நடப்பு நிகழ்வுகள் – 8 & 9 ஜனவரி 2023!

0
நடப்பு நிகழ்வுகள் – 8 ஜனவரி 2023
நடப்பு நிகழ்வுகள் – 8 ஜனவரி 2023

நடப்பு நிகழ்வுகள் – 8 & 9 ஜனவரி 2023

தேசிய செய்திகள்

வாய்ஸ் ஆஃப் குளோபல் சவுத் உச்சிமாநாடு 2023

  • ஒரு புதிய மற்றும் தனித்துவமான முன்முயற்சியில், இந்தியா ஒரு சிறப்பு மெய்நிகர் உச்சிமாநாட்டை நடத்தும், 2023 ஆம் ஆண்டு ஜனவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் வாய்ஸ் ஆஃப் குளோபல் சவுத் உச்சிமாநாடு, வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா 6/01/2023 அன்று தெரிவித்தார்.
  • ‘Unity of Voice, Unity of Purpose’ என்ற கருப்பொருளின் கீழ் ‘வாய்ஸ் ஆஃப் குளோபல் சவுத் உச்சிமாநாடு’ உலகளாவிய தெற்கின் நாடுகளை ஒன்றிணைத்து அவர்களின் முன்னோக்குகள் மற்றும் முன்னுரிமைகளை ஒரு பொதுவான தளத்தில் பகிர்ந்து கொள்ள திட்டமிடுகிறது. இந்த மாநாட்டில் 120க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கவுள்ளது.

கூட்டு விமானப் பயிற்சி, ‘வீர் கார்டியன்-2023

  • நாடுகளுக்கிடையே வான் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, இந்தியாவும் ஜப்பானும் இந்திய விமானப்படை மற்றும் ஜப்பான் வான் தற்காப்புப் படை (JASDF) ஆகியவற்றை உள்ளடக்கிய ‘வீர் கார்டியன்-2023’ என்ற கூட்டு விமானப் பயிற்சியை ஹைகுரி விமான தளத்தில் ஜப்பான் 12 ஜனவரி 2023 முதல் 26 ஜனவரி 2023 வரை நடத்தபடவுள்ளன.
  • விமானப் பயிற்சியில் பங்கேற்கும் இந்தியக் குழுவில் நான்கு Su-30 MKI, இரண்டு C-17 & ஒரு IL-78 விமானங்கள் அடங்கும், JASDF நான்கு F-2 மற்றும் நான்கு F-15 விமானங்களுடன் நடைபெறவுள்ளது.

 

சர்வதேச செய்திகள்

இங்கிலாந்தில் வெப்பமான ஆண்டாக 2022-ஆம் ஆண்டு கருதப்படுகிறது.

  • 2022 -ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் இதுவரை பதிவு செய்யப்பட்ட வெப்ப நிலையில் மிக வெப்பமான ஆண்டாகக் 2022 கருதப்பட்டது. 6 ஜனவரி 2023 அன்று நாட்டின் வானிலை ஏஜென்சியின் அதிகாரியால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பன்னிரெண்டு மாதங்களில், நாட்டின் சராசரி வெப்பநிலை03 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது, 1884ல் ஒப்பிடக்கூடிய பதிவுகள் தொடங்கியதில் இருந்து இதுவே அதிகபட்சமாகும். இதற்கு முந்தைய பதிவு 2014ல் 9.88 டிகிரி செல்சியஸ் இருந்தது.

