ஏப்ரல் 18 நடப்பு நிகழ்வுகள்

0

மாநிலசெய்திகள்

தெலுங்கானா

700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு மருத்துவ சிகிச்சை

  • தெலுங்கானா மாநிலம் மெகபூபாநகர் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க 700 ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ளது.  இந்த ஆலமரம் 3 ஏக்கர் பரப்பளவிற்கு பரந்து விரிந்துள்ளது. அதன் ஒரு கிளை மரத்தில் பூச்சுத்தொற்று காணப்பட்டது. இது மற்ற பகுதிக்கு பரவினால் மரம் பட்டுப்போய்விடும் அபாயத்தில் இருப்பதால் அதற்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

தேசியசெய்திகள்

எம்.எஸ்.எம்.இ: வடக்கிழக்கு பகுதிக்கான நான்கு தொழில்நுட்ப மையங்கள்

  • வடகிழக்குபகுதிகளில் விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத துறைகளில்குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உடனடியாக அமைக்க வேண்டிய தேவை உள்ளது,இதற்கு எம்.எஸ்.எம்.இ அமைச்சகம் ஊக்குவிப்பாளராக இருந்து ஆய்வு மற்றும் மேம்பாட்டு வசதிகளை அளித்து, சந்தைக்கு வழிவகுத்து, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு நல்ல வடிவங்களை அளிக்கும். மேலும் இந்தப் பகுதிகளில் குறு நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
  • இதற்காக இம்பால், திமாபூர், தின்சுகியா மற்றும் அகர்தலாவில் தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்பட்டுவருகின்றன என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது

இந்தியாவிற்கும் நார்டிக் நாடுகளுக்கும் இடையேயான உச்சி மாநாடுகளுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டுச் செய்தி அறிக்கை

  • இந்த மாநாடு ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெற்றது, வளத்திற்கும் நிலைத்த மேம்பாட்டுக்கும் புதுமைப்படைப்பு டிஜிட்டல் திட்டங்கள் ஆகியன மிகவும் முக்கியமானவை என்ற இந்திய அரசின் வலுவான உறுதிப்பாடு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த “இந்தியாவில் தயாரிப்போம்”, “தொடங்கியது இந்தியா”, “டிஜிட்டல் இந்தியா”, “தூய்மை இந்தியா” திட்டங்களில் காணக் கிடக்கிறது என்று இந்த உச்சிமாநாடு வலியுறுத்தியது.
  • தூய்மைத் தொழில்நுட்பங்கள், கடல்சார் தீர்வுகள், துறைமுக நவீனமயமாக்கல், உணவுப் பதனீடு, சுகாதாரம், உயிரி அறிவியல், வேளாண்மை ஆகியவற்றில் நார்டிக் நாடுகளின் தீர்வுகள் மாநாட்டில் குறிப்பிடப்பட்டன. இந்திய அரசின் அதிநவீன நகரங்கள் திட்டத்திற்கு நார்டிக் நாடுகளின் நிலையான நகரங்கள் திட்டம் ஆதரவளிக்கும் நோக்கம் கொண்டது என்பதை உச்சிமாநாடு வரவேற்றது.

குறிப்பிற்கு: டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே மற்றும் ஸ்வீடன் ஆகியவைகள் நார்டிக் நாடுகளாகும்

 உலக பாரம்பரிய தினம் – இந்தியாவில் 36 பாரம்பரிய தளங்கள்

  • ஏப்ரல் 18 ம் தேதி உலக பாரம்பரிய தினமாக (World Heritage Day) அறிவிக்கப்பட்டுள்ளது. 1982 ஆம் ஆண்டு துனிசியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் ஏப்ரல் 18ஆம் நாள் சர்வதேச நினைவிடங்கள் (International Day for Monuments and Sites) தினமாக கொண்டாட பரிந்துரைத்தது. அடுத்த ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் இதனை அங்கீகரித்தது. இதுவே பின்னாளில் உலக பாரம்பரிய தினமாக மாறியது.
  • இந்தியாவில் 36 தளங்கள் பாரம்பரிய தளங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருதுகோளை மையமாக கொண்டு பாரம்பரிய தினம் கொண்டாடப்படும். அதே போல் இந்த ஆண்டு தலைமுறைகளுக்கான பாரம்பரியம் என்ற கருதுகோளின் அடிப்படையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியாவிலுள்ள உலக பாரம்பரியக் களங்களின்பட்டியலை காண இங்கே கிளிக் செய்யவும்

