நடப்பு நிகழ்வுகள் – 4 டிசம்பர் 2022

0
நடப்பு நிகழ்வுகள் – 4 டிசம்பர் 2022
நடப்பு நிகழ்வுகள் – 4 டிசம்பர் 2022

நடப்பு நிகழ்வுகள் – 4 டிசம்பர் 2022

தேசிய செய்திகள்

இந்திய தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் விளையாட்டு வீரர்களுக்காக செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது

 • இந்திய தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (NADA) விளையாட்டு வீரர்களின் விழிப்புணர்வை பரப்புவதற்கும், கேள்விகளை நிவர்த்தி செய்வதற்கும், அவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் எந்த மருந்திலும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் உள்ளதா என்பதைக் கண்டறிய உதவும் வகையில் செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது.
 • இந்திய தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியூமான ரிது சைன் இந்த செயலியை புதுதில்லியில் நடைபெற்ற இன்க்ளூஷன் மாநாட்டின்  போது வெளியிட்டார்.

ஸ்வர் தரோஹர் திருவிழா 2022

 • மத்திய கலாச்சார அமைச்சகம் “ஸ்வர் தரோஹர் அறக்கட்டளையுடன்” இணைந்து, கலாஞ்சலியின் கீழ் “ஸ்வர் தரோஹர் விழா” என்ற மூன்று நாள் திருவிழாவை நடத்துகிறது. மேலும் இந்த திருவிழா 2022 டிசம்பர் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் 3 நாட்களுக்கு புது டெல்லியில் உள்ள சென்ட்ரல் விஸ்டா, இந்தியா கேட் என்ற இடத்தில் கொண்டாடப்படுகிறது.
 • “ஸ்வர் தரோஹர் விழா” என்பது இந்தியாவின் சின்னமான கலை மற்றும் கலாச்சாரம் மற்றும் இந்திய மாநிலங்களின் வளமான இலக்கிய கலை மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் இசை, கலை மற்றும் இலக்கியத்தை போற்றும் விழாவாகும்.

முதல் ஜி-20 ஷெர்பா கூட்டம் உதய்பூரில் நடைபெற்றது

 • ராஜஸ்தானில் உள்ள உதய்பூர் நகரத்தில் 2022 டிசம்பர் 4 முதல் 7 வரை முதல் G-20 ஷெர்பா கூட்டத்தை நடைபெறவுள்ளது. கூட்டத்திற்கு இந்திய ஷெர்பா அமிதாப் காந்த் தலைமை வகிக்கிறார்.
 • ஷெர்பாக்கள் G20 குழுவின் உறுப்பினர்களான நாட்டின் தலைவர்களின் தனிப்பட்ட தூதர்கள். ஆண்டு முழுவதும் நடைபெறும் பேச்சுவார்த்தைகளை மேற்பார்வையிடுகிறார்கள், உச்சிமாநாட்டிற்கான நிகழ்ச்சி பற்றி விவாதித்தனர் மற்றும் G20 இன் முக்கிய பணிகளை ஒருங்கிணைக்கின்றனர்.

சர்வதேச செய்திகள்

உலக அளவில் செலவு மிகுந்த நகரங்கள் பட்டியல் வெளியீடு

 • எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் அமைப்பின் உலகளாவிய வாழ்க்கைச் செலவு கணக்கெடுப்பின்படி உலக அளவில் மக்கள் வசிப்பதற்கு செலவு மிகுந்த ஆடம்பர நகரங்கள் பட்டியலை வெளியீட்டுள்ளது,இவற்றில் நியூயார்க், சிங்கப்பூர் ஆகிய நகரங்கள் முதன்மை இடங்களை வகிக்கின்றன.
 • அன்றாட வாழ்க்கைச் செலவு அடிப்படையில், ஆடம்பர நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுக்கு 172 நகரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
 • உலக அளவில் வசிப்பதற்கு செலவு குறைந்த நகரங்களில் சிரியாவின் தலைநகரம் டமாஸ்கஸ் மற்றும் லிபியா நாட்டின் திரிபோலி ஆகியவை முதன்மை இடங்களை வகிக்கின்றன.
 • உலக அளவில் செலவு மிகுந்த நகரங்கள் பட்டியல் வெளியீடு 
1.        நியூயார்க் , அமெரிக்கா 6. சூரிச் , சுவிட்சர்லாந்து
2.        சிங்கப்பூர் , சிங்கப்பூர் 7. ஜெனீவா , சுவிட்சர்லாந்து
3.        டெல் அவிவ் , இஸ்ரேல் 8. சான் பிரான்சிஸ்கோ , அமெரிக்கா
4.        ஹாங்காங் , சீனா 9.  பிரான்ஸ்
5.        லாஸ் ஏஞ்சல்ஸ் , அமெரிக்கா 10. கோபன்ஹேகன் , டென்மார்க்