 

மாநில செய்திகள்

பெண்கள் பாதுகாப்பாக பணிபுரியும் நகரங்களின் பட்டியல் வெளியீடு

  • அவதார் குழுமம் நடத்திய ஆய்வில் 111 நகரங்களில் உள்ள 300 நிறுவனங்களில் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
  • இந்நிறுவனம் பெண்கள் தற்போதைய எளிதான வாழ்க்கைக் குறியீடு, தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, குற்றப் பதிவுகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆண்டறிக்கை உட்பட 200க்கும் மேற்பட்ட தரவுகளின் ஒருங்கிணைப்பாக பெண்கள் பாதுகாப்பாக பணிபுரியும் நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
10 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகரங்களின் பட்டியல்  10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்திய நகரங்களின் பட்டியல்
திருச்சி சென்னை
வேலூர் புனே
ஈரோடு பெங்களூரு
சேலம் ஹைதராபாத்
திருப்பூர் மும்பை
புதுச்சேரி அகமதாபாத்
ஷிம்லா விசாகப்பட்டணம்
மங்களூரு கொல்கத்தா
திருவனந்தபுரம் கோவை
பெலகாவி மதுரை  

 

 

தமிழகத்தில்  டிஜிட்டல்  தொழில்நுட்ப  கருவிகள் மூலம் அரசு பள்ளியில் வகுப்பறைகள் தொடங்கப்பட்டுள்ளது

  • சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் ஜப்பான் எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்ப கருவிகள் மூலம் மாணவா்கள் எளிதாக கற்கும் முறையை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் 06/01/2023 அன்று தொடங்கி  வைத்தார்.
  • இத்திட்டம் தற்போது 18 சென்னைப் பள்ளிகளில் ஒரு வகுப்பறைக்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது மேலும் இதன் மூலம் ஆசிரியா்களின் கற்பித்தல் முறை, மாணவா்களின் கற்றல் முறை எளிதாக்கப்பட்டு, பொதுத் தோ்வுகள் மற்றும் போட்டித் தோ்வுகளை சுலபமாக மாணவா்கள் எதிர் கொள்ளும் வகையில் அமைக்கபட்டுள்ளது.

ராணுவ டாட்டூ & பழங்குடியினர் நடன விழா-2023

  • பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பழங்குடியினர் விவகார அமைச்சகம் இணைந்து ராணுவ டாட்டூ மற்றும் பழங்குடியினர் நடன விழா – ஆதி ஷௌர்யா – பர்வ் பராக்ரம் கா என்ற விழாவை புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் 23 ஜனவரி 2023 அன்று நடைபெறவுள்ளது.
  • நாட்டின் துணிச்சலான இதயங்களின் தியாகங்களை நினைவு கூர்வதும், இந்தியாவை மிகவும் தனித்துவமாகவும், பன்முகத்தன்மையுடனும் மாற்றும் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டாடுவதே இந்த விழாவின் நோக்கமாகும், மேலும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் துணிச்சலை ஒன்றாகக் கொண்டாடுவதே இதன் நோக்கமாக கொண்டுள்ளது.

ஆஸ்ட்ரோ சுற்றுலா – ஒரு வானத்தை உற்றுநோக்கும் நிகழ்வு

  • நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்துடன் இணைந்து நேஷனல் கவுன்சில் ஆஃப் சயின்ஸ் மியூசியம்ஸ் மூலம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி டெல்லியின் இந்தியா கேட் என்ற இடத்தில் ஆஸ்ட்ரோ டூரிசம் – ஸ்கை கேஸிங் நிகழ்வை கலாச்சாரத் துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தொடங்கி வைத்தார்.
  • ஆஸ்ட்ரோ சுற்றுலா நிகழ்வில் நிபுணரான வானியலாளர்களின் ஆஸ்ட்ரோ பேச்சுகள், வானியல் பற்றிய கண்காட்சி, வானப் பொருள்கள் தொடர்பான கதைசொல்லல், சந்திரனின் பள்ளங்களைக் காண தொலைநோக்கியைப் பயன்படுத்தும் அனுபவம், வானியல் செயல்பாடுகள், புகைப்படக் குழு கண்காட்சி மற்றும் வானியல் -புகைப்படம் போன்றவை காட்சியகப்படுத்தப்பட்டுள்ளன.

26வது தேசிய இளைஞர் விழா -2023

  • கர்நாடகாவில் ஜனவரி 12 முதல் 16ம் தேதி வரை ஹுப்பள்ளி-தர்வாட் நகரங்களில் நடைபெறும் தேசிய இளைஞர் விழாவின் சின்னம் மற்றும் கருப்பொருளை  கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வெளியிட்டார்.
  • இந்த நிகழ்வை 12 ஜனவரி 2023 அன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். 26வது இளைஞர் விழாவின் கருப்பொருள் விகாசித் யுவ-விகாசித் பாரத் என்பதாகும்.

