நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 7 2018

0
332

நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 7 2018

தேசிய செய்திகள்

ஆந்திரப் பிரதேசம்

சீனக் கூறு தயாரிப்பாளர் நிறுவனம் திருப்பதியில் அலகு அமைக்கிறது

 • ஸ்மார்ட் ஃபோன் தயாரிப்பாளரான ஸியோமிக்கு முக்கிய கூறுகளை வழங்கும் முன்னணி சீன நிறுவனமான ஹோலிடெக் டெக்னாலஜி, இந்தியாவில் ரூ.1,500 கோடி முதலீட்டில் இந்தியாவின் முதல் அலகு திருப்பதியில் நிறுவப்படுவதற்கான அரசாங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

கேரளம்

கேரள ஸ்டார்ட் அப்ஸ் விதை நிதி பெற்றது

 • புதுடில்லியில் நடந்த இந்திய புதுமை வளர்ச்சி திட்டம் (IIGP) 2.0 வில் கேரள ஸ்டார்ட் அப்ஸ் இலக்கு(KSUM) மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று ஸ்டார்ட் அப்கள் ரூபாய் 25 லட்சம் வரை விதை நிதியுதவி பெற்றுள்ளன.

தெலுங்கானா

விவசாயிகள் ஆயுள் காப்பீட்டு பத்திரங்களை பெறவுள்ளனர் 

 • ஆகஸ்ட் 6 முதல் 13 தேதிகளுக்குள், 27 லட்சம் விவசாயிகளுக்கு ஆயுள் காப்பீட்டு பத்திரங்கள் வழங்கப்படும் என்று விவசாயத்துறை அமைச்சர் பி.சீனிவாஸ் ரெட்டி தெரிவித்தார். இந்த புதுமையான திட்டம் ஆகஸ்ட் 14 நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும்.

வடகிழக்கு மாநிலங்கள்

மூன்று வடகிழக்கு மாநிலங்கள் புதிய எச்.ஐ.வி ஹாட்ஸ்பாட்களாக வெளிப்படுகின்றன

 • சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின்படி, மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுரா ஆகியவை புதிய எச்.ஐ.வி ஹாட்ஸ்பாட்களாக வெளிப்படுகின்றன.

தமிழ்நாடு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது

 • சத்தியமங்கலம் புலிகள் இருப்பில் (STR) ஆண்ட்ராய்டு அடிப்படையிலான மொபைல் ஆப் பயன்படுத்தி வருடத்திற்கு இருமுறை நடக்கிற ஆறு நாள் வனவிலங்கு கண்காணிப்பு பயிற்சி தொடங்கியது.

சர்வதேச செய்திகள்

சீனாவில் பன்றித் தபால் தலைகள் வெளியிடப்பட்டன

 • பன்றி ஆண்டை முன்னிட்டு 2019ஆம் ஆண்டு வெளியிடப்படவுள்ள தபால் தலையின் வடிவமைப்பை சீன தபால் வெளியிட்டது. இந்த வடிவமைப்பில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு புன்னகை பன்றிகள் மற்றும் அவற்றின் மூன்று மகிழ்ச்சியான பன்றிகளைக் கொண்டுள்ளது.

அதிகளவில் மக்கள் குடிபெயர்வதால் பிரேசில் வெனிசுலாவினற்கு எல்லைகளை மூடியது

 • அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியால் தென் அமெரிக்க நாட்டிலிருந்து அதிகளவில் மக்கள் குடிபெயர்வதை குறைக்க பிரேசில் தனது வடக்கு எல்லையை வெனிசூலாவினற்கு மூடியது.

சூறாவளி ஹெக்டர் ஹவாயை நெருங்குகிறது

 • சூறாவளி ஹெக்டரை எதிர்கொள்ள ஹவாய் பெரிய தீவு தயார்நிலையில் உள்ளது

அறிவியல் செய்திகள்

பிரெஞ்ச் கயானாவிலிருந்து  இஸ்ரோவின் கணமான செயற்கைக்கோள் ஜிசாட்-11 விண்ணுக்கு ஏவப்பட தயாராகவுள்ளது

 • இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் (இஸ்ரோ) கணமான செயற்கைக்கோளான GSAT-11 பிரெஞ்ச் கயானாவில் இருந்து 30 நவம்பர் அன்று விண்ணில் ஏவப்பட தயாராகவுள்ளது.

நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்திற்கு சென்று ஆறு ஆண்டுகள் நிறைவுற்றது

 • செவ்வாயில் திரவ நீர் ஆதாரங்கள் மற்றும் வாழ்வதற்கு சாத்தியமான அறிகுறிகள் மற்றும் வாழ்விடம் காணப்படும் என்று ஒரு நோக்கத்துடன் அனுப்பப்பட்ட நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் சிவப்பு செவ்வாய் கிரகம் சென்று ஆறு ஆண்டுகள் நிறைவுற்றது.

வணிகம் & பொருளாதாரம்

யு.கே.யில் ஓலா அறிமுகமாகவுள்ளது

 • இந்த ஆண்டு, யு.கே யில் டாக்சி சேவையை தொடங்குவதற்கு இந்திய நிறுவனமான ஓலா திட்டம்.

தரவரிசை & குறியீடு

ATP தரவரிசை

 1. ரபேல் நடால் (ஸ்பெயின்) 2. ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 3. அலெக்ஸாண்டர் ஸ்வரெவ் (ஜெர்மனி)

நியமனங்கள்

 • ஆதித்யா விக்ரம் மற்றும் பிரமோத் சந்திர மோதி – மத்திய நேரடி வரி வாரிய உறுப்பினர்கள் (CBDT)

பாதுகாப்பு செய்திகள்

கூட்டு சைக்கிள் ஓட்டுதல் மற்றும் ட்ரெக்கிங்

 • இந்திய இராணுவம் மற்றும் ராயல் பூட்டான் இராணுவத்தின் ஒரு கூட்டு சைக்கிள் ஓட்டுதல் மற்றும் ட்ரெக்கிங், பூட்டானில் “இந்தியா மற்றும் பூட்டான் இடையே இராஜதந்திர உறவுகளை நிறுவி ஐம்பது ஆண்டுகள்” நினைவாக நடத்தப்பட்டது.

மொபைல் செயலிகள் & இணைய போர்ட்டல்

இந்திய அறிவியல்(indiascience.in), ஒரு இணைய அடிப்படையிலான அறிவியல் சேனல்

 • விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (டி.எஸ்.டி) வழிகாட்டுதலின் கீழ் விக்யான் பிரசார், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை வெளிப்படுத்த, (indiascience.in) இணையம்-சார்ந்த அறிவியல் சேனல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது இந்தியா.

UMANG தளத்தில் TRAI மொபைல் ஆப்கள்

 • இந்தியாவின் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) அதன் மொபைல் ஆப் டிஎன்டி 2.0 மற்றும் மைகால் ஆகியவற்றை UMANG தளத்துடன் நுகர்வோருக்குச் சென்றடையவும் மற்றும் அவர்களது நலன்களைப் பாதுகாப்பதற்கான நோக்கத்துடனும் ஒருங்கிணைக்கிறது.

“கோவாமைல்ஸ்”

 • கோவா முதலமைச்சர் மனோகர் பரிக்கர் மற்றும் சுற்றுலாத்துறை மந்திரி மனோகர் அஜாகோன்கர் ஆகியோர் கோவா சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் ஆப் அடிப்படையான டாக்ஸி “கோவாமைல்ஸ்” சேவையை பனாஜியில் கொடி அசைத்து தொடக்கி வைத்தனர்.

விளையாட்டு செய்திகள்

இந்தியா U-20 கால்பந்து அணி அர்ஜென்டீனாவுக்கு அதிர்சசி அளித்தது

 • U-20 கோடிப் கால்பந்து கோப்பையில் அர்ஜென்டினாவை 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது

PDF DOWNLOAD

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

ஜூலை நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here