 

 

மாநில செய்திகள்

பசுமை மின் வழித்தட திட்டத்திற்காக ஜெர்மனி வங்கியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது

 • மத்திய அரசு, நாடு முழுதும் பல மாநிலங்களுக்கு இடையில் கூடுதலாக, 20 ஆயிரம் மெகா வாட் திறன் உடைய காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்தை வினியோகிக்க, பசுமை மின் வழித்தடம் அமைக்க திட்டமிட்டுள்ளது.
 • பசுமை மின் வழித்தடத்திற்கு கடன் வழங்குவது தொடர்பாக, சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில், கே.எப்.டபிள்யூ., வங்கி மற்றும் மின் வாரிய அதிகாரிகள் இடையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • இத்திட்டம் முதல் கட்டமாக, தமிழகம், குஜராத், கர்நாடகா உட்பட, ஏழு மாநிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
  • இத்திட்டத்திற்காக 338 கோடி ரூபாய் கே.எப்.டபிள்யூ., வங்கியும், 237 கோடி ரூபாயை, மத்திய அரசும் கடனாக வழங்கும்; மீதி, மின் வாரியத்தின் சொந்த நிதி என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

2022 -ம் ஆண்டில் இந்திய கடற்படை தினம்  விசாகப்பட்டினத்தில் கொண்டாடப்பட உள்ளது.

 • இந்திய கடற்படை, 1971 இந்தியா-பாகிஸ்தான் போரின் போது ‘ஆபரேஷன் ட்ரைடென்ட்’ (Operation Trident’) இல் அதன் சாதனைகளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4 அன்று கடற்படை தினம் அனுசரிக்கப்படுகிறது.மேலும்  இந்திய ஜனாதிபதியின் தலைமை தளபதி முன்னிலையில் புது தில்லியில் கொண்டாட்டங்கள் வழக்கமாக நடைபெறும்.
 • தற்போது இந்த ஆண்டு (2022) விசாகப்பட்டினத்தில் முதல் முறையாக கடற்படை தினக் கொண்டாட்டங்கள் நடைபெறயுள்ளது , இந்திய கடற்படைக் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானங்கள் மற்றும் கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு கடற்படைக் கட்டளையின் சிறப்புப் படைகள் ஆகியவை இந்திய கடற்படையின் திறனை இவ்விழாவின் பொது காட்சியகப்படுத்தயுள்ளது.

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியத் தொகை உயர்த்தப்பட்டது

 • தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியத் தொகையை ரூ. 1000 தில் இருந்து ரூ. 1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது இத்திட்டம் ஜனவரி 2023 முதல் செயல்படுத்தப்படும்.
 • மேலும் திரு.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக நடமாடும் மருத்துவமனை சேவையை தொடங்கி வைத்தார்.

 

நியமனங்கள்

தேசிய பல்லுயிர் ஆணைய தலைவர் நியமனம்

 • ஓய்வு பெற்ற ஐ.எப்.எஸ்., அதிகாரி சி.அசலேந்தர் ரெட்டி சென்னை, தரமணியில் உள்ள தேசிய பல்லுயிர் ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
 • இவர் இந்திய வனத்துறையில், 1986ம் ஆண்டில் பணியில் சேர்ந்தார்.மேலும் இவர், 2009 முதல், 2014ம் ஆண்டு வரை, தேசிய பல்லுயிர் ஆணைய செயலராகவும் பணியாற்றியுள்ளார்.

