நடப்பு நிகழ்வுகள் – 03 நவம்பர் 2022!

0
நடப்பு நிகழ்வுகள் - 03 நவம்பர் 2022!
நடப்பு நிகழ்வுகள் - 03 நவம்பர் 2022!

தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் உள்ள மங்கார் தாம் தேசிய நினைவு சின்னமாக அறிவிப்பு

  • ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டம் மங்காரில் 1913-ம் ஆண்டு, சமூக சீர்திருத்தவாதி கோவிந்த் குரு தலைமையில் போராடிய 1,500 பழங்குடியினர் ஆங்கிலேயாரால் கொள்ளப்பட்டனர் அவர்களின் நினைவாக மங்காரில் பழங்குடியினர் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
  • அந்த நினைவிடத்தை தற்போது பிரதமர் மோடி தேசிய நினைவுச்சின்னமாக அறிவித்தார்.                                                                                     

சர்வதேச செய்திகள்

ஷார்ஜாவில் சர்வதேச புத்தகக் கண்காட்சி

  • ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி(SIBF), 2022 ஷார்ஜா எக்ஸ்போ மையத்தில் நவம்பர் 2 ஆம் தேதி திறக்கப்பட்டது, SIBF இன் 41வது பதிப்பான இந்த கண்காட்சி நவம்பர் 13 ஆம் தேதி வரை ‘Spread the Word’ என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும்.
  • இக்கண்காட்சியில் இந்திய அரசாங்கத்தின் முதன்மையான பதிப்பக வெளியீடுகள் பிரிவு அதன் பதிப்புகளை காட்சியகப்படுத்தியுள்ளன

 மாநில செய்திகள்

இந்திய குடியரசுத்தலைவர் கல்வி, சாலை உள்கட்டமைப்பு மற்றும் நிதித் துறையை வலுப்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

  • குடியரசுத்தலைவர் ,நாகாலாந்து அரசாங்கத்தால் அவருக்கு வழங்கப்பட்ட குடிமை வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, நவம்பர் 2, 2022-கோஹிமாவில் கல்வி, சாலை உள்கட்டமைப்பு மற்றும் நிதித் துறை தொடர்பான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
  • இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு மேம்பாடு முக்கிய அளவுகோலாகும். இந்திய அரசின் ‘ஆக்ட் ஈஸ்ட் பாலிசி’ வடகிழக்கு பிராந்தியத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது. இன்று திறக்கப்பட்ட பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத்தின் கீழ் சாலைகள் மற்றும் பாலங்கள் இப்பகுதியில் இணைப்புக்கு புதிய ஊக்கத்தை அளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பஞ்சாப் அரசுபிசினஸ் பிளாஸ்டர் இளம் தொழில்முனைவோர்திட்டத்தை அறிமுகப்படுத்தியது

  • பள்ளி அளவில் இளம் தொழில்முனைவோரை உருவாக்கும் நோக்கத்துடன், பஞ்சாப் கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ் பிசினஸ் பிளாஸ்டர் இளம் தொழில்முனைவோர் திட்டத்தைத் தொடங்கினார்.
  • பெயின்ஸின் கூற்றுப்படி, இந்தத் திட்டம் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில் தொடங்க விதைப்பணமாக ரூ.2,000 வழங்குகிறது.

நம்ம யாத்ரிவாடகை ஆட்டோ சேவை அறிமுகம்

  • பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம், “நம்ம யாத்ரி” என்ற செல்போன் செயலியை உருவாக்கியுள்ளனர், இதன் மூலம் தனியார் நிறுவனங்களை சாராமல், சுயமாக வாடகை ஆட்டோ சேவை வழங்க முடியும்.
  • இந்த செயலி 2022 அக்டோபர் மாதம் உருவாக்கப்பட்டு நவம்பர் 1-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்தார்

  • மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து வந்த கோரிக்கைகளை ஏற்று இந்த ஆண்டும் இனிவரும் ஆண்டுகளிலும் ராஜராஜ சோழனின் பிறந்த நாளினை அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

