நடப்பு நிகழ்வுகள் – 2 டிசம்பர் 2022

0
நடப்பு நிகழ்வுகள் – 2 டிசம்பர் 2022
நடப்பு நிகழ்வுகள் – 2 டிசம்பர் 2022

நடப்பு நிகழ்வுகள் – 2 டிசம்பர் 2022

தேசிய செய்திகள்

இந்தியாவில் மிகப்பெரிய சர்வதேச யோகா மையம் அமைக்கப்படவுள்ளது

  • இந்தியாவின் மிகப்பெரிய யோகா மையம் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் உதம்பூரின் செனானி தாலுகாவில் உள்ள மண்டலை கிராமத்தில் அமைக்கப்படவுள்ளது.
  • மேலும் இந்தப் பணிக்காக இந்திய அரசின் சுற்றுலா துறை அமைச்சகம் ரூ. 9,782 கோடியை அனுமதித்துள்ளது, இங்கு நீச்சல் குளங்கள், வணிக மாநாட்டு மையங்கள், ஹெலிபேடுகள், ஸ்பாக்கள் போன்றவற்றுடன் நவீனமாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

IGI விமான நிலையத்தில் டிஜி யாத்ரா வசதி தொடங்கப்பட்டுள்ளது

  • சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய எம். சிந்தியா டிஜி யாத்ரா வசதியை புது தில்லியில் உள்ள IGI விமான நிலையத்தில் திறந்து வைத்தார், இந்த வசதி டெல்லி, பெங்களூர் மற்றும் வாரணாசி உள்ளிட்ட நாட்டின் மூன்று விமான நிலையங்களில் டிசம்பர் 1, 2022 அன்று தொடங்கப்பட்டது.
  • விமான நிலையங்களின் பல்வேறு சோதனைச் சாவடிகளில் பயணிகளின் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் டிஜி யாத்ரா சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கிழக்கு  கடலோர  காவல்படையில்   புதிய விமானப் படை தொடங்கப்பட்டுள்ளது

  • இந்திய கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்தியத்தில், ஏ.எல்.ஹெச். எனும், ‘அட்வான்ஸ்டு லைட் ஹெலிகாப்டர் எம்.கே.,-3’ என்ற, நான்கு அதிநவீன ஹெலிகாப்டர்கள் அடங்கிய விமானப் படை, புதிதாக துவங்கபட்டுள்ளது.
  • மேலும் இந்திய கடலோர காவல்படைக்காக, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன், 16 அதிநவீன ரேடார், எலக்ட்ரோ ஆப்டிக்கல் சென்சார் மற்றும் பல தொழில் நுட்ப சாதனங்களுடன் இயங்கும் இலகு ரக ஹெலிகாப்டர்களை தயாரித்து வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், நான்கு ஹெலிகாப்டர்கள் கிழக்கு பிராந்தியத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

 

சர்வதேச செய்திகள்

இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம்

  • இந்தியாவும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம், ECTA கையெழுத்தானது, இது டிசம்பர் 29, 2022 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் இந்த ஒப்பந்தத்தின் கீழ் 100 சதவீத கட்டண வரிகள் ஆஸ்திரேலியாவால் நீக்கப்பட்டுள்ளது.
  • இந்தியா-ஆஸ்திரேலியா ECTA ஒப்பந்தம் ஆனது சரக்கு மற்றும் சேவைகளில் இருதரப்பு வர்த்தகத்தை கணிசமாக மேம்படுத்தும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் மற்றும் மக்களின் பொது நலனை மேம்படுத்தும்.

சீனாவின் முன்னாள் அதிபர் ஜியாங் ஜெமின் காலமானார்

  • சீனாவில் கடந்த 1989 முதல் 2004-ம் ஆண்டு வரை ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளராகவும், 1993 முதல் 2003-ம் ஆண்டு வரை அந்த நாட்டின் அதிபராகவும் பதவி வகித்தவர் ஜியாங் ஜெமின்.
  • 96 வயதான இவர் உடல் நலக்குறைவால் 30 நவம்பர் 2022 அன்று மாலை உயிரிழந்தார்,சீனா பொருளாதார நவீன மயமாக்கலின முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மாநில செய்திகள்

குஜராத்தில் முதல் முறையாக வாக்களித்த மினி ஆப்பிரிக்கா மக்கள்

  • குஜராத் மாநிலத்தில் மினி ஆப்பிரிக்கா என்று அழைக்கப்படும் ஜாம்பூர் கிராம மக்கள், பல ஆண்டுகளுக்கு முன்பு படகு ஓட்டிகளாகவும், வணிகர்களாகவும் ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியா வந்த பழங்குடியினர் ஜூனாகத் மாவட்டம் ஜாம்பூர் கிராமத்தில் தங்கி வருகின்றனர்.
  • தற்போது இவர்களுக்கு முதல்முறையாக  இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டு  குஜராத் தேர்தலில் வாக்காளிக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மிஷன் சென்னை திட்டம் தொடங்கப்பட்டது

  • சுகாதாரம் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த “மிஷன் சென்னை” வாகனத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
  • சுகாதாரம் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து ஹுண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து “மிஷன் சென்னை ” என்ற திட்ட வாகனம் தொடங்கப்பட்டுள்ளது.

