நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 22, 2020

0
22nd February 2020 Current Affairs TAmil
22nd February 2020 Current Affairs TAmil

தேசிய செய்திகள்

புதுடில்லியில் இரண்டு நாள் சர்வதேச நீதி மாநாடு 2020 பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

புதுடில்லியில் உச்சநீதிமன்றம் ஏற்பாடு செய்துள்ள இரண்டு நாள் சர்வதேச நீதி மாநாடு 2020 ஐ பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தலைமை நீதிபதி சரத் போப்டே ஆகியோர் கலந்து கொண்டனர். பிரிட்டனின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ராபர்ட் ரீட் மாநாட்டில் சிறப்புரையாற்றுவார்.

2020 ஆம் ஆண்டிற்கான சர்வதேச நீதித்துறை மாநாட்டின் கருப்பொருள்  “நீதித்துறை மற்றும் மாறிவரும் உலகம்”.

ஏப்ரல் 1 முதல் இந்தியா உலகின் தூய்மையான டீசல் மற்றும் பெட்ரோலை வாகனங்களுக்கு  பயன்படுத்த உள்ளது

ஏப்ரல் 1, 2020 முதல், இந்தியா உலகின் தூய்மையான பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாறுகிறது, ஏனெனில் நாடு முழுவதும்  பாரத் ஸ்டேஜ் – IV வகுப்பிலிருந்து பாரத் ஸ்டேஜ்  – VI தரத்திற்கு மாற மத்திய அரசு அறிவுறித்தியுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஷியாமா பிரசாத் முகர்ஜி ரர்பன் மிஷனின் நான்காம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது

ஷியாமா முகர்ஜி ரர்பன் மிஷனின் நான்காம் ஆண்டு விழா 2020 பிப்ரவரி 21 அன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. இது பிப்ரவரி 21, 2016 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. உள்ளூர் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதையம் , நன்கு திட்டமிடப்பட்ட கிராம மற்றும் நகர்ப்புற பகுதிகளை உவுவாக்குவதே இதன் நோக்கமாகும்.

வடக்கு எல்லை ரயில் கட்டுமானத்தில் பிப்ரவரி 2020 அன்று மணிப்பூரில் இந்தியாவின் மிக உயரமான கப்பல் பாலம் கட்டப்பட்டுள்ளது

வடக்கு எல்லை ரயில்வே கட்டுமானம் இந்தியாவின் மிக உயரமான ரயில்வே கப்பல் பாலத்தை உருவாக்கியுள்ளது. இது மணிப்பூரின் தமெங்லாங் மாவட்டத்தில் மக்ரு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

பாலத்தின் கட்டமைப்புக்காக  மொத்தம் செலவிடப்பட்ட தொகை ரூ .283.5 கோடி ஆகும்.

மாநில செய்திகள்

ஹரியானா

அடல் கிசான் மஜ்தூர் உணவகங்களை  ஹரியானா அரசு அமைக்க உள்ளது

ஹரியானா அரசு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அடல் கிசான் – மஜ்தூர் உணவகங்களை திறக்க உள்ளது.

இது விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் ஒரு தட்டுக்கு 10 ரூபாய் சலுகை விலையில்  உணவை வழங்கும். இதுபோன்ற 25 கேன்டீன்கள் இந்த ஆண்டில்  நிறுவப்பட உள்ளது.

திரிபுரா

பாரத-பங்களா சுற்றுலா விழா திரிபுராவின் அகர்தலாவில் தொடங்கியது

திரிபுராவில், அகர்தலாவில் உள்ள உஜ்ஜயந்த அரண்மனை வளாகத்தில்  கண்கவர் கலாச்சார நிகழ்வுகளுடன் இரண்டு நாள் நீடித்த பாரத்-பங்களா பரியதன் உட்சவ்-சுற்றுலா விழா நடந்தது.

1971 பங்களாதேஷ் விடுதலைப் போரில் திரிபுராவின் பங்களிப்பு மற்றும் திரிபுரா சுற்றுலாத் துறைக்கு ஒரு ஊக்கத்தை அளித்ததன் நினைவாக மாநில சுற்றுலாத் துறை இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளது.

நியமனங்கள்

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அமர்ஜீத் சின்ஹா, பாஸ்கர் குல்பே பிரதமரின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டனர்

பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசகர்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அமர்ஜீத் சின்ஹா ​​மற்றும் பாஸ்கர் குல்பே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சரவையின் நியமனக் குழு, பிரதமர் அலுவலகத்தில் (பி.எம்.ஓ) நியமனங்கள் மற்றும் செயலாளர் பதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ரிசர்வ் வங்கி சுனில் குர்பாக்சனியை தன்லக்ஷ்மி வங்கியின்  நிர்வாக இயக்குநராகவும், நிர்வாக அதிகாரியாகவும் நியமித்தது

இந்திய ரிசர்வ் வங்கி சுனில் குர்பாக்சானியை தன்லக்ஷ்மி வங்கியின் நிர்வாக இயக்குநராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் 3 வருட காலத்திற்கு நியமித்தது.

