நடப்பு நிகழ்வுகள் – 7 மார்ச் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 7 மார்ச் 2023
நடப்பு நிகழ்வுகள் - 7 மார்ச் 2023

நடப்பு நிகழ்வுகள் – 7 மார்ச் 2023

தேசிய செய்திகள்

இந்தியபிரான்ஸ் கூட்டு ராணுவப் பயிற்சி  FRINJEX-2023

  • இந்திய ராணுவம் மற்றும் பிரெஞ்சு ராணுவம் இடையேயான முதல் கூட்டு ராணுவப் பயிற்சி FRINJEX-23,மார்ச் 07 மற்றும் 08 ஆகிய தேதிகளில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள பங்கோடு ராணுவ நிலையத்தில் நடத்தப்படவுள்ளது.
  • திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இந்திய இராணுவத் துருப்புக்கள் மற்றும் பிரெஞ்சு 6வது இலகுரக கவசப் படையிலிருந்து தலா ஒரு நிறுவனக் குழுவை உள்ளடக்கிய ஒவ்வொரு குழுவுடன் இரு நாட்டுப் படைகளும் இந்த வடிவத்தில் ஈடுபடுவது இதுவே முதல் முறையாகும்.

23வது காமன்வெல்த் சட்ட மாநாடு

  • 23வது காமன்வெல்த் சட்ட மாநாட்டை கோவா ஆளுநர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை தொடங்கி வைத்தார்.
  • மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மற்றும் கோவா முதல்வர் டாக்டர் பிரமோத் சாவந்த் மற்றும் 52 நாடுகளைச் சேர்ந்த 500 பிரதிநிதிகள் மார்ச் 5-9, 2023 வரை ஐந்து நாள் காமன்வெல்த் சட்ட மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

 

சர்வதேச செய்திகள்

பெருங்கடல்களை பாதுகாக்க வரலாற்று உடன்படிக்கை கையெழுத்தானது

  • உலகின் பெருங்கடல்கள் மற்றும் அதன் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாக்கும் உடன்படிக்கையை ஐ.நா உறுப்பு நாடுகள் மேற்கொண்டன. நியூயார்க்கில் நடைபெற்ற இதுதொடா்பான பேச்சுவார்த்தையின் முடிவில் இந்தியா உள்பட 200 உறுப்பு நாடுகள் இந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளன.
  • இந்த உடன்படிக்கையின்படி, 2030-ஆம் ஆண்டுக்குள் பெருங்கடல்களின் 30 சதவீத பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றப்படும். அந்தப் பகுதிகளில் மீன்பிடிப்பு, கப்பல் போக்குவரத்து, ஆழ்கடல் சுரங்கம் போன்ற செயல்பாடுகள் தடை செய்யப்படும்.

 

மாநில செய்திகள்

கீழடி அருங்காட்சியகத்தை தமிழக முதல்வா் திறந்துவைத்தார்.

  • சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்களை பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் 31,000 சதுர அடி பரப்பளவில் ரூ.18.43 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
  • அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் முப்பரிமாண வடிவில் பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

 

நியமனங்கள்

டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு நிரந்தர நீதிபதி நியமனம்

  • டெல்லி உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நீதிபதி அமித் சர்மா-வை மார்ச் 3,2023-ல் மத்திய அரசு அவரது நியமனத்தை அறிவித்த நிலையில் இன்று பதவியேற்றார்.
  • தற்போது உயர்நீதிமன்றத்தில் 10 பெண் நீதிபதிகள் உள்பட 45 நீதிபதிகள் உள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்

  • சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக இருந்த எஸ்.ஸ்ரீமதி, டி.பாரத சக்கரவா்த்தி, ஆா்.விஜயகுமார், முகமது சஃபீக், ஜெ.சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக பதவி உயா்வு பெற்றுள்ளனர்.
  • இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேரும் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக்கொண்டனர்

 