 

நியமனங்கள்

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

  • கலிஃபோர்னியா குடியரசுக் கட்சியின் தலைவர் கெவின் மெக்கார்த்தி அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிளவுபட்ட குடியரசுக் கட்சியினர் சபாநாயகரைத் தேர்ந்தெடுக்க நான்கு நாட்களில் 15 சுற்றுகள் வாக்கெடுப்பு நடைபெற்றது.
  • மேலும் 57 வயதான மெக்கார்த்தி 216 வாக்குகளைப் பெற்று, வாஷிங்டனின் உயர்மட்ட சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

உலகில் முதன்முறையாக அமெரிக்காவில் தேனீக்களுக்கு நோய்த் தடுப்பு மருந்து

  • தேனீக்கள் தாவரங்களில் நடைபெறும் மகரந்த சேர்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன, தற்போது தேனீக்களை பாக்டீரியாக்கள் தாக்குவதால் ஃபவுல்புரூட் என்னும் நோயினால் அதிகமாக பாதிக்கப்படுகிறது.
  • நோயிலிருந்து பாதுகாப்பை வழங்கும் வகையில் அமெரிக்க வேளாண்மைத் துறை (யுஎஸ்டிஏ) ஒரு தடுப்பூசிக்கான நிபந்தனை உரிமத்தை அனுமதித்துள்ளது, இது அமெரிக்காவைச் சேர்ந்த பயோடெக் நிறுவனமான டாலன் அனிமல் ஹெல்த் உருவாக்கியுள்ளது.
    • மேலும் இதுவே உலகில் முதன்முறையாக தேனீக்களுக்காக அறிமுகபடுத்தப்பட்ட நோய்த் தடுப்பு மருந்தாகும்.

 

விருதுகள்

டிஜிட்டல் இந்தியா விருது 2022

  • 7 ஜனவரி 2023 அன்று புதுதில்லியில் நடைபெற்ற 22 புதுமையான டிஜிட்டல் முயற்சிகளில் 2022 ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் இந்தியா விருதுகளை ஜனாதிபதி ஸ்ரீமதி திரௌபதி முர்மு வழங்கினார்.
  • பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றி பெற்ற அணிகளுக்கு பிளாட்டினம், தங்கம் மற்றும் வெள்ளி விருதுகள் வழங்கப்பட்டுள்ளன
  • டிஜிட்டல் இந்தியா விருதுகள் 07 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ளன அவை
வகை பிளாட்டினம் தங்கம் வெள்ளி
குடிமக்களின் டிஜிட்டல் அதிகாரமளித்தல் இ-நாம்(e-NAM) போக்குவரத்து பணி முறை திட்டம்  (eTransport) தீர்ப்பு தேடல் போர்டல்
அடிமட்ட அளவில் டிஜிட்டல் முன்முயற்சிகள் இ-விவேச்னா ஆப்  e-Vivechna App (MP) DeGS கணினி அடிப்படை பயிற்சி

DeGS Computer Basic Training (ஜார்கண்ட்)

க்ஷீரஸ்ரீ போர்ட்டல் (கேரளா)
எளிதாக வணிகம் செய்வதற்கான டிஜிட்டல் முன்முயற்சிகள் மைன் மித்ரா (உபி)

Mine Mitra (UP)

இஅப்காரி (ஒடிசா)

eAbkari (Odisha)

பஞ்சாப்பில் முதலீடு செய்யுங்கள்
சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கான தரவுப் பகிர்வு மற்றும் பயன்பாடு ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷன், M/o வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்  (CBSE) இ-கவர்னன்ஸ் மையம் (கர்நாடகா)
பொது டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்கள் – மத்திய அமைச்சகங்கள், துறைகள் மற்றும் மாநிலங்கள் மாநிலங்கள்-DUARE SARKAR (மேற்கு வங்கம்)

