நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 18 2018

0

நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 18 2018

முக்கியமான நாட்கள்

டிசம்பர் 18 – சர்வதேச குடிபெயர்ந்தோர் தினம்

 • 2000 டிசம்பர் 4 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத்த தொடர்ந்து டிசம்பர் 18 அன்று சர்வதேச குடிபெயர்ந்தோர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
 • 1990 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி அனைத்து குடிபெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான சர்வதேச மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது (தீர்மானம்).
 • 2018 தீம்: Migration with Dignity

டிசம்பர் 18 – சர்வதேச அரபு மொழி தினம்

 • 1973ம் ஆண்டு டிசம்பர் 18 அன்று ஐ.நா பொது சபை உத்தியோகபூர்வ ஐ.நா. மொழியாக அரபியை அங்கீகரித்தது. அதன் காரணமாக ஐ.நா. அரபு மொழி தினம் டிசம்பர் 18 அன்று ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிகழ்வானது 2010 இல் யுனெஸ்கோவால் நிறுவப்பட்டது.

தேசிய செய்திகள்

அசாம்

விவசாயிகளுக்கான கடன் நிவாரணத் திட்டம்

 • மாநில விவசாயிகள் கடன் நிவாரணத் திட்டத்தை அசாம் அரசு ஏற்றுக் கொண்டது. மாநில அமைச்சரவை விவசாயிகளுக்கான கடன் தொகையை 25 சதவிகிதம் தள்ளுபடி செய்ய முடிவு.

மற்ற மாநிலங்களுக்கு தேசிய குடிமக்கள் பட்டியலை நீட்டிக்க எந்த முன்மொழிவும் இல்லை

 • அசாம் அல்லாத பிற மாநிலங்களுக்கு ,தேசிய குடிமக்கள் பட்டியலை நீட்டிக்க எந்த முன்மொழிவும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பீகார்

கங்கை நதியின் குறுக்கே புதிய 4 லேன் பாலம்

 • பீகாரின் பாட்னாவில் கங்கா ஆற்றின் குறுக்கே ஒரு புதிய பாலம் கட்ட மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு (CCEA), தேசிய நெடுஞ்சாலை[NH]-19 இல் இருக்கும் MG சேதுவுக்கு இணையான634 கி.மீ. நீளமான 4 லேன் பாலம் கட்டுமானத்திற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.

சத்தீஸ்கர்

16 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கடன் தள்ளுபடி

 • 16 லட்சம் விவசாயிகளுக்கு 6,100 கோடி ரூபாய் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் அறிவித்துள்ளார்.
 • குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தின் கீழ் விற்கப்படும் நெல்லுக்கு விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு 2,500 ரூபாய் வழங்க சத்தீஸ்கர் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ஜம்மு & காஷ்மீர்

ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆளுநர், ஜனாதிபதி ஆட்சி அமைக்க பரிந்துரை

 • ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் டிசம்பர் 19ம் தேதி ஆறு மாத கால ஆளுநர் ஆட்சி நிறைவுபெற்றதை அடுத்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.

புது தில்லி

ராஜ்குமார் சுக்லாவின் நினைவு தபால்தலை வெளியீடு

 • ராஜ்குமார் சுக்லாவின் நினைவு தபால்தலையை ரயில்வேத்துறை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா புதுடில்லியில் வெளியிட்டார்.
 • பிஹார் மாநிலத்தின் சம்பாரண் மாவட்டத்தில் அவுரி சாகுபடி செய்த விவசாயிகளின் உரிமைகளுக்காக காந்திஜி நடத்திய முதல் போராட்டத்திற்கு காந்தியை அந்த இடத்துக்கு வற்புறுத்தி அழைத்துச் சென்றவர் ராஜ்குமார் சுக்லா. காந்திஜி தன்னுடைய தாய்நாட்டில் தொடங்கிய முதல் சத்தியாகிரகப் போரை வெற்றிகரமாக நடத்த உதவியர் ராஜ்குமார் சுக்லாதான் என்றால் மிகையில்லை.

சர்வதேச செய்திகள்

பிளாஸ்டிக் ஷாப்பிங் பைகளை ஒழிக்க முடிவு

 • நியூசிலாந்தில், ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் ஷாப்பிங் பைகள் கட்டாயமாக பயன்படுத்த தடை, இந்த விதிமுறைகளை ஜூலை 1, 2019 முதல் நடைமுறைப்படுத்துகிறது. சில்லறை விற்பனையாளர்கள் அடுத்த ஆண்டு ஜூலை முதல் ஒற்றைப் பயன்பாடு பிளாஸ்டிக் ஷாப்பிங் பைகளை விற்கவோ அல்லது கொடுக்கவோ முடியாது.

அறிவியல் செய்திகள்

ஜிசாட்  7வை கொண்டு செல்லும் ஜிஎஸ்எல்வி எப் 11 ஏவுகளைக்கான கவுண்ட் டவுன் தொடக்கம்

 • ஜிசாட் 7ஏ-செயற்கைக் கோள் ஜி.எஸ்.எல்.வி. எஃப்-11 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படும்.
 • 2250 கிலோ எடை கொண்ட ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள் இந்தியாவின் 39வது தகவல் தொடர்பு செயற்கைகோளாகும். இந்திய துணைக் கண்டத்தில் இருப்பவர்களுக்கு கு[Ku] பேண்ட் மூலம் தகவல் தொடர்பு வசதியை அளிக்கும்.

திட்டங்கள்

தேசிய மட்டத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் கண்காணிப்பு” (MPRNL) திட்டம்

 • வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சகம் “தேசிய அளவிலான பூச்சிக்கொல்லி மருந்துகளை கண்காணித்தல்” (MPRNL) திட்டத்தை அமல்படுத்துகிறது. இதன் கீழ், உணவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு பூச்சிக்கொல்லி எச்சங்களின் இருக்கிறதா என பகுப்பாய்வு செய்யப்படுகின்றன.

ரயில்வேயில் புதுமை மற்றும் தொழில்நுட்பம் மூலம் இந்தியாவை வலுப்படுத்துதல்

 • ரயில்வே அமைச்சகம், “இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியர்ஸ் (இந்தியா)வுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இரயில்வேயில் புதுமை மற்றும் தொழில்நுட்பம் மூலம் இந்தியாவை வலுப்படுத்துதல்” எனும் நிகழ்வ ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா திறந்துவைத்தார்.

புத்தகங்கள் & ஆசிரியர்கள்

 • டைம்லெஸ் லக்ஷ்மன் – பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மன் குறித்த “டைம்லெஸ் லக்ஷ்மன்” என்ற நூலை பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிட்டார்.

விளையாட்டு செய்திகள்

இந்தியா Vs ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

 • பெர்த் நகரில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 146 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது. இதன்மூலம் நான்கு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்தது.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!