CURRENT AFFAIRS – 9th OCTOBER 2022

0
CURRENT AFFAIRS – 9th OCTOBER 2022
CURRENT AFFAIRS – 9th OCTOBER 2022

CURRENT AFFAIRS – 9th OCTOBER 2022

தேசிய செய்திகள்

டிஜிட்டல் கரென்சி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக ரிசர்வு வங்கி அறிவிப்பு

• குறிப்பிட்ட சில பயன்பாட்டிற்காக, சோதனை அடிப்படையில் டிஜிட்டல் ரூபாய் நோட்டுக்களை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
• டிஜிட்டல் ரூபாய் என்பது ரொக்க பணத்திற்கு மாற்று தேர்வு தானே தவிர, ரொக்கமில்லா சமூகத்திற்கு செல்வதாக இருக்காது.
• டிஜிட்டல் ரூபாய் நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் மற்றும் குறிப்பாக வர்த்தக சந்தையில் இருக்கும் பல்வேறு வரி விதிப்பு, வரி ஏய்ப்பு பிரச்சனைகளுக்கு இது தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுத அமைப்புகள் (WS) கிளை என்று புதிய கிளையை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது:

• WS கிளையை உருவாக்குவதன் மூலம் அனைத்து ஆயுத அமைப்பு ஆபரேட்டர்களையும் ஒரு நிறுவனத்தின் கீழ் ஒன்றிணைக்க வேண்டும்,
• மேலும் இது அனைத்து தரை அடிப்படையிலான மற்றும் சிறப்பு வான்வழி ஆயுத அமைப்புகளின் செயல்பாட்டு வேலைவாய்ப்புக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
• மேற்பரப்பிலிருந்து தரையிறங்கும் ஏவுகணைகள், மேற்பரப்பிலிருந்து வான்வழி ஏவுகணைகள், தொலைதூர பைலட் விமானம் மற்றும் ஆயுத அமைப்பு இயக்குபவர்கள் ஆகிய நான்கு சிறப்பு நீரோட்டங்களில் ஆபரேட்டர்களை இந்தக் கிளை உள்ளடக்கும்.

நாட்டில் குழந்தை திருமணம் அதிகம் நடக்கும் மாநிலமாக ஜார்க்கண்ட் மாநிலம் திகழ்கிறது

மத்திய உள்துறை அமைச்சகத்தின் சமீபத்திய மக்கள்தொகை மாதிரி கணக்கெடுப்பின்படி, ஜார்க்கண்டில் மற்றும் மேற்கு வங்காளம் 18 வயதை அடைவதற்கு முன்பே திருமணம் செய்து கொள்ளும் பெண்களின் சதவீதம் உயர்ந்துள்ளது.
• ஜார்க்கண்டில், குழந்தை திருமணங்கள் கிராமப்புறங்களில் 7.3 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் மூன்று சதவீதமாகவும் உள்ளன.
• “18 வயதை அடையும் முன் திருமணம் செய்து கொண்ட பெண்களின் சதவீதம் தேசிய அளவில் 1.9 ஆகவும், கேரளாவில் 0.0,ஜார்கண்டில் 5.8 ஆகவும் மாறுபடுகிறது” என்று கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

இந்திய விமானப்படை தின விழா:

• இந்திய விமானப்படை தனது 90வது ஆண்டு விழாவை சனிக்கிழமை (அக்டோபர் 8) கொண்டாடியது. இந்த ஆண்டு IAF-யின் கருப்பொருள்: எதிர்காலத்திற்கான மாற்றம்.
• இந்நிகழ்ச்சியில், IAF வீரர்களுக்கான புதிய போர் சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது.
• இந்திய விமானப்படையின் புதிய உருமறைப்பு போர் சீருடை ராணுவத்தின் கியர் போன்றது. புதிய சீருடையின் டிஜிட்டல் வடிவமைப்பு நிலப்பரப்புக்கு ஏற்றது மற்றும் பாலைவனங்கள், மலை நிலங்கள், வனப்பகுதிகள் போன்றவற்றிலிருந்து வீரர்கள் நெகிழ்வுத்தன்மையுடன் செல்ல அனுமதிக்கிறது.

 

சர்வதேச செய்திகள்

கொரோனா வைரஸை கண்டறிய மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது

• ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் துறை இணை பேராசிரியராக பணிபுரிபவர் இலங்கையைச் சேர்ந்த உடாந்த அபேவர்த்தனே. கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கண்டுபிடிக்கும் செல்போன் செயலிக்கான (ஆப்) தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறார்.
• மேலும் அதன் அடிப்பபடையில் ‘ரெஸ்ஆப்‘ என்ற செயலியை ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனை சேர்ந்த ஒரு நிறுவனம் உருவாக்கியுள்ளது.
• ரெஸ் ஆப் கொரோனாவை மட்டுமின்றி ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி போன்ற சுவாச வியாதிகளையும் கண்டறியும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை

• ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தவும், தடை செய்வதற்குமான அவசர சட்டத்தை இயற்றி ஆளுநர் ஒப்புதலுடன், சட்டம் அமலுக்கு வந்தது.
• ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை செய்யும் சட்டத்தின் பெயர், ‘தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை அவசர சட்டம்-2022‘ என்பதாகும்.
• ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

நிர்பாயா திட்டத்தின் கீழ் ஆலோசனை மையம் சென்னையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது:

