CURRENT AFFAIRS – 6th OCTOBER 2022

0
CURRENT AFFAIRS – 6th OCTOBER 2022
CURRENT AFFAIRS – 6th OCTOBER 2022

CURRENT AFFAIRS – 6th OCTOBER 2022

சர்வதேச செய்திகள்

வேதியியலுக்கான நோபல் பரிசு-2022

  • உலகின் மிக உயரிய விருதாக நோபல் பரிசு விளங்குகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
  • இந்நிலையில் வேதியியலுக்கான நோபல் பரிசு “மூலக்கூறுகளை ஒன்றிணைக்கும்” வழியை உருவாக்கியதற்காக 3 பேருக்கு கரோலின் ஆர். பெர்டோசி, மோர்டன் மெல்டல் மற்றும் கே. பேரி ஷார்ப்லெஸ் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.

இயற்பியலுக்கான நோபல் பரிசு-2022

  • 2022ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவுப்பு.
  • பிரான்சின் அலியான் அஸ்பெக்ட்,அமெரிக்காவின் ஜான் கிளாசர்,ஆஸ்திரேலியாவின் ஹிலங்கர் ஆகியோருக்கு வழங்க முடிவு செய்துள்ளது.
  • குவாண்டம் இயக்கவியலில் அவர்கள் செய்த பணிக்காக அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

துபாயில் பிரமாண்ட இந்து கோயில் திறப்பு

  • துபாயில் முதன்முறையாக கட்டப்பட்டுள்ள இந்து கோயில் அக்டோபர் 5ம் தேதித் திறப்பட்டது.
  • வெள்ளை நிற பளிங்கு கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கோயிலில் 16 இந்துக் கடவுள்களின் திருவுருவச்சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

 

தேசிய செய்திகள்

ஜம்முவில் ரூ.1960 கோடி மதிப்பிலான திட்டங்களை உள்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்

  • ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்களின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அதிக உத்வேகத்தை அளிக்கும் ரூ.1960 கோடி மதிப்பிலான 263 வளர்ச்சித் திட்டங்களுக்கு ஜம்முவில் மத்திய உள்துறை மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.
  • இதில் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான 82 திட்டங்களின் தொடக்க விழா மற்றும் 1460 கோடி ரூபாய் மதிப்பிலான 181 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் ஆகியவை அடங்கும்.

சர்வதேச தினை ஆண்டு (IYOM)-2023ஐ உயர்த்துவதற்காக வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை மற்றும் NAFED இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

  • புதுதில்லியில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறைக்கும், இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • சர்வதேச தினை (IYOM)-2023 இன் முன்முயற்சியைக் கருத்தில் கொண்டு, தினை அடிப்படையிலான தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கும் சந்தைப்படுத்துவதற்கும் இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படும்.

 IYOM-International Year of Millets

இந்தியாவின் முதல் மனிதர்களை ஏற்றிச் செல்லும் ஆளில்லா விமானம், விரைவில் கடற்படையில் இணைக்கப்பட உள்ளது

  • புனேவைச் சேர்ந்த சாகர் டிஃபென்ஸ் இன்ஜினியரிங் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் பயணிகள் ஆளில்லா விமானம், விரைவில் இந்திய கடற்படையில் இணைக்கப்படும்.
  • வருணா” என்று பெயரிடப்பட்ட இந்த ஆளில்லா விமானம், 130 கிலோகிராம் எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது மற்றும் 25 முதல் 30 கிலோமீட்டர் வரை செல்லக்கூடியது.

பிலாஸ்பூர் எய்ம்ஸ்(AIIMS) மருத்துவமனை திறப்பு

  • இமாச்சலப்பிரதேசம் பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
  • லுஹ்னு மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில்,3ஆயிரத்து 650 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் மோடி அடிக்கல் நாட்டினார்.

 All India Institute of Medical Sciences

மனித குலத்தின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் துர்கா பூஜையை யுனெஸ்கோ சேர்த்துள்ளது

  • யுனெஸ்கோவின் மனிதகுலத்தின் பாரம்பரிய கலாச்சார பட்டியலில் துர்கா பூஜையை சேர்க்க கடந்த 2019ம் ஆண்டு ஒன்றிய அரசு, யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்தது.
  • இந்த பரிந்துரையின் அடிப்படையில் தற்போது, மனித குல பாரம்பரிய கலாச்சார பட்டியலில் துர்கா பூஜையை சேர்த்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
  • மேலும் யுனெஸ்கோ பாரம்பரிய கலாசார பட்டியலில், கும்ப மேளா, யோகா, பஞ்சாப்பில் ஜாண்டியாலா மற்றும் பல இந்திய பாரம்பரிய பண்டிகைகள் இணைக்கப்பட்டுள்ளன.