சுயதொழில் பெண்கள் சங்கம் நிறுவனரும், பிரபல காந்தியவாதியுமான எலபென் பட் காலமானார்

  • காந்தியவாதியும், சுயதொழில் பெண்கள் சங்கத்தின் (SEWA) நிறுவனருமான எலாபென் பட் புதன்கிழமை அகமதாபாத்தில் காலமானார்
  • பத்ம பூஷன் மற்றும் ராமன் மகசேசே விருதுகளைப் பெற்றவர், இவர் மகாத்மா காந்தியால் நிறுவப்பட்ட அகமதாபாத்தில் உள்ள குஜராத் வித்யாபீடத்தின் முன்னாள் அதிபராகவும் இருந்தார்.                                                                                                                                                                                 

நியமனங்கள்

இந்திய இராணுவத்தின் தெற்குப் படையின் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் அஜய் கே. சிங் பொறுப்பேற்றார்

  • லெப்டினன்ட் ஜெனரல் அஜய் குமார் சிங், நவம்பர் 1, 2022 அன்று இந்திய இராணுவத்தின் தெற்குப் படையின் தளபதியாக பொறுப்பேற்றார் மற்றும் அவர் 50வது இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றார். அவர் லெப்டினன்ட் ஜெனரல் ஜே எஸ் நைனி – ஐ தொடர்ந்து பொறுப்பேற்றார்.
  • மேலும் அதி விஷிஷ்ட் சேவா பதக்கம், யுத் சேவா பதக்கம், சேனா பதக்கம், விஷிஷ்ட் சேவா பதக்கம் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.

 தொல்லியல் ஆய்வுகள்

2000 ஆண்டு பழமையான தமிழ் எழுத்து பொறித்த பானை ஓடு கண்டுபிடிப்பு

  • சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பாண்டியன் கோட்டையில் 2000 ஆண்டு பழமையான தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு சிவகங்கை தொல்லியல் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • கருப்பு, சிவப்பு நிற பானை ஓட்டில் கருப்பிலும், சிகப்பிலும் எழுத்து பொறிப்பு காணப்படுகிறது. அதில், மோ, ச, ர, ப, ன் ஆகிய தமிழி எழுத்துகள் வெளிப்படையாக தெரிகின்றன.பின்னர் இந்த தமிழி எழுத்து பொறித்த பானை ஓடுகள் சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கபட்டுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

SpaceX  நிறுவனம் முதல் ஃபால்கன் ஹெவி மிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது

  • SpaceX-ன் ஃபால்கன் ஹெவி, உலகின் மிக சக்திவாய்ந்த ராக்கெட்டு, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, புளோரிடாவின் கேப் கனாவெரலில் இருந்து முதன்முறையாக ஏவப்பட்டது, எலோன் மஸ்க்கின் நிறுவனம் அமெரிக்க விண்வெளிப் படைக்கான செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் அனுப்பியது.
  • மூன்று பால்கன் 9 பூஸ்டர்களைக் கொண்ட ராக்கெட் அமைப்பு, SpaceX ஏவுதளத்தில் இருந்து புறப்பட்டது, விண்வெளிப் படையின் இரண்டு செயற்கைக்கோள்கள் மற்றும் சிறிய செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் இணைக்கப்பட்டன.

விளையாட்டு செய்திகள்

சமீபத்திய ஐசிசி தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் உலகின் சிறந்த டி20 பேட்ஸ்மேன் ஆனார்

  • இந்திய பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், முகமது ரிஸ்வானை பின்னுக்கு தள்ளி,நம்பர் 1 டி20 பேட்டர் ஆனார்.
  • சர்வதேச கிரிக்கெட் நிர்வாகக் குழு வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசைப் பட்டியலின்படி, மொத்தம் 863 ரேட்டிங் புள்ளிகளுடன் சூர்யகுமார் இப்போது பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ரிஸ்வான் மொத்தம் 842 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

முக்கிய தினம்

உலக  ஜெல்லிமீன் தினம்

  • நவம்பர் 3 ஆம் தேதி, உலக ஜெல்லிமீன் தினம் மில்லியன் கணக்கான ஆண்டுகளாக பூமியில் இருக்கும் இந்த முதுகெலும்பில்லாத உயிரினத்தை கொண்டாடுகிறது. இந்த தனித்துவமான நீர்வாழ் விலங்குகளைப் பற்றி மேலும் அறிய இந்த நாள் நம்மை ஊக்குவிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!