நடப்பு நிகழ்வுகள் – 26 நவம்பர் 2022

0
நடப்பு நிகழ்வுகள் - 26 நவம்பர் 2022
நடப்பு நிகழ்வுகள் - 26 நவம்பர் 2022

நடப்பு நிகழ்வுகள் – 26 நவம்பர் 2022

தேசிய செய்திகள்

காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு

  • காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு ஏப்ரல் 2017 இல் தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் (NSO) தொடங்கப்பட்டது.
  • கணக்கெடுப்பின் முக்கிய நோக்கமானது, ‘தற்போதைய வாராந்திர நிலை’ (CWS) இல் மட்டுமே நகர்ப்புறங்களுக்கு மூன்று மாத குறுகிய கால இடைவெளியில் முக்கிய வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை குறிகாட்டிகளை மதிப்பிடுவதாகும். இந்த குறிகாட்டிகள் பின்வரும் காரணிகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன.
    • தொழிலாளர் மக்கள் தொகை விகிதம்
    • தொழிலாளர் பங்கேற்பு விகிதம்
    • வேலையின்மை விகிதம்

இரு நாடுகளுக்கான கூட்டு கடற்படை பயிற்சிநசீம் அல் பஹ்ர்

  • இந்திய கடற்படை மற்றும் ஓமன் ராயல் கடற்படை இருதரப்பு பயிற்சியான ‘நசீம் அல் பஹ்ர்’ (Sea Breeze)-ன்  13வது பதிப்பான  ஆறு நாள் பயிற்சி ஓமன் கடற்கரையில் நடத்தப்பட்டது.
  • பயிற்சியின் சிறப்பம்சமாக இந்தியாவின் வழிகாட்டப்பட்ட ஏவுகணை ஸ்டெல்த் போர்க் கப்பல், ஐஎன்எஸ் திரிகண்ட், கடல் ரோந்துக் கப்பல், ஐஎன்எஸ் சுமித்ரா மற்றும் கடல்சார் ரோந்து விமானம் டோர்னியர் ஆகியவை பங்கேற்றன.

உச்ச நீதிமன்றத்தில் அரசியலமைப்பு தின விழா

  • 1949 இல் அரசியலமைப்பு சபை இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதை நினைவுகூரும் வகையில் அரசியலமைப்பு தினம் 2015 முதல் நவம்பர் 26 அன்று கொண்டாடப்படுகிறது.
  • அன்றைய தினம் இ-கோர்ட் திட்டத்தின் கீழ் பல்வேறு புதிய முயற்சிகளை பிரதமர் தொடங்கி வைப்பார். இந்தத் திட்டம், நீதிமன்றங்களின் ICT செயலாக்கத்தின் மூலம் வழக்குத் தொடுப்பவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறைக்கு பயன்படும் வகையில் அறிமுகப்படுத்தப்படும்.
மெய்நிகர் நீதி கடிகாரம் நீதிமன்ற மட்டத்தில் உள்ள நீதி வழங்கல் அமைப்பின் முக்கிய புள்ளி விவரத்தை குறிக்கிறது மற்றும் நீதிமன்ற அளவில் நாள்/வாரம்/மாதம் அடிப்படையில் நிறுவப்பட்ட வழக்குகள் தீர்க்கப்பட்ட வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை வழங்குகிறது.
ஜஸ்டிஸ் மொபைல் செயலி  2.0 நீதித்துறை அதிகாரிகளுக்குக் உதவும் வகையில் அமைந்துள்ளது, மேலும் இது நீதிமன்றத்தின் நிலுவைத் தன்மை மற்றும் தீர்ப்பை கண்காணிப்பதன் மற்றும் வழக்கை நிர்வகித்தல் மற்றும் நீதிமன்றத்தின் கீழ் பணிபுரியும் தனிப்பட்ட நீதிபதிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் நீதிமன்றம் இது காகிதமில்லா நீதிமன்றங்களுக்கு மாற்றத்தை செயல்படுத்த நீதிமன்ற பதிவுகளை டிஜிட்டல் வடிவில் நீதிபதிக்குக் கிடைக்கச் செய்வதற்கான ஒரு முயற்சியாகும்.
S3WaaS வலைத்தளங்கள் இது பாதுகாப்பான அளவிடக்கூடிய மற்றும் சுகம்யா (அணுகக்கூடிய) வலைத்தளங்களை உருவாக்குவதற்காக அரசாங்க நிறுவனங்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கிளவுட் சேவையாகும். இது பன்மொழி தன்மை கொண்டுள்ளது.

 

 

சர்வதேச செய்திகள்

உலகின் மிகவும் பிரபலமான தலைவர்களின் பட்டியல்

  • அமெரிக்காவைச் சேர்ந்த ஆலோசனை நிறுவனமான மார்னிங் கன்சல்ட் குளோபல் லீடர் ஒப்புதல் மதிப்பீடுகளின் அறிக்கையை வெளியிட்டது, சமீபத்திய ஒப்புதல் மதிப்பீடுகள் 2022 நவம்பர் மாதம் 16 முதல் 22 வரை சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.
  • அறிக்கையின்படி, பிரதமர் நரேந்திர மோடி 77 சதவீத அங்கீகாரத்துடன் உலகின் மிகவும் பிரபலமான தலைவராக முன்னிலை வகிக்கிறார். மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். மேலும் 22 உலக தலைவர்களில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 9வது இடத்திலும், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் 9வது இடத்திலும் உள்ளனர்.

