ஏப்ரல் 25 நடப்பு நிகழ்வுகள்

0

உலக மலேரியா தினம் – ஏப்ரல் 25

  • மலேரியா நோய் என்பது ‘பிளாஸ்மோடியம்’ என்ற கண்ணுக்கு தெரியாத ஒரு செல் ஒட்டுண்ணி மூலம் ஏற்படுகிறது.
  • இந்த ஒட்டுண்ணி நல்ல நீரில் உற்பத்தியாகும் ‘அனோபிலஸ்’ வகை பெண் கொசு மூலம் மனிதனுக்கு பரவுகிறது.

மாநிலம்

உத்தரபிரதேசம்

நினைவுத் தபால்தலை வெளியீடு

  • பிரதமர் நரேந்திர மோடி 25.04.2018 அன்று மறைந்த முன்னாள் உத்தரபிரதேச முதலமைச்சர் ஹேமாவதி நந்தன் பகுகுணாவின் நினைவுத் தபால்தலை வெளியிட்டுள்ளார்.

ஆந்திரபிரதேசம்

  • மின்சார செலவைக் குறைக்க, அடுத்த ஆண்டுக்குள் ஆந்திர மாநிலம் முழுவதும் எல்இடி பல்புகள் அமைக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
  • நாட்டிலேயே 100 சதவீதம் எல்இடி பல்புகள் பொருத்தப்பட்ட மாவட்டமாக கிழக்கு கோதாவரி மாவட்டம் உருவாகி இருக்கிறது.

தேசியசெய்திகள்

திருத்தியமைக்கப்பட்ட தேசிய மூங்கில் இயக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • மத்திய அரசின் திட்டமான தேசிய நிலைத்த வேளாண்மை இயக்கத்தின் கீழ் வரும் தேசிய மூங்கில் இயக்கத்திற்கு 14-வது நிதிக்குழுவின் எஞ்சிய காலத்திற்கு (2018-19 மற்றும் 2019-20) பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு இன்று ஒப்புதல் அளித்தது.
  • இந்த இயக்கம் மூங்கில் துறையை முழுமையான அளவில் மேம்படுத்துவதை உறுதி செய்யும்.

மூல சணல் – குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) – அதிகரிப்பு

  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2018-19 பருவத்தில் மூல சணலிற்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • மூல சணல் நியாயமான சராசரி தரத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP), 2018-19 பருவத்தில் குவிண்டாலுக்கு ரூ .3700 / – ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2017-18 பருவத்தில் குவிண்டாலுக்கு 3500 / -.

ஹரிமாவோ சக்தி 2018 ஒத்திகை

  • இந்தியா – மலேசியா இடையிலான ராணுவ ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, மலேசியாவின் ஹுலு லங்கத் மாகாணத்தின் செங்காய் பெர்டிக் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில், ஹரிமாவோ சக்தி என்ற பெயரில் கூட்டு போர் பயிற்சி நடைபெறவுள்ளது.

இந்தியக் கப்பல் படையில் எல்சியு எம்கே-IV சேர்க்கப்பட்டது

  • தரையிறக்கும் கப்பல் வசதி (எல்சியு) எம்கே-IV திட்டத்தின் 3-வது கப்பல் 25.04.2018 போர்ட்பிளேர் துறைமுகத்தில் இந்தியக் கப்பல் படையில் சேர்க்கப்பட்டது.
  • அந்தமான் நிகோபார் கப்பல் படைப் பிரிவின் தலைமைத் தளபதி வைஸ் அட்மிரல் பிமல் வர்மா, ஏவிஎஸ்எம், ஏடிசி இந்தக் கப்பலை ஜ.என்.எஸ்சி.யு எல்53 என்று பெயரிட்டு இயக்கிவைத்தார்.

கரையோரப் பாதுகாப்புச் “சாகர் கேவச்” கேரளாவில் நடைபெற்றது

  • கடலோர காவல் பாதுகாப்பு அமைப்பை பலப்படுத்த மற்றும் மதிப்பீடு செய்ய கேரளாவில் இரண்டு நாட்கள் கடலோரப் பாதுகாப்பு பயிற்சி ‘சாகர் கவாக்‘ நடத்தப்பட்டது.
  • இந்திய கடலோர காவல்படை (ICG), இந்தியக் கடற்படை, கரையோர காவல் மற்றும் கடல் அமலாக்க பிரிவு மற்றும் பல்வேறு பாதுகாப்பு பங்குதாரர்கள் இந்த பயிற்சியில் பங்கு பெற்றனர்.

சர்வதேச செய்திகள்

இந்தியாவிற்கும் சாவோ டோம் மற்றும் பிரின்சிப்பிற்கும் இடையில்

புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • பாரம்பரிய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறைகளில் இந்தியாவுக்கும் மற்றும் சவோ டோமி மற்றும் பிரின்சிபி நாட்டுக்கும் இடையே ஏற்கெனவே கையெழுத்திடப்பட்ட ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் 2018 மார்ச்சில் கையெழுத்திடப்பட்டது.

அறிவியல்

ஜிசாட்-11 விண்ணில் செலுத்தப்படுவதில் மாற்றம்

  • பிரெஞ்ச் கயானாவில் உள்ள கூரு ஏவுத்தளத்தில் இருந்து 2018 மே மாதம் விண்ணில் செலுத்தப்படுவதாக இருந்த ஜிசாட்-11-ன் அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
  • இந்தச் செயற்கைக்கோள் எப்போது செலுத்தப்படும் என்ற தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

பெரிய கொசு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது

  • சீனாவில் 15 சென்டிமீட்டர் சிறகளவில் விஞ்ஞானிகள் ஒரு பெரிய கொசுவை கண்டுபிடித்துள்ளனர்.
  • தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் தலைநகரான செங்டூவில் விஞ்ஞானிகள் இந்த பெரிய கொசுவை கண்டுபிடித்தனர்.
  • இந்த கொசு முதலில் ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டது.

வணிகசெய்திகள்

நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி கருத்து

  • இந்தியாவில் தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன.
  • ஆனால் கிழக்கு பகுதியில் இருக்கும் பிகார், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் இந்தியாவின் வளர்ச்சியை பின்னுக்குத் தள்ளுகின்றன என்று நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் கூறினார்.

விளையாட்டுசெய்திகள்

  • உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்வீடன் ஹாம்ஸ்டட் நகரில் நடைபெறவுள்ளது.

யுனெஸ்கோ கில்லர்மோ கேனோ உலக பத்திரிகை சுதந்திரப் பரிசு

  • எகிப்திய புகைப்பட பத்திரிகையாளர் மஹ்மூத் அபு ஜீத்க்கு ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) 2018 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை சுதந்திரப் பரிசு வழங்கப்பட்டது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!