ஏப்ரல் 17 நடப்பு நிகழ்வுகள்

0

மாநிலசெய்திகள்

தமிழ்நாடு

தோடர்களின் எம்பிராய்டரிக்கு புவிசார் குறியீடு

  • நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தோடரின மக்களின் பாரம்பரிய தையல் வேலைப்பாடான எம்பிராய்டரிக்கு புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது.
  • பருத்தியிலான வெண்ணிற ஆடையில் சிவப்பு, கருப்பு நிற நூலால், உடலில் பச்சை குத்துவதுபோல, அதே வடிவமைப்பில் பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்.

மேற்கு வங்காளம்

இரண்டாம் உலகப்போர் காலத்து குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.      

மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டத்தில் குளம் தோண்டுகையில் கண்டெடுக்கப்பட்ட குண்டுகள் இரண்டாம் உலகப்போர் காலத்து குண்டுகள் எனவும், அவைகள் 50 இன்ச் நீளமும், 38 இன்ச் விட்டமும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசியசெய்திகள்

பாரதீப், எண்ணூர், தூத்துக்குடி துறைமுகங்கள் கடல்நீரைக் குடிநீராக்குவதிலும் மறுசுழற்சி செய்வதிலும் முன்னோடியாகத் திகழும்

  • சவ்வூடு பரவுதல் (ஆர்.ஓ) முறையில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்துவது என்றும், அதன்மூலம் சில துறைமுகங்களில் தற்போது தண்ணீருக்குச் செலவழிக்கப்படும் தொகையைவிட குறைந்த செலவில் தண்ணீரைப் பெறமுடியும் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டது. அனைத்துத் துறைமுகங்களிலும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களை உடனடியாக அமைக்க திரு. நிதின் கட்கரி உத்தரவிட்டுள்ளார்.

எரிசக்தி குறித்த ராஜீய உத்தி: இந்திய – அமெரிக்க கூட்டு அறிக்கை

  • கூட்டாண்மையின்படி நான்கு முக்கியமான விஷயங்களில் ஒத்துழைப்பு தொடரும்: 1) எண்ணெய் மற்றும் எரிவாயு, 2) மின்சாரம் மற்றும் எரிசக்தித் திறன், 3) புதுப்பிக்கத் தக்க எரிசக்தி மற்றும் நீடித்த வளர்ச்சி, 4) நிலக்கரி.
  • கூட்டாண்மையின் மூலம் அமெரிக்காவும் இந்தியாவும் சேர்ந்து எரிசக்திப் பாதுகாப்பு, எரிசக்தி விரிவாக்கம், அனைத்து மின்சக்தி நிறுவனங்களிலும் புதுமையைக் கடைப்பிடித்தல், இரு தரப்பு ராஜீய உத்தியை உயர்த்திப் பிடித்தல், தொழில்களுக்கு உரிய வசதியை அளித்தல் ஆகியவை மேம்படும்.

சிறு, குறு, நடுத்தரத் தொழில் ஏற்றுமதியாளர்களுக்கான டிஜிட்டல் தளம்

  • மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு சிறு, குறு, நடுத்தரத் தொழில் ஏற்றுமதியாளர்கள் தங்களது வர்த்தகத்தைப் பதிவேற்றவும் வளர்ந்துவரும் உலகளாவிய தொழிலில் ஈடுபட உதவும் வகையிலுமான புதிய டிஜிட்டல் தளத்தைத் (FIEOGlobalLinker) புது தில்லியில் தொடங்கிவைத்தார்.

தர்பன்பி எல் ஐ(போஸ்டல் லைப் இன்சூரன்ஸ் ) செயலி

  • இந்தியாவின் எந்தப் பகுதியில் உள்ள கிளை அஞ்சல் அலுவலகங்களிலும் காப்பீட்டுப் பாலிசிகளை இணையம் வழி புதுப்பித்தலுடன் பி.எல்.ஐ, ஆர்.பி.எல்.ஐபாலிசிகளுக்கான பிரீமியம் தொகையை செலுத்த உதவிடும் தர்பன்-பி.எல்.ஐ செயலியை மத்திய தகவல் தொடர்புத்துறை  அமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா தொடங்கிவைத்தார்.
  • இந்தச் செயலி தொடங்கப்பட்டிருப்பதன் மூலம் பி.எல்.ஐ, ஆர்.பி.எல்.ஐ பாலிசிகளின் முதிர்ச்சி உரிமைகளைக் கிளை அஞ்சல் அலுவலகம் அளவிலேயே அட்டவணைப்படுத்த முடியும். அதன் வழியாக மேலும் விவரங்களுக்கான வேண்டுகோள் எண் காப்பீட்டுதாரர்களுக்கு உடனடியாக வழங்கப்படும்.

காரக்பூர் ஐஐடி நிறுவனம்: சிந்து சமவெளி நாகரீக மக்கள் கடும் வறட்சி காரணமாக புலம் பெயர்ந்திருக்கலாம்

  • 4,300 ஆண்டுகளுக்கு முன் சிந்து சமவெளி நாகரீக காலத்தில் கடும் வறட்சி நிலவியது தெரிய வந்துள்ளது. பல ஆண்டுகள் நிலவிய இந்த வறட்சியால் மக்கள் கூட்டம், சிந்து நதி கரை பகுதியை விட்டு கங்கை நதி கரைப்பகுதிக்கு புலம் பெயர்ந்ததாக கூறப்படுகிறது. கடந்த 5 ஆயிரம் ஆண்டு காலங்களில் நிலவிய காலநிலை குறித்தும், அதனால் பூமியில் இருந்த தண்ணீரின் அளவு குறித்து காரக்பூர் ஐஐடி நிறுவனத்தின் நிலவியல் மற்றும் நில இயற்பியல் துறை பேராசிரியர்கள் உறுதி செய்து இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.