 

தொல்லியல் ஆய்வுகள்

300 ஆண்டுகள் பழமையான ஏறுதழுவுதல் குறித்த நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

 • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் 300 ஆண்டுகள் பழமை யான ஏறுதழுவுதல் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
 • சுமார் 300 ஆண்டுகள் பழமையான இக்கல்வெட்டில், காளையானது முன்னங்காலை தூக்கி ஓடுவது போல காட்டப்பட்டுள்ளது. அதற்குப் பின்னால் அக்காளையை அடக்க முற்படும் வீரன் காளையின் திமிலை இறுகப் பற்றிக்கொண்டு இருப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

பூமியைப் போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு

 • பூமியைப் போன்ற கிரகம் ஒன்றை சமீபத்தில் கண்டுபிடித்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர், தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கிரகம் கெப்ளர்-10 சி கிரகத்தைவிட மிகப்பெரிய கிரகம் இருப்பதை ஆராட்சியாளர்கள் தெரிவித்தனர்.
 • மேலும் இந்த கிரகத்திற்கு டி.ஓ.எல்.1075 பி (TOl-1075 b) என்று பெயரிட்ட்டுள்ளதாகவும் நாசாஅறிவித்துள்ளது, அங்கு மனிதர்கள் சென்றால், அவர்களின் எடை 3 மடங்கு அதிகரித்து காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், பூமியை விட 10 மடங்கு பெரியதாக இருக்கும் இந்த கிரகத்தை ‘சூப்பர் எர்த்’ என்று அழைக்கிறார்கள்.

 

விருதுகள்

2021 மற்றும் 2022 -ம் ஆண்டுக்கான மாற்றுத்திறனாளிக்கான தேசிய விருது

 • சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தலுக்கான தேசிய விருதுகளை இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு டிசம்பர் 3, 2022 புது தில்லியில் வழங்கினார்.
 • 2021 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் 25 தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது, 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் 29 தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அவர்களின் சிறந்த சாதனைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் அதிகாரமளிப்புக்காக செய்யப்பட்ட பணிகளுக்காக வழங்கப்பட்டன

கமலாதேவி சட்டோபாத்யாய் NIF பரிசு 2022

 • வரலாற்றாசிரியர்-செயல்பாட்டாளர் சேகர் பதக் எழுதிய பிரபல வனப் பாதுகாப்பு பிரச்சாரமான சிப்கோ இயக்கம் பற்றிய ஒரு புத்தகம், கமலாதேவி சட்டோபாத்யாய் NIF புத்தகப் பரிசு 2022- க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
 • கமலாதேவி சட்டோபாத்யாய் NIF புத்தகப் பரிசு, அனைத்து தேசிய இனத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களால் நவீன அல்லது சமகால இந்தியாவைப் பற்றிய எழுத்துக்களில் சிறந்து விளங்கும் படைப்பை அங்கீகரித்து கொண்டாடுகிறது. இப்புத்தகம் ரூ.15 லட்சம் ரொக்கப் பரிசு, கோப்பை மற்றும் பாராட்டுப் பத்திரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
  • முன்னதாக மிலன் வைஷ்ணவ் (2018), ஓர்னிட் ஷானி (2019), அமித் அஹுஜா மற்றும் ஜெய்ராம் ரமேஷ் (கூட்டு, 2020), மற்றும் தின்யார் படேல் (2021) ஆகியோர் இப் பரிசு பெற்றுள்ளனர்.

 

விளையாட்டு செய்திகள்

விஜய் ஹசாரே கோப்பை 2022

 • விஜய் ஹசாரே கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் மகாராஷ்டிரா மற்றும் சவுராஷ்டிரா அணிகளுக்கு இடையே அஹமதாபாத்தில் நடைபெற்றது.
 • இப்போட்டியில் மகாராஷ்டிரா அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சவுராஷ்டிரா வெற்றி பெற்றுள்ளது ஜெய்தேவ் உனட்கட் தலைமையிலான அந்த அணி. சுமார் 14 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த அணி இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

 

முக்கிய தினம்

உலக  மண் தினம்

 • உலக மண் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5 அன்று அனுசரிக்கப்படுகிறது, மேலும் மண் மேலாண்மையில் வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகளையும் மனித நல்வாழ்வையும் பராமரிப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, மண் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பது மற்றும் மண் ஆரோக்கியத்தை மேம்படுத்த சமூகங்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
 • மேலும் அன்றைய தினத்தின் கருப்பொருளாக “Soils: Where Food Begins”.

தேசிய வழக்கறிஞர் தினம்

 • இந்தியாவில் வழக்கறிஞர்கள் தினம் டிசம்பர் 3 ஆம் தேதி வழக்கறிஞர் சமூகத்தால் கொண்டாடப்படுகிறது.
 • இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரும் மிகச் சிறந்த வழக்கறிஞருமான டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!