உலக விண்வெளி வார விழாவை ஸ்ரீஹரிகோட்டாவில் தமிழக கவர்னர் தொடங்கி வைத்தார்

  • ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் அக்டோபர் 4 முதல் 10-ந் தேதி வரை நடைபெறும் உலக விண்வெளி வார விழாவை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.
  • 1957 ஆம் ஆண்டு, அக்டோபர் 4 ம் தேதி – ஸ்புட்னிக் முதல் செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது.
  • 1967 இல் அக்டோபர் 10 ஆம் நாளில் புற விண்வெளி அமைதி உடன்படிக்கை செய்யப்பட்டு, உலக நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • 1999 ஆம் ஆண்டு ஐ.நா., சபையால் அக்டோபர் 4ம் தேதி மற்றும்10 ம் தேதி இரு நாட்கள் (இரு நிகழ்வுகள்) இடைப்பட்ட நாட்கள், நினைவுகூரும் வகையில் உலக விண்வெளி வாரம் கொண்டாடப்படுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

 

மாநில செய்திகள்

உத்திரபிரதேசத்தில் காந்தி ஜெயந்தியில் 1.07 லட்சம் குடிநீர் இணைப்பு வழங்கி சாதனை

  • காந்தி ஜெயந்தி நாளன்று 1.07 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் வழங்க உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது.
  • மகாத்மா காந்தியடிகள் மற்றும் லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் பிறந்த நாள் நினைவாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
  • மேலும் செப்டம்பர் 17 – ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 1.21 லட்சம் குடிநீர் வழங்கியும் சாதனை புரிந்துள்ளது.

இந்தியாவின் 4 நகரங்களில் ஜியோ 5ஜி சேவை தொடங்கப்படவுள்ளது

  • 5ம் தலைமுறை தொலைத் தொடர்பு சேவையான 5ஜி நெட்வொர்க் இந்தியாவில் நான்கு நகரங்களில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசியில் சோதனை அடிப்படையிலான 5ஜி சேவையை தொடங்கவுள்ளதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
  • ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த 4 நகரங்களில் ஜியோவின் ட்ரு 5G பீட்டா சேவை, 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் சாலை போக்குவரத்தின் போது மருத்துவ வசதி பெற QR சேவை அறிமுகம்

  • கர்நாடக மாநிலம் பெங்களூரில் சாலை போக்குவரத்தின் போது உடனடியாக மருத்துவ வசதி பெற QR சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • சாலை ஓரங்களில் உள்ள மின் கம்பங்களில் ஒட்டப்பட்டிருக்கும் QR கோடை ஸ்கேன் செய்து இருக்கும் இடத்திலேயே ஆம்புலன்ஸ் வசதி மூலம் மருத்துவ வசதிகளை பெற போக்குவரத்து போலீசார்,மணிபால் மருத்துவமனை உடன் இணைந்து இச்சேவையை கொண்டுவந்துள்ளனர்.

 

நியமனங்கள்

ராணுவத் தளவாடங்கள் சி மற்றும் எஸ் பிரிவின் புதிய தலைமை இயக்குனராக சஞ்சீவ் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார்:

  • இந்திய ராணுவத் தளவாட தொழிற்சாலை சேவையின் 1985 ஆம் ஆண்டு தொகுப்பைச் சேர்ந்த சஞ்சீவ் கிஷோர், ராணுவத் தளவாட (சி மற்றும் எஸ்) பிரிவின் தலைமை இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
  • இந்த பதவியில் இருந்த எம் கே கிராக் ஓய்வு பெற்றதை அடுத்து 01.10.2022 முதல் கிஷோர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
  • இந்தப் பதவியை ஏற்பதற்கு முன் கிஷோர் கொல்கத்தாவில் உள்ள ராணுவத் தளவாட ஒருங்கிணைப்பு மற்றும் சேவைகள் இயக்ககத்தின் கூடுதல் தலைமை இயக்குனராக மற்றும் மேலாண்மை இயக்குனர் உள்ளிட்ட பல முதுநிலை பொறுப்புகளை கிஷோர் வகித்துள்ளார்.