ஓட்டுநர் இல்லா தானியங்கி  பேருந்து சோதனை ஓட்டம் தென் கொரியாவின் தலைநகரில் தொடங்கப்பட்டது

  • தென் கொரியாவின் தலைநகரம் (சியோல்) அதன் முதல் ஓட்டுநர் இல்லா தானியங்கி பேருந்தை அறிமுகப்படுத்தியது; சாலைகளில் ஓட்டுநர் இல்லாத வாகனங்களை மக்கள் மிகவும் வசதியாக உணர வைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
  • இப்பேருந்தில் விலையுயர்ந்த சென்சார்களுக்குப் பதிலாக கேமராக்கள் மற்றும் லேசர்களைப் பயன்படுத்துகிறது, மேலும் இரண்டு நியமிக்கப்பட்ட நிறுத்தங்களில் பொதுமக்கள் ஒரு செயலி மூலம் இலவச இருக்கையை முன்பதிவு செய்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலக அளவில் லாபம் ஈட்டும் நிறுவனங்களின் தரவரிசை வெளியீடு

  • உலக அளவில் லாபம் ஈட்டும் நிறுவனங்களின் பட்டியலில் வினாடிக்கு5 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டுவதன் மூலம் உலகிலேயே அதிக வருவாய் ஈட்டும் நிறுவனங்களின் வரிசையில் ஆப்பிள் நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது.
  • வினாடிக்கு14 லட்சம் லாபத்துடன் மைக்ரோசாப்ட் நிறுவனம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. Berkshire Hathaway,கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளது.

 

மாநில செய்திகள் 

சென்னை விமான நிலையத்தில் மின் வாகன மின்னேற்றும் நிலையம் தொடக்கம்

  • சென்னை விமான நிலையத்தின் உள்பகுதியில், மின்சார வாகனங்களுக்கு எலக்ட்ரிக் சார்ஜ் ஏற்றுவதற்கான பாயின்ட்கள் சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குனர் அசோகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
  • இந்த எலக்ட்ரிக் சார்ஜிங் பாய்ண்ட்கள் அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, செல்போன் ஆப் மற்றும் ஆர்எப்ஐடி எனப்படும், ரேடியோ அலைவரிசை அடையாளக் கோடு வாயிலாகவும் சார்ஜிங் நிலையத்தை பயன்படுத்த முடியும்,மேலும் 15 கிலோ வாட் மற்றும் 7 கிலோ வாட் உடைய இரண்டு சார்ஜிங் பாயிண்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 1763 கோடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம்

  • மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம் உலக வங்கி நிதியுடன் 1,763 கோடியே 19 லட்சம் ரூபாய் செலவில் தமிழ் நாடு முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.
  • இத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் திறன் மேம்பாடு மற்றும் சுய வேலைவாய்ப்புக்கான பயிற்சியும், தொழில்திறன் பயிற்சி, சமூகப் பதிவு அமைப்பு மூலம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்கள், பராமரிப்பாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான பயன்களை அடையாளம் காணுதல், தேர்வு செய்தல் மற்றும் வழங்குதல் ஆகியவை இத்திட்டத்தினுள் அடங்கும்,மேலும் அடுத்த 6 ஆண்டுகளில், அனைத்து மாவட்டங்களிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

பெங்களூருவில் ஒரு டிக்கெட்டில் 6 பேர் பயணிக்கும் வசதி அறிமுகம்

  • நவம்பர் 1-ந் தேதி முதல்  பெங்களூருவில்  மெட்ரோ ரெயிலில் ‘கியூ.ஆர்.’ கோடு மூலம் டிக்கெட் பெறும் வசதியை மெட்ரோ நிர்வாகம் அறிமுகம் செய்தது.
  • இதனை அடுத்து பெங்களூர் மெட்ரோ ரெயில்களில் இனி ஒரே டிக்கெட்டில் 6 பேர் வரை பயணம் செய்யும் வசதியை மெட்ரோ நிர்வாகம் அறிமுகம் செய்ய உள்ளது. இத்திட்டம் 2023 ஆண்டு ஜனவரி 15-ந் தேதி முதல் அமலுக்கு வரும் அதிகாரிகள் கூறுயுள்ளனர்.

கர்நாடகாவில் டிஜிட்டல் இந்தியா ஸ்டார்ட்அப் மையம் திறக்கப்பட்டது

  • மத்திய அமைச்சர் ஸ்ரீ ராஜீவ் சந்திரசேகர், கர்நாடகாவின் தாவணகெரேயில் உள்ள இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா (STPI) மையத்தில் டிஜிட்டல் இந்தியா ஸ்டார்ட்அப் மையத்தை திறந்து வைத்தார்.
  • இது நாட்டிலேயே 63வது எஸ்டிபிஐ மையமாகவும், கர்நாடகாவில் ஐந்தாவது மையமாகவும் உள்ளது.

