நடப்பு நிகழ்வுகள் – 8 மார்ச் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 8 மார்ச் 2023
நடப்பு நிகழ்வுகள் - 8 மார்ச் 2023

நடப்பு நிகழ்வுகள் – 8 மார்ச் 2023

தேசிய செய்திகள்

8வது தேசிய புகைப்பட விருதுகளை மத்திய அமைச்சர் எல்.முருகன் புதுதில்லியில் வழங்கினார்.

 • மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் 8வது தேசிய புகைப்பட விருதுகளை புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் தொழில்சார் மற்றும் அமெச்சூர் பிரிவில் தலா 6 விருதுகள் உட்பட மொத்தம் பதின்மூன்று விருதுகள் வழங்கினார்.
 • தொழில்முறை வகைக்கான கருப்பொருள் “உயிர் மற்றும் நீர்“, அமெச்சூர் பிரிவில் “இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம்“.

8வது தேசிய புகைப்பட விருதுகளை வென்றவர்கள் பின்வருவனவற்றில்,

வாழ்நாள் சாதனையாளர் விருது திருமதி சிப்ரா தாஸ்
இந்த ஆண்டின் தொழில்முறை புகைப்படக் கலைஞர் விருது ஸ்ரீ சசி குமார் ராமச்சந்திரன்
ஆண்டின் சிறந்த அமெச்சூர் புகைப்படக் கலைஞர் விருது ஸ்ரீ அருண் சாஹா

 

 

சர்வதேச செய்திகள்

இந்திய வம்சாவளி பெண் மாவட்ட தலைமை நீதிபதியாக அமெரிக்காவில் பதவியேற்பு

 • அமெரிக்காவின் மாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள ஏயர் மாவட்ட தலைமை நீதிபதியாக தேஜஸ் மேத்தாப் பதவியேற்றுள்ளார்.
 • தற்போது ஏயர் மாவட்ட நீதிமன்றத்தின் முதலாவது அதிகாரியாக மேத்தா பணியாற்றுகிறார்

 

மாநில செய்திகள்

திரிபுரா ,மேகாலயாவில் முதலமைச்சர்கள் பதவியேற்பு

 • திரிபுராவில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் பாஜக97 சதவீத வாக்குகளுடன் 32 இடங்களில் வெற்றிப்பெற்றறு மாணிக் சாஹா  தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார்.
 • மேகாலயாவில் நடைபெற்ற தேர்தலில் 26 இடங்களில் வெற்றி பெற்று  தேசிய மக்கள் கட்சித் தலைவர் கான்ராட் சங்மா தொடர்ந்து இரண்டாவது முறையாக மேகாலயா முதல்வராக பதவியேற்றார்.

 

நியமனங்கள்

கணக்கு கட்டுப்பாட்டாளராக எஸ்.எஸ்.துபே பொறுப்பேற்றுள்ளார்

 • சிவில் கணக்குகள் சேவை அதிகாரி எஸ்.எஸ்.துபே கணக்கு கட்டுப்பாட்டு ஜெனரலாக பொறுப்பேற்றார் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 • துபே இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் 28வது கணக்கு கட்டுப்பட்டுளராக பதவியேற்றுள்ளார்

ஆசியாவில்  சிறப்பாக செயல்பட்ட விமான நிலையங்களில் திருச்சி  2வது  இடம்.

 • சர்வதேச ஏர்போர்ட் கவுன்சில் கணக்கெடுப்பில் ஆசியாவில் கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட விமான நிலைய பட்டியலில் திருச்சி 2ம் இடம் பெற்றிருக்கிறது.
 • திருச்சியில் இருந்து கோலாலம்பூர், சிங்கப்பூர், துபாய், ஷார்ஜா, கொழும்பு, குவைத், அபுதாபி, மஸ்கட் மற்றும் தோஹா ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

 

தொல்லியல் ஆய்வுகள்

16 ஆம் நூற்றாண்டு நடுகல் சிற்பம் கண்டெடுப்பு

 • மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கரடிக்கல் விவசாய நிலத்தில் நடுகல் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. 3 அடி உயரம், 2 அடி அகலம், 12 செ.மீ. தடிமன் கொண்டது.இது தனி பலகை கருங்கல்லில் புடைப்புச் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
 • கல்வெட்டின் எழுத்தமைப்பை பொறுத்து அது கி.பி 16-ம் நூற்றாண்டு காலத்தை சார்ந்தது என தெரியவந்துள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

மெக்சிகோ டென்னிஸ் சாம்பியன்

 • மெக்சிகோவில் நடந்த டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் டோனா வேகிச் சாம்பியன் பட்டம் வென்றார்.
 • இவர் 2021க்கு பிறகு தனது முதல் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியுள்ளார்.

ஏடிஎக்ஸ் ஓபன் டென்னிஸ் சாம்பியன்

 • அமெரிக்காவில் நடந்த ஆஸ்டின் டெக்சாஸ் ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரில் மார்தா கோஸ்ட்யுக் சாம்பியன் பட்டம் வென்றார். ஏடிஎக்ஸ் ஒற்றையர் பிரிவில் மார்த்தா சாம்பியன் பட்டம் வென்றது இதுவே முதல் முறையாகும்.
 • பைனலில் ரஷ்யாவின் வார்வரா கிரச்சேவாவுடன் மோதிய மார்தா 6-3, 7-5 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை கைப்பற்றினார்.

சா்வதேச பாரா பாட்மின்டன்

 • சா்வதேச பாரா பாட்மின்டன் போட்டி ஸ்பெயினில் நடைபெற்றது. இதில் இந்தியா 4 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 10 பதக்கங்கள் வென்றது.
 • இதில் மகளிர் ஒற்றையரில் மனீஷா ராம்தாஸ், மன்தீப் கௌர், ஆடவா் இரட்டையரில் சிராக் பரேதா/ராஜ் குமார் கூட்டணி, கலப்பு இரட்டையரில் மானசி ஜோஷி/சந்தியா விஸ்வநாதன் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனா்.

 

முக்கிய தினம்

சர்வதேச மகளிர் தினம்மார்ச் 8

 • ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8,2023 அன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள்: DigitALL: Innovation and technology for gender equality.

Download PDF : Click Here

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!