 

 

சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி

  • சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி பொங்கல் விடுமுறை நாள்களான ஜனவரி 16, 17 மற்றும் 18ஆம் தேதிகளில் சென்னையில் முதல்முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது என்பதை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
  • இந்த புத்தக கண்காட்சியில் மொத்தம் 40 நாடுகளை கலந்து கொள்ள வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் சிறந்த அரசு பள்ளிகளுக்கான பட்டியல் வெளியீடு

  • சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் பெயரில் விருது வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். கற்றல் கற்பித்தல், தலைமைத்துவம், ஆசிரியர் திறன் மேம்பாடு ஆகிய பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் பள்ளிகளுக்கு விருது வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
  • மேலும் 2020 -21ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டின் சிறந்த அரசு பள்ளிகளுக்கான பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் இருந்து தலா 3 பள்ளிகள் என 114 பள்ளிகள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அரசு தாவரவியல் பூங்கா கடம்பூரில் அமைக்கபடவுள்ளது

  • 2022-தமிழக பட்ஜெட்டில் அறிவித்துள்ள படி 300 கோடி ரூபாய் மதிப்பில் தாவரவியல் பூங்கா செங்கல்பட்டு மாவட்டம், கடம்பூரில், 338 ஏக்கர் பரப்பில் அமைக்கப்படவுள்ளது.
  • ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள, ‘கியு பூங்கா’ போன்று, இந்த தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என்றும் பூங்கா அமைப்பதற்கான ஆலோசனைகள் பெற, லன்டனில் உள்ள கியூ பூங்கா நிர்வாகத்துடன் ஒப்பந்தம் செய்யபடும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அலுமினிய பூங்காவிற்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அடிக்கல் நாட்டினார்.

  • ஜார்சுகுடாவில் 253 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வேதாந்தா அலுமினிய பூங்கா, இந்தியாவின் மிகப்பெரிய உலோக பூங்காக்களில் ஒன்றாக அமைக்கப்படவுள்ளது,இந்த திட்டம் வேதாந்தா அலுமினியம் மற்றும் ஒடிசா தொழில்துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் கூட்டு முயற்சியாகும்.
  • இந்த பூங்கா உலகத் தரம் வாய்ந்த தொழில்துறை வசதியாகவும், அங்கு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி அலகுளை அமைக்கலாம் மற்றும் ஜார்சுகுடாவில் உள்ள வேதாந்தாவின் ஸ்மெல்ட்டரில் உலோகத்தை உருக்கிப் பிரித்தும் எடுக்கலாம்.

நாகாலாந்து மாநிலம் உருவான நாள்

  • நாகாலாந்து, டிசம்பர் 1, 1963 அன்று இந்தியாவின் யூனியனின் 16வது மாநிலமாக பிரிக்கப்பட்டது மற்றும் இந்த வருடம் 60வது மாநில தினத்தை கொண்டாடுகிறது.
  • இவ்விழாவில் நாகாலாந்து முதலமைச்சர் காவல்துறையின் SAHYOG திட்டத்தை தொடங்கி வைப்பார் மேலும் நாகாலாந்து காவல்துறையின் சிறப்பு நடவடிக்கை குழு வாகனங்களையும் கொடியசைத்து தொடங்கி வைப்பார்.
  • சஹியோக் திட்டம் –  நாகாலாந்து இந்திய ரிசர்வ் (IR) பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான மருத்துவ உதவித் திட்டமான ‘Project SAHYOG’ க்காக நாகாலாந்து காவல்துறை மற்றும் கிறிஸ்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் சயின்சஸ் அண்ட் ரிசர்ச் (CIHSR) ஆகிய இரு நிறுவனங்களுக்கு இடையே  புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது

 

பொருளாதார செய்திகள்

இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதம் குறைந்துள்ளது

  • தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்.எஸ்.ஓ.) வெளியீட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் நடப்பு 2022-23 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) பொருளாதார வளர்ச்சி ( மொத்த உள்நாட்டு உற்பத்தி) 6.3 சதவீதம் ஆக குறைந்துள்ளது,முந்தைய ஏப்ரல்-ஜூன் காலாண்டில்5 சதவிகித வளர்ச்சி அடைந்த நிலையில் தற்போது வளர்ச்சியானது  குறைந்துள்ளது.
  • உற்பத்தி மற்றும் சுரங்கத் துறைகளின் மோசமான செயல்திறனால் GDP வளர்ச்சியானது குறைந்துள்ளது,மேலும் 2021-22 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி4 சதவீதமாக இருந்தது.

