நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 28 2018

0

நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 28 2018

தேசிய செய்திகள்

ஜம்மு & காஷ்மீர்

ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை பிரகடனப்படுத்த மக்களவில் சட்டரீதியான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

  • ஜம்மு மற்றும் காஷ்மீரில் குடியரசுத் தலைவரின் ஆட்சியை பிரகடனப்படுத்தும் சட்டப்பூர்வ தீர்மானம், மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. எனினும், சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பின்னர் அதை எதிர்த்தனர்.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா அரசு 7​​வது ஊதியக் கமிஷன் பரிந்துரைகளை செயல்படுத்தியது

  • மகாராஷ்டிரா அரசாங்கம் அதன் ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷனின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியது, இதன்மூலம் அரசு உதவியற்ற பள்ளிகள், அதிகாரிகள் மற்றும் ஜில்லா பரிஷத்தில் உள்ளவர்கள் பயனடைவர்.

சர்வதேச செய்திகள்

சிரியாவில் டமாஸ்கஸ் தூதரகத்தை யு... மீண்டும் திறந்தது

  • இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் சிறு குளறுபடியால் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சிரியாவின் டமாஸ்கஸில் தனது தூதரக சேவையை மீண்டும் தொடங்கியது. 

வங்கதேசத்துக்கு தேர்தல் பார்வையாளர்களை இந்தியா அனுப்பியது

  • நடைபெறவிருக்கும் தேர்தலை கண்காணிக்க வங்கதேசத்திற்கு இந்தியா பார்வையாளர்களை அனுப்பியுள்ளது. அந்த நாட்டிலுள்ள தேர்தல்களை கண்காணிக்க மூன்று அதிகாரிகள் இந்தியாவில் இருந்து நியமிக்கப்பட்டனர். 

அறிவியல் செய்திகள்

2019ல் இந்தியா இரண்டு கிரகணங்களைக் காண முடியும்

  • வானவியல் ஆர்வலர்கள் மற்றும் வானியலாளர்கள் 2019 ஆம் ஆண்டில் ஐந்து கிரகணங்களை காண முடியும், அவற்றில் இரண்டு இந்தியாவில் தெரியும்.
  • ஜூலை 16 முதல் 17 வரை நடைபெறும் பகுதி சந்திர கிரகணம் இந்தியாவில் காணலாம் அதே போல் டிசம்பர் 26ம் தேதி வட்டவடிவ சூரிய கிரகணத்தை காணலாம்.

வணிகம் & பொருளாதாரம்

2019ற்கான கொப்பரைத் தேங்காய் குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.2,000 அதிகரிப்பு

  • 2019 பருவத்திற்கான அரவை கொப்பரை தேங்காயின் குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ. 9,521-ஆகவும், முழு கொப்பரை தேங்காய் குறைந்தபட்ச ஆதரவு விலையை ரூ. 9,920-ஆகவும் உயர்த்துவதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. 

பூட்டானுக்கு ரூ .4,500 கோடி உதவித்தொகை இந்தியா அறிவிப்பு

  • பிரதமர் நரேந்திர மோடி பூட்டான் பிரதமர் டாக்டர்.லோதே ட்செரிங் உடன் பரந்த பேச்சுவார்த்தைகளை நடத்தியபின் 12 வது ஐந்தாண்டு திட்டத்திற்காக பூட்டானுக்கு 4,500 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார். பூடானின் புதிய ஐந்து வருட திட்டம் இந்த ஆண்டு துவங்கி 2022 வரை தொடரும். 

வர்த்தகர்கள் புதிய மின்வணிக விதிகளை வரவேற்கிறார்கள்

  • மின் வணிக நிறுவனங்களுக்கான நெறிமுறைகளை இறுக்கியது அரசாங்கம், அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) இந்த முடிவை வரவேற்றது மற்றும் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்த விதிகள் பின்பற்றப்படும், இது வால்மார்ட்-இன் பிளிப்கார்ட் கையகப்படுத்தலை ரத்து செய்யும்.

மாநாடுகள்

12 வது உலகளாவிய சுகாதார உச்சி மாநாடு

  • இந்திய ஜனாதிபதி, ஸ்ரீ ராம் நாத் கோவிந்த், அமெரிக்க சங்கத்தின் இந்திய வம்சாவளி மருத்துவர்கள் ஏற்பாடு செய்த 12 வது உலகளாவிய சுகாதார மாநாட்டை மும்பையில் திறந்து வைத்தார்.

