CURRENT AFFAIRS – 2nd OCTOBER 2022

0
CURRENT AFFAIRS – 2nd OCTOBER 2022CURRENT AFFAIRS – 2nd OCTOBER 2022
CURRENT AFFAIRS – 2nd OCTOBER 2022

CURRENT AFFAIRS – 2nd OCTOBER 2022

சர்வதேச செய்திகள்

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் உருவம் பொரித்த நாணயங்கள் வெளியீடு

  • ராணியின் மரணத்திற்குப் பிறகு பிரித்தானியாவின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸின் உருவப்படம் கொண்ட முதல் நாணயங்களை ராயல் மிண்ட் வெளியிட்டுள்ளது.
  • டிசம்பரில் இருந்து புதிய மன்னன் மூன்றாம் சார்லஸின் நாணயங்களை மக்கள் பயன்படுத்துவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த நாணயங்களை மன்னர் சார்லஸால் தனிப்பட்ட முறையில் அங்கீகரிக்கப்பட்டதாகவும் மற்றும் நாணயத்தில் CHARLES III • D • G • REX • F • D • 5 POUNDS • 2022 எனவும் அச்சிடப்பட்டுள்ளது.
  • மேலும் எலிசபெத் ராணியை நினைவு கூறும் வகையில் புதிய £5 நாணயம் மற்றும் 50p நாணயத்தில் ராணியின் உருவப்படம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் மின்சார பயணிகள் விமானம்

  • உலகின் முதல் மின்சார பயணிகள் விமானம் வெற்றிகரமாக வானில் பறந்தது.
  • வாஷிங்டனில் உள்ள கிராண்ட் கவுண்டி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்த விமானம் வானில் 3,500 அடி உயரத்தில் 8 நிமிடங்கள் பறந்தது.
  • அலைஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் இஸ்ரேலை தளமாகக் கொண்ட ஏவியேஷன் விமான நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

 

தேசிய செய்திகள்

ஜி பி எஸ் முறையில் சுங்க வரி வசூல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது

  • சுங்கவரி செலுத்த வாகனங்கள் காத்திருத்தலை தடுக்க “பாஸ் டேக் ” திட்டம் நடைமுறை படுத்தப்பட்டது.
  • தற்போது வாகனங்களின் காத்திருப்பு தொடர்ந்த நிலையில் “பாஸ் டேக்” திட்டம் தோல்வி அடைந்துள்ளது.எனவே வாகனங்களின் காத்திருத்தலை தடுக்க ஜி பி எஸ் முறை மூலம் சுங்க கட்டணம் வசூல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் வாகனங்கள் சுங்க சாவடிகளை கடக்கும் போது ஜி பி எஸ் கருவியால் அடையாளம் கண்டு சுங்கக்கட்டணம் வங்கி கணக்குகளில் இருந்து கழித்து கொள்ளப்படுகிறது.
  • ஜி பி எஸ் முறையில் சுங்க கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை சோதனை முறையில் 2023 -ம் ஆண்டு ஜனவரி முதல் அமல்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது.

தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா- 2022

  • ஆண்டுதோறும் மத்திய அரசின் சார்பில் சிறந்த திரைப்படம், நடிகர், நடிகை உள்ளிட்ட பல பிரிவுகளில் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.அதன்படி, 2020ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழில் சூரரைப் போற்று, மண்டேலா, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படங்கள் மொத்தம் 10 விருதுகளை வென்றுள்ளன.
  • 68வது தேசிய விருது பட்டியலில் தமிழ் படங்கள் மொத்தம் 10 விருதுகளை வென்று முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக மலையாளம், மராத்தி ஆகிய மொழி திரைப்படங்கள் தலா 6 விருதுகளை வென்று பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளன.
          • சிறந்த நடிகர் விருது பெற்றவர்கள் அஜய் தேவ்கன் மற்றும் சூர்யா.
          • தாதாசாகேப் பால்கே விருதை ஆஷா பரேக் ஏற்றுக்கொண்டார்.
          • சிறந்த நடிகைக்கான விருது அபர்ணா பாலமுரளிக்கு

யுனிவர்சல் சர்வீஸ் ஒப்லிகேஷன் ஃபண்ட் (USOF) நிறுவனம் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியம் எனும் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது!!!

  • தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியம் (TTDF) கிராமப்புற-குறிப்பிட்ட தகவல் தொடர்பு தொழில்நுட்ப பயன்பாடுகளில் R&Dக்கு நிதியளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், USOF நாடு தழுவிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான தரங்களை உருவாக்குவதையும், ஆராய்ச்சி, வடிவமைப்பு, முன்மாதிரி, பயன்பாட்டு வழக்குகள், மற்றும் கருத்து சோதனைக்கான ஆதாரம் போன்றவற்றிற்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதையும் இலக்காகக் கொண்டுள்ளது.
  • இத்திட்டம், உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட உள்நாட்டு தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கவும், உள்வாங்கவும் இந்திய நிறுவனங்களுக்கு மானியங்களை வழங்குகிறது.

