ஏப்ரல் 13 நடப்பு நிகழ்வுகள்

0

மாநிலசெய்திகள்

தில்லி

அம்பேத்கர் நினைவு இல்லத்தை பிரதமர் நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்

  • இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் தந்தை என போற்றப்படும் டாக்டர். பீமாராவ் அம்பேத்கர் டெல்லியின் அலிபூர் பகுதியில் உள்ள இல்லத்தில் வசித்து வந்தார். மகாபரிநிர்வான பூமி என அழைக்கப்படும் அந்த இடத்தில் அம்பேத்காரை போற்றும் வகையில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அந்தநினைவு இல்லத்தை பிரதமர் நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்

சத்தீஸ்கர்

நாட்டின் முதல் ஆயுஷ்மான் பார சுகாதார மையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • சத்தீஸ்கர்மாநிலம் ஜங்லாவில், நாட்டின் முதல் ஆயுஷ்மான் பார சுகாதார மையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார், மேலும் டெல்லி ராஜ்ஹரா-ராவ்கட் ஜகதல்பூர் ரெயில் திட்டத்தின்கீழ் புதிய ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்

தேசியசெய்திகள்

65வது தேசிய திரைப்பட விருதுகள் (2017)

  • 2017ஆம் ஆண்டுக்கான 65ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள சிறந்த பொழுதுபோக்கு மற்றும் பொழுதுபோக்கு அல்லாத திரைப்படங்கள், திரைப்படம் தொடர்பான சிறந்த நூல், திரைத்துறையில் சாதனை புரிந்தோரைக் கவுரவிக்கும் வகையிலான தாதா சாகேப் விருது ஆகிய பல்வேறு விருதுகளைத் தேர்வுக் குழுவினர் அறிவித்தனர்.

               விருது பெற்றோரின் பட்டியலை ஆங்கிலத்தில் அறிய 

E-FRRO திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்

  • மத்திய உள்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் வலைதளம் சார்ந்த ‘e-FRRO’ (வெளிநாட்டவர் மண்டல மின்னணுப் பதிவு அலுவலகம்) என்னும் நடைமுறையைத் தொடங்கிவைத்தார். வெளிநாட்டினருக்கு விசா தொடர்பான சேவைகளை அளிக்க, ஒருங்கிணைக்கப்பட்ட, வெளிப்படையான ஆன்லைன் தளம் தேவை என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த ‘e-FRRO’ திட்டம் வகுக்கப்பட்டதாக அவர் கூறினார். இதன் மூலம், முகமற்ற, ரொக்கமற்ற, காகிதமற்ற சேவைகளை நட்புறவு அனுபவத்துடன் வெளிநாட்டினருக்கு வழங்க முடியும் என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
  • இந்தியாவுக்கு வருகைத் தந்து தங்கும் வெளிநாட்டவர்களுக்குச் சுலபமான சேவை வழங்குவதில் மிகப்பெரிய முன்னேற்றத்தை இந்த ‘e-FRRO’ திட்டம் அளிக்கும். இந்தப் புதியத் திட்டத்தின் மூலம், வெளிநாட்டவர்கள் 27 வகையான விசா மற்றும் குடியேற்றம் தொடர்பான சேவைகளை இந்தியாவில் பெறவும் அவர்கள் தங்குமிடத்தில் வசதிகளைப் பெறுவதற்கும் இது உதவும். இந்த மின்னணு முறையைப் பயன்படுத்தி, நேரில் ஆஜராகாமல் மின்னஞ்சல் மற்றும் அஞ்சல் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்துச் சேவைகளைப் பெறலாம்.

சர்வதேசசெய்திகள்

தென் சீனக் கடலில் சீன கடற்படை போர் ஒத்திகை

  • தென் சீனக் கடல் முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக வியட்நாம், தைவான், பிலிப்பைன்ஸ், மலேசியா, இந்தோனேசியா, புருணே உள்ளிட்ட 9 நாடுகள் எதிராக உள்ளன. தென்சீனக் கடலில் சீன கடற்படை போர் ஒத்திகையை தொடங்கியது. சீனாவின் சான்யா கடற்படைத் தளம் அந்த நாட்டு நீர்மூழ்கிகளின் தலைமையகம் என்று கூறப்படுகிறது. அதன் அருகில்தான் போர் ஒத்திகை நடைபெற்றது.சீனாவின் விமானந்தாங்கி போர்க்கப்பலான லியோனிங்கும் பங்கேற்றது.

சார்க் கூட்டமைப்பு சார்பில் போலீஸ் படைஉருவாக்கும் நேபாளத்தின் பரிந்துரையை நிராகரித்த இந்தியா

  • தெற்காசிய பிராந்திய கூட்டமைப்பு (சார்க்) 1985-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, மாலத்தீவு, வங்காளதேசம், நேபாளம் மற்றும் பூட்டான் நாடுகள் இந்த கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ளது. இந்நிலையில், சார்க் கூட்டமைப்பு நாடுகளின் மூத்த காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் காத்மண்டு நகரில் நடந்தது.
  • இந்த கூட்டத்தில், சார்க் கூட்டமைப்பு சார்பில் தனி போலீஸ் படை உருவாக்குவது தொடர்பாக நேபாளம் பரிந்துரை அளித்தது. பிராந்திய பாதுகாப்பு, தீவிரவாத தடுப்பு, போதைப்பொருள் கடத்துவதை கண்காணிக்க போன்ற பணிகளுக்காக இந்த போலீஸ் படையை உருவாக்கலாம் என நேபாளம் அளித்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேபாளத்தின் பரிந்துரையை இந்தியா நிராகரித்தது.

