நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 29 2018

0
322

நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 29 2018

முக்கியமான நாட்கள்

ஆகஸ்ட் 29 – தேசிய விளையாட்டு தினம்

 • தயான் சந்த் பிறந்த நாளை தேசிய விளையாட்டு தினமாக வருடந்தோறும் ஆகஸ்ட் 29 அன்று கொண்டாடுகிறோம். இந்தியாவுக்கு 1928, 1932, 1936 என தொடர்ந்து மூன்று ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தந்தவர் தயான் சந்த்.

தேசிய செய்திகள்

ஆந்திரப் பிரதேசம்

அலிபா கிளவுட் ஹைடெக் தீர்வுகளை ஆந்திராவுக்கு வழங்குகிறது

 • ஸ்மார்ட் நகரம் மற்றும் ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை, சிறிய மற்றும் நடுத்தர தொழில் மற்றும் திறன் மேம்படுத்துதல் போன்ற பல்வேறு துறைகளின் பரிவர்த்தனைக்காக அலிபாபா கிளவுட் இந்தியா (ஏசிஐ) A.P- பொருளாதார அபிவிருத்தி வாரியத்துடன் (AP-EDB) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

கர்நாடகம்

செப்டம்பர் 1 ம் தேதி இந்திய அஞ்சலக பணப்பட்டுவாடா வங்கி தொடங்கவுள்ளது

 • இந்தியா அஞ்சல்துறையின் துணை நிறுவனமான இந்திய அஞ்சலக பணப்பட்டுவாடா வங்கி செப்டம்பர் 1 முதல் தக்ஷிண கன்னடத்தில் தொடங்கவுள்ளது

தெலுங்கானா

கலேஸ்வரம் திட்டம்: 400 கிலோவாட் ஜி..எஸ் துணை நிலையம் கட்டப்பட்டது

 • பெடப்பள்ளி மாவட்டத்தில் நந்தி மேடாரில் கலேஸ்வரம் திட்டத்தின் ஆறாவது தொகுப்பின் ஒரு பகுதியாக 400 கிலோவாட் காஸ் இன்சுலேடட் ஸ்விட்ச் கியர் (ஜி.ஐ.எஸ்) துணை நிலையம் அமைக்கப்பட்டது.

ராஜஸ்தான்

ஊட்டச்சத்து கண்காணிப்பு ஹைடெக் ஆகிறது

 • ராஜஸ்தான் அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் தொடர்பான சேவைகளை கண்காணிக்க “போஷாக்கு மாதமாக” கருதப்படும் செப்டம்பர் மாதம் முதல் ஹைடெக் ஆகிறது

சர்வதேச செய்திகள்

சீனாவின் மழலையர் பள்ளிகளில் ரோபோ ஆசிரியர்கள்

 • கீகோ என்ற தன்னியக்க ரோபோ பல மழலையர் பள்ளிகளில் வெற்றி பெற்றது, கதைகள் மற்றும் தர்க்க ரீதியிலான கணக்குகளைக் கொண்டு குழந்தைகளிடம் சவால் செய்தது.

அறிவியல் செய்திகள்

அணையின் மீது மிதக்கும் சோலார் பேனல்களை நிறுவுதல்

 • மராத்வாடா சட்ட ஒழுங்கு அபிவிருத்தி கார்ப்பரேசன் மின்சாரம் உற்பத்தி செய்ய இரண்டு அணைகளின் உப்பங்கலில் சோலார் பேனல்களை நிறுவுவதற்கான திட்டத்துடன் வந்துள்ளது. சூரிய மின் உற்பத்தி திட்டத்தின் தளங்கள் அவுரங்காபாத்தில் உள்ள ஜெயக்குவாடி மற்றும் சோலாப்பூரில் உள்ள உஜானி அணைகள் ஆகும்.

வணிகம் & பொருளாதாரம்

அந்நிய நேரடி முதலீட்டில்  இந்திய முதலிடத்தில் உள்ளது

 • RBI ஆண்டு அறிக்கையின்படி உள்நாட்டு நுகர்வு வலுவாக உள்ளதால் அந்நிய நேரடி முதலீட்டில் இந்திய முதலிடத்தில் உள்ளது. 2017-18ல் இந்தியா 37.3 பில்லியன் மூலதன முதலீட்டைப் பெற்றது. முந்தைய நிதியாண்டில் 36.3 பில்லியன் டாலர் இருந்தது.

தரவரிசை & குறியீடு

 • 2017-18-க்கான சில முக்கிய பயிர் வகைகளின் முன்கூட்டிய நான்காவது உற்பத்தி மதிப்பீடு08.2018 அன்று மத்திய வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறையால் வெளியிடப்பட்டது.

