ஏப்ரல் 16 நடப்பு நிகழ்வுகள்

0

மாநிலசெய்திகள்

தெலுங்கானா

கிளிமஞ்சாரோ மலையில் ஏறி ஐதராபாத் சிறுவன் சாதனை

  • ஐதராபாத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன் சமன்யூ பெத்துராஜு, ஆப்பிரிக்காவின் மிக உயரமான கிளிமஞ்சாரோ மலையில் ஏறி சாதனை படைத்துள்ளான்.

கேரளம்          

சைபர் காவல் நிலையங்கள்

  • இணையதள குற்றங்கள் அதிகரித்து வருவதால், கேரளாவில் மூன்று இடங்களில் சைபர் காவல் நிலையங்கள் அமைப்பதென கேரள அரசு முடிவு செய்துள்ளது. இணையதளக் குற்றங்களை தடுக்கவும், அதன்மீதான உடனுக்குடனான விசாரணையை உறுதி செய்வதற்காக சிறப்புப் பிரிவு உருவாக்கப்படுகிறது. ஒரு இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 18 காவல்துறையினரை கொண்டு இந்த சைபர் காவல்நிலையம் அமைக்கப்படும்.

தேசியசெய்திகள்

சரக்குப் போக்குவரத்து மையமாக கோவா மேம்படுத்தப்படும்சுரேஷ் பிரபு

  • மாநில அரசு மற்றும் தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் கோவாவை சுற்றுலாவுக்கு முக்கிய இடமாகவும், போக்குவரத்து மையமாகவும் மேம்படுத்த மத்திய அரசு செயலாற்றி வருகிறது என்று சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

மேகாலயா மக்கள் சமூகம் தலைமையேற்கும் நில நிர்வாகத் திட்டம்

  • மேகாலயா மக்கள் சமூகம் தலைமையேற்கும் நில நிர்வாகத் திட்டத்திற்கு”  48 மில்லியன் அமெரிக்க டாலர் ஐ.பி.ஆர்.டி(IBRD) கடன் ஒப்பந்தத்தில் உலக வங்கியுடன் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
  • மேகாலயா மாநிலத்தின் தெரிவு செய்யப்பட்ட நிலப் பகுதிகளில் மக்கள் தலைமையேற்கும் நில நிர்வாகத்தை வலுப்படுத்துவது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டம் மூன்று அம்சங்களைக் கொண்டுள்ளது. (i) இயற்கை வள மேலாண்மைக்கான அறிவையும், திறனையும் வலுப்படுத்துவது, (ii)  மக்கள் தலைமையேற்கும் நிலப் பகுதித் திட்டமிடலும், அமலாக்கமும், (iii) திட்ட நிர்வாகம் மற்றும் ஆளுகை.

வன்கொடுமை தடுப்பு சட்டம் – அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை

  • மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சுபாஷ் காசிநாத் மகாஜன் என்ற ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர், தன்மீதான எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்ட நடவடிக்கையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு செய்திருந்தார். அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதன்படி அவசர சட்டம் கொண்டுவர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

விருதுகள்

அரவிந்தன் நினைவு இலக்கிய பரிசு

  • காக்கைச் சிறகினிலே இதழின் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவாக ஆண்டுதோறும் இலக்கியப் பரிசுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ‘உலகத் தமிழ்க் குறுநாவல் போட்டி-2018
  • அண்டனூர் சுரா எழுதிய ‘கொங்கை’ குறுநாவல் முதலிடத்தையும், சோ.தர்மன் எழுதிய ‘மைதானம்’ இரண்டாம் இடத்தையும், மோனிகா மாறன் எழுதிய ‘குரவை மீன்கள் புதைந்த சேறு’ மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.’

சர்வதேசசெய்திகள்

இங்கிலாந்து, ஸ்வீடன் நாடுகளுக்கு பிரதமர் 5 நாள் பயணம்

  • இங்கிலாந்து, ஸ்வீடன் நாடுகளுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், மாசில்லா எரிசக்தி ஆகியவற்றில் ஒத்துழைப்புடன் செயல்படவும் இந்தப் பயணத்தில் திட்டமிடப்படும். ஸ்டாக்ஹோமில் நடக்கும் இந்தியா-நார்டிக் மாநாட்டில் பின்லாந்து, நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து ஆகிய நாடுகளின் பிரதமர்கள், மோடியோடு இணைந்து பங்கேற்கின்றனர்.

 ஸ்வீடன்

தலைநகரம் மற்றும் பெரிய நகரம்         – ஸ்டாக்ஹோம்

பிரதமர்                                     –ஸ்டீபன் லோபென்

மன்னர்                                      –கார்ல் பதினாறாம் குஸ்தாஃப்

நாணயம்                                   –   குரோணர்

 காமன்வெல்த் இளம் தூதராக இளவரசர் ஹாரி நியமனம்

  • காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு லண்டன் நகரில் ஏப்ரல் 16 முதல் 20 வரை நடக்க உள்ளது. இந்நிலையில், இந்த கூட்டமைப்பின் இளம் தூதராக இளவரசர் ஹாரியை ராணி எலிசபெத் நியமித்துள்ளார்.

இந்தோனேசியாவில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

  • இந்தோனேசியாவில் இன்று அதிகாலை9 ரிக்டர் அளவுகோலில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விஞ்ஞான செய்திகள்

கிராமப்புறங்களில் அதிவேக இணையதள வசதிக்காக ஜிசாட்-29 செயற்கைகோள்

  • கிராமப்புறங்களில் அதிவேக இணையதள வசதிக்காக ஜிசாட்-29 செயற்கைகோள் விரைவில் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.
  • ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 மூலம் ஜிசாட்- 29 செயற்கைகோள் மூலம் அதிவேக இணையதள வசதி கிடைக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் அதிவேக இணையதள வசதி அதிக அளவு கிடைக்கும்.

 வணிகசெய்திகள்

பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி தாக்கத்தில் இருந்து இந்தியா மீண்டு விட்டது: உலக வங்கி அறிக்கை

  • நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், பொருளாதாரத்தில் பெரிய பாதிப்புகளையும் ஏற்படுத்திய பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவற்றின் தாக்கத்தில் இருந்து இந்தியா மீண்டுவிட்டது என்று உலக வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது. இதனால், நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி3 சதவீதமாகவும், 2019-ம் ஆண்டில் 7.5 சதவீதமாகவும் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

விளையாட்டுசெய்திகள்

உலக டென்னிஸ் :ரபெல் நடால், சிமோனா ஹாலெப் தொடர்ந்து முதலிடம்

  • உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கின்றனர்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நிறைவு

  • ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 4-ம் தேதி தொடங்கின. நேற்று கோலாகலமான கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா நடைபெற்றது.
  • பதக்கப் பட்டியலில் ஆஸ்திரேலியா 80 தங்கம், 59 வெள்ளி, 59 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது. இங்கிலாந்து 45 தங்கம், 45 வெள்ளி, 46 வெண்கலப் பதக்கங்களுடன் 2-ம் இடத்தைப் பெற்றது. இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்களுடன் 3-வது இடத்தை வசப்படுத்தியது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!