நடப்பு நிகழ்வுகள் – 29 அக்டோபர் 2022

0
நடப்பு நிகழ்வுகள் – 29 அக்டோபர் 2022
நடப்பு நிகழ்வுகள் – 29 அக்டோபர் 2022

நடப்பு நிகழ்வுகள் – 29 அக்டோபர் 2022

தேசிய செய்திகள்

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் என்ஐஏ கிளைகள் அமைக்கப்பள்ளன

  • நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)-யின் கிளைகள் அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
  • தீவிரவாத தடுப்புக்கான வலிமையான கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில், வரும் 2024-க்குள் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் என்.ஐ.ஏ கிளைகளை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
      • NIA – National Investigation Agency

75 எல்லைச் சாலைத் திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன

  • பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எல்லைச் சாலைகள் அமைப்பின் (BRO) 75 வெவ்வேறு திட்டங்களை நாட்டின் கடைசி கிராமமான லேவில் உள்ள ஷியோக்கில் இருந்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
  • ஜம்மு & காஷ்மீர், லடாக், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட சர்வதேச எல்லைகளைக் கொண்ட மாநிலங்களை உள்ளடக்கிய 45 பாலங்கள், 27 சாலைகள் மற்றும் இரண்டு ஹெலிபேடுகள் ஆகியவை இந்தத் திட்டங்களில் அடங்கும்.
    • BRO-Border Roads Organisation

“ஒரே நாடு ஒரே காவல் சீருடை”

  • அரியானாவின் சூரஜ்கண்டில் நடைபெற்ற மாநில உள்துறை அமைச்சர்கள் 2 வது நாள் மாநாட்டில் காணொளி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி மத்திய அரசின் ‘ஒரே நாடு, ஒரே காவல் சீருடை’ என்ற யோசனையை முன் வைத்துள்ளார்.
  • மேலும் காவல்துறையில் பல தொழில்நுட்ப இயக்கத்தை அரசு தொடங்கியுள்ளது. இந்த பணி இந்தியாவில் காவல்துறையின் செயல்களை வலுப்படுத்த தொழில்நுட்பம் சார்ந்த சீர்திருத்தங்கள் மற்றும் செயல்முறைகளை அறிமுகப்படுத்தும் வகையில் இயங்குகிறது என்று கூறினார்.

                             

 

சர்வதேச செய்திகள்

உலகின் மிக பரபரப்பான  விமான நிலையங்களின் பட்டியல் வெளியீடு

  • விமானத் துறை ஆய்வு நிறுவனமான (OAG), உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது,2019 அக்டோபர் மற்றும் 2022 அக்டோபர் மாதங்களின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை நிலவரங்களை ஒப்பிட்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் அட்லாண்டா விமான நிலையம் உள்ளது. துபாய் விமான நிலையம் 2-வது இடத்திலும் டோக்கியோ ஹனேடா விமான நிலையம் 3-வது இடத்திலும் உள்ளன
  • இந்நிலையில் நடப்பு ஆண்டு அக்டோபரில் 10-வது இடத்தில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் இடம்பெற்றுள்ளது.
    • OAG- Official AirlineGuide

1வது ஆசியான்-இந்தியா தொடக்க விழா 2022

  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயலாளரான டாக்டர் ஸ்ரீவாரி சந்திரசேகர், 2022 அக்டோபர் 27 அன்று இந்தோனேசியாவின் போகூரில் 1வது ஆசியான்-இந்தியா தொடக்க விழாவை (AISF) தொடங்கி வைத்தார்.
  • மேலும் 1வது ஆசியான்-இந்தியா தொடக்க விழாவை வெற்றிகரமாக நடத்துவதன் மூலம் தொடக்கப் பொருளாதாரத்தை விரைவுபடுத்தவும், மேலும் ஆசியான்-இந்தியா ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக உள்ளது.

 

மாநில செய்திகள்

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கான  தலைமை அலுவலகம் திறப்பு

  • அதிநவீன வசதிகளை கொண்ட சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கான தலைமை அலுவலகத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி ஆகியோர் திறந்து வைத்தனர்.
  • இந்த தலைமை அலுவலக கட்டிடம் தனித்துவ வடிவமைப்பை கொண்டு அதிநவீன வசதிகளுடன் வளைந்த வடிவமைப்பு, தகவல் தொடர்பினை மேம்படுத்துவதாகவும், எளிதில் நடமாடும் வகையிலும், பூகம்ப நேரத்தில் ஏற்படும் பளு மற்றும் காற்றின் பாதிப்பினைக் குறைக்கும் வகையிலும் மிக பிரமாண்டமாக 12 மாடிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

ஹரியாணா மாநிலத்தில் ரூ.5,618 கோடி ரயில் திட்டம் – அமித் ஷா அடிக்கல் நாட்டினார்

  • ஹரியாணாவில் பல்வால் முதல் சோனிபட் வரை 126 கி.மீ. தொலைவுக்கு அரைவட்ட வடிவில் இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது.
  • இத்திட்டம் ரூ.5,618 கோடி செலவில் மேற் கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்துக்கு அமைச்சர் அமித் ஷா பரிதாபாத்தில் அடிக்கல் நாட்டினார்.

