Current Affairs – 27th September 2022

0
Current Affairs – 27th September 2022
Current Affairs – 27th September 2022
Current Affairs – 27th September 2022

தேசிய செய்தி

“JALDOOT App” – ஐ ஸ்ரீ கிரிராஜ் சிங் அறிமுகப்படுத்தியுள்ளார்
 • ஊரக வளர்ச்சி அமைச்சகம் “JALDOOT App”- ஐ உருவாக்கியுள்ளது, இந்த செயலியை மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து அமைச்சர் கிரிராஜ் சிங் அறிமுகப்படுத்தியுள்ளார்.
 • ஒரு கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிணறுகளின் நீர்மட்டத்தைப் கண்டுபிடிக்க இந்த செயலி பயன்படுத்தப்படுகிறது.
 • நீர் மேலாண்மையை மேம்படுத்துவதற்காக நாடு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக”JALDOOT App”-ஐ தொடங்கி உள்ளது.
  இந்நிகழ்வில் அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகளும் காணொளி மூலம் பங்கேற்கின்றனர்.

 

சண்டிகர் விமான நிலையத்துக்கு பகத் சிங் பெயர் சூட்ட ‘மன் கீ பாத்’ நிகழ்வில் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்
 • ‘பஞ்சாப் – பின் தலைநகரமான சண்டிகர் விமான நிலையத்துக்கு சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் பெயர் சூட்டப்படும்,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
 • சுதந்திர போராட்ட வீரரான பகத்சிங்கின் பிறந்தநாள் செப்-28ஆம் தேதி கொண்டாட படுவதை அடுத்து சண்டிகார் விமான நிலையம் ஷாகீட் பகத்சிங் விமான நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
 • புதிய இந்தியாவை நோக்கி நாம் அனைவரும் முன்னேறி வரும் போது சுதந்திரத்துக்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களை நினைவில் கொள்ளவேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

சர்வதேச செய்திகள்

இத்தாலியின் முதல் பெண் பிரதமராகிறார் ஜியார்ஜியா மெலோனி!!!
 • இத்தாலியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கடந்த ஆண்டு மரியோ டிராகி பிரதமராக நியமனம் செய்யப்பட்டார்.
 • பொருளாதார நிலை மோசடைந்து வருவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, மரியோ டிராகி திடீரென பிரதமர் பதவியிலிருந்து விலகும் முடிவெடுத்தார்.
 • மரியோ டிராகி பதவி விலகியதன் அடிப்படையில் இத்தாலி நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடந்தபட்டது.
 • தேர்தலில் வலதுசாரி தலைவரான ஜார்ஜியா மெலோனியின் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
 • இதையடுத்து அந்நாட்டின் முதல் பெண் பிரதமாக 45 வயதாகும் மெலோனி பதவி ஏற்றுள்ளார்

மாநில செய்திகள்

ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்க பருந்து செயலி அறிமுகபடுத்த படவுள்ளது !!
 • ரவுடிகள், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், ஜாமீனில் வெளியே வந்த கொலைக் குற்றவாளிகளை கண்காணிக்க ‘பருந்து’ என்ற செயலியை தமிழக காவல்துறை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
 • 2012-ம் ஆண்டு நிலவரப்படி தமிழகம் முழுவதும் 16,502 ரவுடிகள் இருந்தனர். தலைநகர் சென்னையில் மட்டும் 3,175 ரவுடிகள் இருந்தனர்.
 • மேலும் ரவுடிகளின் பெயர், இருப்பிடம், குற்ற வழக்குகள், அவர்களின் கூட்டாளிகள், குடும்ப பின்னணி, அவரது குடும்பத்தில் வேறு யாரேனும் ரவுடிகளாக உள்ளார்களா? எத்தனை முறை சிறை சென்றுள்ளார் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் நிலுவை வழக்குகளை கண்காணிக்கவும் பருந்து செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட உள்ளது.

நியமனங்கள்

 • சஞ்சய் குமார் RailTel – இன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார்
 • சஞ்சய் குமார், RailTel Corporation of India Limited- இன் தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
 • அவர் தற்போது நிறுவனத்தில், திட்டமிடல் மற்றும் சந்தைப்படுத்தல் இயக்குநராக பணியாற்றி வருகிறார், சுமார் 30 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்.
 • அவர் இந்திய ரயில்வே சேவை சிக்னல் பொறியாளர்களின் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

விருதுகள்

ராணி எலிசபெத் II ‘ஆண்டின் சிறந்த பெண்’ விருதை சுயெல்லா பிராவர்மேன் வென்றுள்ளார்.
 • இங்கிலாந்தின் இந்திய வம்சாவளி உள்துறைச் செயலர் சுயெல்லா பிரேவர்மேன், முதன்முறையாக ராணி எலிசபெத் II ஆண்டின் சிறந்த பெண் விருதை வென்றுள்ளார்.
  சுயெல்லா பிராவர்மேன் தற்போது உள்துறை செயலாளராக பணியாற்றுகிறார்.
 • இந்திய வம்சாவளி அமைச்சர் சுயெல்லாவின் பெற்றோர் லண்டனில் நடந்த ஒரு நிகழ்வின் போது அவர் சார்பாக விருதை பெற்றுக்கொண்டனர்.

