நடப்பு நிகழ்வுகள் – 7 டிசம்பர் 2022

0
நடப்பு நிகழ்வுகள் – 7 டிசம்பர் 2022
நடப்பு நிகழ்வுகள் – 7 டிசம்பர் 2022

நடப்பு நிகழ்வுகள் – 7 டிசம்பர் 2022

தேசிய செய்திகள்

உலகின் மிக நீளமான இரட்டை அடுக்கு சாலைப் பாதை நாக்பூரில் அமைந்துள்ளது

 • மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூர் மெட்ரோ வார்தா சாலையில்14 கிமீ நீளமுள்ள மெட்ரோ இரட்டை அடுக்கு சாலைப்பாதையை உருவாக்கி கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
 • இரட்டை அடுக்கு சாலைப் பாதை ஏற்கனவே ஆசியா மற்றும் இந்தியாவிலேயே மிக நீளமான அமைப்பாக கருதி ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸால் சான்றளிக்கப்பட்டுள்ளது.

கருடா ஏரோஸ்பேஸ் தலைமையிலானட்ரோன் யாத்திரைதொடங்கப்பட்டது

 • கருடா ஏரோஸ்பேஸ் தலைமையிலான ‘ட்ரோன் யாத்திரை’யை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் 2022 டிசம்பர் 6 அன்று தமிழ்நாடு தாழம்பூரில் உள்ள அக்னி தொழில்நுட்பக் கல்லூரியில் தொடங்கி வைத்தார்.
 • அடுத்த 75 நாட்களுக்குள் நாட்டின் அனைத்து 775 மாவட்டங்களிலும் தொழில்நுட்ப விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
  • “இதன் கீழ் 30 குழுக்கள் இந்த 775 மாவட்டங்களை உபகரண வேன்களுடன் உள்ளடக்கும் வகையில் ஒதுக்கப்படும். இந்த ஒவ்வொரு வேன்களிலும், ட்ரோன்கள், பைலட்டுகள் மற்றும் பயிற்றுனர்கள் இருப்பார்கள், மேலும் அவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ட்ரோன் திறன் மற்றும் பயிற்சி மாநாடுகளை நடத்துவார்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் குறைந்தபட்சம் இரண்டு மாநாடுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆயுர்வேத நிறுவனங்களை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.

 • கோவா தலைநகர் பனாஜியில் வருகிற டிசம்பர் 11 ஆம் தேதி 9-வது உலக ஆயுர்வேத காங்கிரஸ் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கோவாவில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் (AIIA), காஸியாபாத் தேசிய யுனானி மருத்துவ நிறுவனம் (NIUM) மற்றும் தில்லியில் உள்ள தேசிய ஹோமியோபதி நிறுவனம் (NIH) ஆகிய 3 நிறுவனங்களை  நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் என்றும் மத்திய ஆயுஷ்  அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 • மேலும் அன்றைய தினம் வடக்கு கோவாவில் உருவாகி வரும் மோபா சர்வதேச விமான நிலையத்தின் முதல் பகுதியையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

 

சர்வதேச செய்திகள்

ஃபோர்ப்ஸ் ஆசியாவின் பரோபகார ஹீரோக்கள் பட்டியல் (Forbes Asia’s Philanthropic Heroes list)

 • இந்திய கோடீஸ்வரர்கள் கௌதம் அதானி, ஷிவ் நாடார் மற்றும் அசோக் சூதா, மலேசிய இந்திய தொழிலதிபர் பிரமல் வாசுதேவன் மற்றும் அவரது வழக்கறிஞர் மனைவி சாந்தி காண்டியா ஆகியோர் 6 டிசம்பர் 2022 அன்று வெளியிடப்பட்ட ஃபோர்ப்ஸ் ஆசியாவின் பரோபகார வீரர்களின் 16வது பதிப்பில் இடம் பெற்றுள்ளனர்.
 • இப்பட்டியலானது “ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள முன்னணி நற்பண்பாளர்களை அவரவர் பரோபகார காரணங்களில் வலுவான தனிப்பட்ட அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினர்” என்பதை எடுத்துகாட்டுகிறது.