மாநில செய்திகள்

பெங்களூரில் விரைவில் ஹெலிகாப்டர் டாக்ஸி அறிமுகம்

  • பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் விரைவில் ஹெலிகாப்டர் சேவை வசதி செயல்படுத்த உள்ளது.
  • முதல்கட்டமாக அக்டோபர் 10ம் தேதி முதல் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் விமானநிலையம் இடையே வாரநாட்களில் இயக்கப்பட உள்ளது.
  • ஒருமுறை பயணம் செய்ய ரூ.3250 கட்டணத்தில் சேவை அளிக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் ராமேஸ்வரம் நகராட்சிக்கு சிறந்த தூய்மை நகரத்திற்கான விருது

  • குட்பை இல்லாத நகரங்களை உருவாக்கும் நோக்கத்துடன் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட தூய்மை இந்தியா நகர்ப்புற இயக்கம் 2.0 திட்டம்.
  • இத்திட்டத்தின் கீழ் தூய்மையான சிறு பெரு நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
  • இதில் 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் சுகாதார தூய்மைக்கான விருதுகளில் சிறப்பு விருது ராமேஸ்வரம் நகராட்சிக்கு வழங்கப்பட்டது.
  • விருது வழங்கும் நிகழ்வு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தின் சார்பில் செப்டம்பர் 29,30,அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் தில்லி தால்கடோரா மைதானத்தில் நடைபெற்றது.

 

நியமனங்கள்

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முதல் கறுப்பின பெண் நீதிபதி பதவி ஏற்பு

  • அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் அமர்ந்த முதல் கறுப்பினப் பெண் நீதிபதியாக கேடான்ஜி பிரவுன் ஜாக்சன், வாஷிங்டனில் பதவியேற்றார்.
  • அவர் ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்டீபன் பிரேயர்(84 வயது), அவருக்குப் பதிலாக நியமிக்கப்பட்டார்.
  • அமெரிக்கா உச்சநீதிமன்றம் தொடங்கி 233 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை 5 பெண் நீதிபதிகள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • இவர் 6 – வது முதல் கறுப்பின பெண் நீதிபதி ஆவார்.

 

பொருளாதார செய்திகள்

4-வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய ரிசர்வ் வங்கி: 5.90% ஆக அதிகரிப்பு

  • உயர்ந்து வரும் சில்லறை பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தொடர்ந்து நான்காவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது.
  • ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமாகும்.தற்போது ரெப்போ விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது.
  • இதனால் கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத வகையில் ரெப்போ விகிதம் 5.90 சதவீதமாக உயர்ந்துள்ளது.
  • தற்போது ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளதால், ஏனைய வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கும். இதனால் வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

 

புவியியல் அடையாளங்கள்

புவியின் உட்பகுதியில் பெருங்கடல் கண்டுபிடிப்பு

  • சர்வதேச ஆய்வின்படி, பூமியின் மேற்பரப்பிற்கு கீழே உள்ள அனைத்து கடல்களின் அளவை விட மூன்று மடங்கு நீர் தேக்கத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
  • பூமியின் மேற்பகுதிக்கும் உள் மையப்பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியின் மாறுதல் மண்டலத்திற்கு இடையே நீர் கண்டறியப்பட்டுள்ளது.
  • ராமன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி மற்றும் எஃப்டிஐஆர் ஸ்பெக்ட்ரோமெட்ரி உள்ளிட்ட நுட்பங்களைப் பயன்படுத்தி, பூமியின் மேற்பரப்பிற்கு கீழே 660 மீட்டர் ஆழத்தில் உருவான வைரத்தை ஆய்வுக் குழு பகுப்பாய்வு செய்தது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

நிலவுக்கு நவம்பர் மதம் ராக்கெட்டை அனுப்ப நாசா திட்டம்

  • 2025-க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா,இதன் முதல்கட்ட சோதனை முயற்சியாக,ஆர்டெமிஸ்-1 ராக்கெட்டை நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக அனுப்ப உள்ளது.
  • புயலின் பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்த காரணத்தினால்,ஏவுதளத்தில் இருந்த ராக்கெட் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள சேமிப்பு பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டது.
  • இதனால் ராக்கெட்டை நவம்பரில் ஏவ நாசா திட்டமிட்டு உள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

தேசிய விளையாட்டு போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி,பர்வின் தங்கம் வென்றனர்

  • 36வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் நடைபெற்று வருகிறது. இதில்
    தங்கம் வென்றவர்கள்:
  • மகளிருக்கான 49கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதலில் அசாமை சேர்ந்த மீராபாய் சானு தங்கம் வென்றார்.
  • மகளிருக்கான 10மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் குஜராத்தின் இளவேனில் வாலறிவன் 16-10 என்ற கணக்கில் திலோத்தமாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.
  • மகளிருக்கான 10மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் மகாராஷ்டிராவின் ருத்ராங்க்ஷ் பி.பாட்டீல் தங்கம் வென்றார்.
  • ஆடவருக்கான டிரிப்பிள் ஜம்ப்பில் தமிழகத்தின் பர்வின் சித்ரவேல் தங்கம் வென்றார்.
  • வாள்வீச்சில் மகளிருக்கான சேபர் தனிநபர் பிரிவில் தமிழகத்தின் பவானி தேவி தங்கம் வென்றார்.

