர்ச்சியில் கவனம் செலுத்துவதோடு, வேலையில்லாத இளைஞர்கள் சுயமாக வேலை செய்வதற்கு பயிற்சி அளிக்கிறது.

மகாராஷ்டிரா

மக்களவைத் தேர்தலில் ஊனமுற்றோர் வாக்களிக்க பிக் அப் டிராப் வசதி

  • மகாராஷ்டிராவில், மாநில தேர்தல் ஆணையம் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் ஊனமுற்றவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக பிக் அப் டிராப் வசதியை ஏற்பாடு செய்துள்ளது.

தெலுங்கானா

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம்

  • புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்குவதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசம்

அங்கன்வாடி தொழிலாளர்களின் ஊதியம் உயர்வு

  • அங்கன்வாடி தொழிலாளர்கள் (1500 ரூபாய்/மாதம்), மினி அங்கன்வாடி தொழிலாளர்கள் (1250 ரூபாய்/மாதம்), சஹாயிகாஸ் (750 ரூபாய் மாதம்) மற்றும் பிராந்திய ரக்ஷா தல் (125 ரூபாய்/தினசரி) உறுப்பினர்கள் ஆகியோரின் ஊதியத்தை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உயர்த்தி அறிவித்தார். சம்பள அதிகரிப்பு 4 லட்சம் அங்கன்வாடி மற்றும் உதவித் தொழிலாளர்களுக்கு பயன் அளிக்கிறது.

சர்வதேச செய்திகள்

ஐரோப்பாவில் புதிய ஏவுகணைகளை அமெரிக்கா பயன்படுத்துவதற்கு ரஷ்யா எச்சரிக்கை

  • மேற்கு நாடுகளை புதிய ஆயுதங்களை வைத்து அச்சுறுத்தும் வகையில் அமெரிக்கா ஐரோப்பாவில் புதிய ஏவுகணைகளை நிறுவுவதற்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜப்பான் ஹொக்காய்டோ தீவில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

  • 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஜப்பானின் வடக்கு தீவான ஹொக்காய்டோவை தாக்கியது.

தீவிரவாதத்தை கையாள்வதில் இந்தியாவுடன் தீவிரமாக ஒத்துழைக்க சர்வதேச சமூகத்திற்கு .நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தல்

  • பயங்கரவாதிகள், அமைப்பாளர்கள், நிதியுதவி மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோரை நீதிக்கு கொண்டு வருவதில் இந்தியாவுடன் தீவிரமாக ஒத்துழைக்க சர்வதேச சமூகத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் (UNSC) வலியுறுத்தியுள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்திற்கான பொருளாதார வளர்ச்சி கட்டமைப்பை இலங்கை தொடங்கியது

  • நீண்டகால வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை உறுதி செய்வதற்காக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்திற்கான பொருளாதார வளர்ச்சி கட்டமைப்பை இலங்கை அரசு தொடங்கியது. போருக்குப் பிந்தைய வளர்ச்சி திட்டங்களின் விளைவுகள் போதுமானதாக இல்லை, குறிப்பாக வேலைவாய்ப்பின்மை மற்றும் உள்ளூர் மக்களுக்கான வருமானம் போதவில்லை என அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

மாநாடுகள்

4 வது இந்தியாஆசியான் கண்காட்சி மற்றும் உச்சி மாநாடு

  • 2017-18ல் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய வர்த்தகக் கூட்டணியாக ஆசியான் அமைப்பு வளர்ந்துள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த வர்த்தகத்தில்57 சதவீத பங்களிப்பு அளித்துள்ளது ஆசியான்.

