ஏப்ரல் 27 நடப்பு நிகழ்வுகள்

0

ஏப்ரல் 27: உலக கிராபிக்ஸ் தினம்

  • ஏப்ரல் 27, 2018 ஆம் ஆண்டு உலக கிராபிக்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது . 1963 ஏப்ரல் 27 அன்று நிறுவப்பட்ட சர்வதேச கவுன்சில் கிராஃபிக் டிசைன் அசோசியேசனால் இந்த தினம் முதன் முதலில் அனுசரிக்கப்பட்டது . உலக கிராபிக்ஸ் தினம் – உலக கிராபிக் டிசைன் தினம் என்றும் அழைக்கப்படுகிறது.

மாநிலசெய்திகள்

தமிழகம்

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் 3 ஆண்டுகளாக தமிழகத்துக்கு முதலிடம்

  • உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் கடந்த 3 ஆண்டுகளாக தமிழகம் தேசிய அளவில் முதலிடம் வகிக்கிறது. இரு கைகளையும் இழந்த திண்டுக்கல் ஆத்தூரைச் சேர்ந்த நாராயணசாமிக்கு, இறந்த ஒருவரின் கைகளை பொருத்தி, அவர் பயன்படுத்தும் நிலையில் உள்ளார். நாட்டில் முதல்முறையாக அரசு மருத்துவமனையில் இரு கைகளையும் பொருத்தி வெற்றி கண்ட மாநிலம் தமிழகம்.

மேற்கு வங்காளம்

மேற்கு வங்கத்தில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.2

  • மேற்கு வங்க மாநிலத்தில் தக்‌ஷின் தினஜ்பூர் மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில்2 ஆக பதிவாகியுள்ளது.

சத்தீஸ்கர்

வனதன் திட்டம்

  • மத்தியப் பழங்குடியினர் நலன் அமைச்சகமும் இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவுச் சந்தை மேம்பாட்டு இணையமும் இணைந்து மேற்கொள்ளும் வனதன் திட்டத்தைப் பிரதம மந்திரி சத்தீஸ்கர் மாநிலம், பீஜப்பூரில் தொடங்கிவைத்தார்.
  • வனச் செல்வத் திட்டம், மக்கள் நிதித் திட்டம், பசுவளர்ப்புத் திட்டம் ஆகிய திட்டங்கள் பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குப் பெரிதும் உதவும்.

தேசியசெய்திகள்

ரயில்வே: 2020-க்குள் ஆளில்லா கடவுப்பாதைகள் அகற்றப்படும்

  • 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அணைத்து ஆளில்லா கடவுப் பாதைகளும் அகற்றப்படும் என ரயில்வே வாரியத் தலைவர் அஸ்வினி லோஹானி கூறியுள்ளார்.

விருதுகள்

என்.எஸ்.சி.ஐ. பாதுகாப்பு விருதுகள் 2017

  • தேசிய பாதுகாப்பு கவுன்சில், தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றில் மிக உயர்ந்த தேசிய அளவிலான விருதுகளை வழங்குகின்றன. சிறந்த பாதுகாப்பு முகாமைத்துவ முறைமை மற்றும் உற்பத்தி, கட்டுமானம் மற்றும் MSME பிரிவில் உள்ள நிறுவனங்களின் சிறந்த பாதுகாப்பு மற்றும் சுகாதார செயல்திறன் ஆகியவற்றிற்கு அங்கீகாரம் அளிக்கப்படுகின்றன
  • சர்வ சிரேஷ்டா சுரக்ஷா புரஸ்கார், சிரேஷ்ட சுரக்ஷா புரஸ்கார், சுரக்ஷா புரஸ்கார் மற்றும் பிரசான்ஷா பத்ரா என நான்கு பிரிவுகளில் மொத்தம் 70 நிறுவனங்களுக்கு விருதுகள் அளிக்கப்பட்டன.

சர்வதேசசெய்திகள்

தென்கொரிய தலைவர்கள் உச்சி மாநாடு

  • வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட, தென்கொரிய தலைவர்கள் உச்சி மாநாடு, இரு நாடுகளின் எல்லையையொட்டி தென்கொரிய பகுதியில் உள்ள பன்முஞ்சோமில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நடக்கிறது.
  • வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னும், தென் கொரியாவின் அதிபர் மூன் ஜே இன்னும் உச்சி மாநாட்டில் சந்தித்துப் பேசுவதை அமெரிக்காவும் ஆதரித்து வருகிறது.

வணிகசெய்திகள்

2017-18-ம் ஆண்டில் அரசுக்கு ஜிஎஸ்டி வருமானம் ரூ. 7.41 லட்சம் கோடி

  • சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மூலம் 2017-18-ம் ஆண்டில் அரசுக்கு ரூ. 7.41 லட்சம் கோடி வருவாய் வந்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. ஆகஸ்ட் முதல் மார்ச் 2018 வரையான காலத்தில் ரூ. 7.19 லட்சம் கோடி வருவாய் வந்துள்ளது. ஜூலை மாதத்தில் வசூலான தொகையையும் சேர்த்தால் அரசுக்கு ரூ. 7.41 லட்சம் கோடி வந்துள்ளது என்று நிதி அமைச்சகம் ட்விட்டரில் தகவல் வெளியிட்டுள்ளது.

விளையாட்டுசெய்திகள்

ஐசிசி நம்பிக்கை: 2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறும்

  • அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நம்பிக்கை தெரிவித்துள்ளது.ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டைச் சேர்க்க ஐசிசி தீவிரமாக முயன்று வருகிறது. அதற்கான நடவடிக்கைகளை வேகமாக எடுத்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளது.

PDF Download

முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 27 2018 காண இங்கே கிளிக் செய்யவும் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!