ஆசிய மகளிர் உலக கோப்பை 2022

  • மகளிருக்கான 8வது ஆசிய கோப்பை தொடர் வங்கதேச நாட்டில் அக்டோபர் 1 -ம் தேதி முதல் தொடங்க உள்ளது.
  • பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அமீரகம் மற்றும் மலேசியா ஆகிய அணிகள் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
  • மேலும் இந்த போட்டியானது அக்டோபர் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
  • இந்த முறை ஆசிய கோப்பை தொடர் டி20 போட்டிகளாக நடைபெற உள்ளது.
  • இதுவரை நடந்த 7 ஆசிய உலக கோப்பை போட்டிகளில் இந்தியா 6 முறை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ சி சி டி20, 2022 ,உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகளுக்கான பரிசு தொகை அறிவிப்பு

  • இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை T20 உலக கோப்பை போட்டிகள் நடைபெறும், இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு ஐசிசி பரிசுகளை வழங்கும்.
  • ஐசிசி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் இந்த ஆண்டு மொத்தம் 5 மில்லியன் ரூபாய் மொத்தமாக பரிசு வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.இது இந்திய ரூபாய் மதிப்பில் 45 கோடியே 67 லட்சம் ரூபாய் ஆகும்.
  • டி20 உலக கோப்பையை வெல்லும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத்தொகையாக வழங்கப்படும். இந்திய ரூபாய் மதிப்பில் 13 கோடி ரூபாயாகும். இறுதி போட்டியில் தோல்வியை தழுவும் அணிக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ஆறரை கோடி ரூபாய் வழங்கப்படும்.
  • ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 அக்டோபர் 16 ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது.

இந்தியாவில் 2023 -ல் மோட்டோ ஜி பி பந்தயம்

  • உலக அளவில் பிரதான மோட்டார் சைக்கிள் பந்தயமான மோட்டோ ஜி பி ரேஸை இந்தியாவில் முதல் முறையாக அடுத்த ஆண்டு நடத்த உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • அந்த ஆண்டு செப்டம்பர் 22-24 கால கட்டத்தில் அதை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் சர்வதேச அளவிலான மோட்டார் பந்தயம் 9 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் மீண்டும் திரும்புகிறது.
  • தற்போது மோட்டோ ஜி பி பந்தயத்தை நடத்தும் நாடுகள் பட்டியலில் இந்தியா 31 வது களமாக இணைகிறது.
  • மொத்தம் 21 பந்தயங்கள் நடத்தப்படும் அடுத்த வருடம் இந்தியாவில் 2023 செப்டம்பர்-ல் 14- வது சுற்றை நடத்த பட்டியலிடப்பட்டுள்ளது .

 

முக்கிய தினங்கள்

தேசிய தன்னார்வ ரத்ததான தினம்

• தேசிய தன்னார்வ ரத்ததான தினம் இந்தியாவில் அக்டோபர் 1 ஆம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

கருப்பொருள்:

o ‘ஒற்றுமையுடன் ரத்த தானம் செய்வோம். ஓருங்கிணைந்த முயற்சியுடன் உயிர்களைக் காப்போம்’ என்பதாகும்.

ஜல் சக்தி அமைச்சகம் ஸ்வச் பாரத் திவாஸ் கொண்டாடுகிறது

  • குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை (DDWS), ஜல் சக்தி அமைச்சகம், 2 அக்டோபர் 2022 அன்று தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாளை ஸ்வச் பாரத் திவாஸ் (SBD) என நினைவுகூருகிறது.
  • இன்று இந்திய குடியரசுத் தலைவர் திருமதி.திரௌபதி முர்மு ஸ்வச் சர்வேக்ஷன் கிராமீன் (SSG) 2022, ஸ்வச்தா ஹி சேவா 2022, சுஜ்லம் 1.0 & 2.0, ஜல் ஜீவன் மிஷன் (JJM) செயல்பாட்டு மதிப்பீடு, ஹர் கர் ஜல் சான்றளிப்பு மற்றும் ஸ்டார்ட்-அப் ஆகியவற்றிற்கான விருதுகளை வழங்குவார்.
  • ஸ்வச் பாரத் திவாஸ்-2022 ஐ அக்டோபர் 2 ஆம் தேதி புது தில்லி விஞ்ஞான் பவனில் ஏற்பாடு செய்துள்ளது.
  • இன்று நாம் மகாத்மா காந்தியின் 153வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!