நியமனங்கள்

  • நீதிபதி டி.கே. ஜெயின் – பி.சி.சி.ஐ.யின் குறைதீர் அதிகாரி
  • நீதிபதி உமாநாத் சிங் – நாகாலாந்து மாநிலத்தின் முதல் லோகாயுக்தா 

திட்டங்கள்

ஒருங்கிணைந்த பெரிய அளவிலான எறி சில்க் வேளாண்மை 

  • மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அருணாச்சல பிரதேசத்தில் ஒருங்கிணைந்த பெரிய அளவிலான எறி சில்க் வேளாண்மையை வடகிழக்கு பிராந்திய ஜவுளி மேம்பாட்டுத் திட்டத்தின் (NERTPS) கீழ் இடாநகரில் தொடங்கி வைத்தார். 

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சிஏபிஎப் ஊழியர்களுக்கான விமான பயண உரிமையை அரசு அங்கீகரிக்கிறது

  • மத்திய உள்துறை அமைச்சகம் மத்திய ஆயுதக் காவல் துறையினர், சிஏபிஎப்-க்கள் அனைவருக்கும் விமானப் பயணத்தின் உரிமையை அங்கீகரித்துள்ளது. தில்லி-ஸ்ரீநகர், ஸ்ரீநகர்-தில்லி, ஜம்மு-ஸ்ரீநகர் மற்றும் ஸ்ரீநகர்-ஜம்மு துறைகளில் உள்ள அனைத்து சிஏபிஎப் நபர்களுக்கும் விமானப் பயணத்தின் உரிமையை அமைச்சகம் அங்கீகரித்துள்ளது.

பாகிஸ்தானுக்குள் ஓடும் ஆற்று நீரின் பங்கை நிறுத்த இந்தியா முடிவு

  • பாகிஸ்தானுக்குள் ஓடும் நதி நீர் பங்கை நிறுத்த அரசு முடிவு செய்துள்ளது. நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரி இந்திய அரசாங்கம் கிழக்கு நதிகளின் தண்ணீர் திசையை திருப்பி, ஜம்மு & காஷ்மீர் மற்றும் பஞ்சாபில் உள்ள மக்களுக்கு வழங்கப்படும் என்று கூறினார்.
  • ரவி ஆற்றின் மீது ஷாபுர்-கண்டியில் அணை கட்டும் திட்டம் துவங்கியது. உஜ் திட்டமானது இந்தியாவின் ஜம்மு மற்றும் காஷ்மீர் பயன்பாட்டிற்கான நீர் பங்கை சேமிக்கும் மற்றும் மீதம் இருக்கும் தண்ணீர் ரவி-பீஸ் 2வது இணைப்பு மூலம் பிற மாநிலங்களுக்கு தண்ணீர் வழங்கும்.

விருதுகள்

மோடி சியோல் அமைதிப் பரிசைப் பெற்றார்

  • சர்வதேச ஒத்துழைப்புக்கு பங்களிப்பு மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக 2018 ஆம் ஆண்டிற்கான சியோல் அமைதிப் பரிசை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பெற்றார். இந்த விருது சியோலில் ஒரு பெரும் விழாவில் சியோல் அமைதி பரிசு அமைப்பால் வழங்கப்பட்டது.
  • இந்திய மற்றும் உலகப் பொருளாதாரங்களின் வளர்ச்சிக்கு பங்களிப்பு அளித்து, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வை குறைப்பதற்காக ‘மோடினாமிக்ஸை’ மதிப்பீடு செய்து விருது வழங்கும் குழு அங்கீகரித்துள்ளது.

விளையாட்டு செய்திகள்

இந்தியா Vs இங்கிலாந்து ஒருநாள் போட்டி

  • மும்பை வான்கடே மைதானத்தில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது .

பி.சி.சி..யின் குறைதீர் அதிகாரியாக நீதிபதி டி.கே. ஜெயின் நியமனம்

  • மாநில கிரிக்கெட் சங்கங்களுடனான வீரர்கள் தொடர்பான நிதி பிரச்சினைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பான குறைகளை நீக்க பி.சி.சி.ஐ.யின் குறைதீர் அதிகாரி பதவிக்கு சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி டி.கே. ஜெயின் நியமனம்.

PDF Download

ஜனவரி 2019 மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!