நடப்பு நிகழ்வுகள் – 26 மார்ச் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 26 மார்ச் 2023
நடப்பு நிகழ்வுகள் - 26 மார்ச் 2023

நடப்பு நிகழ்வுகள் – 26 மார்ச் 2023

தேசிய செய்திகள்

ஆரவல்லி பசுமை சுவர் திட்டத்தை ஸ்ரீ பூபேந்தர் யாதவ் ஹரியானாவில் தொடங்கி வைத்தார்.

  • ஹரியானாவில் உள்ள திக்லி கிராமத்தில் சர்வதேச காடுகள் தினத்தை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில், ஐந்து மாநிலங்களில் உள்ள ஆரவல்லி மலைத்தொடரைச் சுற்றியுள்ள 5 கிமீ தாங்கல் பகுதியை பசுமையாக்கும் முக்கிய முயற்சியான ஆரவல்லி பசுமை சுவர் திட்டத்தை ஸ்ரீ பூபேந்தர் தொடங்கினார்.
  • வனத்துறை தலையீடுகள் மூலம் பாலைவனமாக்கல் மற்றும் நிலச் சீரழிவை எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய செயல் திட்டத்தை ஸ்ரீ யாதவ் வெளியிட்டார்.

 

சர்வதேச செய்திகள்

குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு பெற்றோரின் ஒப்புதல் தேவைப்படும் சட்டத்தை உட்டா இயற்றுகிறது

  • சமூக ஊடக தளங்களில் குழந்தைகள் பதிவு செய்வதற்கு முன் பெற்றோரின் சம்மதம் தேவைப்படும் என இரண்டு நடவடிக்கைகளில் குடியரசுக் கட்சி கவர்னர் ஸ்பென்சர் காக்ஸ் கையெழுத்திட்டார். இதன் மூலம் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை இயற்றும் முதல் மாநிலமாக உட்டா ஆனது.
  • போதைப்பொருள் போன்ற அம்சங்களைப் பயன்படுத்தி தங்கள் பயன்பாடுகளுக்கு குழந்தைகளை ஈர்க்கும் தொழில்நுட்ப நிறுவனங்களைத் தடுக்க இந்த சட்டம் உதவுகிறது.

 

மாநில செய்திகள்

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் – 2023

  • மாநில பேரிடர் மேலாண்மை கொள்கை மற்றும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் – 2023ஐ முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
  • இந்த மாநில பேரிடர் மேலாண்மைத் திட்டத்தில், வெள்ளம், சுனாமி, சூறாவளி, வறட்சி, வெப்பக்காற்று, நிலச்சரிவுகள், பூகம்பம், ரசாயன தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகள் மற்றும் அணுமின் நிலையங்கள் போன்ற பல்வேறு வகையான பேரிடர்களை கையாளுவதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

  • பிரதமர் மோடி பெங்களூரில் உள்ள சிக்பள்ளாப்பூரில் மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியை கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை முன்னிலையில் திறந்து வைத்தார்.
  • அதன் பிறகு பெங்களூரில் உள்ள கே.ஆர்.புரம்-ஒயிட்பீல்டு இடையே சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.

 

விருதுகள்

ஃபோர்ப்ஸ் விருதை வென்ற இஷா அம்பானி

  • இளம் தொழிலதிபர் இஷா அம்பானிக்கு ‘அடுத்த தலைமுறைக்கான சிறந்த தொழில் முனைவோர்’ (GenNext Entrepreneur) என்ற விருதை ஃபோர்ப்ஸ் இந்தியா வழங்கியுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் பிரபல வர்த்தக இதழான ஃபோர்ப்ஸ், தலைமைத்துவத்தில் சிறந்த விளங்குவோருக்கான  விருது வழங்கி வருகிறது.
  • இஷா அம்பானி ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக இருக்கும் முகேஷ் அம்பானியின் மகள் ஆவார்.

 

தொல்லியல் ஆய்வுகள்

தஞ்சாக்கூரில் பாண்டியர் கால சிற்பம்

  • 7 அடி உயரத்தில் பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்ட பிரம்ம சாஸ்தா சிற்பம் தஞ்சாக்கூரில் கண்டறியப்பட்டது. தலையில் சிதைந்த நிலையில் கரண்ட மகுடம், மார்பில் வீரச்சங்கிலி மற்றும் நான்கு கரங்களுடன் காட்சி அளிக்கிறது.
  • இது வரை தமிழகத்தில் 7 அடி உயர பிரம்ம சாஸ்தா சிற்பம் வேறு எங்கும் கண்டறியவில்லை.இந்த சிற்பத்தின் வடிவமைப்பு முற்கால பாண்டியர்களின் கலையை காட்டுகிறது.

 

விளையாட்டு செய்திகள்

197 போட்டிகளில் ரொனால்டோ பங்கேற்று சாதனை

  • யூரோ கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்று போட்டியில் போர்த்துக்கல் அணியானது லியச்ட்டேன்ஸ்டீன் அணியுடன் மோதியது.இந்த போட்டி ரொனால்டோவின் 197-வது சர்வதேச போட்டியாக அமைந்தது.
  • இந்நிலையில் அவர் சர்வதேச அளவில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை  படைத்துள்ளார். இதன் மூலம் குவைத் வீரர் அல்-முதாவாவின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.சர்வதேச போட்டிகளில்  இதுவரை அவர்120 கோல்களை அடித்து முதலிடம் வகிக்கிறார்.

மெஸ்சி 800 கோல்களை அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

  • அர்ஜெண்டினா – பனாமா அணிகள் இடையிலான கால்பந்து போட்டி பியூனஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்றது. இது லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு பங்கேற்ற முதல் சர்வதேச போட்டியாகும்.
  • இந்த போட்டியில் அர்ஜெண்டினா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி தனது 800-வது கோலை அடித்தார்.

உலக மகளிர் குத்துச்சண்டையில் இந்தியாவின் நிது கங்காஸ் தங்கம் வென்றார்.

  • 13-வது உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் 48 கிலோ பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை நிது கங்காஸ் மங்கோலிய வீராங்கனை லுட்சிஹன் அட்லெட்செட்கையுடன் மோதினர்.
  • 5-0 என்ற புள்ளிகள் அடிப்படையில் மங்கோலிய வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவை சேர்ந்த நிது கங்காஸ் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

 

முக்கிய தினம்

வங்காளதேசத்தின் சுதந்திர தினம்

  • வங்காளதேசம் 1947 முதல் 1971 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்தது. 1971 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி வங்காளதேசம் சுதந்திர நாடாக மாறியது.
  • இந்த விடுதலைப் போரில் இந்திய ராணுவத்தின் உதவியோடு பாகிஸ்தானுக்கு எதிராக வங்காளதேசத்தின் முக்தி வாகினி படை வெற்றி பெற்றது. இந்த தினத்தை வங்காளதேச மக்கள் சுதந்திர தினமாக கொண்டாடுகின்றன.

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!