ஊழியர்களின் மாநிலக் காப்பீட்டுக் கழகத்தின் (ESIC) இயக்குநர் ஜெனரலாகப் டாக்டர் ராஜேந்திர குமார் நியமனம்:

  • தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரியான டாக்டர் ராஜேந்திர குமார் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஊழியர்களின் மாநிலக் காப்பீட்டுக் கழகத்தின் (ESIC) இயக்குநர் ஜெனரலாகப் பொறுப்பேற்றார்.
  • இவர் முன்னதாக இந்திய அரசாங்கத்தில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் (MeiTY) கூடுதல் செயலாளராக பணியாற்றியுள்ளார்.
  • தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைகளில் முதன்மைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

 

விளையாட்டு செய்திகள்

காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற ஜேஸ்மின் லம்போரியா இந்திய ராணுவத்தில் சேர்ப்பு

  • 22-வது காமன்வெல்த் விளையாட்டில் மகளிருக்கான குத்துச்சண்டை போட்டியில் 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஜேஸ்மின் லம்போரியா வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • இந்திய ராணுவம், வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் ஜேஸ்மின் லம்போரியா, இந்திய ராணுவத்தின் ‘மிஷன் ஒலிம்பிக்ஸ்‘ திட்டத்தின் கீழ் ராணுவக் காவல் படையில் ஹவில்தாராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 2020, மகளிர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப், மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் உள்ளிட்ட பல தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் ஜேஸ்மின் பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய விளையாட்டு போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் தங்கம் வென்றார்

  • 36 வது தேசிய விளையாட்டுப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் தங்கம் வென்று சாதனை படைத்தார்.
  • பந்தய தூரமான 200 மீட்டரை சுமார் 23 வினாடிகளை கடந்து அர்ச்சனா சுசீந்திரன் வெற்றி பெற்றார்.
  • அசாமைச் சேர்ந்த முன்னனி வீராங்கனை ஹிமா தாஸை பின்னுக்கு தள்ளி அர்ச்சனா தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு விருதுகள் 2022:

  • சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக விளையாடும் வீரர், வீராங்கனைகளை கவுரவிக்கும் வகையில் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வழங்கி வருகிறது.
  • இந்திய மகளிர் சீனியர் ஹாக்கி அணியின் வீராங்கனை மும்தாஜ் கான் 2021-22-க்கான வளர்ந்து வரும் வீராங்கனை விருதை பெற்றுள்ளார்.
  • உலகின் பல்வேறு ஹாக்கி அமைப்புகள்,கேப்டன், பயிற்சியாளர்கள்,வீரர்கள் ,ரசிகர்கள் மற்றும் மீடியாவை சேர்ந்தவர்கள் இணைய தள வழியில் ஓட்டுப்பதிவு செய்து விருதுக்கு உரியவரை தேர்ந்தெடுகின்றனர்.

டெல் அவிவ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் -க்கு சாம்பியன் பட்டம் :

  • டெல் அவிவ் வாட்டர்ஜென் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி இஸ்ரேலில் நடந்தது.
  • இதன் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், குரோஷியாவின் மரின் சிலிச்சை எதிர்கொண்டார். ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர்செட்டில் மரின் சிலிச்சை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார்.
  • மேலும் இது அவர் கைப்பற்றிய 89-வது சர்வதேச ஒற்றையர் பட்டமாகும்.

36 வது தேசிய விளையாட்டு போட்டி 2022:

  • ஆடவருக்கான 35 கிமீ பந்தய நடைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ராம் பாபூ தேசிய சாதனையை முறியடித்தார்.
  • ராம் பாபூ அவர் சாதனையை, 2 மணி 36 நிமிடம் 34 வினாடிகளில் போட்டியை வென்று, முந்தைய தேசிய சாதனையான 2:40.16 ஐ முறியடித்தார்.
  • மேலும் 2:40.51 நேரத்துடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தவர் ஹரியானாவின் ஜுன்ட் கான் ஆவார்.

 

முக்கிய தினங்கள்

உலக ஆசிரியர்கள் தினம்

  • உலக ஆசிரியர்கள் தினம், சர்வதேச ஆசிரியர் தினமாகவும் அறியப்படுகிறது.
  • யுனெஸ்கோ 1994 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதியை உலக ஆசிரியர் தினமாக அறிவித்தது. 1966 ஆம் ஆண்டு இந்த தேதியில் தான் 1966 ஆம் ஆண்டு ஆசிரியர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதால் அவர்கள் அக்டோபர் 5 ஆம் தேதியைத் தேர்ந்தெடுத்தனர்.

கருப்பொருள்: கல்வியின் மாற்றம் ஆசிரியர்களிடம் இருந்து தொடங்குகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!