விஞ்ஞான செய்திகள்

இஸ்ரோ: 8 மாதங்களில் சந்திராயன் 2 உள்ளிட்ட 9 ராக்கெட்களை விண்ணில் செலுத்த திட்டம்.

  • 8 மாதங்களில் சந்திராயன்-2 உள்ளிட்ட மேலும் 9 ராக்கெட்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டிருப்பதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.
  • இந்த ஆண்டில் அடுத்து வரும் 8 மாதங்களில் 9 ராக்கெட்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டிருக்கிறோம். அதில் 5.7 டன் எடை கொண்ட ஜிசாட்- 11 செயற்கைக் கோள், சந்திராயன்-2 , ஜிஎஸ்எல்வி மார்க்- 3 ராக்கெட் மூலம் ஜிசாட்- 29 செயற்கைக் கோள் உள்ளிட்டவற்றை அனுப்ப இருக்கிறோம். இஸ்ரோ வரலாற்றிலேயே முதல்முறையாக 6 டன் எடை கொண்ட செயற்கைக் கோளை அனுப்பவும் திட்டமிட்டுள்ளோம்.

வணிகசெய்திகள்

மேற்கு கடலோர எண்ணெய் சுத்திகரிப்பு 50% பங்குகளை: ஆரம்கோ நிறுவனத்துக்கு விற்க முடிவு

  • மேற்கு கடலோர எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தின் 50 சதவீத பங்குகளை, சவுதி அரேபியாவின் ஆரம்கோ நிறுவனத்துக்கு மத்திய அரசு அளிக்க உள்ளது. புதுடெல்லியில் நடைபெற்ற சர்வதேச எரிசக்தி மாநாட் டில் இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. கச்சா எண்ணெய் விநியோகம், தொழில்நுட்பம், வளங்களை பயன்படுத்துவது, அனுபவங்கள் மற்றும் ஆற்றலை பயன்படுத்திக் கொள்வது என்கிற வகையில் மேற்கு கடலோர எண் ணெய் சுத்திகரிப்பு திட்டத்தின் 50 சதவீத பங்குகளை சவுதி அரேபியாவை சேர்ந்த ஆரம்கோ நிறுவனத்துக்கு விற்கப்படுகிறது. தினசரி 12 லட்சம் பேரல் சுத்திரிக்க இந்த திட்டம் வழிவகுக்கும்.

இந்திய தொழிலக உற்பத்தி விகிதம் 7.1%-ஆக அதிகரிப்பு

  • இந்திய தொழிலக உற்பத்தி விகிதம் கடந்த ஆண்டு 1.2% ஆக காணப்பபட்டது.இந்த ஆண்டில் 7.1%ஆக உயர்ந்துள்ளது.மத்திய புள்ளியியல் அலுவலகம் இதனை வெளியிட்டுள்ளது

 விளையாட்டுசெய்திகள்

காமன்வெல்த் போட்டி – துப்பாக்கி சுடுதலில் அனிஷ் தங்கம் வென்றார்

  • மன்வெல்த் விளையாட்டு போட்டி துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் அனிஷ் பன்வாலா 15 வயதில் தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் குறைந்த வயதில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

காமன்வெல்த் போட்டி- மல்யுத்தத்தில் பஜ்ரங் பூனியாவுக்கு தங்கம்

  • ஆடவருக்கான மல்யுத்தத்தில் 65 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் பூனியா 10-0 என்ற கணக்கில் வேல்ஸ் நாட்டைச் சேர்ந்த கேன் சாரிக்கை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.

காமன்வெல்த் போட்டி- துப்பாக்கி சுடுதலில் மகளிர் பிரிவில் தேஜஸ்வினிக்கு தங்கம், அஞ்சும் மவுத்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார்

  • மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன்ஸ் பிரிவில் இந்தியாவின் தேஜஸ்வினி9 புள்ளிகள் குவித்து காமன்வெல்த் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார், அஞ்சும் மவுத்கில் 455.7 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

காமன்வெல்த் போட்டி- மல்யுத்தம்: பூஜா தண்டா வெள்ளிப் பதக்கம், திவ்யா கக்ரன் வெண்கலம்

  • மகளிருக்கான 57 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பூஜா தண்டா வெள்ளிப் பதக்கம் வென்றார், மகளிருக்கான 68 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் திவ்யா கக்ரன் 4-1 என்ற கணக்கில் வங்கதேசத்தின் ஷெரின் சுல்தானை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார்.

காமன்வெல்த் போட்டி- மல்யுத்தம்: மவுசம் கட்ரி வெள்ளிப் பதக்கம் வென்றார்

  • ஆடவருக்கான 97 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மவுசம் கட்ரி 2-12 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவின் மார்ட்டின் எராஸ்மஸிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.

காமன்வெல்த் போட்டி- டேபிள் டென்னிஸ்: மனிகா பத்ரா, மவுமா தாஸ் ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது.

  • மகளிருக்கான இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் மனிகா பத்ரா, மவுமா தாஸ் ஜோடி 5-11, 4-11, 5-11 என்ற நேர் செட்டில் சிங்கப்பூரின் பெங் டியான்வெய், மெங்க் யூ ஜோடியிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது.

காமன்வெல்த் போட்டியிலிருந்து 2 இந்திய வீரர்கள் வெளியேற்றம்

  • இந்தியாவின் தடகள வீரர்களான ராகேஷ் பாபு மற்றும் இர்பான் கொலாதும் ஆகியயோரது அறைகளில் ஊசிகள் கண்டெடுக்கப்பட்டதால் அவர்கள் இருவரும் காமன்வெல்த் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். காமன்வெல்த் போட்டியின் விதிமுறைகளை மீறியதன் காரணமாக இந்திய விளையாட்டு வீரர்கள் இருவர் போட்டிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!