நடப்பு நிகழ்வுகள் – 31 டிசம்பர் 2022

0
நடப்பு நிகழ்வுகள் – 31 டிசம்பர் 2022
நடப்பு நிகழ்வுகள் – 31 டிசம்பர் 2022

நடப்பு நிகழ்வுகள் – 31 டிசம்பர் 2022

தேசிய செய்திகள்

எல்லைப் பாதுகாப்புப் படைக்காக (பிஎஸ்எஃப்) பிரஹாரி மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது

  • மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா எல்லைப் பாதுகாப்புப் படையின் (BSF) மொபைல் செயலியான ‘பிரஹாரி’யை அறிமுகப்படுத்தினார்.
  • BSF ‘பிரஹாரி’ செயலியானது தற்போது எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் தங்குமிடங்கள் மற்றும் மருத்துவ வசதிகளை இந்த செயலியின் மூலம் எளிதில் தெரிந்துகொள்ள முடியும் மற்றும் குறைதீர்ப்பு நடைமுறைகளை எல்லைப் பாதுகாப்புப் படைவீரர்களுக்கான நலத்திட்டங்களையும் இந்த செயலியின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

தேசிய சுகாதார ஆணையம் (NHA) மருத்துவமனை மேலாண்மை தகவல் அமைப்பின் (HMIS) பீட்டா பதிப்பை வெளியிட்டுள்ளது

  • HMIS இன் பீட்டா பதிப்பு இலகுவான,சிறிய அளவுடன் கூடிய வலிமையாநா  மற்றும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன்-பாதிப்பாகும்,மேலும் சுகாதார வழங்குநர்களுக்கு டிஜிட்டல் தளத்தை வழங்குவதற்க்காக  திட்டமிடப்பட்டுள்ளது.
  • இந்த அமைப்பு குறிப்பாக தனியார் கிளினிக்குகள் மற்றும் சிறிய சுகாதார வசதிகள் மீது கவனம் செலுத்துகிறது, இந்த பீட்டா பதிப்பு, நோயாளிகளுக்கான ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட்களை உருவாக்கி, மருத்துவர்கள் தங்கள் காலண்டர், சந்திப்புகள் மற்றும் நோயாளி விவரங்களை ஒற்றைச் சாளரத்தில் நிர்வகிக்க அனுமதிக்கிறது, மேலும் இது இ-மருந்துவச் சேவைகளையும் எளிதாக கிடைக்கும் வகையில் அமைக்கப்ட்டுள்ளது.

இந்தியாவில் முதல் முறையாக ஹூக்ளி ஆற்றில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப்பாதை அமைக்கப்படவுள்ளது

  • கொல்கத்தாவின் கிழக்கு-மேற்கு மெட்ரோ ரயில் திட்டப் பணிகளில் ஒரு பகுதியாக, நாட்டிலேயே முதல் முறையாக ஹூக்ளி ஆற்றில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.
  • சுரங்கப்பாதைக்குள் ஆற்று நீர் புகாத வகையில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தி, இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொல்கத்தா சுரங்கப்பாதையானது ஆற்றுப்படுகையின் கீழ் 13 மீட்டரும், தரைப்பகுதியிலிருந்து 33 மீட்டர் ஆழத்திலும் அமைந்துள்ளது.

 

சர்வதேச செய்திகள்

இந்தியா மற்றும் சைப்ரஸ் இடையே பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது

  • இந்தியாவும் சைப்ரஸும் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளன.
  • மாணவர்கள், கல்வியாளர்கள், வணிகர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் ஆகியோரின் நடமாட்டத்தை எளிதாக்குவதற்கு ஒரு பொதுவான ஏற்பாடு மற்றும் ஒத்துழைப்பை வழங்குவதற்காக இடம்பெயர்வு மற்றும் மொபிலிட்டி பார்ட்னர்ஷிப் குறித்த ஒரு கடிதம் கையெழுத்திடப்பட்டது.