நவம்பர் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.45 லட்சம் கோடி

  • ஜி.எஸ்.டி. வரி வசூல் குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சகம்  2022 நவம்பர் மாதம்  ரூ.1,45,867 கோடி ஜி.எஸ்.டி. வசூலாகி இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இதில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.25,681 கோடி, மாநில ஜி.எஸ்.டி. ரூ. 32,651 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.77,103  கோடி .
  • அதிக ஜி.எஸ்.டி.வசூல் செய்த மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடம் பிடித்துள்ளது,கர்நாடகா இரண்டாம் இடத்திலும்,குஜராத் மூன்றாம் இடத்திலும் தமிழ்நாடு நான்காம் இடத்தையும் பிடித்துள்ளது.

 

விருதுகள்

இந்திய வனவிலங்கு அறக்கட்டளை விருது

  • இந்திய வனவிலங்கு அறக்கட்டளையானது, இப்பகுதியில் மனித-விலங்கு மோதல் சம்பவங்களைக் குறைப்பதற்காக இந்த ஆண்டு விருதுக்கு சின்னக்கானலில் (மூணாறு வனப் பிரிவு) எட்டு பேர் கொண்ட குழுவைத் தேர்ந்தெடுத்துள்ளது.
  • காட்டு யானைகள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணிக்காக குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • இந்திய வனவிலங்கு அறக்கட்டளை (WTI) என்பது இயற்கைப் பாதுகாப்பிற்கு உறுதியளிக்கப்பட்ட ஒரு இந்திய அரசு சாரா நிறுவனமாகும், இதன் குறிக்கோள் “இயற்கையின் சேவை” மற்றும் அதன் நோக்கம் வனவிலங்குகளையும் அதன் வாழ்விடத்தையும் பாதுகாப்பதாகும்.

 

விளையாட்டு செய்திகள்

FIFA உலகக் கோப்பை 2022: முதல்  பெண்  நடுவர்

  • ஆடவர் உலகக் கோப்பைப் போட்டியின் நடுவராகப் பொறுப்பேற்ற முதல் பெண் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்டெபானி ஃப்ராபார்ட் என்பவரை FIFA அறிவித்துள்ளது.
  • 2 டிசம்பர் 2022 அன்று குரூப் E இல் ஜெர்மனிக்கும் கோஸ்டாரிகாவுக்கும் இடையே நடக்கும் போட்டியில் அவர் கலந்து கொள்வார், கத்தாரில் நடக்கும் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 36 நடுவர்களில் பிரான்சின் ஃப்ராபார்ட் ஒருவராவார்.

 

முக்கிய தினம்

எல்லை பாதுகாப்புப் படை எழுச்சி தினம்

  • இந்திய நாட்டின் சர்வதேச எல்லைகளின் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றி வரும் எல்லை பாதுகாப்புப் படை இந்திய அரசால் கடந்த 1965-ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி உருவாக்கப்பட்டது.
  • இந்தியாவைப் பாதுகாப்பதிலும், நமது தேசத்திற்கு மிகுந்த விடாமுயற்சியுடன் சேவை செய்வதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1-ந்தேதி எல்லை பாதுகாப்புப் படை எழுச்சி தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

தேசிய மாசுக் கட்டுப்பாட்டு தினம்

  • மாசு மற்றும் அதன் அபாயகரமான விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தேசிய மாசுக் கட்டுப்பாட்டு தினம் டிசம்பர் 2 அன்று கொண்டாடப்படுகிறது.
  • மிகப்பெரிய தொழில் பேரழிவுகளில் ஒன்றாகக் கருதப்படும் போபால் வாயுப் பேரிடரில் உயிரிழந்த மக்களின் நினைவாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

உலக  கணினி எழுத்தறிவு தினம்

  • உலக கணினி எழுத்தறிவு தினம் 2001 இல் (தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம்) என்.ஐ.ஐ.டி என்ற இந்திய நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. நிறுவனம் 1981 இல் நிறுவப்பட்டது அதன் 20வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் அனுசரிக்கப்படுகிறது .
  • இந்த நாள் “உலகளவில் பின்தங்கிய சமூகங்களில் விழிப்புணர்வை உருவாக்கி டிஜிட்டல் கல்வியறிவை ஏற்படுத்துவதை” நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உலக கணினி எழுத்தறிவு தினத்தின் கருப்பொருளாக : “மனிதனை மையமாகக் கொண்ட மீட்சிக்கான எழுத்தறிவு: டிஜிட்டல் பிரிவைக் குறைக்கிறது”

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!