இதற்கு முன்பாக சுனில் குர்பாக்சனி ஆக்ஸிஸ் வங்கியின் நிர்வாக துணைத் தலைவராக பணியாற்றினார்.

விருதுகள்

இந்திய ரயில்வே வாடிக்கையாளர் குறை களையும்  போர்டல் ஆனா “ரெயில்மடாட்” தேசிய இ-ஆளுமை விருதை பெற்றுள்ளது

இந்திய ரயில்வேயின் குறை தீர்க்கும் போர்டல் ரெய்ட்மடாட், தேசிய மின்-ஆளுமை விருதுகளின் பிரிவு II இன் கீழ் வெள்ளி விருது வென்றுள்ளது. மும்பையில் நடைபெற்ற மின்-ஆளுமை தொடர்பான 23 வது மாநாட்டில் இந்த விருது வழங்கப்பட்டது.

ரெயில்மடாட் என்பது அனைத்து ரயில்வே வாடிக்கையாளர்களுக்கும் குறை தீர்க்கும், விசாரணை மற்றும் உதவி வழங்கும் ஒரு தளம் ஆகும்.

ஒப்பந்தங்கள்

எச்டிஎப்சி வங்கி செலவு மேலாண்மை சேவைகளுக்கு மாஸ்டர்கார்டு மற்றும் SAP உடன் இணைகிறது

கார்ப்பரேட் துறைக்கு மேலாண்மை சேவைகளை வழங்க  எச்.டி.எஃப்.சி வங்கி மாஸ்டர்கார்டு மற்றும் SAP உடன்  இணைந்துள்ளது. வணிக பயணிகளுக்கான கார்ப்பரேட் கிரெடிட் கார்டு, வணிக பயணங்களின் போது பணம் செலுத்துதல் மற்றும் செலவு மேலாண்மைக்கு தீர்வு  வழங்குதல் போன்ற பல்வேறு சேவைகள் இந்த ஒப்பந்தத்தால் எச்.டி.எஃப்.சி வங்கியால் வழங்கப்படும்.

சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக குஜராத் ITDC உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

இந்தியா சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் (ITDC ) லிமிடெட் 2020 பிப்ரவரி 20 அன்று குஜராத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த நடவடிக்கை இந்தியாவில் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தும் முயற்சியாகும்.

சுற்றுலா ஆணையர் மற்றும் குஜராத்தின் சுற்றுலா கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர் ஜெனு தேவன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

இந்திய ரயில்வே தனது ஊழியர்களுக்காக HRMS மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியது

இந்திய ரயில்வேயின் நிர்வாக செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதற்காக, ரயில்வே வாரியத்தின் தலைவர் ஸ்ரீ வினோத் குமார் யாதவ், இந்திய ரயில்வேயின் அனைத்து ஊழியர்களுக்கும் HRMS மொபைல் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளார்.

HRMS ஊழியர் மொபைல் பயன்பாட்டை ரயில்வே தகவல் அமைப்பு மையம் (CRIS) வடிவமைத்து உருவாக்கியுள்ளது. ரயில்வேயில் இணைந்த நாளிலிருந்து ஊழியர்கள் தங்கள் வரலாற்றுத் தரவைப் பார்க்க இந்த பயன்பாடு உதவுகிறது.

விளையாட்டு செய்திகள்

பிரேசில் பாரா பேட்மிண்டன் சர்வதேச சாம்பியன்ஷிப்பில் இந்தியா 11 பதக்கங்களை வென்றது

பிரேசிலின் சாவ் பாலோவில் நடந்த பாரா பேட்மிண்டன் சர்வதேச சாம்பியன்ஷிப்பை 11 பதக்கங்களுடன் இந்தியா முடித்தது. அதில்  4 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்கள் உள்ளன.

இந்திய ஒற்றையர் பிரமோத் பகத் ஆண்கள் ஒற்றையர்  பிரிவில் தங்க பதக்கம் வென்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம், டோக்கியோ 2020 பாராலிம்பிக் போட்டிகளுக்கு அவர் தகுதி பெற்றார்.

மற்றொரு பிரிவில் சுஹாஸ் லாலினகேரே யதிராஜ் தங்கம் வென்றார்.

பிரக்யன் ஓஜா அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்

இந்திய இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரக்யன் ஓஜா சர்வதேச மற்றும் முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக உடனடியாக அறிவித்துள்ளார்..

2013 ஆம் ஆண்டில் அவர் இந்தியாவுக்காக தனது கடைசி போட்டியில் விளையாடினார்.

பிரக்யன் ஓஜா 24 டெஸ்ட், 18 ஒருநாள் மற்றும் 6 டி 20 போட்டிகளில் விளையாண்டு உள்ளார்.

Download PDF Here

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!