• நிர்பயா திட்டத்தின்கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆலோசனை மைய புதிய அலுவலக கட்டிடம் சென்னை எழும்பூரில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது
• இந்த மையம் குடும்ப வன்முறை, வரதட்சணை துன்புறுத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறது.
நிர்பையா நிதி (Nirbhaya Fund) என்பது 2013ஆம் ஆண்டு இந்திய ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தோற்றுவிக்கப்பட்ட மூலதான நிதியாகும்

திப்பு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு உடையார் எக்ஸ்பிரஸ் என ரயில்வே வாரியம் பெயர் மாற்றம் செய்துள்ளது

• பெங்களூரு-மைசூரு அதிவிரைவு திப்பு எக்ஸ்பிரஸ் முதன்முதலில் 1980 இல் பெங்களூரு மற்றும் மைசூரை இணைக்கும் அதிவிரைவு ரயிலாக அறிமுகப்படுத்தப்பட்டது
• ரயில்வேயின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, நவீன மாநிலமாக மாற்றுவதற்கும் உடையார் வம்சத்தின் பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, மைசூர் அரச குடும்பத்தின் பெயரால் தற்போது அழைக்கப்பட்டுள்ளது
• இத்தகவலை மைசூர் நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹா தெரிவித்துள்ளார்.

 

கண்டுபிடிப்புகள்

நிலாவில் அதிக சோடியம் இருப்பதை கண்டுபிடித்துள்ளது சந்திராயன் 2 விண்கலம்

• சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டரில் உள்ள ‘கிளாஸ்’ (‘CLASS’) எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் ( X-ray spectrometer) நிலவில் ஏராளமான சோடியம் இருப்பதை கண்டுபிடித்து படம் எடுத்து அனுப்பியுள்ளது என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.
• இந்த சோடியம் அணுக்களை சூரியக் காற்று அல்லது புற ஊதா கதிர்வீச்சு மூலம் அவை சந்திர கனிமங்களின் ஒரு பகுதியாக இருப்பதை விட மிக எளிதாக மேற்பரப்பில் இருந்து வெளிப்படுகிறது.

 

நியமனங்கள்

ஷெபாலி ரஸ்தான் டுகால் நெதர்லாந்து நாட்டுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்:

• நெதர்லாந்து நாட்டுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளியான ஷெபாலி ரஸ்தான் டுகால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
• அவருக்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவி பிரமாணம் செய்து வைத்து உள்ளார்.
• இந்தியாவின் காஷ்மீரை சேர்ந்தவரான ஷெபாலி அமெரிக்காவின் மியாமி பல்கலை கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர்.

 

விருதுகள்

சர்வதேச மாணவர்களுக்கான “விக்டோரியன் பிரீமியர் விருதை” வென்ற இந்திய மாணவிகள்:

• ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் பயின்று வரும் வெளிநாடுகளை சேர்ந்த சர்வதேச மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘விக்டோரியன் பிரீமியர் விருதுகள்’ வழங்கப்படுகின்றன.
• ‘2021-22 ஆம் ஆண்டின் சர்வதேச மாணவர்’ என்ற விக்டோரியன் பிரீமியர் விருதை மாணவி திவ்யங்கனா ஷர்மா வென்றுள்ளார்.
• ஆராய்ச்சி பிரிவில், ‘2021-22 ஆம் ஆண்டின் சிறந்த சர்வதேச மாணவர் விருது‘ மாணவி ரித்திகா சக்சேனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

புத்தக வெளியீடு

திருக்குறள் மாநாட்டில் “திருக்குறள் உலகுக்கான நூல் ” என்னும் புத்தகம் வெளியீடு:

• குறல் மலைச் சங்கம் சார்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் திருக்குறள் மாநாடு நடைபெற்று வருகிறது
• இந்த திருக்குறள் மாநாட்டில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ‘யுனெஸ்கோவை நோக்கி திருக்குறள் பயணம்‘ என்ற நூலை வெளியிட்டார்.
• மேலும் திருக்குறள், ஆன்மிகமும், ஆழ்ந்த சிந்தனைகளையும் கொண்ட புத்தகம். திருக்குறள் உலகத்துக்கான நூல்,இந்தியாவின் அடையாளம்,திருக்குறளை முழுப் பெருமையுடன் மீட்டெடுக்க வேண்டும் என்று ஆளுநர் உரையாற்றினார்.

 

விளையாட்டு செய்திகள்

36-வது தேசிய விளையாட்டுகள் – 2022

• 36வது தேசிய விளையாட்டுப் போட்டியில், சர்வீசஸ் 42 தங்கம், 31 வெள்ளி, 27 வெண்கலம் என 100 பதக்கங்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது ,ஹரியானா 29 தங்கம், 23 வெள்ளி, 23 வெண்கலம் என 75 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா 26 தங்கம், 26 வெள்ளி, 48 வெண்கலம் என 100 புத்தகங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
• தமிழகம் 19 தங்கம், 19 வெள்ளி, 21 வெண்கலம் என மொத்தம் 59 பதக்கங்களுடன் 5வது இடத்தைப் பிடித்துள்ளது.
• 2023-க்கான 37வது தேசிய விளையாட்டுப் போட்டியை “கோவா” நடத்தும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் உறுதி செய்துள்ளது.

 

முக்கிய தினம்

உலக அஞ்சல் தினம்

• ஒவ்வொரு நாளும் மக்கள் மற்றும் வணிகங்களுக்கான அஞ்சல் துறையின் பங்கு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9 ஆம் தேதி உலக அஞ்சல் தினம் கொண்டாடப்படுகிறது.
• 2022 உலக அஞ்சல் தினத்தின் கருப்பொருள் ‘Post for Planet

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!