தென் ஆப்பிரிக்கா வில் மீண்டும் பாரதியார் விருது வழங்கப்படவுள்ளது!!!
 • தென் ஆப்பிரிக்காவின் தெற்கு ஜோகான்னஸ்பர்கில் உள்ள லெனேஷியா என்ற இடத்தில், சிவஞான சபை என்ற ஆன்மிக அமைப்பு ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தை பாரம்பரிய மாதமாக கொண்டாடி வருகின்றனர்.
 • அப்போது, மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பெயரில் விருதுகள் வழங்கப்படுகின்றது.
 • கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த விருது வழங்கும் நிகழ்வு தடைபட்டது.
 • இந்த ஆண்டு மீண்டும் விருது வழங்கும் விழா நடைபெற்றது.இந்தமுறை, கொரோனா தொற்று பரவலின் போது சிறப்பான சேவையாற்றிய தனிநபர்கள், தொண்டு அமைப்புகள் என, மொத்தம் 22 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மருத்துவ அவசர ஊர்தி சேவை, மருத்துவர்கள், மருந்து கடையினர், மருத்துவமனை என, பல்வேறு தரப்பினருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு ஓய்வு பெற்ற நூலகர் தேர்வு!!!
 • நாளிதழ்களை கணினி மயமாக்கும் பணியில் சிறந்த விளங்கிய நபருக்கு திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனத்தில் நடைபெறும் தேசிய அளவிலான கருத்தரங்கில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.
 • நிகழாண்டுக்கான விருது- ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் நூலகத்தில் தலைமை நூலகராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற நூலகர் திரு .ஏ.சங்கரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 • ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் சென்னை அலுவலக நூலகத்தில் தலைமை நூலகராக பணிபுரிந்து வந்தவர் ஏ.சங்கரன்.
 • இவர் கடந்த 1881-ம் ஆண்டு முதல் 2002-ம்ஆண்டு வரை வெளிவந்த 20லட்சம் ஆங்கில நாளிதழ் பிரதிகளை கணினி மயமாக்கும் (டிஜிட்டல்) பணியில் ஈடுபட்டார்.
 • இந்திய அளவில் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் முற்றிலும் முதல்முறையாக டிஜிட்டல்மயமாக்கப்பட்டது. இப்பணியை சிறப்பாக செய்த நூலகர் ஏ.சங்கரனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கப்படவுள்ளது.

புத்தக வெளியீடு

ஜக்தீப் தன்கர் “பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் – ஜீவன் தர்ஷன் அவுர் சம்சாமிக்தா” என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
 • ஜக்தீப் தன்கர் புது தில்லியில் நடைபெற்ற “பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் – ஜீவன் தர்ஷன் அவுர் சம்சாமிக்தா” என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
 • நவீன இந்தியாவின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான குடியரசுத் துணைத் தலைவர் இந்த ஐந்து தொகுதிகளை வெளியிடும் புத்தகத்தின் தலைமை ஆசிரியர் டாக்டர் பஜ்ரங் லால் குப்தா மற்றும் அவரது குழுவினரின் முயற்சிகளை பாராட்டியுள்ளார்.
 • பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் முரளி மனோகர் ஜோஷி மற்றும் முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

விளையாட்டு செய்திகள்

பான் பசிபிக் ஓபன் டபிள்யு டி ஏ மகளிர் டென்னிஸ் போட்டியில் ரஷிய வீராங்கனை லுட்டிமிலா சாம்பியன் பட்டம் வென்றார்!!!
 • பான் பசிபிக் ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ரஷிய வீராங்கனை லிடிமிலா சாம்சோனோவா ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றினார்.
 • 37-வது பான் பசிபிக் ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்தது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் லிடிமிலா சாம்சோனோவா (ரஷியா) 7-5, 7-5 என்ற நேர் செட்டில் சீனாவின் கின்வென் செங்கை தோற்கடித்து மகுடம் சூடினார்.
 • இந்த ஆட்டம் 2 மணி 6 நிமிடங்கள் நீடித்தது. சாம்சோனோவா- க்கு ரூ.95 லட்சமும், 2-வது இடம் பிடித்த கின்வென் செங்குக்கு ரூ.59 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
 • 23 வயதான சாம்சோனோவா இதுவரை 4 சர்வதேச பட்டம் வென்றுள்ளார் . இந்த வெற்றியினால் புதிய தரவரிசை பட்டியலில் அவர் 20-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

கொரிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீராங்கனை அலெக்சாண்ட்ரோ ‘சாம்பியன்’ பட்டம் வென்றார் !!!
 • சியோலில்,25.09.2022 அன்று கொரியா ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்றது.
 • இதில் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் ரஷியாவின் எகதேரினா அலெக்சாண்ட்ரோவா 7-6 (7-4), 6-0 என்ற நேர் செட்டில் முன்னாள் சாம்பியன் ஜெலினா ஆஸ்டாபென்கோவை (லாத்வியா) தோற்கடித்து பட்டத்தை கைப்பற்றினார்.
 • கொரியா ஓபன் டென்னிஸ் போட்டியின் சாம்பியன் பட்டம் ,அவரது 3-வது சர்வதேச பட்டமாகும் மேலும் ரூ.27 லட்சம் ரொக்க பரிசுத்தொகையாக பெற்றார்.