 

மாநில செய்திகள்

கோவாவின் புதிய ஜுவாரி  பாலத்தை மத்திய அமைச்சர் திறந்து வைத்தார்

  • கோவாவின் புதிய Zuari பாலம் வடக்கு மற்றும் தெற்கு கோவா இடையே ஒரு முக்கியமான இணைப்பாகும், மேலும் இது 29 டிசம்பர் 2022 அன்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரியால் திறந்து வைக்கப்பட்டது.
  • இப் பாலத்தின் நீளம்20-கிலோமீட்டர் மற்றும் பாம்போலிமில் இருந்து வெர்னா வரை ஜுவாரி ஆற்றின் குறுக்கே 2530 கோடி செலவில் வடக்கு கோவாவிலிருந்து தெற்கு கோவா வரை போக்குவரத்துக்கு சுலபமாக அமையும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீன்பிடி விசைப்படகுகளில் டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தும் திட்டம் தொடங்கப்பட்டது

  • தமிழகத்தில், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் அவசர காலங்களில் மீனவர்கள் தகவல்களை பரிமாறிக்கொள்ள ஏதுவாக நீலபுரட்சித் திட்டத்தின் கீழ் ரூ.18.01 கோடி செலவில் தமிழ்நாட்டிலுள்ள 4997 மீன்பிடி விசைப்படகுகளில் டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தும் திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
  • டிரான்ஸ்பாண்டர்களை மீன்பிடி விசைப்படகில் பொருத்துவதால், மீன்பிடி படகுகள் புயல், சூறாவளி மற்றும் பெருமழை போன்ற ஆபத்தில் இருக்கும்போது ஆழ்கடலில் இருந்து படகின் உரிமையாளருக்கும் மற்றும் மீன்வளத்துறையின் மத்திய கட்டுப்பாட்டு அறைக்கும் அவசர செய்தி அனுப்ப உதவும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் அவசர பொத்தானை அழுத்தி புகார் தெரிவிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

  • கல்வி நிலையங்கள், அலுவலகங்களுக்குச் செல்லும், சென்னையில் இயங்கும் சுமார் 1,200 மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பு கருதி ஆண்கள் தங்களை உரசினாலோ, பாலியல் தொல்லை கொடுத்தாலோ அவசர பொத்தானை அழுத்தி புகார் தெரிவிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • மேலும் இந்த அவசர பொத்தானை அழுத்துவதன் மூலம் அந்த நபரை விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வனப்படை நவீனமாக்கல் திட்டம் தொடங்கப்படவுள்ளது

  • வனப்படையை நவீனமாக்கல் திட்டம்83 கோடி ரூபாயில் செயல் படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது,இத்திட்டம், மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தப்பட உள்ளது.
  • வனத் துறையின் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்த, வன விலங்குகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த, செயற்கை நுண்ணறிவு மையத்தை உருவாக்குதல், வனக்குற்ற கட்டுப்பாட்டு மையத்தில், ‘சைபர் செல்’ அமைக்கவும் ,வனத் துறையை நவீன ஆயுதங்களுடன் மேம்படுத்தவும், வன விலங்கு பாதுகாப்புக்கான நவீன ஆயுதத் தேவைகள் குறித்து ஆலோசனை வழங்கவும், நிபுணர் குழு அமைத்து வனப்படை நவீனமாக்கல் திட்டம் செயல் படுத்தப்படவுள்ளது.

மத்திய அமைச்சர் மெகா பால் பண்ணையை கர்நாடகாவில் திறந்து வைத்தார்

  • கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் 260 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மெகா பால் பண்ணையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 30 டிசம்பர் 2022 அன்று திறந்து வைத்தார்.
  • இந்த மெகா பால் பண்ணையானது ஒரு நாளைக்கு 10 லட்சம் லிட்டர் பாலை பதப்படுத்துகிறது மற்றும் தற்போது ஒரு நாளைக்கு 14 லட்சம் லிட்டராக உயர்த்தும் திறன் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படவுள்ளது