பதவியேற்புகள்

என் சி சி தலைமை இயக்குநர் நியமனம்

  • உலகின் மிகப்பெரிய சீருடை அணிந்த இளைஞர் அமைப்பான தேசிய மாணவர் படையின் தலைமை இயக்குநராக லெப்டினன்ட் ஜெனரல் பி பி மல்ஹோத்ரா பொறுப்பேற்றார்.

சர்வதேசசெய்திகள்

பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்கும் பாக்டீரியா

  • ஜப்பான் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சில ஆண்டுகளுக்கு முன் புதிய பாக்டீரியா ஒன்றை கண்டுபிடித்தனர். இண்டோனெல்லா சகைஎன்சிஸ் என்ற இந்த பாக்டீரியா பிளாஸ்டிக் செய்ய பயன்படுத்தப்பட்ட பாலிஎத்திலீன் டெராபைத்லேட்டை அழிக்கும் திறன் கொண்டது.
  • இந்த என்சைம்களை பிளாஸ்டிக் மறுசுழற்சியில் பயன்படுத்த உள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளார்கள் தெரிவித்து உள்ளனர். இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசு குறைக்கப்படும். என்சைம்களில் மேலும் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட உள்ளன.

 விஞ்ஞான செய்திகள்

2018-ம் ஆண்டில் சந்திராயண்-2 உட்பட 12 மாதங்களில் 12 திட்டங்கள்

  • மிகப்பெரிய செயற்கைக் கோள் வகைகளான இன்சாட் வகை செயற்கைக்கோள்களை இஸ்ரோ, பிரான்ஸிலுள்ள ஏரியன் ராக்கெட் நிறுவனம் மூலம் விண்வெளியில் செலுத்தி வருகிறது. இவை அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களாகும். அதே நேரத்தில் குறைந்த எடைகொண்ட ஜிசாட் வகை செயற்கைக்கோள்களை ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து இஸ்ரோ செலுத்தி வருகிறது.
  • சந்திராயண்-2 திட்டத்தில் ராக்கெட், நிலவில் இறங்கும் விண்கலம்(ஆர்பிட்டர்), நிலவில் இறங்கி சுற்றி வரும் வாகனம்(ரோவர்) ஆகியவை இருக்கும். நிலவின் சுற்றுவட்டப் பாதையை, சந்திராயண்-2 விண்கலம் அடைந்தவுடன் அதிலிருந்து ஆர்பிட்டர் பிரியும். அதிலிருந்து 6 சக்கரங்கள் கொண்ட ரோவர், நிலவில் இறங்கி ஆராய்ச்சி மேற்கொள்ளும். சந்திராயண்-2 விண்கலமானது, ஜிஎஸ்எல்வி-எப்10 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும்.

இஸ்ரோ: ஐஆர்என்எஸ்எஸ்-1ஐ செயற்கைக்கோள் வெற்றிகரமாக இறுதி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தம்

  • நிர்ணயித்தபடி 19-வது நிமிடத்தில் செயற்கைக்கோள் ராக்கெட்டிலிருந்து விலகியது. அந்த செயற்கைக்கோளை நிர்ணயிக்கப்பட்ட புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தும் பணிகளைக் கடந்த சில நாட்களாக இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். இறுதி மற்றும் 4-வது புவி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டுவிட்டதாக இஸ்ரோ தனது இணையதளத்தில் பதிவிட்டுள்ளது. விரைவில் மற்ற 6செயற்கைக்கோள்களுடன் இணைந்து ஐஆர்என்எஸ்எஸ்- 1ஐ செயற்கைக்கோளும் தனது பணிகளைத் தொடங்கும்.

நாசாவின் புதிய விண்கலத்தை விண்ணில் செலுத்துவதில் தாமதம்

  • நாசா சூரியனுக்கு அப்பால் உள்ள பூமி போன்று வாழ தகுதியுடைய புதிய கிரகங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ‘டி.இ.எஸ்.எஸ்.’ என்ற புதிய விண்கலத்தை உருவாக்கியுள்ளது. ‘வாஷிங் மெஷின்’ அளவுள்ள இந்த விண்கலத்தில் அதிசக்தி வாய்ந்த டெலஸ்கோப் மற்றும் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.ஒருசில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக அந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

வணிகசெய்திகள்

உலக வங்கி : இந்தியா 7.3 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டும்

  • உலக வங்கி இந்திய பொருளாதாரம் பணமதிப்பிழப்பு  மற்றும் சரக்குகள் மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) ஆகியவற்றின் விளைவுகளிலிருந்து மீண்டது  என்றும் 2018 ஆம் ஆண்டில் நாட்டின் வளர்ச்சி விகிதம்3 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளது.மேலும், 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் இந்தியாவின்  7.5 சதவிகிதம் வளர்ச்சி விகிதமாக இருக்கும் என உலக வங்கி  தெரிவித்துள்ளது.

விளையாட்டுசெய்திகள்

பிரிமியர் லீக் கால்பந்து பட்டத்தை வென்றது மான்செஸ்டர் சிட்டி

  • இங்கிலீஷ் கால்பந்து லீக் என்று அழைக்கப்படும் ப்ரீமியர் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி வெற்றி பெற்றுள்ளது.

டென்னிஸ் தரவரிசைப் பட்டியல்: யுகி பாம்ப்ரி 83 ஆவது இடம்

  • ஆண்கள் ஒற்றையர் டென்னிஸ் தரவரிசை பிரிவில் யுகி பாம்ப்ரி 83 இடத்தை பெற்றுள்ளார்

 PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!