நிகழாண்டில் டி20 போட்டியில் அதிக வெற்றிகள் பெற்று இந்திய அணி உலக சாதனை!!!
 • ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வந்தது
 • தற்போது டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில் இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஞாயிறு அன்று நடைபெற்றது.
 • இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது.
 • பின்னர் களமிறங்கிய இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது.
 • இந்த டி -20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் நடப்பாண்டில் அதிக டி20 போட்டிகளில் வெற்றி பெற்று உலக சாதனையை இந்தியா அணி படைத்துள்ளது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பெருமை சேர்த்த வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி ஓய்வு பெற்றார்!!!
 • இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி.
 • சென்னையில் 2002, ஜனவரி 6ம் தேதி இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் அறிமுகமான ஜுலன் கோஸ்வாமி (39 வயது), இந்திய அணிக்காக 12 டெஸ்ட் போட்டியில் 44 விக்கெட் மற்றும் 291 ரன், 204 ஒருநாள் போட்டியில் 255 விக்கெட் மற்றும் 1228 ரன், 68 சர்வதேச டி20ல் 56 விக்கெட் மற்றும் 405 ரன் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 • 2007 -ம் ஆண்டுக்கான ஐசிசி சிறந்த வீராங்கனை விருது ,அர்ஜுனன் விருது (2010) மற்றும் பத்மஸ்ரீ விருதுகளையும் (2012) ஜூலன் பெற்றுள்ளார்.
 • மேலும் ஜூலன், பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் 10,000 பந்துகளை வீசிய முதல் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெயரை பெற்றார்.

முக்கிய தினங்கள்

உலக சுற்றுலா தினம்
 • உலக சுற்றுலா தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27 அன்று அனுசரிக்கப்படுகிறது.
 • 1970 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பால் உலக சுற்றுலா தினம் தேர்ந்தெடுக்கப்பட்டது, அன்றிலிருந்து செப்டம்பர் 27 ஆம் தேதி உலக சுற்றுலா தினம் அனுசரிக்கப்பட்டது.
 • சுற்றுலாவின் முக்கியத்துவம் மற்றும் அதன் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதார மதிப்பு பற்றிய விழிப்புணர்வை சர்வதேச சமூகத்தினரிடையே வளர்ப்பதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
 • ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் அதன் பிம்பம் மற்றும் அடையாளத்தை உருவாக்குவதிலும் சுற்றுலா முக்கிய பங்கு வகிக்கிறது.

கருப்பொருள்

o 2022 உலக சுற்றுலா தினத்தின் கருப்பொருள் “சுற்றுலாவை மறுபரிசீலனை செய்தல்”என்பதாகும்.

உலக கருத்தடை தினம்
 • உலக கருத்தடை தினம் செப்டம்பர் 26 அன்று கொண்டாடப்படுகிறது.
 • கருத்தடை அறிவு மற்றும் குடும்பக் கட்டுப்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துவதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
 • உலக கருத்தடை தினம் மக்கள்தொகை கட்டுப்பாட்டின் அவசியத்தை எடுத்துரைக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக மாறியுள்ளது.
 • 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் உலக கருத்தடை தினம் அனுசரிக்கப்பட்டது.

சர்வதேச அணு ஆயுதங்களை ஒழிப்பு தினம்

 • ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 26 ஆம் தேதியை சர்வதேச அணு ஆயுதங்களை ஒழிப்பு தினமாக அனுசரிக்கிறது.
 • அணு ஆயுதங்களால் மனித குலத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் அவற்றை முற்றிலுமாக அகற்ற வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய பொதுமக்களின் விழிப்புணர்வை மேம்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
 • டிசம்பர் 2013 இல் ஐக்கிய நாடுகள் சபை செப்டம்பர் 26 ஆம் தேதியை சர்வதேச அணு ஆயுதங்களை ஒழிப்பு தினமாக அறிவித்தது.
 • இந்நாளின் முக்கியத்துவம் அணு ஆயுதங்களின் ஆபத்துகளை மக்களுக்கு நினைவூட்டுகிறது மற்றும் நிரந்தர மற்றும் முழுமையான அணு ஆயுதக் குறைப்புக்கு ஒத்துழைக்க உலக அரசாங்கங்களையும் வலியுறுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!