கர்நாடகாவில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு  இடஒதுக்கீடு உயர்வு

  • கர்நாடக மாநில‌த்தில் எஸ்.சி. வகுப்பினருக்கு 15 சதவீதமும், எஸ்.டி. வகுப்பினருக்கு 3 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
  • இந்த சதவீதத்தின் அளவை மக்கள்தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப 7 சதவீதம் அதிகரித்து எஸ்.சி. வகுப்பினரின் இட ஒதுக்கீட்டை 15 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாகவும், எஸ்.டி. வகுப்பினரின் இட ஒதுக்கீட்டை 3 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது மேலும் இந்த அவசர சட்டம் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் பெற்று நிறைவேற்றப்பட்டது.

வ.உ. சிதம்பரனார் துறைமுகம் அதிக அளவில் இறக்குமதி செய்து சாதனை படைத்தது

  • தமிழகத்தில் தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் துறைமுகம், 27.10.22 அன்று 120 காற்றாலை பிளேடுகளை இறக்குமதி செய்யப்பட்டது,
  • சரக்கு மற்றும் சரக்கு கையாளும் தொழிலாளர்களின் பாதுகாப்பில் மிகுந்த அக்கறையுடன், இரண்டு ஹார்பர் மொபைல் கிரேன்கள் மூலம் 120 காற்றாலை பிளேடுகளை சரக்குகளும் கையாளப்பட்டன.

 

நியமனங்கள்

ஜி-20 அமைப்பின் சி-20 குழுவின் தலைவர் நியமனம்

  • மாதா அமிர்தானந்தமயி தேவி ஜி -20 அமைப்பில் சிவில் 20 (C-20), குழு  இன் அதிகாரப்பூர்வ  தலைவராக மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சி-20 என்பது சிவில்-சமூக அமைப்புகளுக்கு (CSO) ஜி20 தலைவர்களுக்கு அரசு அல்லாத மற்றும் வணிகம் அல்லாத தகவல்களை தெரிவிப்பதாகும்.

சாம்சங் நிறுவன தலைவராக லீ ஜே யோங் தேர்வு

  • தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரபல பன்னாட்டு நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் தலைவராக லீ ஜே யோங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • இவர் சாம்சங் நிறுவனத்தை நிறுவிய லீ பியுங் பங் குடும்பத்தை சேர்ந்த 3-ம் தலைமுறை நபராவார். 54 வயதான லீ ஜே யோங் கடந்த 2012-ம் ஆண்டு முதல் சாம்சங் நிறுவனத்தின் துணை தலைவராக இருந்து வருகிறார்.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

ஹைப்பர் சோனிக் ஏவுகணையை சோதனை செய்த அமெரிக்கா

  • ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லும் ஹைப்பர் சோனிக் ஏவுகணையை அமெரிக்கா மீண்டும் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • கடல் மற்றும் நிலம் சார்ந்த ஹைப்பர்சோனிக் திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சோதனை இதுவாகும். மேலும் இதன் முதல் சோதனை அக்டோபர் 2021 இல் நடத்தப்பட்டது.

நாசாவின்  செயற்கைக்கோள் சூரியனின் மேற்பரப்பில் ஒரு புன்னகை முகத்தை படம்பிடித்தது

  • நாசாவின் சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி சூரியனின் “புன்னகை” முகத்தை படம் பிடித்தது. சூரியனில் உள்ள இந்த இருண்ட திட்டுகள் கரோனல் துளைகள் என்று அழைக்கப்படுகின்றன, மேலும் அவை வேகமான சூரியக் காற்று விண்வெளியில் வெளியேறும் பகுதிகளாகும்.
  • இந்த கரோனல் துளைகள் பூமியை நோக்கி  சூரியக் காற்றை   வெளியிடுகின்றன, அவை நமது பூமியில் தீவிர சூரிய புயல்களை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.

 

விருதுகள்

கடலோரப் பகுதிகளுக்கான ‘நீலக் கொடி’ சுற்றுச்சூழல் சான்று

  • இலட்சத்தீவில் இரண்டு புதிய இந்திய கடற்கரைகள் — மினிகாய் துண்டி கடற்கரை மற்றும் கத்மட் கடற்கரை ஆகியவை சர்வதேச சுற்றுச்சூழல் சான்று ‘நீலக்கொடி’ பெற்றுள்ளன.
  • இந்த நீலக் கொடி சான்றிதழுடன், நாட்டில் நீலக் கொடி சான்றளிக்கப்பட்ட கடற்கரைகளின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

கேலோ இந்தியா பெண்கள் பளு தூக்குதல் 2022

  • கேலோ இந்தியா தேசிய தரவரிசை மகளிர் பளு தூக்குதல் போட்டி 2 ஆம் கட்டம், நொய்டாவின் காஜியாபாத்தில் நடைபெற்று வருகிறது, இதில் அகன்ஷா வியாவஹரே கேலோ இந்தியா போட்டியில் 40 கிலோ பிரிவில் பளு தூக்குதல் தேசிய சாதனை படைத்தார்.
  • மீராபாய் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா பளுதூக்குதல் போட்டியின் முதல் கட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்

 

முக்கிய நாள்

உலக பக்கவாத தினம் 2022

  • 2006ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் அக்டோபர் 29 அன்று உலக பக்கவாதம் தினம் அனுசரிக்கப்படுகிறது,உலகத்தில் மக்கள் இறப்பதற்கு முக்கியமான நோய்களின் ஒன்றாக இருக்கிறது பக்கவாதம்,இந்த நோய் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த தினத்தின் கருப்பொருள் “விலைமதிப்பற்ற நேரம்”

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!