மத்திய அமைச்சகங்கள்-ICEGATE போர்டல்

மாநிலங்கள்

இ-சேவைகள் மணிப்பூர்

 

மத்திய அமைச்சகங்கள் – eShram ஈஷ்ரம்

ஸ்டார்ட்அப்களுடன் இணைந்து டிஜிட்டல் முன்முயற்சிகள் டிஜிட்டல் பணியாளர் மேலாண்மை அமைப்பு (கேரளா) மண்ணின் ஸ்மார்ட் ஊட்டச்சத்து மேலாண்மை (தெலுங்கானா) டிஜிட்டல் டெபாசிட் ரீஃபண்ட் சிஸ்டம் (உத்தரகாண்ட்)
GIGW & அணுகல்தன்மை வழிகாட்டுதல்களுடன் இணங்கும் சிறந்த இணையம் மற்றும் மொபைல் முன்முயற்சிகள் பிலாஸ்பூர் மாவட்ட இணையதளம் (சத்தீஸ்கர்) கோட்டயம் மாவட்டத்தின் இணையதளம் (கேரளா) பெட்ரோ கெமிக்கல்ஸ் இன்ஜினியரிங் & டெக்னாலஜியின் மத்திய நிறுவனத்தின் இணையதளம்

 

 

விளையாட்டு செய்திகள்

இந்தியாவின் 79 வது கிராண்ட் மாஸ்டர் பட்டம்

  • சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவர் பிரனேஷ் தமிழகத்தின் 28-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார்.
  • மேலும் காமன்வெல்த் போட்டியில் வெள்ளி, ஆசிய செஸ் போட்டியில் தங்கம், 16 வயதுக்குட்பட்ட சர்வதேச செஸ் தொடரில் வெண்கலம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய ஆடவர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்

  • ஆண்களுக்கான 6-வது தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி அரியானா மாநிலம் ஹிசார் நகரில் நடந்தது.
    • இப்போட்டியில் சர்வீசஸ் அணி 6 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலப்பதக்கத்துடன் மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றது.
    • ரெயில்வே அணி 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலப்பதக்கத்துடன் 2-வது இடம் பிடித்துள்ளது.
    • பஞ்சாப் ஒரு தங்கம், 2 வெள்ளி, 6 வெண்கலப்பதக்கத்துடன் 3-வது இடமும் பிடித்துள்ளது.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியின் சின்னம், ஜோதி மற்றும் கீதம் போபாலில் வெளியிடப்படுகிறது

  • Khelo India Youth Games ஐந்தாவது பதிப்பை மத்தியப் பிரதேசம் நடத்துகிறது. ஜனவரி 30ஆம் தேதி முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரை நடைபெறும், இந்த விளையாட்டுப் போட்டியில், 13 நாட்கள் எட்டு வெவ்வேறு நகரங்களில் ஆறாயிரம் வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
  • அந்தச் சூழ்நிலையில், போபாலில் உள்ள ஷௌர்யா ஸ்மாரக்கில் நடைபெறும் வண்ணமயமான நிகழ்ச்சியில், கேலோ இந்தியா யூத் கேம்ஸ்-2022 இன் சின்னம், ஜோதி மற்றும் கீதத்தை முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வெளியிடுகிறார்.

 

முக்கிய தினம்

NRI (குடியுரிமை இல்லாத இந்தியர்) தினம் அல்லது பிரவாசி பாரதிய திவாஸ்

  • NRI அல்லது பிரவாசி பாரதிய திவாஸ் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9 அன்று அனுசரிக்கப்படுகிறது, இந்த நாள் மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து மும்பைக்கு ஜனவரி 9, 1915 அன்று திரும்பியதை நினைவுகூருகிறது.
  • இந்தியாவின் வளர்ச்சிக்கு வெளிநாட்டு இந்திய சமூகத்தின் பங்களிப்பைக் குறிக்கும் வகையில் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!