நடப்பு நிகழ்வுகள் – 2 மார்ச் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 2 மார்ச் 2023
நடப்பு நிகழ்வுகள் - 2 மார்ச் 2023

நடப்பு நிகழ்வுகள் – 2 மார்ச் 2023

தேசிய செய்திகள்

பூசா கிரிஷி விக்யான் மேளாவை மத்திய விவசாயத்துறை அமைச்சர் ஸ்ரீ தோமர் தொடங்கி வைத்தார்

  • இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (IARI) ஒவ்வொரு ஆண்டும் பூசா க்ரிஷி விக்யான் மேளா (Pusa Krishi Vigyan Mela) புது தில்லியில் மார்ச் 2 முதல் 4 வரை நடத்தப்படுகிறது.
  • இந்நிகழ்ச்சியை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்தார்.
  • இக்கண்காட்சியின் கருப்பொருள் “Nutrition, Food and Environmental Protection with Shree Anna”.

பயிற்சி ஷின்யு மைத்ரி 2023

  • Shinyuu Maitri என்ற பயிற்சியானது ஜப்பானின் Komatsuவில் 13 பிப்ரவரி 2023 முதல் 02 மார்ச் 2023 வரைநடத்தப்படுகிறது. இப்பயிற்சியில் IAF குழுவானது ஒரு C-17 Globemaster III விமானத்துடன் Shinyuu Maitri 23 பங்கேற்கவுள்ளது.
  • இப்பயிற்சியானது வல்லுநர்கள் பரஸ்பரம் செயல்படும் தத்துவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்கும், ஆய்வு செய்யவும் வாய்ப்பளிக்கிறது, மேலும் இது IAF மற்றும் JASDF க்கு இடையே இயங்கக்கூடிய தன்மை மற்றும் பரஸ்பர புரிதலை வழங்குகிறது.

 

 

சர்வதேச செய்திகள்

2022 –ம் ஆண்டில் உலகில் அதிக எண்ணிக்கையிலான இணைய முடக்கப்பட்ட நாடுகளின் பட்டியல்

  • இன்டர்நெட் அட்வகேசி வாட்ச்டாக் ஆக்சஸ், உலகம் முழுவதும் அதிக எண்ணிக்கையிலான இணையத் தடைகள் கொண்ட நாடுகளின் புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது, அந்தப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • உக்ரைன் 22 முறை இணையத் தடைகள் செய்யப்பட்ட பட்டியலில் இரண்டாவது இடத்தையும், ஈரான் 18 முறை பணிநிறுத்தம் செய்யப்பட்ட பட்டியலில் மூன்றாவது இடத்தையும் பிடித்ததுள்ளது.

 

மாநில செய்திகள்

பொதுமக்கள் புகைப்பிடிப்பதைத் தடுக்கும் வகையில் கர்நாடக அரசு ‘Stop Tobacco’ செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது

  • கர்நாடக அரசாங்கத்தின் மாநில புகையிலை கட்டுப்பாட்டுப் பிரிவு (STCC) ‘Stop Tobacco’ என்ற குறிப்பிட்ட செயலியை பிப்ரவரி 28, 2023 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த செயலியின் மூலம் பயனர்கள் பொது இடங்களில் புகைபிடிக்கும் நபர்களின் புகைப்படத்தை எடுக்க அனுமதிப்பதும், புகைபிடிக்கும் நபர்களின் படங்களை பதிவேற்றுவதும்,மேலும் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

8வது ரைசினா உரையாடல் புதுதில்லியில் நடைபெறவுள்ளது

  • ரைசினா உரையாடலின் 8வது பதிப்பை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பார், மேலும் இவ்வுரையாடல் மார்ச் 2 முதல் மார்ச் 4, 2023 வரை புது தில்லியில் நடைபெறவுள்ளது.
  • ரைசினா உரையாடல் என்பது புவி-பொருளாதாரம் மற்றும் புவி-அரசியல் பற்றி விவாதிக்கும் வருடாந்திர மாநாடு ஆகும். மேலும் இந்த உரையாடல் பெரும்பாலும் வெளியுறவுக் கொள்கைகள், புவிசார் அரசியல், அணுசக்தி பிரச்சினைகள் மற்றும் சர்வதேச உறவுகளில் கவனம் செலுத்துகிறது.
    • 8வது உரையாடலின் கருப்பொருள் “Provocation, Uncertainty, Turbulence: Lighthouse in the Tempest”.

