Current Affairs – 30th September 2022

0
Current Affairs – 30th September 2022
Current Affairs – 30th September 2022

Current Affairs – 30th September 2022

தேசிய செய்திகள்

அனுராக் சிங் தாக்கூர் நாடு முழுவதும் ஒரு மாத கால தூய்மை இந்தியா 2.0 திட்டத்தை தொடங்க உள்ளார்

  • இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் இளைஞர் விவகாரத் துறை 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 1 முதல் 31 ஆம் தேதி வரை நாடு முழுவதும் தூய்மை இந்தியா 2.0 – ஐ அறிமுகப்படுத்த உள்ளது.
  • நேரு யுவ கேந்திரா சங்கதன் (NYKS), இணைந்த இளைஞர் சங்கங்கள் மற்றும் தேசிய சேவை திட்டத்துடன் இணைந்த நிறுவனங்களின் நெட்வொர்க் மூலம் நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இத்திட்டம் கழிவுகளை சுத்தம் செய்வது, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழிகளை சுத்தம் செய்வது மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • கடந்த ஆண்டு தூய்மை இந்தியா இயக்கத்தின் வெற்றிக்குப் பிறகு, இந்த ஆண்டு 1 கோடி கிலோ கழிவுகள் (நெகிழிகள், மின் -கழிவுகள் மற்றும் பிற கழிவுகள்) சேகரிக்கப்பட்டு குடிமக்களின் தன்னார்வ பங்கேற்புடன் அகற்றப்பட்டது. சுற்றுலாத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், அதைச் சுற்றியுள்ள பகுதிகள், தேசிய நெடுஞ்சாலைகள், வரலாறு மற்றும் பாரம்பரிய கட்டிடங்கள் போன்றவை குப்பை சேகரிப்புக்கான இடங்களாக இருக்கும் என்று இளைஞர் விவகாரங்களின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

o NYKS – Nehru Yuva Kendra Sangathan

131 நகரங்களில் காற்று மாசை 40% வரை குறைக்க இலக்கு!!!

  • 2026- க்குள் தேசிய தூய காற்று திட்டம் செயல்படுத்தப்பட்டு 131 நகரங்களில் காற்று மாசை 40 % வரை குறைக்க இலக்கு நிர்ணியக்கப்பட்டுள்ளது.
  • மேலும் தேசிய தூய காற்று திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 131 நகரங்களில் 95 நகரங்களில் காற்று மாசு 2017- ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021- ல் மிக குறைந்துள்ளது.
  • சென்னை,மதுரை,நாசிக்,உள்பட 20 நகரங்களில் காற்று மாசு அளவானது சராசரியாக பி எம் 10- ஆக குறைந்துள்ளது.
  • எனவே தேசிய தூய காற்று திட்டத்தின் கீழ் ,காற்று மாசின் அளவை 2026-க்குள் 40% வரை குறைக்க இலக்கு நிர்ணியக்கப்பட்டுள்ளதகா மத்திய சுற்று சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

ஜெயந்தி பட்நாயக் காலமானார்

  • முன்னாள் எம்பியும், தேசிய மகளிர் ஆணையத்தின் முதல் தலைவருமான ஜெயந்தி பட்நாயக் காலமானார்.
  • ஒரிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள அஸ்காவில் 1932 இல் பிறந்தார்.
  • ஒடிசாவின் முன்னாள் முதல்வராக இருந்த ஜானகி பல்லப் பட்நாயக்கை கணவர் ஆவார்.
  • ஜெயந்தி பட்நாயக் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் புகழ்பெற்ற சமூக சேவகர் ஆவார்.
  • தேசிய மகளிர் ஆணையத்தின் முதல் தலைவராகவும் இருந்துள்ளார்.

CSIR-NIScPR ஆனது CSIR இன் 81வது நிறுவன தினத்தை கொண்டாடுகிறது.

  • அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) 26 செப்டம்பர் 1942 இல் அமைக்கப்பட்டது. இந்த ஆண்டு, இந்தியாவின் மிகப்பெரிய R&D நிறுவனங்களில் ஒன்றான இது, அதன் 81 வது நிறுவன தினத்தைக் கொண்டாடுகிறது.
  • இந்தச் சந்தர்ப்பத்தில், NIScPR மற்றும் பல்வேறு நிறுவன வசதிகள், NIScPR இயக்குநர், பேராசிரியர். ரஞ்சனா அகர்வால் மாணவர்களிடம் உரையாற்றி, ஒளிமயமான எதிர்காலத்திற்கு அவர்களைத் தூண்டினார்.
  • மாணவர்-விஞ்ஞானி இணைப்பு அமர்வின் போது, CSIR-NIScPR இன் முதன்மை விஞ்ஞானி டாக்டர் ஜி. மகேஷ் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.
  • திறந்த நாளின் போது, NIScPR வெளியீடுகளின் கண்காட்சி, ஆயுர் வாடிகா மற்றும் RHMD வருகை ஆகியவை வருகை தரும் மாணவர்களுக்கான மற்ற சிறப்பு ஈர்ப்புகளாக இருந்தன.
  • நிறுவன தின கொண்டாட்டத்தின் போது, அறிவியல் தொடர்பு இலக்கியத்தின் வடிவங்களை மையமாகக் கொண்ட CSIR-NIScPR புத்தகமும் வெளியிடப்பட்டது.

மாநில செய்திகள்

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி அரங்கில் 36-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

  • பிரதமர் மோடி இரண்டுநாள் பயணமாக இன்று குஜராத் மாநிலத்திற்கு செல்கிறார்.
  • சூரத் நகரில் ரூ.3,400 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
  • பாவ்நகரில் ரூ.5,200 கோடி மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
  • அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி அரங்கில் 36-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
  • குஜராத்தில் 6 நகரங்களில் நடைபெறும் இப் போட்டிகளில் 7 ஆயிரம் வீரர் – வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
  • பின்பு காலை, காந்திநகர்-மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

தமிழக முதலமைச்சரின் ‘புத்தாய்வு திட்டம்’!!!

  • தமிழக அரசுக்கு உதவ இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் திறன்களை மேம்படுத்தி பயன்படுத்தும் முதல்அமைச்சரின் ‘புத்தாய்வு திட்டம்’ குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருந்தது.
  • இதன்படி இளைஞர்களுக்கு தொழில்முறை மற்றும் கல்வி அடிப்படையில் இரண்டு ஆண்டு காலம் ஊக்க ஊதியத்துடன் பயிற்சி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
  • தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் முதல்-அமைச்சர் அலுவலகம், தமிழக அரசின் முதன்மை திட்டங்களை செயல்படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • முதல்-அமைச்சரின் இந்த புத்தாய்வு திட்டத்திற்காக நடப்பாண்டில் 30 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளதாகவும், இந்த திட்டத்திற்கு 5.66 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
  • இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று அரசு பணிகளில் அமர விரும்பும் இளைஞர்கள் இன்று முதல் தங்கள் விண்ண ப்பங்களை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு http://www.bim.edu/Tncmpf எனும் இணையதளத்தில் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைய தளத்தில் திருமணச் சான்றிதழை திருத்தம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது !!!

  • திருமணப் பதிவுச் சட்டங்களின் கீழ் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
  • திருமண பதிவிற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களில் கொடுக்கப்படும் விவரங்களின் அடிப்படையில் திருமண சான்று வழங்கப்படுகிறது.
  • ஆனால் பின்னாளில் சில சமயங்களில் பெயர்களில் ஏற்படும் பிழைகள், முகவரி போன்றவற்றில் திருத்தம் தேவைப்பட்டால் திருத்தம் செய்திட https://tnreginet.gov.in என்ற இணையம் வழியே விண்ணப்பித்து திருத்தப்பட்ட திருமண பதிவுச் சான்றிதழ் பெறும் வசதியை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.
  • இதனால் பொதுமக்கள் விரும்பிய நேரத்தில் பதிவு அலுவலரின் மின்கையொப்பத்துடன் கூடிய அச்சான்றிதழை விண்ணப்பதாரர் இணைய வழியில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

o இந்து திருமணச் சட்டம் 1955
o தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம் 2009
o சிறப்புத் திருமணச் சட்டம் 1954
o இந்திய கிறித்துவ திருமணச் சட்டம் 1874