பொருளாதார செய்திகள்

நிதியாண்டு 23 இல் NTPC உற்பத்தியில் 11.93 சதவீத வளர்ச்சி

  • NTPC லிமிடெட் பிப்ரவரி மாதம் வரையிலான 2023 நிதியாண்டில் தலைமுறையில்92% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது, அதாவது 364.2 வணிக அலகு, நாட்டின் உற்பத்தி வளர்ச்சி 9.56% உடன் ஒப்பிடப்பட்டது.
  • NTPC இன் கேப்டிவ் நிலக்கரி உற்பத்தி6 மில்லியன் மெட்ரிக் டன்களாக (MMT) இருந்தது, அதேசமயம் அனுப்புதல் 2.5 MMT ஆக இருந்தது, இதன் மூலம் முந்தைய ஆண்டு பிப்ரவரியில் 80% மற்றும் 87% வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்தது. ஒட்டுமொத்த அடிப்படையில், 2023 நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தி 20 MMT ஐத் தாண்டியது.

 

விளையாட்டு செய்திகள்

மெக்ஸிகன் ஓபன் டென்னிஸ் போட்டி

  • ஆஸ்திரேலிய வீரா் அலெக்ஸ் டி மினார் மெக்ஸிகன் ஓபன் டென்னிஸ் போட்டி ஆண்கள் ஒற்றையா் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்
  • மெக்ஸிகோவின் அகாபுல்கோ நகரில் நடைபெற்ற இப்போட்டியில் ஆஸ்திரேலிய வீரா் அலெக்ஸ் டி மினாருக்கும் அமெரிக்க வீரா் டாமி பாலுக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் அலெக்ஸ் டி மினார் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

உலகக் கோப்பை ஸ்னூக்கா் போட்டியில் இந்தியா வீராங்கனை சாம்பியன் பட்டம் வென்றார்

  • பெண்களுக்கான உலகக் கோப்பை ஸ்னூக்கா் போட்டிகள் தாய்லாந்து,பாங்காக் நகரில் நடைபெற்றுவருகிறது. இதில் இந்திய அணிக்காக பங்கேற்றுள்ள தமிழக வீராங்கனையான அனுபமா கடந்த 2 தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற அணி போட்டியில் மத்திய பிரதேச வீராங்கனை அமீ காமினியுடன் இணைந்து, இங்கிலாந்து அணியை தோற்கடித்து தங்கம் வென்றனா்.
  • இந்த நிலையில் 21 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஒற்றையா் பிரிவு இறுதிப்போட்டியில் அனுபமா, தாய்லாந்து வீராங்கனை ப்ளாய்சோம்பூ லோகியாபாங்கும் இடையே நடைபெற்ற போட்டியில் அனுபமா சாம்பியன் பட்டம் பெற்று மீண்டும் தங்கம் வென்றார்

 

முக்கிய தினம்

தேசிய மருந்தியல் கல்வி தினம்(National Pharmacy Education Day)

  • இந்திய பார்மசி கவுன்சில் (PCI) பேராசிரியர் மகாதேவ லால் ஷ்ராஃப் அவர்களின் பிறந்தநாளை நினைவுகூரும் விதமாகவும், மார்ச் 6 ஆம் தேதியை தேசிய மருந்தியல் கல்வி தினமாக அறிவித்துள்ளது.
  • இத்தினத்தையொட்டி மத்திய இணை அமைச்சர் (HFW) டாக்டர் பாரதி பிரவின் பவார்,விக்யான் பவனில் பார்மா அன்வேஷன் 2023(Pharma Anveshan-23)-ஐயும் இந்திய பார்மசி கவுன்சிலின் ‘ஒன் ஸ்டாப்-நான் ஸ்டாப்(One Stop-Non Stop)’ என்ற டிஜிட்டல் ஜாப் போர்ட்டலையும் அவர் தொடங்கினார்.

நடப்பு நிகழ்வுகள் – 07 மார்ச் 2023 : Click Here

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!