  • தமிழ்நாடு அரசு லண்டன், கியூவில் உள்ள ராயல் தாவரவியல் பூங்காவுடன் இணைந்து, ரூபாய் 300 கோடி செலவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாவரவியல் பூங்காவினை அமைக்க உள்ளது.
  • செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், கடம்பூர் கிராமத்தில்65 ஹெக்டேர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு 28 டிசம்பர் 2022 புதன்கிழமை அன்று அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், இத்திட்டம் 5 ஆண்டுகளில் (2022-2027) செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தில்,
    • பூர்வீக இனங்களின் தோட்டம்,
    • ஆர்போரேடம்ஸ் (Arboretums) மற்றும் பேம்புசிடம்ஸ்(Bambusetums),
    • மரக்கன்றுகள் மற்றும் ஹீலிங் கார்டன்,
    • மூலிகைத் தோட்டம்,
    • ரோஜா தோட்டம்,
    • ராக்கரி,
    • ஜப்பானிய தோட்டம்,
    • பண்டைய தமிழ்நாட்டின் நிலப்பரப்பு போன்ற கூறுகளும் இத்திட்டத்தில் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நியமனங்கள்

MOIL இன் நிர்வாக இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார்

  • ஸ்ரீ அஜித் குமார் சக்சேனா (Manganese Ore (India) Limited) MOIL Limited இன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக , ஸ்ரீ சக்சேனா RINL-விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் இயக்குநராக (செயல்பாடுகள்) பதவி வகித்தார்.
  • அவருக்கு எஃகுத் துறையில் 36 வருட அனுபவமும், தொழில்நுட்பம், செயல்பாட்டு மற்றும் திட்ட மேலாண்மை ஆகிய துறைகளில் பரந்த அனுபவமும் உள்ளது. 1986 இல் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (SAIL) இல் மேலாண்மைப் பயிற்சியாளராக (தொழில்நுட்பம்) தனது பணியைத் தொடங்கினார்.

ஆப்கானிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக ரஷீத் கான் நியமிக்கப்பட்டுள்ளார்

  • உலக கோப்பை டி20 ஏற்பட்ட தோல்வி காரணமாக அந்த அணியின் கேப்டன் முகமது நபி அணியில் இருந்து விலகியுள்ளார். இதையடுத்து ஆப்கானிஸ்தான் டி20 அணியின் புதிய கேப்டனாக ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஆப்கானிஸ்தான் அணியின் மிகச்சிறந்த ஸ்பின் ஆல்ரவுண்டரும் மேட்ச் வின்னருமான ரஷித் கான், சர்வதேச கிரிக்கெட்டில் 5 டெஸ்ட், 86 ஒருநாள் மற்றும் 74 டி20 போட்டிகளில் ஆடிய சிறந்த அனுபவம் கொண்டவர் ஆவார்.

 

விளையாட்டு செய்திகள்

பிரேஸில் கால்பந்து வீரர் பீலே  காலமானார்

  • பிரேஸில் கால்பந்து வீரர் பீலே கடந்த ஆண்டுமுதல் செரிமான மண்டலப் பகுதி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
  • இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பீலேவின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படாத நிலை அவா் சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை(29/12/2022) அன்று நள்ளிரவு காலமானார்.
    • உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரேஸிலுக்கு 3 முறை சாம்பியன் பட்டம் (1958, 1962, 1970) வென்று தந்தவர்.

 

முக்கிய தினம்

உலக அமைதி தியான தினம்

  • உலக அமைதி தியான தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31 அன்று கொண்டாடப்படுகிறது. உலக அமைதி தியான தினத்தின் நோக்கம் உலக அமைதியை நிலைநாட்டுவது மற்றும் போர் மற்றும் வன்முறையைத் தடுப்பதாகும்.
  • உலக அமைதி தியான தினம் தியானம் மற்றும் பல்வேறு மதத்தினருடன் இணைந்து செயல்படுவதன் மூலம் பன்முகத்தன்மை மற்றும் அமைதியை ஊக்குவிக்கிறது.

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!