ஸ்ரீ சத்குரு ராம் சிங்ஜி 200வது பிறந்த தினத்தை நினைவுகூரும் சர்வதேச கருத்தரங்கு

  • சீக்கிய தத்துவவாதி, சீர்திருத்தவாதி மற்றும் சுதந்திரப் போராளி ஸ்ரீசத்குரு ராம் சிங்ஜி-யின் 200 வது பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையில் சர்வதேச கருத்தரங்கு புது டெல்லியில் கலாச்சார அமைச்சர் டாக்டர் மகேஷ் ஷர்மா தொடங்கி வைத்தார்.

திட்டங்கள்

யமுனா புத்துயிர் பெறுவதற்கான 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

  • புதுடில்லியில் நமாமி கங்கா திட்டத்தின் கீழ் யமுனா புத்துயிர் பெறுவதற்கான 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு மிகக் கடுமையான தண்டனை அளிக்கும் வகையில், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டம் 2012-ல் திருத்தம் செய்ய பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய பொதுத்துறை நிறுவனங்களை பங்குப் பரிவர்த்தனை பட்டியலில் இணைக்க அமைச்சரவை ஒப்புதல்

  • ஏழு மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் தொடக்க நிலை விற்பனை (ஐ.பி.ஓ)/தொடர்ந்தநிலை விற்பனை (எஃப்.பி.ஓ) மூலம் பங்குப் பரிவர்த்தனை பட்டியலில் சேருவதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல்அளித்தது.

தேசிய ஹோமியோபதி ஆணைய வரைவு மசோதா 2018

  • தேசிய ஹோமியோபதி ஆணையம் 2018-க்கான வரைவு மசோதாவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தற்போதுள்ள மத்திய ஹோமியோபதி கவுன்சிலுக்கு மாற்றாக கொண்டு வரப்படும் தேசிய  ஹோமியோபதி ஆணையம் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது.

2018 இந்திய முறை மருத்துவ மசோதாவுக்கான தேசிய ஆணையத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • 2018 இந்திய முறை மருத்துவ தேசிய ஆணையத்தை அமைப்பதற்கான வரைவு மசோதாவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மசோதா வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில், தற்போதுள்ள இந்திய மருத்துவ மத்திய கவுன்சிலுக்குப் பதிலாக புதிய அமைப்பை உருவாக்க வகை செய்கிறது.

கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2018

  • கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2018-க்கு புதுதில்லியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அறிவிக்கை கடந்த 2011 ஆம் ஆண்டு மறு ஆய்வு செய்யப்பட்டு அவ்வப்போது திருத்தங்கள் செய்யப்பட்டு வந்தது. கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துத் தீவுகளில் 20 மீட்டர் தூரம் வரை மேம்பாட்டு மண்டலத்திற்கு தடை. சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த அனைத்துப் பகுதிகளுக்கும் சிறப்பு முக்கியத்துவம்.

இந்தியாவிற்கும் சாவோ டோம் மற்றும் பிரின்சீப்பிற்கும் இடையேயான கட்டமைப்பு உடன்படிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்

  • அமைதிக்காக விண்வெளியின் பயன்பாடு மற்றும் ஆய்வு குறித்த ஒத்துழைப்பிற்கென இந்தியாவிற்கும், சாவோ டோம் மற்றும் பிரின்சீப்பிற்கும் இடையேயான கட்டமைப்பு ஒப்பந்தத்தின் விவரங்கள், பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டன. 

மொபைல் செயலிகள் & இணைய போர்ட்டல்

ட்ரோன் ஒலிம்பிக்ஸ்

  • பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிதாக வடிவமைக்கப்பட்ட ‘ட்ரோன் ஒலிம்பிக்ஸ்’-ற்கான இணையப் பக்கத்தைத் (https://aeroindia.gov.in/Drone) தொடங்கி வைத்தார். ‘ட்ரோன் ஒலிம்பிக்ஸ்’ பெங்களூருவில் உள்ள ஏலாஹங்காவில் ஏரோ இந்தியா – 2019ன் போது நடைபெற உள்ளது.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!