 

நியமனங்கள்

பத்திரிகை தகவல் பணியகத்தின் புதிய முதன்மை இயக்குநர் ஜெனரல் நியமிக்கப்பட்டுள்ளார்

  • ஸ்ரீ ராஜேஷ் மல்ஹோத்ரா, பத்திரிகை தகவல் பணியகத்தின் (PIB) முதன்மை இயக்குநர் ஜெனரலாகப் பொறுப்பேற்றுள்ளார், ஸ்ரீ சத்யேந்திர பிரகாஷ் ஓய்வு பெற்ற பிறகு, ஸ்ரீ மல்ஹோத்ரா புதிய முதன்மை இயக்குநர் ஜெனரலாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
  • ஸ்ரீ ராஜேஷ் மல்ஹோத்ரா, 1989 பிரிவை சேர்ந்த இந்திய தகவல் சேவை (IIS) அதிகாரியைச் சேர்ந்தவர் ஆவார், மேலும் ஜனவரி 2018 முதல் நிதி அமைச்சகத்தில் பணிபுரிந்துள்ளார்.

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் நியமனம்

  • மம்தா குமாரி, டெலினா கோங்தூப் மற்றும் குஷ்பு ஆகியோர் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • தேசிய மகளிர் ஆணையச் சட்டம், 1990 (20 இன் 1990) பிரிவு 3-ன் கீழ், மத்திய அரசு இவர்கள் மூவரையும் தேசிய மகளிர் ஆணையத்தில் (NCW) உறுப்பினர்களாக மூன்று வருட காலத்திற்குப் பரிந்துரைக்கிறது.

வைஸ் அட்மிரல் தினேஷ் கே திரிபாதி மேற்கு கடற்படையின் தளபதியானார்

  • வைஸ் அட்மிரல் தினேஷ் கே திரிபாதி மும்பையை தலைமையிடமாகக் கொண்ட மேற்கு கடற்படை தளபதியாக பொறுப்பேற்றார்.
  • இவருக்கு முன் வைஸ் அட்மிரல் அஜேந்திர பகதூர் சிங் மேற்கு கடற்படை தளபதியாக (WNC) அதிகாரி தளபதியாக பதவிவகித்தார்.

நைஜீரியாவின் புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டார்

  • ஆப்பிரிக்க நாடான நைஜீரியா ஜனாதிபதித் தேர்தல் 25 பிப்ரவரி 2023 அன்று நடைபெற்றது, அந்தத் தேர்தலில் போலா டினுபு, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார்.
  • சுதந்திர தேசிய தேர்தல் ஆணையத்தின் (INEC) கருத்துப்படி, டினுபு79 மில்லியன் வாக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றார்.

 

விருதுகள்

ஸ்போர்ட்ஸ்டார் ACES விருது 2023

  • ஸ்போர்ட்ஸ்டார் ஏசஸ் விருதுகள் 2023 விழா மும்பையில் நடைபெற்றது. இவ்விழாவில் 27 பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டின் பெயர் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனை
கிரிக்கெட் ஹர்திக் பாண்டியா ஹர்மன்ப்ரீத் கவுர்
தடம் மற்றும் களம் அவினாஷ் சேபிள் அண்ணு ராணி
குழு விளையாட்டு (ஹாக்கி) PR ஸ்ரீஜேஷ் மற்றும் சுனில் சேத்ரி சவிதா புனியா
ராக்கெட் விளையாட்டு லக்ஷ்யா சென் மற்றும் சரத் கமல் தீபிகா பள்ளிகல் கார்த்திக்
பாரா ஸ்போர்ட்ஸ் ராகுல் ஜாகர் (படப்பிடிப்பு) மணீஷ் ராமதாஸ் (பேட்மிண்டன்)

 

 

விளையாட்டு செய்திகள்

ஐசிசி டெஸ்ட் சிறந்த பந்துவீச்சாளர்களின் தரவரிசை பட்டியல்

  • சிறந்த பந்துவீச்சாளர்களின் புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
  • புதிய தரவரிசை பட்டியலின் படி
    • இந்திய அணியை சேர்ந்த அஸ்வின் முதல் இடம் பிடித்துள்ளார்.
    • இங்கிலாந்தை ஜேம்ஸ் ஆண்டர்சன் 2வது இடம் பெற்றுள்ளார்,
    • ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த பேட் கம்மின்ஸ் 3வது இடம் பிடித்துள்ளார்,
    • இந்தியாவை சேர்ந்த பும்ரா 4வது இடம் பிடித்த்துள்ளார்.

 

முக்கிய தினம்

பூஜ்ஜிய பாகுபாடு தினம் 2023

  • பூஜ்ஜிய பாகுபாடு தினம் ஒவ்வொரு ஆண்டும் 1 மார்ச் 2023 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • இயலாமை, இனம், பாலினம், மதம், வயது ஆகியவற்றின் அடிப்படையிலான அனைத்து வகையான பாகுபாடுகளையும் ஒழிக்க சர்வதேச அளவில் ஒற்றுமையின் இயக்கத்தைத் தொடங்குவதே இந்நாளைக் அனுசரிக்கப்படுவதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.
    • இந்த நாளின் கருப்பொருளாக “Save lives: Decriminalise”

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!