மாநாடுகள்

3-வது ஸ்மார்ட் இந்தியா ஹேகத்தான் போட்டி

 • உலகின் மிகப்பெரிய நவீன கண்டுபிடிப்பு முயற்சிப்போட்டியான 3-வது ஸ்மார்ட் இந்தியா ஹேகத்தான் போட்டியை துவக்கிவைத்தார் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவ்டேகர் இன்று புதுதில்லியில் துவக்கிவைத்தார்.

5 வது நிர்வாகிகள் குழு கூட்டம்

 • புதுடில்லியில் நடைபெற்ற 5 வது நிர்வாகிகள் குழுக் கூட்டத்தில் நமாமி கங்கை திட்டத்தின் கீழ் உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் ரூ. 150 கோடி மதிப்பிலான சுத்தமான கங்கை தேசிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியா மற்றும் பல்கேரியா இடையே ஒப்பந்தம்

 • இந்தியா மற்றும் பல்கேரியா இடையே சுற்றுலா துறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியாவிற்கும் கொரிய குடியரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

 • ரயில்வே துறையில் இந்தியாவிற்கும் கொரிய குடியரசுக்கும் இடையேயான ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி மத்திய அமைச்சரவைக்கு விவரிக்கப்பட்டது.

இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்துடன் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம்

 • கால்நடை பராமரிப்பு, பால் பொருட்கள் மற்றும் மீன் வளத்துறையில் ஒத்துழைப்புக்காக இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்துடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி அமைச்சரவை கூட்டத்தில் விவரிக்கப்பட்டது.

இந்தியாவுக்கும் மொரோக்கோவுக்கும் இடையே ஒப்பந்தம்

 • இந்தியாவுக்கும் மொரோக்கோவுக்கும் இடையே விமான சேவைகளுக்கான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல்.

இந்தியா மற்றும் ருவாண்டா இடையே வர்த்தக ஒத்துழைப்பு கட்டமைப்பு

 • இந்தியா மற்றும் ருவாண்டா இடையேயான வர்த்தக ஒத்துழைப்பு கட்டமைப்பிற்கு அமைச்சரவை ஒப்புதல்.

இந்தியா அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

 • காப்பீட்டு ஒழுங்குமுறை துறையில் இந்தியா அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

இந்திய அஞ்சலக பணப்பட்டுவாடா வங்கி அமைக்கும் திட்ட மதிப்பீட்டை திருத்தியமைப்பு

 • இந்திய அஞ்சலக பணப்பட்டுவாடா வங்கி அமைக்கும் திட்ட மதிப்பீடு திருத்தியமைக்க அமைச்சரவை ஒப்புதல் அஞ்சலகங்களில் வங்கிச் சேவைகளுக்கு ஊக்கம்.

கடல் சேவைகள், தொழில்நுட்பம், ஆழ்ந்து கவனித்தல், வளங்களின் மாதிரி மற்றும் அறிவியல் எனப்படும் (ஸ்மார்ட்)”

 • புவி அறிவியல் அமைச்சகத்தின் “கடல் சேவைகள், தொழில்நுட்பம், ஆழ்ந்து கவனித்தல், வளங்களின் மாதிரி மற்றும் அறிவியல் எனப்படும் (ஓ-ஸ்மார்ட்)” திட்டத்திற்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல்.

பாதுகாப்பு செய்திகள்

அமைதிக்கான இராணுவப்பயிற்சி மிஷன் 2018

 • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) கூட்டு இராணுவ நடவடிக்கை, எட்டு உறுப்பினர்களைக் கொண்டு பயங்கரவாதத்தை எதிர்த்து கூட்டு பயிற்சியை ரஷ்யாவில் மேற்கொண்டது. இந்தியாவும் பாகிஸ்தானும் முதல் தடவையாக இதில் பங்கேற்றது.

புத்தகங்கள் & ஆசிரியர்கள்

 • இந்திய மின்சார அமைப்புக்கான வானிலை தகவல் இணையதளம்நூலை – திரு. ஆர்.கே.சிங் வெளியிட்டார் – மின்சார அமைப்பு இயக்க கழகம் (POSOCO) உருவாக்கியது.

விளையாட்டு செய்திகள்

ஆசிய விளையாட்டு 2018

 • சரத் கமல்- மணிகா பத்ரா ஜோடி, டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது.
 • பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் டூட்டி சந்த் வெள்ளிப் பதக்கம் வென்றார்
 • அர்பிந்தர் சிங் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார்
 • 7 விளையாட்டுக்களை உள்ளடக்கிய ஹெப்டத்லான் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்வப்னா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
 • விகாஸ் கிருஷ்ணன் ஆண்கள் குத்துச்சண்டை போட்டியில் 75 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
 • 20 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய பெண்கள் ஹாக்கி அணி

நாற்கர கிரிக்கெட் தொடர்

 • இந்தியா-பி அணி ஆஸ்திரேலிய-ஏ அணியை இறுதிப் போட்டியில் வீழ்த்தி நாற்கர கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது.

PDF DOWNLOAD

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

ஜூலை நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here