சர்வதேசசெய்திகள்

சவுதி அரேபியா:12 துறைகளில் வெளிநாட்டவர்கள் பணியாற்ற தடை

  • சவுதி அரேபியா தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் அலி அல் கபீஸ், அடுத்த ஹிஜ்ரி (Hijri) ஆண்டின் துவக்கத்தில் இருந்து 12 துறைகளில் வெளிநாட்டுப் பணியாளர்கள் பணிபுரிய அல்லது தொழில் செய்யத் தடை விதிப்பதாக இந்த அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

 வெளிநாட்டவருக்குத் தடைசெய்யப்பட்ட 12 வேலைகள் பின்வருமாறு. கடிகாரக் கடைகள், கண்ணாடிக் கடைகள், மருத்துவ உபகரணக் கடைகள், மின்னணு மற்றும் மின்னியல் சாதன கடைகள், கார் உதிரபாகங்கள் விற்கும் கடைகள், கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள், தரைவிரிப்பான்கள் விற்கும் கடைகள், ஆட்டோமொபைல் மற்றும் மொபைல் கடைகள், வீடு மற்றும் அலுவலக உபயோகப்பொருட்களின் கடைகள், ரெடிமேட் ஆடையகங்கள், குழந்தைகள் மற்றும் ஆடவர் துணிக்கடைகள், வீட்டு பாத்திரக்கடைகள் மற்றும் பேக்கரிகள்

விஞ்ஞான செய்திகள்

எச்..வி கிருமிக்கு விரைவில் தடுப்பூசிஇறுதிகட்டத்தில் விஞ்ஞானிகள்

  • ஒரு புதிய ஆய்வின் மூலம் எச்.ஐ.வி நோய்த்தொற்றிற்கு  ஒரு நீண்ட கால  தடுப்பூசி கண்டு பிடிக்கும் முயற்சியின் இறுதி கட்டத்தில்  விஞ்ஞானிகள் உள்ளனர். ஒரு ஊசி  சோதனைக்கு பயன்படுத்தபட்ட குரங்கை  எச்.ஐ.வி  நோய்க்கிருமியில் இருந்து 18 வாரங்கள் பாதுகாக்கிறது.

 வணிகசெய்திகள்

வங்கிகளின் வாராக்கடன் அளவை ரூ.100 கோடியாக குறைக்க முடிவு

  • அரசு வங்கிகளின் வாராக்கடன் அளவை ரூ. 100 கோடியாகக் குறைக்க திட்டமிட்டுள்ளது. வங்கிகள் மேற்கொள்ளும் கடன் சீரமைப்பு திட்டங்களில் மாற்றங்களைக் கொண்டு வரப்பட்டது. இதன்படி ரூ. 2 ஆயிரம் கோடிக்கு மேலான கடன்களை வாராக்கடன் (என்பிஏ) பட்டியலில் சேர்க்குமாறு வலியுறுத்தியது. அத்துடன் 180 நாள்களுக்குள் இந்தக் கடன்கள் மீது திவால் மசோதா நடைமுறையை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டது.

விளையாட்டுசெய்திகள்

தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் பி.சி.சி. : சட்ட ஆணையம்

அரசின் கீழ் செயல்படும் மற்ற வாரியங்களை போல, பிசிசிஐ.யும் கருத வேண்டும். எனவே, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அந்த அமைப்பை கொண்டு வர வேண்டும் என சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள், 2018ல் இராணுவ வீரர்களின் பங்கு

  • காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நம் நாட்டுக்குப் பெருமை தேடித்தந்த இந்திய அணியில் இராணுவ விளையாட்டு வீரர்களும் பங்கு வகித்தனர். அவர்களின் பட்டியல் பின்வருமாறு;
  • சுபேதார் ஜித்து ராய் – தங்கப் பதக்கம் (துப்பாக்கி சுடுதல்)
  • ஹவில்தார் ஓம் பிரகாஷ் மிதர்வால் – இரண்டு வெண்கலப் பதக்கம் (துப்பாக்கி சுடுதல்)
  • சுபேதார் சதிஷ் குமார் – வெள்ளிப் பதக்கம் (குத்துச் சண்டை)
  •  நாயிப் சுபேதார் அமித் குமார் – வெள்ளிப் பதக்கம் (குத்துச் சண்டை)
  • நாயிப் சுபேதார் முகமது ஹசூமுதின் – வெண்கலப் பதக்கம் (குத்துச் சண்டை)
  • நாயிப் சுபேதார் மனிஷ் கவுஷிக் – வெள்ளிப் பதக்கம் (குத்துச் சண்டை)
  • ஹவில்தார் கவ்ரவ் சோலங்கி – தங்கப் பதக்கம் (குத்துச் சண்டை)
  • நாயிப் சுபேதார் நீரஜ் சோப்ரா – தங்கப் பதக்கம் (ஈட்டி எறிதல்)
  • நாயிப் சுபேதார் தீபக் லாதேர் – வெண்கலப் பதக்கம் (பளு தூக்குதல்)

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!