நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 07 2019

0

நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 07 2019

தேசிய செய்திகள்

அருணாச்சல பிரதேசம்
அருணாச்சல மாநிலத்தில் ஸ்டார்ட் அப் இந்தியா யாத்ராவை முதலமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
 • அருணாச்சலப் பிரதேச முதல்வர் பீமா காண்டு இட்டாநகர் மாநில செயலகத்தில் இருந்து அருணாச்சல மாநிலத்தின் ஸ்டார்ட் அப் இந்தியா யாத்ராவை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஹிமாச்சல பிரதேசம்
58 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.173 கோடி ஒதுக்கீடு
 • மத்திய அரசு இமாச்சல பிரதேசத்தில் 58 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு 173 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யதுள்ளது.

சர்வதேச செய்திகள்

டிரம்ப் அமெரிக்க கருவூல அதிகாரியான டேவிட் மல்பாஸ் உலக வங்கிக்கு தலைமை தாங்க முன்மொழிந்தார்
 • ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உலக வங்கியின் அடுத்த தலைவராக மூத்த கருவூல அதிகாரி டேவிட் மல்பாஸை நியமனம் செய்ய முன்மொழிந்தார்.
மாசிடோனியா நேட்டோவில் சேர ஒப்பந்தத்தில் கையெழுத்து
 • நேட்டோவில் அமெரிக்க தலைமையிலான கூட்டணியின் 30வது உறுப்பினராக ஆவதற்கு மாசிடோனியா உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. மாசிடோனியா-நேட்டோ ஒப்பந்தம் கிரீஸ் நாட்டுனான மாசிடோனியாவின் பெயரைப் பற்றிய 27 ஆண்டுகால சர்ச்சையை ஒப்பந்தம் மூலம் முடித்தது. இந்த உடன்படிக்கையை கூட்டணி அரசாங்கங்களால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
பிலிப்பைன்ஸ் வரும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கடும் கட்டுப்பாடு
 • பிலிப்பைன்ஸ் நாட்டில் வேலை செய்ய உத்தேசித்துள்ள வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பணி அனுமதிகளை வழங்குவதில் விரைவில் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் நடைமுறைகளை பின்பற்றப்படும் என்று பிலிப்பைன்ஸ் கூறியுள்ளது.
தேசிய அரசை அமைக்க விவாதம் மற்றும் வாக்களிக்க இலங்கை பாராளுமன்றம் முடிவு
 • ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்கும் முன்மொழிவுக்கான விவாதம் நடத்தி பின் வாக்களிப்பதற்கும் இலங்கை பாராளுமன்றம் முடிவு.

வணிகம் & பொருளாதாரம்

ஒட்டுமொத்த சுகாதார ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5% ஆக உயர்த்தப்பட உள்ளது
 • ஒட்டுமொத்த சுகாதார ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாக உயர்த்துவதற்கு இந்தியா உறுதியளித்துள்ளது.
ரிசர்வ் வங்கி – ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு
 • ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான நிதிக்கொள்கை ஆய்வுக்கூட்ட முடிவில் ரெப்போ வட்டி விகிதம் 25% குறைத்து 6.50% சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக குறைத்து அறிவித்தது. இந்த அறிவிப்பால் வீடு, வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது.
விவசாயிகளுக்கு அடமானம் இல்லா இலவச கடன் வரம்பு ரூபாய் 1.6 லட்சமாக அதிகரிப்பு
 • ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், இலவச வேளாண் கடன்களுக்கான வரம்பு 1 லட்சத்திலிருந்து 6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

தரவரிசை & குறியீடு

சமீபத்திய ஃபிபா தரவரிசை
 • சமீபத்திய ஃபிபா தரவரிசையில் இந்திய டாப் 100லிருந்து வெளியேறியது.
 • 103) இந்தியா

மாநாடுகள்

இந்தோ-ஆப்பிரிக்கா மூலோபாய பொருளாதார கூட்டுறவு
 • புதுடில்லியில் நடைபெற்ற இந்திய-ஆப்பிரிக்க மூலோபாய பொருளாதார கூட்டுறவு தொடர்பான பேச்சுவார்த்தைக் கூடத்தில் மத்திய வர்த்தக, தொழில்துறை மற்றும் உள்நாட்டு விமானத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு உரையாற்றினார்.

நியமனங்கள்

 • ஸ்ரீ சைலேஷ் – பொறுப்பு செயலாளர், சிறுபான்மை விவகார அமைச்சகம்
 • திங்கர் குப்தா – பஞ்சாப் டிஜிபி

திட்டங்கள்

UNDP சிறு மானிய திட்டம் (SGP)
 • MoEFCC- உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி, UNDP சிறு மானிய திட்டம் (SGP) பற்றிய ஒர்க்ஷாப் புது டில்லியில் சுற்றுச்சூழல், வனவியல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் (MoEFCC) செயலாளர், ஸ்ரீ சி.கே. மிஸ்ரா, துவக்கி வைத்தார்.
அடல் புஜல் யோஜனா
 • ரூ.6000 கோடி மதிப்பிலான அடல் புஜல் யோஜனா (ABHY) திட்டம் – நிலத்தடி நீரை சமூக பங்கேற்புடன் நிலையான மேலாண்மை திட்டத்திற்கு உலக வங்கி ஒப்புதல். இந்திய அரசு மற்றும் உலக வங்கி 50:50 என்ற விகிதத்தில் நிதியுதவி வழங்க உள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

செயற்கை நுண்ணறிவுக்கான புதிய மையங்கள்
 • உலகெங்கிலும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைப் தொடர்ந்து, ஐஐடி கரக்பூர்,ஐஐடி மெட்ராஸ், ஐஐடி காஞ்சிபுரம், என்ஐடி சில்சார் மற்றும் என்ஐடி போபால் ஆகியவை செயற்கை நுண்ணறிவுகளுக்கான மையங்களை அமைத்துள்ளன.

விளையாட்டு செய்திகள்

ரஞ்சி கோப்பை
 • சவுராஷ்டிரா அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி விதர்பா அணி ரஞ்சி கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாகக் கைப்பற்றியது.
EGAT கோப்பை
 • உலக சாம்பியன் இந்திய வீரர் சைகோம் மீராபாய் சானு தாய்லாந்தில் நடைபெற்ற EGAT கோப்பை போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
 • சானு 49 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார். வெள்ளிப் பதக்கத்துக்கான ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் 192 கிலோ எடையை தூக்கி சாம்பியனானார் மீராபாய் சானு.
ஃபெடரேசன் கோப்பை டென்னிஸ் போட்டிகள்
 • அஸ்தானாவில் நடைபெற்ற ஃபெடரர் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசியா ஓசானியா குரூப் 1ல் இந்தியா தாய்லாந்தை 2 – 1 என்ற கணக்கில் தோற்கடித்தது.
9வது சீனியர் பெண்கள் ஹாக்கி தேசிய சாம்பியன்ஷிப்
 • 9வது சீனியர் பெண்கள் ஹாக்கி தேசிய சாம்பியன்ஷிப் போட்டி ஹிசார், ஹரியானாவில் தொடங்கியது.

PDF Download

ஜனவரி 2019 மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை

ஜனவரி 2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here