 

நியமனங்கள்

சர்வதேச எலக்ட்ரோ டெக்னிகல் கமிஷன் (IEC) துணைத் தலைவர் பதவி இந்தியா பெற்றுள்ளது

  • IEC இன் முழு உறுப்பினர்களால் 90% வாக்குகளைப் பெவதன் மூலம் 2023-25 காலத்திற்கான சர்வதேச மின் தொழில்நுட்ப ஆணையத்தின் (IEC) துணைத் தலைவர் மற்றும் மூலோபாய மேலாண்மை வாரியத்தின் (SMB) தலைவருக்கான பொறுப்பை  இந்தியா பெற்றுள்ளது.
  • இந்தியப் பிரதிநிதி திரு. விமல் மஹேந்துரு, சர்வதேச மின்னணு தொழில்நுட்ப ஆணையத்தின் துணைத் தலைவர் பதவியை வகிக்கிறார், சர்வதேச எலக்ட்ரோ டெக்னிகல் கமிஷன் மின்சாரம், என்பது மின்னணு மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்களுக்கான சர்வதேச தரத்தை அமைக்கும் அமைப்பாக செயல்படுகிறது.

சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா ராஜஸ்தானுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

  • சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் நடைபெற்றது அதில் சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி வேலுமணி உள்ளிட்ட 7 நீதிபதிகளை மாற்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
  • சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை ராஜஸ்தான் ஐகோர்ட்டுக்கு மாற்ற மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில் , அடுத்த மூத்த நீதிபதியாக உள்ள பரேஷ் உபாத்யாய் சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ளார்.

 

தொல்லியல் ஆய்வுகள்

டி.கல்லுப்பட்டி அருகே 16-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு

  • மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே மோதகம் பகுதியில் கி.பி. 16-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கற்சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  • போரில் வீர மரணமடைந்த வீரனுக்கு நினைவாக நடுகல் நடப்பட்டு காவல் தெய்வமாக வழிபட்டு வந்துள்ளனர்,மேலும் ஆண் மற்றும் பெண் உருவத்துடன் காணப்படும் இந்த நடுகல் 4 அடி உயரம், 2 அடி அகலம் கொண்டது. நடுகல்லில் ஒரு ஆண், பெண் சிற்பம் அமைந்துள்ளது.

திருக்கோவிலூர் அருகே பழமை வாய்ந்த மாதேஸ்வரி கற்சிற்பம் கண்டெடுப்பு

  • திருக்கோவிலூர் பகுதியில் கல்வெட்டால் ஆன பழமை வாய்ந்த 9, 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாதேஸ்வரி கற்சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இந்த சிலை தனி பலகைக்கல்லில் புடைப்பு சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைப்பகுதி கரண்டமகுடம் அணிவித்தும், கழுத்தில் ஆபரணங்களுடன் காணப்படுகின்றது.

 

புத்தக வெளியீடு

இந்தியா: ஜனநாயகத்தின் தாய் புத்தக வெளியீடு

  • இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் (ICHR) துறையால்  தயாரிக்கப்பட்டு   ‘இந்தியா: ஜனநாயகத்தின் தாய்’ என்ற புத்தகம்  24 நவம்பர் 2022 அன்று புதுதில்லியில் மத்திய அமைச்சர் ஸ்ரீ தர்மேந்திர பிரதான் வெளியிடபட்டது.
  • “இந்தியா: ஜனநாயகத்தின் தாய்”, எனும் புத்தகத்தில் இந்தியாவின் ஜனநாயக மரபு பற்றிய ஆரோக்கியமான விவாதங்கள் மற்றும் நமது நாட்டின்  காலமற்ற நெறிமுறைகளைப் பாதுகாத்து அதனை அடுத்த தலைமுறையினரை கொண்டுசெல்லும் நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

முக்கிய தினம்

தேசிய பால் தினம்

  • “இந்தியாவின் வெண்மைப் புரட்சியின் தந்தை”, டாக்டர் வர்கீஸ் குரியன் பிறந்த நாளை தேசிய பால் தினமாகக் கொண்டாடபடுகிறது , மேலும் அவர் இந்தியாவின் பால் மனிதன் என்றும் அழைக்கப்படுகிறார்.
  • கால்நடை பராமரிப்பு மற்றும் பால்பண்ணைத் துறை 101வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது, மேலும் மதிப்புமிக்க தேசிய கோபால் ரத்னா விருதுகள் 2022 இந்த நிகழ்வின் போது வழங்கப்படும் மற்றும் வர்கீஸ் குரியனின் வாழ்க்கை புத்தகம் மற்றும் பால் கலப்படம் பற்றிய சிறு புத்தகம் வெளியிடப்படவுள்ளது.

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!