2022 ஆம் ஆண்டிற்கான ஆக்ஸ்போர்டின்  சிறந்த வார்த்தை தேர்வு செய்யப்பட்டுள்ளது

 • “Goblin Mode” என்பது ஆன்லைன் வாக்கெடுப்பின் மூலம் இந்த ஆண்டின் வார்த்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது, இது மன்னிக்க முடியாத, சோம்பேறித்தனமான, சுய-இன்பமான அல்லது பேராசை கொண்ட நடத்தையை சித்தரிக்கிறது.
 • ஆண்டின் வார்த்தை என்பது “கடந்த பன்னிரண்டு மாதங்களின் நெறிமுறைகள், மனநிலை அல்லது ஆர்வங்களை” பிரதிபலிப்பதாகும். முதன்முறையாக 2022-ம் ஆண்டில் பொது வாக்கெடுப்பு மூலம் ஆண்டின் வார்த்தை தேர்ந்தெடுக்கப்பட்டது.

உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி ஆஸ்திரேலியாவில் அமைக்கப்படவுள்ளது

 • உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை அமைக்கும் கட்டுமானப் பணி ஆஸ்திரேலியாவில் தொடங்கபட்டுள்ளது, மேலும் இந்த அமைப்பானது கிறிஸ்துமஸ் மரம் போன்று 1 லட்சத்து 31 ஆயிரம் ஆண்டனாக்கள் தொகுப்பாக இணைக்கப்பட்டு பணிகள் நடைபெறவுள்ளது.
 • தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவின் சர்வதேச தளங்கள் இணைந்து 16 நாடுகளின் ஒத்துழைப்போடு இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.
  • இந்த தொலைநோக்கியின் மூலம் அடுத்த 50 ஆண்டுகளில் விண்வெளியில் இருந்து புதிய தகவல்கள் கண்டுபிடிப்புகளை வெளியுலகிற்கு காட்சிப்படுத்த இயலும் என ஆராச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

 

மாநில செய்திகள்

தமிழகத்தில்நிலம் செயலிஎன்னும் மென்பொருள் சேவை அறிமுகம்

 • ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், ‘நிலம் செயலி’ எனும் மென்பொருள் சேவை உருவாக்கப்பட்டுள்ளது.
 • நிலம் செயலியில் அனைத்து விவசாயிகளின் விபரங்களை கணக்கெடுப்பு செய்து அவர்களின் பெயர், தொலைபேசி எண், பாத்தியப்பட்ட நிலப்பரப்பு, சர்வே எண், பாசன நீர் ஆதாரம், மின் வசதி, நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ள விபரம், சாகுபடி செய்யும் பயிர்கள் உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

தமிழகத்தில்உதிரம் உயர்த்துவோம் திட்டம்தொடங்கப்பட்டுள்ளது

 • தமிழகத்தில் கரூர் மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் “உதிரம் உயர்த்துவோம்” என்ற புதுமையான திட்டத்தினை அம்மாவட்ட தொடங்கிவைத்தார்.
 • இத் திட்டத்தின் கீழ் 9 வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவியர்களுக்கு உதிரத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு கண்டறியப்பட்டு குழந்தைகளுடைய இரத்தசோகை இருப்பது ஆரம்பத்திலேயே கண்டறிந்து இரத்தசோகை இல்லாதவாறு சுகாதார நிறுவனம் அறிவுறுத்தலின் படி சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.

ஹைதராபாத்தில் முதல் பல சமய தகனக் கூடம் திறக்கப்பட்டுள்ளது

 • ஹைதராபாத் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் என அனைத்து மதத்தை சார்ந்தவர்களுக்குமான முதல் இறுதிச் சடங்கு வளாகத்தைக் நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.டி.ராமராவ் திறந்து வைத்தார், இக்கூடம் ஆனது எல்.பி.நகரில் உள்ள ஃபத்துல்லாகுடாவில்5 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டடுள்ளது.
 • இதற்கு முக்தி காட் என்று பெயரிடப்பட்டது, இந்த வளாகம் ஹைதராபாத் பெருநகர மேம்பாட்டு ஆணையத்தால் (HMDA) ஒரு மாதிரி தகனக் கூடமாக வடிவமைக்கப்பட்டு ரூ. 16.25 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இயற்கை எரிவாயுவில் இயங்கும் பஸ் அறிமுகம்

 • தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கோகுல்நாத் என்பவர்  நடத்தி வந்த பஸ் நிறுவனத்தில் அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயு எனும் சி.என்.ஜி.,யை எரிபொருளாக வைத்து இயங்கும் பஸ்சை, திருப்பூர் – பல்லடம் – புளியம்பட்டி வழித்தடத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
 • மொத்தம், 90 கிலோ கொண்ட ஒரு சிலிண்டருக்கு, 450 கி.மீ., மைலேஜ் கிடைக்கும். இது, 600 லிட்டர் டீசலுக்கு இணையானது,அதன்படி, தமிழகத்தில் முதல் முறையாக சி.என்.ஜி., பஸ்சை அறிமுகப்படுத்தி உள்ளார்.

 

நியமனங்கள்

தேசிய மூங்கில் இயக்கத்தின் ஆலோசனை குழு உறுப்பினர் நியமனம்

 • மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ், தேசிய மூங்கில் இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கம், மூங்கில் துறையின் மேம்பாட்டிற்காக ஆலோசனை குழுவை அமைத்துள்ளது.
 • அக்குழுவின் உறுப்பினராக, தமிழகத்தை சேர்ந்த, மூங்கில் ஆராய்ச்சியாளர் என்.பாரதி நியமிக்கப்பட்டு உள்ளார்.
  • பாரதி அவர்கள் ஓசூர் சிப்காட்டில் ‘கிரோவ்மோர் பயோடெக் லிமிடெட்’ என்ற பெயரில், உயிரியல் தொழில் நுட்பத்துக்கான நிறுவனத்தை நடத்தி வருகிறார். விவசாயத்தில் டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.

 

விருதுகள்

பஞ்சாப் நேஷனல் வங்கி IBA தொழில்நுட்ப மாநாட்டில் இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளது

 • இந்தியன் வங்கிகள் சங்கம் (IBA) அதன் 18வது வருடாந்திர வங்கி தொழில்நுட்ப மாநாடு, எக்ஸ்போ மற்றும் விருதுகள் டிசம்பர் 6,2022 அன்று மும்பையில் நடைபெற்றது,இம்மாநாட்டின் கருப்பொருள்  “வங்கியில் டிஜிட்டல் மற்றும் பகுப்பாய்வுகளின் எதிர்காலம்”.
 • பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), மாநாட்டில் இரண்டு மதிப்புமிக்க விருதுகளை வென்றது, சிறந்த Fintech ஒத்துழைப்புக்கான இரண்டாம் நிலை விருது மற்றும் சிறந்த AI & ML வங்கிக்கான சிறப்பு விருது போன்ற விருதுகளை பெற்றுள்ளது.
  • AI –Artificial Intelligence
  • ML –Machine Learning

 

வானிலை செய்திகள்

வங்காள விரிகுடாவில் புதிய புயல் சின்னம்  உருவாகியுள்ளது

 • வங்காள விரிகுடாவில் உருவான புயலுக்கு மாண்டஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது, இப்புயலுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழங்கிய பெயர் அரபு மொழியில் புதையல் பெட்டி என்பது பொருளாகும். இந்த புயல் 2022 டிசம்பர் 8 ஆம் தேதி கரையை கடக்க வாய்ப்புள்ளது.
 • இதனால் 2022 டிசம்பர் 7-9 தேதிகளில் வட தமிழ்நாடு, தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் ராயலசீமாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

முக்கிய தினம்

ஆயுதப்படைகளின் கொடி தினம் 2022

 • ஆயுதப்படைகளின் கொடி நாள் 1949 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் டிசம்பர் 7 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது, இந்திய வீரர்கள், மாலுமிகள் மற்றும் விமானப்படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பாரம்பரியமாக இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
 • தியாகிகள் மற்றும் சீருடை அணிந்த வீரர்களை கவுரவிப்பதும், ஆயுதப்படை வீரர்களின் நலனுக்காக மக்களிடம் இருந்து நிதி வசூலிப்பதும் இதன் நோக்கமாகும்.

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!