மறுவாழ்வு இணைப்பு கட்டிடம் மற்றும் சுவாமி விவேகானந்தர் சிலை மற்றும் சிகிச்சை பூங்கா திறப்பு:

  • கல்வி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுக்கான கேபினட் அமைச்சரான ஸ்ரீ தர்மேந்திர பிரதான் தலைமையில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் முன்னிலையில், ஒடிசாவின் அரசு, கட்டாக்கில் 2022 செப்டம்பர் 30 அன்று சுவாமி விவேகானந்தர், சிகிச்சைப் பூங்காவின் திட்டத்தை வெளியிட்டனர்.
  • இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ஜே.பி. நட்டாவும் அதைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகள் வழங்க உள்ளார்.
  • மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், தீயணைப்பு வாகனங்கள் செல்வதற்கான புறச் சாலை, தீ எச்சரிக்கை மற்றும் தீயணைப்பு அமைப்புகள், 250 KVA துணை நிலையம் மற்றும் 125 KVA DG செட் போன்றவை இந்த வசதிகளில் அடங்கும்.
  • “புனர்வாழ்வு இணைப்பு கட்டிடம்” என்ற பெயரில் தற்போதுள்ள மருத்துவமனை விரிவாக்கம், உட்புற படுக்கையை பெற போராடும் மாற்றுத்திறனாளிகளுக்கு பெரிதும் உதவும்.
  • அறுவை சிகிச்சையின் எண்ணிக்கை அதிகரிக்கும் சிகிச்சை சேவைகளின் எண்ணிக்கையும் தரமும் மேம்படும். SVNIRTAR ஒரு புதிய மைல்கல்லை அடையும்.

o Swami Vivekanand National Institute of Rehabilitation Training and Research

நியமனங்கள்

நீதிபதி எம் துரைசாமி அவர்கள் ரியல் எஸ்டேட் மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக பதவி ஏற்பு!!!

  • சென்னை உயர் நீதி மன்றத்தின் பொறுப்பு நீதிபதியாக பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற நீதிபதி எம்.துரைசாமி அவர்கள் ரியல் எஸ்டேட் மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக பதவி ஏற்றார்.
  • மத்திய அரசு கடந்த 2016 -ம் ஆண்டு கொண்டு வந்த ரியல் எஸ்டேட் (ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு) சட்டத்தை, 2017-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு மாநிலத்தில் திருத்த விதிகளுடன் நடைமுறை படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஆணையமும், தமிழ்நாடு மேல்முறையீட்டு தீர்ப்பாயமும் உருவாக்கப்பட்டது.
  • மேலும் எஸ்டேட் ஆணையம் பிறப்பிக்கும் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்டு மேல்முறையீட்டு வழக்கை தமிழ்நாடு ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்ப்பாயமும் உருவாக்கப்பட்டது, புதுச்சேரி ,அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேசங்களில் உள்ள தீர்ப்பை எதிர்த்தும் மேல்முறையீடு செய்யலாம்.
  • முன்னதாக ரியல் எஸ்டேட் தொடர்பான வழக்குகள் நுகர்வோர் குறைதீர்ப்பு மன்றங்களில் விசாரிக்கப்பட்டது தற்போது அந்த வழக்குகள் ரியல் எஸ்டேட் ஆணைய மூலம் விசாரணைக்கு மாற்றப்பட்டு வருகிறது.

புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கட்ரமணி நியமனம்!!!

  • மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக (அட்டர்னி ஜெனரல்) மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • 15-வது தலைமை வழக்கறிஞராக கே.கே.வேணுகோபாலுக்குப் பிறகு வெங்கடரமணி அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக தொடர்வார் என்று மத்திய சட்ட அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதனை தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த திரு.வெங்கடரமணி நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்!!!

  • ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் முன்னாள் முப்படைகளின் தலைமை தளபதி மரணமடைந்த நிலையில் அவரது இடத்துக்கு லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • இந்தியாவில் ராணுவம், விமானப்படை, கப்பற்படைக்கு தனித்தனியே தளபதிகள் உள்ளனர். இந்நிலையில் முப்படைகளையும் இணைத்து ராணுவ நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் வகையில் முப்படை தலைமை தளபதி பொறுப்பு உருவாக்கப்பட்டது.
  • நாட்டின் பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு முப்படை தலைமை தளபதிக்கு உள்ளது.
  • இந்தியாவில் முதன் முதலாக பிபின் ராவத் முப்படைகளில் தலைமை தளபதியாக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு 2வது நபராக அனில் சவுகான் இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்

விளையாட்டு செய்திகள்

ஐசிசி டி 20 கிரிக்கெட் தரவரிசையில் 2-வது இடம் பிடித்தார் சூர்யகுமார் யாதவ்!!!

  • டி 20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி நிறுவனம் வெளியிட்டுள்ளது, இதில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
  • தரவரிசை பட்டியலில் சூர்யகுமார் யாதவ் இதுவரை இரண்டு முறை 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
  • முதலிடத்தில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
  • இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 13-வது இடத்திலும் விராட் கோலி 15-வது இடத்திலும், கே.எல்.ராகுல் 22-வது இடத்திலும் உள்ளனர்.

இந்திய கால் பந்து கேப்டன் சுனில் சேத்ரிக்கு பிஃபா நிறுவனம் கெளரவம்!!!

  • இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி (38) கடந்த 2005-இல் அறிமுகம் ஆகி, தற்போது வரை சர்வதேச அளவில் 131 போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளார்.
  • இந்நிலையில் சர்வதேச அரங்கில், தற்போது விளையாடி வரும் வீரர்களில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில்

o போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ 117 கோல்களுடனும் – முதல் இடத்திலும்
o அர்ஜென்டினாவின் லியனோ மெஸ்சி 90 கோல்களுடனும் இரண்டாம் இடத்திலும்

  • அவர்களுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இந்தியாவின் சுனில் சேத்ரி 84 கோல்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.
  • ‘பிஃ பா தனது உலக கோப்பை டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது “உங்கள் அனைவருக்கும் ரொனால்டோ, மெஸ்சி குறித்து அனைத்தும் தெரியும். அதே சமயம் தற்போதுள்ள வீரர்களில் அதிக கோல் அடித்த மூன்றாவது வீரர் இந்தியாவின் சுனில் சேத்ரி குறித்தும் தெரிந்து கொள்ளலாம்” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது.

 

முக்கிய தினங்கள்

சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்

  • சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • உலகெங்கிலும் உள்ள மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழி வல்லுநர்களின் அயராத உழைப்புக்கு மரியாதை செலுத்தும் நாளாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • மே 24, 2017 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30 ஆம் தேதியும் சர்வதேச மொழிபெயர்ப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.
  • மொழியியல் ரீதியாக வேறுபட்ட நாடுகளுக்கிடையே அமைதி, வளர்ச்சி மற்றும் நட்புறவை வளர்ப்பதில் மொழி வல்லுநர்களின் பங்கைக் கௌரவிப்பதற்காக இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
  • 2022 இன் சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தின் முக்கியத்துவம், மொழிபெயர்ப்புத் தொழிலை ஊக்குவிப்பதும் கொண்டாடுவதும் மொழிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே ஆகும்.

கருப்பொருள்

o இந்த ஆண்டு, சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தின் கருப்பொருள் “தடைகள் இல்லாத உலகம்”.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!