ஏப்ரல் 24 நடப்பு நிகழ்வுகள்

0

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்  – ஏப்ரல் 24

மாநிலம்

மத்திய பிரதேசம்

  • மத்தியப் பிரதேசத்தில் கிராமப்புறச் சாலைக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான 21 டாலர் கோடி கடன் ஒப்பந்தத்தில் மத்திய அரசும், உலக வங்கியும் கையெழுத்திட்டன.
  • மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீ்ழ் வரும் 10,510 கிலோமீட்டர் நீளச் சாலைகளில் இத்திட்டம் அமல்படுத்தப்படும்.

பதவியேற்பு

  • இரண்டாவது முறையாக வங்காள தேசத்தின் அதிபராக பதவியேற்றார் அப்துல் ஹமீத்

தேசியசெய்திகள்

ககன்சக்தி 2018

  • இந்திய விமானப்படை தனது அகில இந்திய அளவிலான ககன் சக்தி 2018 என்ற போர்ப் பயிற்சியை 2018 ஏப்ரல் 8-ந் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடத்தியது.
  • குறுகிய நேரத்தில் தீவிரப் போர் நிலைமையில் உண்மை நேர ஒருங்கிணைப்பு, படைகளை நிறுத்தி வைத்தல், விமானப்படைப் தாக்குதல் சக்தியைப் பயன்படுத்துதல் ஆகியன இந்தப் பயிற்சியின் நோக்கங்களாகும்.

ஆயுதப் படை சிறப்புச் சட்டம் வாபஸ்

  • மேகாலயா மாநிலத்திலிருந்து ஆயுதப் படை சிறப்புச் சட்டத்தை (ஏஎப்எஸ்பிஏ) வாபஸ் பெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
  • ஜம்மு-காஷ்மீர், மேகாலயா, அருணாச்சலபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆயுதப் படை சிறப்புச் சட்டம் அமலில் உள்ளது. இந்த நிலையில் மேகாலயா மாநிலத்தில் அமலில் இருந்த ஆயுதப் படை சிறப்புச் சட்டத்தை முழுவதுமாக வாபஸ் பெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது.

சர்வதேச செய்திகள்

சிங்கப்பூரில் கோயில் கும்பாபிஷேகம்: பிரதமர் பங்கேற்பு

  • சிங்கப்பூரில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் சீரமைப்புப் பணிகள் முடிந்ததையடுத்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பிரதமர் லீ சீன் லூங் பங்கேற்றார்.

சர்வதேச பெண் தலைமையாளர் விருது

  • வங்காளதேசம் நாட்டுப் பெண்கள் கல்வியிலும், தொழில் முனைவோராகவும் உயர்வதற்கு அரும்பணியாற்றிய ஷேக் ஹசினாவை வாழ்நாள் சேவையை கவுரவிக்கும் வகையில் வரும் 27-ம் தேதி நடைபெறும் சர்வதேச மகளிர் உச்சி மாநாட்டின்போது அவருக்கு சர்வதேச பெண் தலைமையாளர் விருது வழங்கப்படுகிறது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு

  • ஷாங்காய்ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் முதல்முறையாக இந்தியா பங்கேற்கிறது. 
  • ஷாங்காய்ஒத்துழைப்பு அமைப்பின் 15வது பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் சீனாவின் பீஜிங்கில் 24.04.2018 நடைபெற்றது.
  • ரஷ்யாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அமைதி முயற்சிகள், கூட்டு ராணுவ பயிற்சிகளில் இந்தியா பங்கேற்கும் என்றும் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.

வணிகசெய்திகள்

100 பில்லியன் டாலர் நிறுவனமானது டிசிஎஸ்

  • டாடா குழுமத்தின் அங்கமான சாஃப்ட்வேர் நிறுவனமான டாடா கன்சல்டன்சி நிறுவனம் (டிசிஎஸ்) நாட்டின் முதலாவது 100 பில்லியன் டாலர் நிறுவனம் என்ற பெருமையை எட்டியுள்ளது.

உலக வங்கி அறிக்கை : வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்புவதில் இந்தியா முதலிடம்

  • 2017-ம் ஆண்டில் இந்தியாவுக்கு வெளிநாடுகளில் பணி செய்யும் இந்தியர்கள் அனுப்பிவைத்த மொத்தத் தொகை 6,900 கோடி டாலர் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
  • இதன்மூலம் அதிக பணம் அனுப்பப்படும் நாடுகளில் முதல் இடத்தை இந்தியா தக்கவைத்துள்ளது.

 விளையாட்டுசெய்திகள்

விமானப்படை வீரர் எஸ்ஜிடி ஷாஸார் ரிஸ்வியி வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை

  • தென்கொரியாவில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக்கோப்பைப் போட்டிகளில் ஐஏஎஃப் (இந்திய விமானப்படை) துப்பாக்கிச்சுடும் குழுவைச் சேர்ந்த எஸ்ஜிடி ஷாஸார் ரிஸ்வி நாட்டுக்காக இன்று (24.04.2018) வெள்ளிப்பதக்கம் வென்றார்.
  • தனிநபர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் அவர் இந்தப் பதக்கத்தை வென்றார்.

ஒலிம்பிக், உலகக் கோப்பை தொடருக்கு தகுதி

  • 7-வது முறையாக கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் மகளிர் அணி 2019-ம் ஆண்டு பிரான்சில் நடைபெறும் உலகக் கோப்பை மற்றும் 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற்றது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!